WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Further court delay to Sri Lankan legal challenge of
film ban
இலங்கை திரைப்படத் தடைக்கு எதிரான சவால்:
நீதிமன்ற விசாரணை மேலும் ஒத்திவைப்பு
By Waruna Alahakoon
20 March 2001
Use
this version to print
புரஹந்த கலுவர (பெளர்ணமி தின மரணம்) திரைப்படம்
மீதான அரசாங்கத்தின் தடை தொடர்பாக இலங்கை உயர் நீதி
மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகள் வழக்கு,
மே 28ம் திகதிக்கு இரண்டாவது தடவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் நீண்ட கால யுத்தம் சிங்களக் கிராமவாசிகள்
மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை வெளிக்கொணரும் இத்திரைப்படம்
பல நாடுகளில் திரையிடப்பட்டதோடு பல சர்வதேச
விருதுகளையும் வெற்றி கொண்டுள்ளது.
ஆனால் கடந்த வருடம் பொதுஜன முன்னணி
அரசாங்கம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் (LTTE)
இழந்ததைத் தொடர்ந்து மே மாதம் அறிவிக்கப்பட்ட
அவசரகால சட்ட நீடிப்பைப் பயன்படுத்தி, இத்திரைப்படம் இலங்கையில்
திரையிடப்படுவதை அரசு தடை செய்தது.
தனது திரைப்படம் திரையிடப்படுவதற்கு ஒரு கிழமைக்கு
முன்னர் நீர்ப்பாசன அமைச்சர் சரத் அமுனுகமவும் தேசிய திரைப்படக்
கூட்டுத்தாபன தலைவரும் அதை ஜூலை 21ம் திகதி தடை செய்ததன்
மூலம் கருத்து வெளிப்பாடு, கலைப் படைப்பு சுதந்திரங்களை மீறியுள்ளதாக
கூறி, இலங்கை திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
தனது சட்ட நடவடிக்கையில் பிரசன்ன விதானகே,
அமுனுகம, தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபன (NFC)
தலைவர் திஸ்ஸ அபேசேகர, அரசாங்க தணிக்கையாளர் ஆரிய
ரூபசிங்க, மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர்களையும் எதிரிகளாக
குறித்துள்ளார். அமைச்சருக்கும் ஏனையவர்களுக்கும் திரைப்படத்தை
தடை செய்வதற்கு நியாயாதிக்கம் கிடையாது எனவும் அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம்,
விதானகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய
வேண்டும் என தீர்மானித்து, அக்டோபர் 25ம் திகதி விசாரணைக்கு
திகதி குறித்தது. அன்றைய தினம், நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு
அனுமதியளிப்பதற்கான ஒரு 'தீர்வுக்கு' வருவதற்கான விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு அரசாங்க சட்டத்தரணிகளுக்கு வேண்டுகோள்
விடுத்ததோடு; சம்பந்தப்பட்டவர்களை நவம்பர் 20ம் திகதி
சமூகமளிக்குமாறு அறிவித்தது. எவ்வாறெனினும் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள்
விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை பெப்பிரவரி
5ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு மாத கால தாமதத்தின் பின்னர் -பெப்பிரவரி
5ம் திகதி- அரச தரப்பு வழக்கறிஞர்கள் ஒரு "தீர்வுக்கான"
கலந்துரையாடலுக்கு தாம் தயாராக இல்லை என நீதிமன்றத்தில்
அறிவித்தனர். நீதிமன்றம், வழக்கு மே 28ம் திகதி விசாரிக்கப்படும்
என அறிவித்தது.
வித்தானகேயின் மனுவுக்கு உத்தியோகபூர்வமாக
பதிலிறுக்கும் வகையில்: "புரஹந்த கலுவர திரைப்படத்தை வெளியிடுவது
அல்லது விநியோகிப்பதன் மூலம் பாதுகாப்பு படையினரது மனத் தைரியத்துக்கோ
அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கோ மேலும் புதிதாக
ஆயுதப் படைகளுக்கும், பொலிசுக்கும் ஆட்திரட்டும் நடவடிக்கைகளுக்கும்
மற்றும் நாட்டின் சட்டத்தை மீறவும் தாக்கத்தை ஏற்படுத்துமானால்,
அந்த நிலைமையை தடை செய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்
என்ற வகையில் தான் "கடமைப்பட்டவனாக" இருப்பதாக
குறிப்பிடுவதன் மூலம் அமுனுகம தடையை நியாயப்படுத்தினார்.
இலங்கை அரசாங்கத் தணிக்கையின் துடைத்துக்கட்டும்
கொள்கையை அமைச்சரின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது. புரஹந்த
கலுவர ஒரு யுத்த எதிர்ப்புத் திரைப்படம் அல்ல. அதன் பாத்திரங்களில்
எதுவும் யுத்தத்தையோ அல்லது அரசாங்கத்தையோ கண்டனம்
செய்யவில்லை. ஆனால் அது 18 வருடகால யுத்தம் சிங்கள கிராமவாசிகளின்
வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
என்பதை ஆழமாக மனதை உருக்கும் விதத்தில் ஒப்புவிக்கின்றது.
தனது ஒரே மகன் யுத்த நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டான்
என்ற செய்தியை ஏற்க மறுக்கும், அல்லது குடும்பத்துக்கான
நஷ்ட ஈட்டை ஏற்றுக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட மறுக்கும்,
ஒரு குருடான சிங்கள கிராமத்தவரே திரைப்படத்தில் பிரதான பாத்திரம்
வகிக்கின்றார்.
அமைச்சரின் மனு தொடர்பாக விதானகே நீதிமன்றத்தில்
விளக்கமளிக்கையில் தனது திரைப்படம் "எதிர்பார்ப்பின் ஒரு
கதை" எனவும் "உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்கு முகம்
கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் உள்ள மக்களின்
கடினமான மனிதப் போராட்டத்தையும் அவர்களது உயிர்வாழும்
உணர்வுகளையும் சித்தரிப்பதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
"பாதுகாப்பு நிலைமைகள் அபிவிருத்தி அடைந்தவுடன்" திரைப்படத்தை
திரையிடலாமா என இயக்குனர், அமுனுகமவின் அறிக்கை சம்பந்தமாக
கேள்வி எழுப்பினார். இந்தப் பிரகடனம் "தெளிவற்றதும் எந்தவிதமான
அடிப்படை நியாயமும் இல்லாதது" என வித்தானகே தனது
அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் தனது திரைப்படத்துக்கு அரசாங்கத்தினதும்
இராணுவ அதிகாரிகளதும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தார்.
திரைப்படத் தயாரிப்பின் போது சில காட்சிகளுக்கு இராணுவ உபகரணங்களை
பயன்படுத்துவதற்கான அவரது வேண்டுகோளையும் பாதுகாப்பு
அமைச்சு நிராகரித்தது. புதிதாக இராணுத்தில் சேர்ந்து கொள்பவர்களை
உற்சாகம் இழக்கச் செய்யும் என குற்றம் சாட்டி திரைப்படத்தின்
கதையையும் கூட மாற்றும்படி அமைச்சு கோரிக்கை விடுத்தது.
கடந்த ஜூலை மாதம் திரைப்படத்தை தடை
செய்யும்போது அரசாங்க அதிகாரிகள் விதானகேக்கு தெரிவித்ததைப்
போல், அரசாங்கத்தின் அவசரகாலச் சட்டத்தை மீறுவதாக
அவர்கள் குறிப்பிடும் காட்சிகளை திரைப்படத்திலிருந்து இயக்குனர்
அகற்றினால் மாத்திரமே திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கப்படும்
என்பதே பிரதிவாதிகள் நீதிமன்றத்துக்கு அளித்த பதிலாகும். திரைப்படத்தை
வெளியிடுவதற்கு பகிரங்க வெளியீட்டுச் சபையின் அனுமதியைப் பெற்றுள்ள
இயக்குனர், எந்த ஒரு காட்சிகளை வெட்டுவதையும் நிராகரித்தார்.
அரசாங்கம் இவ்வாறான சிடுமூஞ்சித் தனமான
சூழ்ச்சிகளை போசிப்பதன் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால்
புரஹந்த கலுவர, மற்றும் விருதுகளைப் பெற்ற விதானகேயின்
முன்னைய திரைப்படமான பவுரு வலலு (சுவர்களுக்குள்ளே)
திரைப்படத்தையும் தடை செய்ய முடியும். செப்டம்பர் மாதம்
இந்தியாவில் பம்பாயிலும் கல்கத்தாவிலும் இடம்பெற்ற திரைப்பட
விழாக்களில் புரஹந்த கலுவர திரைப்படத்தை திரையிட ஊக்கமளித்த
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும் தடையுடன் சேர்ந்து
கொண்டுள்ள அமைப்புக்களில் ஒன்றாகும்.
இலங்கையில் தனது திரைப்படத்தை திரையிடுவதற்கான
அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் உறுதியாய் இருக்கும் விதானகே,
விருது வழங்கும் வைபவத்தை பகிஷ்கரித்ததோடு புரஹந்த கலுவர
மீதான தடை விலக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரி
வருகின்றார்.
அவர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு
அண்மையில் குறிப்பிட்டதாவது: "பவுரு வலலு' வுக்கு
விருதுகளை வழங்கும் அதேவேளை, அவர்கள் புரஹந்த கலுவர
திரைப்படத்தை தடுத்துள்ளார்கள். ஒரு அடிப்படை உரிமை எனக்கும்,
புரஹந்த கலுவரவுக்கும், சமுதாயத்துக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
ஒரு கலைப் படைப்புடன் கருத்துப்பரிமாற உள்ள உரிமையாகும்.
நான் பரிசளிப்பு விழாவை பகிஷ்கரித்தேன்; பரிசை நிராகரித்தேன்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமை எனக்கு உள்ளது
என்ற அடிப்படை நம்பிக்கையால் அங்ஙனம் செய்தேன்.
யுத்தம்
இலங்கை கிராமத்தின் வாழ்க்கையை தவிடு பொடியாக்கியது எப்படி:
"புர ஹந்த கலுவர" (பெளர்ணமி தின மரணம்) திரைக்கதை,
நெறியாள்கை: பிரசன்ன வித்தானகே
[5 June 2000]
|