World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

European Central Bank rate decision opens up a financial rift

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி வீத தீர்மானம் ஒரு நிதித்துறை பிளவை திறந்துவிட்டுள்ளது

By Nick Beams
18 April 2001

Back to screen version

வட்டி வீதங்களை வெட்டுவது இல்லை என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் தீர்மானம், நிதிக் கொள்கையை தீர்மானம் செய்வது சம்பந்தமாக மூன்று பெரும் நிதி அதிகாரங்களுக்கு இடையே ஒரு ஆபத்தான பிளவு ஏற்படும் சாத்தியத்தை திறந்துவிட்டுள்ளது.

அமெரிக்க பெடரல் றிசேவ் போட் (FRB) இந்த ஆண்டில் இதுவரை 0.5 வீத புள்ளிகள் கொண்ட மூன்று வெட்டுக்களை நடாத்தியுள்ளதோடு அடுத்த வெட்டை மே 15ம் திகதி இடம்பெறவுள்ள நாணய கொள்கை கமிட்டி கூட்டத்தில் அல்லது அதற்கு முன்னதாக நடாத்தும். ஜப்பான் வங்கி (Bank of Japan) முற்றிலும் பூஜ்யமான வட்டி வீதக் கொள்கையை ஆரம்பித்து வைத்துள்ளது. ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கி அது கடந்த அக்டோபரில் ஆரம்பித்து வைத்த வீதத்தையே தொடர்ந்து கடைப்பிடிக்கும்.

கடந்த புதன்கிழமை ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் விம் டுயிசன்பேர்க் (Wim Duisenberg) அறிவித்த இத் தீர்மானம் ஐரோப்பிய பிராந்திய அமைச்சர்கள், வர்த்தகர்கள், அனைத்துலக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியம், பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) என்பன நெருக்கிக் கொண்டிருந்த தருணத்திலேயே வெளிவந்தது. இவை அனைத்தும் ஒரு வீத வெட்டினை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஒரு வட்டி வீத வெட்டுக்கான அழைப்பு, அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்து போவதற்கான பெரும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) ஐரோப்பிய பிராந்தியத்துக்கான (Euro Zone) அதனது வளர்ச்சி முன்னறிவிப்பை 3.1 வீதத்தில் இருந்து 2.7 வீதமாக புதுக்கி அமைத்துக் கொண்டுள்ளது. இதே சமயம் ஜேர்மனியில் உள்ள 6 பெரும் பொருளாதார நிறுவனங்கள் அந்நாட்டினது வளர்ச்சி முன்னறிவிப்பு வீதத்தை இவ்வாண்டு 2.7 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக குறைத்துக் கொண்டுள்ளன.

இந்த தீர்மானத்துக்கு முன்னதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் சில அங்கத்தவர்கள் இந்த வட்டி வீத வெட்டுக்குச் சாதகமாக இருந்து வந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. டுசெயின்பேர்க் இத்தீர்மானத்தை அறிவித்தபோது அவர் இத்தீர்மானம் ஏகமனதானது எனவும் ஒரு வாக்கெடுப்பு நடாத்த வேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்புச் சாதனங்களுக்கு டுயிசென்பேர்க் விடுத்த அறிக்கையில் வளர்ச்சி முன்னறிவிப்புக்கள் கடந்த இலையுதிர்கால ஐரோப்பிய வீதத்தின் அதிகரிப்போடு கீழ்நோக்கி திருத்திக் கொள்ளப்பட்டன. வெளிவாரி சூழ்நிலைகள் "குறைந்த அளவில் சாதகமாகவும்" "உயர்ந்த அளவில் நிச்சயமற்றதாகவும்" விளங்கியதோடு "ஒரு பூகோள ரீதியான பின்னடைவு ஆபத்துக்கான அறிகுறிகள் இருந்தது இல்லை."

வீதங்களை பராமரிக்கும் தீர்மானம் அதிர்ச்சி தருவதாக மட்டுமல்லாது இதை டுயிசென்பேர்க் அகந்தையான முறையில் பேணிக்காக்கவும் செய்தார். பலர் ஒரு வெட்டைச் செய்யும்படி அழைப்புவிடுக்கும் நிலையில் இது ஒரு விஷயமாக இருக்கவில்லையா எனக் கேட்டதற்கு டுயிசென்பேர்க் அளித்த பதில் வருமாறு: "உண்மையில் நான் நாகரீகமாக நடந்து கொண்டேன்... இது ஒரு விடயமாக விளங்கியது. நான் கேட்கிறேன் ஆனால் நான் அவதானிக்கவில்லை என நீங்கள் கூறலாம்."

ஐரோப்பிய மத்திய வங்கி பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலாக அவர் கூறியதாவது: "பொறுத்திருந்து பார்க்கும்" கொள்கை. வங்கி எதிர்காலத்தில் வீதங்களை வெட்டச் செல்லும் என்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் தர டுயிசென்பேர்க் அடியோடு மறுத்து விட்டார். அவர் கூறியதாவது: பகிரங்க அறிக்கைகளுள் "பாரபட்சத்தை" அறிமுகம் செய்ய விரும்பவில்லை. "ஆதலால் நீங்கள் காத்துக் கிடவுங்கள் நாம் பார்த்துக் கிடக்கின்றோம்."

1999 நவம்பரில் ஒரு திரட்சியான 2.25 சதவீத புள்ளிகளில் இருந்து கடந்த அக்டோபரில் 4.75சத வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட பின்னர் வீதங்களை நிலையாக வைத்துக் கொள்ளும் தீர்மானம் நிதி சம்பந்தப்பட்ட பத்திரிகையில் ஒரு சாராரிடமிருந்து விமர்சனங்களைக் கொணர்ந்தது.

ஐரோப்பிய மத்திய வங்கி தீர்மானத்தின் பின்னால் உள்ள கொள்கையானது "இல்லை வெடிக்குமானால் அதைப் பொருத்த வேண்டாம்" என்பதாகும் என பினான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. ஆனால் "தர்க்க ரீதியில்" தீர்மானம் நின்று பிடிக்கவில்லை. "நாணய கொள்கை என்பது தேவையற்ற முறையில் வளர்ச்சியை மந்தமாக்கும் ஆபத்துக்கு எதிராக பணவீக்க ஆபத்தை சமப்படுத்துவதாகும். கடந்த அக்டோபரில் இருந்து... ஆபத்துக்களை சமப்படுத்துவது தீவிரமாக மாற்றமடைந்தது. அப்போது வட்டி வீதம் பொருத்தமானதாக இருந்திருக்குமேயானால் இப்போது அது பொருத்தமானதாக இருக்க முடியும்."

சுமார் 2.5 சதவீத வளர்ச்சிக்கான கணிப்புக்கள் "ஊக்கமளிப்பதாக" இருக்கையில் டுயிசென்பேர்க் "இக்கணிப்புக்களுக்கான ஆபத்துக்கள் கணிசமானதாக உள்ளதை வலியுறுத்தத் தவறிவிட்டார்" என்பதை இது சுட்டிக் காட்டியது.

"ஜேர்மனியில் உள்ள பலவீனம் அந்த பிராந்தியத்தையும் கீழே தள்ளுகின்றது. பிரான்சு போன்ற நல்ல செயற்பாட்டைக் கொண்டவர்களும் கூட பாதிக்கப்படத் தொடங்குகின்றார்கள். சர்வதேச நாணய நிதியமும், பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பும் (OECD) எதிர்பார்க்கப்பட்ட மந்தத்தை விட ஆழமான ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்துள்ளன. திட நம்பிக்கைக்கான முக்கிய காரணம் தொடர்ச்சியான நுகர்வோர் மனத்திடமும், செலவுமேயாகும். ஆனால் வேலையின்மை அதிகரிக்கும் நிலையில் இவை திடீரென மோசமடையும்."

எக்கோனமிஸ்ட் (Economist) சஞ்சிகை "மனவுறுதி அல்லது அடம்பிடி" என்ற தலைப்பின் கீழ் எழுதுகையில் இத்தீர்மானம் வங்கியின் பல விமர்சகர்களது ஆலைக்கு அசைபோடும் விடயமாகியுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் விதிமுறைகள் பெரிதும் மடைத்தனமானது என அவர்கள் நம்புவதோடு "இப்போது பெரிதும் கவலைதரும் விடயமாக பொருளாதாரப் பின்னடைவு ஆபத்து பிரச்சினை இருந்து கொண்டிருக்கையில்" அது பணவீக்க யோசனையில் ஆழ்ந்து போயுள்ளது என்றது.

அந்தக் கட்டுரை ஐரோப்பிய மத்திய வங்கிச் சபை அங்கத்தவர்களிடமிருந்து வெளிப்படும் முரண்பாடான அறிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தது. அது வட்டி வீதக் கொள்கையை இலகுவாக்கும் திசையில் சென்று கொண்டுள்ளதாகக் காட்ட முயற்சிப்பதாகத் தெரிந்தது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அதனது அறிக்கையில் சுட்டிக் காட்டியது போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் பிரான்சு வங்கியின் (Bank of France) தலைவரும் ஐரோப்பிய மத்திய வங்கிச் சபையின் ஒரு அங்கத்தவருமான ஜோன் குளோட் ரிசே (Jean-Claude Trichet), வங்கி பணவீக்கத்தைக் காட்டிலும் பொருளாதார மந்த நிலையையிட்டே பெரிதும் கவலைப்படுவதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் கடந்த வார முடிவு "திரு. டுயிசென்பேர்க்கினாலும் ஜேர்மன் புண்டஸ் வங்கியினாலும் (Bundes Bank) வழிநடாத்தப்படும் கடும் போக்காளர்கள் மத்திய வங்கிச் சபையில் தமது நிலையை பலப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது."

சலுகை கிடையாது

ஒரு 0.25 சதவீத புள்ளி வெட்டுக் கோரிக்கைக்கும் ஒரு சிறிய சலுகை கூடக் காட்ட ஐரோப்பிய மத்திய வங்கிச் சபை மறுத்து விட்டமை நிதி ஆய்வாளர்களையும் தொடர்புச் சாதன நிபுணர்களையும் இக்காரணத்துக்காக தலைகளைச் சொறிந்து கொள்ளச் செய்துள்ளது. சமீபத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட மத்திய வங்கி அது நிஜமான சுதந்திரத்தைக் கொண்டுள்ளது எனவும் "கடுமையான ரொட்டியாக" புகழை ஸ்தாபிதம் செய்யும் விருப்பினாலும் இது ஏற்பட்டது இதுவெனச் சிலர் தெரிவித்தனர். வளர்ச்சி எதிர்பார்ப்புக்களோடு ஐரோப்பிய மத்திய வங்கி சூது விளையாடுவதாக ஏனையோர் எச்சரித்தனர்.

டுயிசென்பேர்க் தமது பகிரங்க அறிக்கையில் தம்மைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆணை, விலை ஸ்திரப்பாட்டை உறுதி செய்வதே என்பதைத் தெளிவுபடுத்தினார். ஆண்டின் இரண்டாவது அரையிறுதிக் கால கட்டத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் இலக்கு மட்டமான 2 சதவீதத்துக்கு கீழாக 12 நாடுகளை கொண்ட ஈரோ பிராந்தியத்தில் (Euro Zone) பண வீக்கம் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு விலை அதிகரிப்புக்கான ஆபத்துக்கள் இன்னமும் இருந்து கொண்டுள்ளது. "சம்பள அபிவிருத்திகள் விலை ஸ்திரப்பாட்டுக்கான உயர்மட்ட ஆபத்தாக இருந்து கொண்டுள்ளது" எனவும் "அதை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்" எனவும் மேலும் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் சம்பளம், பணவீக்கத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் விருப்புக்கு அப்பால் இந்தத் தீர்மானத்தில் நீண்டகாலக் கணிப்புக்களும் கூட இருந்து கொண்டிருக்கலாம்.

1999 ஆண்டின் தொடக்கத்தில் ஈரோ ஆரம்பிக்கப்பட்டபோது அது அமெரிக்க டாலரின் சாத்தியமான ஒரு பூகோளப் போட்டியாளனாகக் கொண்டாடப்பட்டது. எவ்வாறெனினும் அந்தச் சாத்தியம் ஈரோ ஆரம்பித்த காலத்தின் 1.17 டாலர் பெறுமானத்தில் இருந்து மூலதனம் தொடர்ந்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு பெருக்கெடுக்கத் தொடங்கியதால் 90 சதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி கண்டது. இது அமெரிக்க பங்குமுதல் சந்தைகள் வழங்கிய அதிக அளவிலான இலாப வாய்ப்புக்களாலும் முதலீட்டுச் செழிப்பினாலும் ஏற்பட்டது.

ஆனால் அமெரிக்காவில் ஒரு பெரும் மந்தத்திற்கான அறிகுறிகளோடு ஐரோப்பிய மத்திய வங்கி இப்போது வட்டி வீதத்தைப் பராமரிப்பது உலகப் பொருளாதாரத்தில் பெரிதும் சக்திவாய்ந்த பாத்திரத்தை ஈரோ வகிக்கச் செய்யும்.

நீண்ட காலத்தில் ஐரோப்பிய பொருளாதாரத்தின் கணிசமான அளவு "மறுசீரமைப்பு" இலாப வாய்ப்புகளை அபிவிருத்தி செய்ய அவசியம் என வங்கி கருதுகின்றது. வளர்ச்சியைப் பெருக்க வீதத்தில் ஒரு வெட்டுக்கான நெருக்குவாரங்களை தள்ளுபடி செய்யும் விதத்தில் டுயிசென்பேர்க் நிதிக் கொள்கைகள் வளர்ச்சி சாத்தியங்களை கைதூக்கி விடாது. அது பெருமளவுக்கு "அமைப்பு ரீதியான காரணிகளால்" நிர்ணயம் செய்யப்படுகின்றன" என்றார்.

"வெளியீட்டு வளர்ச்சிக்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்ய அதிகரித்த அளவிலான உழைப்பு சந்தை பங்களிப்பு வீதத்தையும் முன்னேற்றம் கண்ட முதலீட்டு ஊக்குவிப்புக்களையும் இலக்காகக் கொண்ட சுருக்கமான அமைப்பு சீர்திருத்தக் கொள்கைகள் வேண்டும். கணிசமான அளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை பெரிதும் ஆர்வத்துடன் அமுல் செய்வது பல துறைகளில் அவசியமாகியுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

இக்கருத்துக்கு இணங்க, நிதிக் கொள்கையை தளர்த்துவது இல்லை என்ற தீர்மானம் "சீர்திருத்தங்களுக்கான" நெருக்குவாரத்துக்கு இணங்க எடுக்கப்பட்டதாக இருக்கலாம். அதன் மூலம் உலக மூலதனத்துக்கு ஐரோப்பாவின் கவர்ச்சித் தன்மையை அதிகரிக்கச் செய்வதாக அது விளங்கலாம்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தீர்மானத்துக்கான நிஜ உள்ளெண்ணம் என்னவாக இருப்பினும் இது அமெரிக்க பெடரல் றிசேவ் போட்டுக்கு (Federal Reserve Board) கஷ்டங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமற்ற சாத்தியங்கள் இருந்து கொண்டுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரம் பூரணமான பொருளாதாரப் பின்னடைவை நோக்கிச் செல்லாது விட்டாலும் அது ஒரு மிகவும் குறைவான வளர்ச்சிக் காலப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதைக் காட்டும் விதத்தில் இலாப வீழ்ச்சி, தொழில் வெட்டுக்கள் பற்றி தினசரி அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. இதனால் அமெரிக்க பெடரல் றிசேவ் போர்ட் (FRB) வட்டி வீதத்தைத் தொடர்ந்து வெட்டும்படி கோரும் நெருக்குவாரங்களுக்கு ஆட்பட்டுள்ளது.

ஆனால் ஆபத்துக்கள் இருந்து கொண்டுள்ளன. அவர்கள் இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாது போனாலும் அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் வெட்டுக்கள் பெரிதும் வேகமாக அல்லது வட்டி வீதம் உலகின் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எதிரான திசையில் செல்லுமானால் அது ஒரு பொருளாதாரப் பின்னடைவின் உச்சிக்கு இட்டுச் செல்லும் வீழ்ச்சியை டொலரில் உண்டுபண்ணும் என அஞ்சுகிறார்கள். அது சுட்டிக்காட்டும் முரண்பாடான கொள்கைகள் காரணமாக அத்தகைய ஒரு நிலைமையானது "தீக்கனவு காட்சியாக" விளங்கும். ஒருபுறத்தில் டொலரின் வேகமான வீழ்ச்சி வட்டி வீத அதிகரிப்பின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. மறுபுறத்தில் பொருளாதாரப் பின்னடைவின் வளர்ச்சி வட்டி வீத வெட்டின் அவசியத்தை சுட்டிக் காட்டுகின்றது.

இதுவரையும் பங்குமுதல் சந்தைகள் வீழ்ச்சி கண்டு வந்த நிலையிலும் கூட அமெரிக்காவுக்கு நிதி தொடர்ந்து பெருக்கெடுத்து வந்தது. ஆனால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான வட்டி வீதங்களின் இழுபறிகளினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றி கிறீன்ஸ்பான் நன்கு அறிவார்.

அமெரிக்க பெடரல் றிசேவ் போட்டின் தலைவராக அவர் நியமனம் பெற்ற குறுகிய காலத்தினுள்- 1987 நடுப்பகுதியில் ஜேர்மன் வட்டி வீதங்கள் அதிகரித்த போதும் இத்தகைய முரண்பாடுகள் ஏற்பட்டன. அந்த ஆண்டின் அக்டோபரில் பங்குமுதல் சந்தை வீழ்ச்சியை கட்டவிழ்த்துவிட இது உதவியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க நிதி அமைப்பு அனைத்துலக மூலதனப் பெருக்கெடுப்பின் ஈடாட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டது. 1987ல் அமெரிக்கா இன்னமும் ஒரு அனைத்துலக கடன் வழங்கும் நாடாக விளங்கியது. எவ்வாறெனினும் இன்று அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 ரில்லியன் டொலர்களாக உள்ளது. இது அதனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 16 சதவீதத்துக்குச் சமமானதோடு இதன் வளர்ச்சி பெரிதும் விரைவானதாக உள்ளதால் 2010ம் ஆண்டளவில்- இது இந்த விதத்தில் தொடருமானால்- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 60 சதவீதத்தைப் பாதிக்கும்.

இத்தகைய ஒரு நிலைமைகளின் கீழ் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் பெரிதும் இணக்கமான வட்டி வீதக் கொள்கைகள் பெரிதும் அவசியமாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகள் ஐரோப்பிய மத்திய வங்கித் தீர்மானம் தொடர்பாக பகிரங்க மெளனம் சாதிக்கையில் மூடிய கதவுகளுக்கு உள்ளே சூடுபிடித்த விமர்சனங்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகம் கிடையாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved