WSWS:
செய்திகள் &
ஆய்வுகள்: மத்திய
கிழக்கு
Israel invades, pulls out of Gaza Strip
War danger grows in Middle
East
மத்திய கிழக்கில் யுத்த அபாயம் அதிகரிக்கின்றது
By Chris Marsden
18 April 2001
Use
this version to print
பாலஸ்தீனத்தின் ஆட்சியிலுள்ள காஸா கரையோரப்பகுதியின்
பெருமளவு பிரதேசத்தை ஆக்கிரமித்து 24 மணித்தியாலங்களுக்குள்
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மீண்டும் பின்வாங்கிக்கொண்டன.
ஆரம்பத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் இப்பிரதேசத்தை மாதக்கணக்கில்
கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கப்போவதாக அறிவித்திருந்தபோதிலும்
அமெரிக்கா இந்நடவடிக்கையை கண்டித்து ஒரு அறிக்கை விட்ட
ஒரு சில மணித்தியாலங்களுக்குள் படைகளை வாபஸ்பெற உத்தரவிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 4 மணித்தியாலங்கள்
நீடித்த குண்டுத்தாக்குதலின் பின்னர், காஸா கரையோரப்பகுதியின்
சில நிலைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இந்த
நடவடிக்கையில் தாங்கிகள், தாக்குதல் வானூர்திகள், ஏவுகணைகள்,
கப்பல்கள், புல்டோசர்கள் என்பன பாவிக்கப்பட்டதுடன், Beit
Hanun என்னுமிடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி
கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்தனர்.
காஸாவின் மத்திய பொலிஸ் நிலையம், Deir al
Balah வில் உள்ள பாலஸ்தீன தலைவரான யாசீர்
அரபாத்தின் விஷேட பாதுகாப்பு பிரிவான 17 வது படைப்பிரிவு, பாலஸ்தீன
கடற்படை நிலையங்கள் என்பன குண்டுத்தாக்குதலுக்குள்ளாயின.
பெத்தலேம் நகருக்கு அண்மையிலுள்ள மேற்கு கரையோரப்பகுதியிலுள்ள
கிராமங்களை நோக்கி இஸ்ரேலிய தாங்கிகள் சுட்டன.
27 மைல் நீளமான காஸா கரையோரப்பகுதி
மூன்று பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன; Khan
Yunis இருந்து Rafiah; Gush- Katif இருந்து
Netzarim வரையும், மற்றும் Gaza City
south ஆகும். இதற்கான
முக்கிய கரையோரப்பாதை இஸ்ரேலிய சோதனை நிலையங்களால்
பிரிக்கப்பட்டுள்ளது. புல்டோசரால் இப்பாதை தோண்டப்பட்டு
கற்களால் நிரப்பி போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன்,
டாங்கிகள் இப்பாதை முழுவதும் நிறுத்தப்பட்டு இதனூடாக
காஸா கரையோரப்பகுதியில் பாலஸ்தீனர்களின் போக்குவரத்து
தடைசெய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன பேச்சாளர் ஒருவரான Hassan
Asfour மறு ஆக்கிரமிப்புக்கான தந்திரோபாயம்
என இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு
படைகளின் மேஜர் ஜெனரலான Yom Tov Samia ''A
பிரிவிலிருந்து [பாலஸ்தீனர்களால் கட்டுப்படுத்தப்படும்
காஸா பகுதி] ஓரளவு பாரிய பகுதி எடுக்கப்பட்டுவிட்டது எனவும்,
இதன் நோக்கம் அரபாத் காலையில் நித்திரைவிட்டு எழுகையில்
1 கிலோமீட்டர் அகலமும் 3 கிலோமீட்டர் நீளமுமான பிரதேசத்தில்
அடங்கியுள்ள அவர்களது சகல தளங்களும், பொலிஸ் நிலையங்களும்
வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருப்பதை காணவேண்டும்
என்பதே'' என குறிப்பிட்டார்.
பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதானா
ஆரியல் ஷரோனால் தலைமை தாங்கப்படும் லிகுட் கூட்டணி
அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம்
வழமைபோல் ஆதரவளித்தாலும் இஸ்ரேல் இராணுவத்தின் அண்மைய
நடவடிக்கையானது முழு மத்திய கிழக்கையும் யுத்தத்தினுள் கொண்டு
செல்லும் அபாயத்தை கொண்டிருந்தது. இஸ்ரேல், அளவுக்கு
மிஞ்சி போய்விட்டதை தெளிவாக கவனத்திற்கு எடுத்து அமெரிக்கா
துரிதமாக இயங்கி எல்லைக்குள் நிறுத்திக்கொண்டது.
அமெரிக்க அரசு செயலாளரான கொலின் பெளல்
காஸாவின் ஒரு பகுதியை அபகரித்துக்கொண்டதை ''மிதமிஞ்சிய
பொருத்தமற்ற'' நடவடிக்கை என கண்டித்து அறிக்கை விட்டார்.
அவர் மேலும் ''நிலைமை இன்னும் மோசமடையுமானால், அது
பரந்த மோதல்களுக்கான அபாயத்தை முன்வைப்பதாக'' எச்சரித்தார்.
இதன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இஸ்ரேலிய முக்கிய அதிகாரிகள் வின்வாங்குவதாக
அறிவித்தனர்.
இஸ்ரேல், இந்நடவடிக்கை காஸா பிரதேசத்திலிருந்து
ஹமாஸ் இயக்கத்தினர் நெகாவ் பாலைவனத்திலிருந்து 5கிலோமீட்டர்
தூரத்திலுள்ள ஷரோனின் சொந்த ''Sycamore"
இற்கு அண்மையிலுள்ள தென் இஸ்ரேலிய நகரமான Sderot ஐ
நோக்கி, ஐந்து 82 மில்லிமீட்டர் மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டதற்கான
பதிலடி என குறிப்பிட்டது. இம் மோட்டார் தாக்குதலானது 1996
இற்கு பின்னர் முதல் தடைவையாக லெபனானில் உள்ள சிரியாவின்
ராடார் நிலையங்களை நோக்கி ஏப்பிரல் 16ம் திகதி இஸ்ரேல்
நடாத்திய குண்டுத்தாக்குதலுக்கான பதிலடியாகும். இதில் 3
சிரிய படைவிரர்கள் கொல்லப்பட்டதுடன், ஜோர்டானிய வெளிநாட்டு
அமைச்சரான Abdallah al-Khatib இன்
இஸ்ரேலுக்கான விஜயம் செய்யும் காலத்துடன் பொருந்துகின்றது.
இவர் ஷரோன் பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும்
முதலாவது அராபிய அரசியல்வாதியாவார். இவர் இஸ்ரேலுக்கும்
பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை திரும்ப
ஆரம்பிக்கும் நோக்கில் எகிப்தினதும் ஜோர்டானினதும் கூட்டு
முன்ஆலாசனைகளை கொண்டுவந்திருந்தார். Abdallah
al-Khatib இன் செய்தியில் லெபனான் மீதான
இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கப்பட்டிருந்ததுடன், ''இது இப்பிரதேசத்தை
ஆபத்துக்குள்ளாக்குவதாக'' குறிப்பிட்டிருந்தது. இவரின் இம்
முன்ஆலோசனைகள் ''பிரயோசனமற்றவை'' என ஷரோனின் பேச்சாளரால்
குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு முன்னதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்
Benjamin Ben-Eliezer கடந்த மேயில்
லெபனானில் இருந்து படைகள் வாபஸ்பெறப்பட்ட பின்னர் சிரியாவால்
ஆதரவளிக்கப்படும் ஹிஸ்பொல்லாவால் அல்லது கடவுள் கட்சியினரால்
மூன்று இஸ்ரேலிய படைவீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும்
மூன்றுபேர் கடத்திச்செல்லப்பட்டதற்குமான தற்பாதுகாப்பு
பதில் தாக்குதல் என லெபனான் மீதான ஆகாயதாக்குதலை
குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ''விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன....
நீங்கள் மட்டும் தான் ஹிஸ்பொல்லாவை கட்டுப்படுத்தமுடியும்
என தெளிவான செய்தி ஒன்றை சிரியாவிற்கு அனுப்புவதை தவிர தமக்கு
மாற்றுவழி எதுவுமில்லை'' என எச்சரித்துள்ளார்.
அரபுநாடுகளின் தலைவர்கள் பலர் இஸ்ரேலின் இவ்
ஆத்திரமூட்டலை கண்டித்து அறிக்கைவிட தள்ளப்பட்டனர். சிரியா,
லெபனானில் தனது 30,000 படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதுடன்,
தனது ராடார் நிலையங்களின் மீதான தாக்கதலை ''அரபுநாடுகளுக்கு
எதிரான ஒரு போட்டி'' என குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சர்
Farouq al-Sharaa "தகுந்த நேரத்தில்
இஸ்ரேல் இதற்கான தகுந்த விலையை செலுத்தவேண்டியிருக்கும்''
என கூறியுள்ளார். லெபனான் ஜனாதிபதி Emile Lahoud இவ்வான்
தாக்குதல் ''பொதுவான மோதல்களுக்கு'' இட்டுச்செல்வதாக
கூறியுள்ளார். சவுதி அராபியா கூட இஸ்ரேல் ஒரு ''இழிவான'' முறையில்
நடப்பாதகவும் யுத்தநோக்கங்களுக்கு எதிராக உறுதியான
நிலைப்பாடு எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.
இஸ்ரேலின் ஆத்திரமூட்டல்
ஷரோனின் அரசாங்கம் கடந்த மாதம் பதவி
ஏற்றதிலிருந்து ஒரு தொடர் ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டு
வருகின்றது. அவர் எந்தவொரு அரபுநாடும் பாலஸ்தீனர்களின் தலைவிதிக்காக
போராட விருப்பமற்று இருப்பதை தெளிவாக கணிப்பிட்டுள்ளார்.
புதிதாக பதவியில் அமர்த்தப்பட்டுள்ள புஷ் நிர்வாகத்தின் தந்திரோபாய
ஆதரவுடன் அவர் இஸ்ரேலின் பாரிய இராணுவ ஆளுமையை பிரயோகித்து
1993 ஒஸ்லோ உடன்படிக்கையில் பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்பட்ட
சலுகைகளை திரும்பப் பெறமுயற்சிப்பதுடன், சிரியாவுடனான தற்போதய
பேச்சுவார்த்தைளில் முன்னுள்ள கோலான் குன்று பிரதேசத்திலிருந்து
இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை
அகற்றி விட முனைகின்றார்.
Ha' aretz பத்திரிகைக்கு
கடந்தவார இறுதியில் வழங்கிய பேட்டி ஒன்றில் ஷரோன் ''மேற்கு
கரையிலிருந்தும், காஸா பிரதேசத்திலிருந்தும் இஸ்ரேலிய குடியேற்றங்களை
பின்வாங்கப் போவதில்லை எனவும், 1967 ஆறுநாள் யுத்தத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட
கோலான் குன்று பிரதேசத்திலிருந்தும் ஜோர்டான் கரையோரப்பகுதியிலிருந்தும்
இராணுவத்தை பின்வாங்கப் போவதில்லை எனவும் கூறியிள்ளார்.
Ha' aretz ஆல் இப்படியான
அடித்தளத்தில் எவ்வாறு அராபிய அண்டைநாடுகளுடன் சமாதானமாக
இருக்கமுடியும் என கேட்கப்பட்டபோது, அவர்
''மூலோபாய நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், இன்னும்
10-15 வருடங்களில் இஸ்ரேல் மீதான தாக்குதலை செய்வதற்கு
அராபுநாடுகளுக்கு இன்று இருப்பதைவிட பலம் குறைவாகவே
இருக்கும். ஏனெனில் இஸ்ரேல் பொருளாதாரத்தில் செழித்துவளரும்
ஒருநாடாக இருக்கும் எனவும், அராபிய நாடுகள் வீழ்ச்சியடைந்துகொண்டு
போகும்'' எனவும் கூறினார்.
ஷரோனின் அதிசயமான கூற்று இஸ்ரேல்
பொரளாதாரத்தை பார்க்கையில் அவரின் முகத்திலேயே திருப்பி
அடிக்கின்றது. ஆனால் அவரின் முடிவு தொடர்பாக குறிப்பிடுவது முக்கியம்.
அதாவது ''காலம் எமக்கு சாதகமாக உள்ளது எனவே நீண்டகாலத்திற்கு
செல்லக்கூடிய தீர்வுகளை காண்பது முக்கியமானது''.
ஷரோனின் முன்னோக்கு என்னவெனில், பலபத்தாண்டு
யுத்தம் தேய்வடைந்து செல்கின்றது, இஸ்ரேல் தொடர்ந்தும்
வருவன எல்லாவற்றையும் எதிர்நோக்கி ஒரு பாதுகாப்பான
கோட்டையாக இருக்கும் என்பதாகும்.
ஷரோனின் அக்கணிப்பீட்டிற்கான மற்றைய முக்கிய
காரணிகள் தொழிற் கட்சியினதும், இஸ்ரேலின் அமைதிக்கான இயக்கத்தின்
உண்மையான உடைவுமாகும். ஷரோனின் அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொண்டதுடன்
தொழிற்கட்சி இஸ்ரேலின் அரசியல் வாழ்வில் ஒரு சுயாதீன சக்தியாக
இல்லாது போய்விட்டது. ஒஸ்லோ உடன்பாட்டின் முக்கிய பங்காளரான
தற்போதய வெளிநாட்டு அமைச்சர் ஷமோன் பெரஸ் 12
பாதுகாப்பு அமைச்சு அங்கத்தவர்களில் சிரியாவின் ராடார் நிலையங்கள்
மீதான ஆகாய தாக்ககுதலிற்கு எதிராக வாக்களித்த இருவர்களில்
ஒருவராவார். அவர்கள் இது Abdallah al-Khatib இன்
விஜத்தின் போது நடாத்தப்பட்டதால் பிழையான நேரத்தில் நடாத்தப்பட்டது
என கூறினர். எவ்வாறிருந்தபோதும் பெரஸ் வெளிப்படையாக
காஸா பிரதேசத்தை கைப்பற்றியதை ஆதரவளித்ததுடன், இஸ்ரேல்
இராணுவ வானொலிக்கு ''பாலஸ்தீன நிர்வாகத்தினர் மோட்டார்
குண்டுகளை வைத்திருப்பது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது எனவும்,
உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கின்றது'' எனவும்
கூறினார்.
இராணுவத்தின் பின்வாங்கலை இஸ்ரேலிய அதிகாரிகள்
மறைத்துவிட விரும்பியபோதிலும், இது ஒரு தற்காலிகமாக இருந்தாலும்
ஒரு பின்வாங்கலே. இது இஸ்ரேல் அமெரிக்காவின்
பொருளாதார, அரசியல் ஆதரவில் எந்தளவிற்கு தங்கியுள்ளது
என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கொலின் பெளல் ''சகல தரப்பினரையும்
எல்லாவிதத்திலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, நெருக்கடிகளை
குறைத்து வன்முறைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர''
அழைப்புவிட்டுள்ளார். எவ்வாறிருந்தபோதிலும் நிலைமை வெடிக்கும்
நிலையிலேயே உள்ளது.
ஷரோன் தனது பதவியின் பலம் என எதை கருதுகிறாரோ
அது அவரின் வீழ்ச்சிக்கான விதைகளையும் கொண்டுள்ளது. மத்திய
கிழக்கின் உறுதிப்பாட்டிற்கு மேற்கு நாடுகள் நம்பியுள்ள அரபுநாடுகள்,
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பை காட்டாததால் வெளிப்படையாகவே
மதிப்பிழந்து போயுள்ளன. ஷரோனின் நடவடிக்கைக்கு எதிரான
அரபுமக்களின் பாரிய சமூக, அரசியல் எதிர்ப்பின் முன்னால் அவர்கள்
விருப்பமில்லாவிட்டாலும் இஸ்ரேலுடன் மோதலுக்கு செல்லவேண்டியுள்ளது
அல்லது தமது வீழ்ச்சிக்கான அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்.
இஸ்ரேலின் சமூகம் உள்முரண்பாடுகளால் உடைந்துபோயுள்ளது.
யூத, அரபு மக்களின் சமூக நலன்களும் சமாதானத்திற்கான அவர்களின்
விருப்பமும் தொழிற்கட்சியால் அரசியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட
முடியாது. இதனால் ஷரோன் இவ்சமூக நெருக்கடியை பாரிய
இஸ்ரேல் என்பதன் பின்னால் திசைதிருப்ப முயல்கின்றார். இது
அவரால் கட்டுப்படுத்தமுடியாத அளவிலான வடிவத்துடன் கிளர்ந்து
எழும்பலாம்.
|