World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

France: Government parties experience substantial losses in local elections

பிரான்ஸ்: மாநகரசபைத் தேர்தலில் ஆளும் கட்சிகள் பாரிய இழப்பினை அடைந்துள்ளன

By Francis Dubois
23 March 2001

Back to screen version

கோலிச வலதுசாரிகளிடம் இருந்து பாரீஸ் மற்றும் லியோனை வெற்றியின் மூலம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த போதும், 'பல்வகை இடது' கூட்டரசாங்கம் மாநகரசபைத் தேர்தலில் பாரிய இழப்பினை அடைந்துள்ளது.

11ம் திகதி மார்ச் மாதம் முதலாவது சுற்றுத் தேர்தல் தொடங்கியபோது, 'பல்வகை இடது' களான சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர், பொதுஜன இயக்கம், இடது தீவிரவாதிகள் பக்கம் ஒரு அலைவீசுகிறது எனவும், இவர்கள் அனைவரும் முக்கிய நகரங்களையும், கவுன்சில்களையும் வெற்றிகொள்ளலாம் என கருத்துக்கணிப்பாளர்களும் தொலைத் தொடர்புச் சாதன அறிவிப்பாளர்களும் முன்னறிவித்திருந்தனர்.

எப்படியிருந்தபோதும், கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற இரண்டாவது சுற்றைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புச் சாதனங்கள் RPR, UDF, DL (Rassemblement Pour la Republique (Assembly for the Republic, RPR); the Union pour la Democratie Française (Union for French Democracy, UDF); and Democratie Liberale (DL) போன்ற கோலிச வாத கட்சிகளுக்கு நிலைமை நன்றாக இருக்கிறது என தற்போது அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

சோசலி கட்சி பிரதமர் ஆன லியோனல் ஜொஸ்பன் குறிப்பிடும்படியான பரந்த நகரங்கள் மற்றும் ஊர்களில் தான் வைத்திருந்த கட்டுப்பாட்டை வலதுசாரி எதிர்க்கட்சிகளிடம் இழந்துள்ளார். இதற்கு மாறாக கோலிச வாதிகள் 10 இடங்களைத்தான் 'பல்வகை இடது' களிடம் இழந்துள்ளன. 30 ஆயிரம் மக்கள் தொகையினர் வசிக்கும் 23 நகரங்கள் உள்ளடங்கலாக 6 க்கு மேற்பட்ட ஒரு இலட்சம் மக்கள் தொகையினர் வசிக்கும் நகரங்களையும் அரசாங்கம் இழந்துள்ளது. பாரீஸ் மற்றும் லியோனை பொறுத்தவரை குறிப்பிட்ட வட்டாரங்களில் வலதுசாரிகள் பதவிகளை இழந்துள்ளதுடன் நகரபிதா அலுவலக கட்டுப்பாட்டையும் இழந்துள்ளன. ஆனாலும் இரண்டு நகரங்களிலும் அவர்களது மொத்த வாக்குகள் சிறிது அதிகரித்தே இருந்தன.

கிட்டதட்ட இத்தேர்தலில் நின்ற அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். பாரீஸ் முதலாவது முறையாக சோசலிச கட்சி நகரபிதாவால் ஆழப்படுவதுடன் கோலிஸ்ட்டுகள் இதை இழந்துவிட்டார்கள். இது லியோனில் கூட்டரசாங்கத்திற்கு கிடைத்த ஆதரவால் அல்ல மாறாக முக்கியமாக வலதுசாரி கட்சிகளுக்கிடையிலான ஆழமான உடைவுகளால் தான் சோசலிசக் கட்சியினர் வெற்றிபெறக் கூடியதாக இருந்தது என்பதை அனேக விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் இரண்டாவது சுற்றில் சோசலிசக் கட்சி வேட்பாளர், லியோனில் வலது சாரிகளுக்கு அழைப்புவிட்டதுடன் அவர்களின் ஒரு பகுதியினரின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியானது இதுவரை ஜொஸ்பனின் கூட்டரசாங்கத்தில் இரண்டாவது முக்கியமான கட்சியாக இருந்துவந்துடன் இந்த தேர்தலில், இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரே நகரமான ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் வகிக்கும் நிம் (Nimes) உள்ளடங்கலாக பல எண்ணிக்கையிலான மாநாகர ஆட்சியை இழந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் 31 நகரங்களின் மாநகரசபையை ஆட்சி செய்கிறது. இதில் 22 மாநகரசபை பாரிசினை சுற்றியிருக்கும் வெளிநகர்ப்புறங்களில் அமைந்திருக்கிறது. கடந்த 1995 மாநகரசபைத் தேர்தலில் 41 இடங்களாக இருந்த எண்ணிக்கை இன்று 31 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி பரந்த பட்ட சிறிய நகரங்களையும் இழந்துள்ளதுடன் இது சில நகரங்களில் முற்றாக இல்லாமல் போயுள்ளது. பெரும் செல்வாக்கை வைத்திருந்த இதன் பழைய கோட்டைகளாக இருந்த திடீரென உருவான பாரீசின் புறநகரின் 'சிறிய நகரங்கள்' இலும் கூட கட்சியின் செல்வாக்கு பாரிய ஆட்டம் கண்டுள்ளது. 20 ஆயிரம் மக்கள் தொகையினர் வசிக்கும் பாரிசினை சுற்றியிருக்கும் இல் து பிரான்ஸ் (Ile de France) பிராந்தியத்தில் இரண்டு நகரங்களில் மட்டுமே இது ஆட்சி நடத்துகிறது. குறிப்பிட்ட ஓரளவு மத்தியதர நகரங்களின் நிர்வாகங்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியத்துவம் உடையாதாக இருக்கிறது.

'பல்வகை இடது' களின் அங்கத்தவர்களான பசுமைக் கட்சியினர் மட்டுமே தேர்தலில் வெற்றியடைந்தனர். பசுமைக் கட்சி 15 நகரங்களின் நகரபிதா அலுவலகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் இது பாரீசின் வட்டாரங்களில் ஒன்றினையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அத்துடன் முதல் முறையாக ஏனைய குறிப்பிடும்படியான நகரங்களின் கவுன்சில்களிலும் இணைய இருக்கிறார்கள். முதலாவது சுற்றில் சில இடங்களில் வெற்றியடைந்தவுடன் கடந்த காலத்தில் சோசலிச கட்சி வேட்பாளர்கள் வெற்றியடைவதற்காக விட்டுக்கொடுத்த சில குறிப்பிடும்படியான நகரங்களில் பசுமைக் கட்சியினர் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்தனர். தொலைதொடர்புச் சாதனங்கள் 'பல்வகை இடது' களின் கூட்டில் இவர்களை முக்கியமான கட்சியாக கவனத்தில் கொண்டுள்ளன, இதை உணர்ந்துகொண்ட இவர்கள் சோசலிச கட்சியிடம் கடுமையான முறையில் சலுகைகளுக்கும் அலுவலகங்களின் பதவிகளுக்கும் கோரிக்கை விட்டுள்ளனர்.

தீவிர வலதுசாரிகள் 1995 தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களை -Orange, Vitrolles மற்றும் விணீக்ஷீவீரீஸீணீஸீமீ மீண்டும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஆனால் முழுமையாக பார்க்கும் இடத்தில் அவர்களின் பிரசன்னத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1995 இன் தேர்தல் போல், தேசிய முன்னணி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் 185 நகரங்களில் இரண்டாவது சுற்றில் போட்டியிட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய முன்னணியில் இருந்து உடைந்த குடியரச தேசிய முன்னணி 205 நகரங்களில் போட்டியிடும் சாதகமான தன்மை இருந்தபோதும் அதேயளவு மக்களைக் கொண்ட 41 நகரங்களில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது.

முதலாவது சுற்று முடிந்தவுடனான கணிப்பின்படி, பொதுவாக 'பல்வகை இடது' களுக்கு ஆதரவானவர்கள் வாக்களிக்க சென்றதை விட, பழமையான கோலிச வாக்காளர்கள் தான் பரந்த எண்ணிக்கையில் வாக்களிக்கச் சென்றனர். ஒரு கணிப்பின்படி, 37 வீதமான அரசாங்க ஆதரவாளர்கள் வாக்களிக்க மறுத்திருந்தனர். இதற்கு மாறாக வாக்களிக்க மறுத்த வலது ஆதரவாளர்கள் 28 வீதமாகும். அரசாங்க கட்சிகளுக்கு சார்பாக வாக்களிக்க கூடிய வாக்காளர்களில் வாக்களிக்க மறுத்தவர்களின் எண்ணிக்கை இரண்டாவது சுற்றில் 2வீதத்தால் அதிகரித்தது.

'தீவிர இடதுகள்' என பிரெஞ்சு பத்திரிக்கைகள் குறிப்பிடும்- Lutte Ouvrière (Workers Fight, LO), The Ligue Communiste Revolutionnaire (Revolutionary Communist League, LCR) and the Parti des Travailleurs (கீஷீக்ஷீளீமீக்ஷீs றிணீக்ஷீtஹ், றிஜி) மற்றும் 'பொதுஜன வேட்பாளர்கள்' என அழைக்கப்படும் கட்சிக்கு முதலாவது சுற்றில் வாக்களித்தவர்கள் வழக்கமாக கடந்த தேர்தலில் நடந்தது போல் இரண்டாவது சுற்றில் அவர்களது வாக்குகளை 'பல்வகை இடது' வேட்பாளர்களுக்கு போடவில்லை. தூலூஸ் மற்றும் ஸ்ராஸ்பூர்கில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நகரங்களில் 'பல்வகை இடது' களால் இந்த கட்சிகளினது வாக்குகளை இரண்டாவது சுற்றில் பெற்றுக்கொள்ள முடியாது போனது, வலது சாரிகளின் கைகளில் வெற்றி கையளிக்கப்பட்டது.

கோலிச வாதிகளுக்குள் உடைவு ஏற்பட்டிருந்த போதும் தீவிர வலதுசாரிகளின் மேலதிகமான நெருக்கடிகளால் அதிக இடங்களில் அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டனர். ஐரோப்பிய எதிர்ப்பு மற்றும் சோவினிச கட்சியான RPF பிரான்சுக்கான ஐக்கிய கட்சி அடிக்கடி வலது வேட்பாளர்களுடன் (பாரிசில் தற்போது நகரபிதாவாக பதவி வகிக்கும் Jean Tiberi ஆதரவளிக்கின்றது) கூட்டிற்கு சென்றதுடன், இது கோலிஸ்ட்டுகளுக்கும் அதி வலதுசாரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட்டது. பாரம்பரிய வலதுசாரி கட்சிகளான FN உம் MNR உம் கடுமையான சட்டத்திற்கும் ஒழுங்கிற்குமான பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டு பரந்த வாக்காளர் பகுதியினரின் வாக்குகளை திரும்ப பெறமுடிந்தது.

கருத்துக்கணிப்பின் ஒரு சமூக மூலகங்களினை பார்ப்போமாயின் அரசாங்க கட்சிகள் வாக்குகளை நகர்ப்புற வசதிபடைத்த தட்டுக்களிடம் இருந்தே பெற்றுக்கொண்டனர் என்பதை அது அம்பலப்படுத்தியுள்ளது. எப்படியிருந்தபோதும், இது பச்சைக் கட்சியினருக்கே ஆதாயத்தை உண்டுபண்ணியது, இதனால் பச்சைக் கட்சியினரே இலாபம் அடைந்தனர். ''நகர்ப்புற ஆளும் வர்க்கத்தின் மத்தியிலும் பலமான உயர் நிர்வாகத்தினர் மத்தியிலும் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளனர் ஆனால் அது தொழிலாளர் நகரங்களிலும் பல்கலைக்கழகங்கள் இருக்கும் இடங்களிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதுதான் அரசாங்கத்தில் உள்ள இடதுகளின் ஐந்தொகையாகும்'' என இரண்டாவது சுற்று தேர்தலுக்கு மறுநாள் பிரெஞ்சு தினசரி பத்திரிகையான Libération இல் ஒரு விமர்சகர் எழுதியிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்து பாராளுமன்ற கட்சிகளும் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் சமூக பிரச்சனைகள் பற்றி குறிப்பிடுவதை மறுத்ததுடன் அவர்கள் அதற்கு பதிலாக பெரும் மூலதன முதலாளிகளிகளினதும் மற்றும் சலுகை படைத்த உயர்தர மத்தியதர வர்க்கத்தின் பிரச்சனைகள் பற்றியே பேசினார்கள் என்பதில் கூடுதலாக ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

பொதுவாக இந்த காரணத்திற்காகவே தொழிலாள வர்க்க வாக்காளர்கள் வாக்களிக்காத வீதம் அதிகரித்திருந்தது. இளைஞர்கள் மத்தியில் இது இன்னும் அதிகமாக காணப்பட்டது. பரந்துபட்ட மக்களிடம் இருந்து அரசாங்கத்தின் அதிகரித்துவரும் தனிமைப்படுதலை கவனத்தில் கொண்ட பலவிமர்சகர்கள் தற்போது, ''பொதுஜன வாக்குக்கும் பல்வகை இடதுகளுக்கும் இடையிலான உடைவு'' பற்றி பேசிவருகிறார்கள்.

''பல்வகை இடது'' களிடம் இருந்து ''பொதுஜன வாக்கு'' இன் தனிமைப்படலானது அல்லது சரியாக சொன்னால் தொழிலாள வர்க்கத்தின் தனிமைப்படலானது 1997 ஜொஸ்பன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகரித்துவிட்டது. ஜொஸ்பன் அன்று பதவிக்கு வரும்போது, தொழிலாள வர்க்கத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டிற்கு போவதன் முக்கிய நோக்கம் இதுவாகவே இருந்தது.

ஒருபோதுமற்ற முறையில் அதிகரித்துவரும் அரசியல் உடைவின் நிலைமையின் மத்தியிலே இந்த மாநகர சபைத்தேர்தல் நடந்தேறி முடிந்துள்ளது. கடந்த 6 வருடத்தில் ஒரு தேர்தலின் போது கூட முக்கியமான எந்த கட்சிகளும் 25 வீத வாக்குகளை தன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் பாரிய இழப்பானது அதனது சொந்த நெருக்கடியை அதிகரிப்பதுடன், இது அதனது உடைவினை விரைவாக்கும். எதிர்வரும் அக்டோபர் மாதம் புதிய கம்யூனிஸ்ட் கட்சியை (NPC, New Communist Party) உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த வருட தேர்தலுக்கு பின்னர், ஜொஸ்பன் அரசாங்கம் என்றுமில்லாத முறையில் பிளவிற்குள் சென்றுள்ளது. இந்த கூட்டு ஒரு மீள் ஒழுங்கு செய்வதை முகம் கொடுக்கிறது, ஆழமான முறையில் பிளவுண்டு போயிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஜொஸ்பன் மேலும் நம்பிக்கை வைக்க முடியாது போயுள்ளது, 1997 இல் பசுமைக் கட்சியினர் (சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு வாதிகள்) ஒரு பக்க பலமாக மட்டுமே இருந்துவந்தனர், ஆனால் இன்று அவர்கள் ஆளும் கூட்டரசாங்கத்தில் இரண்டாவது முக்கிய கட்சியாக வந்துள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved