WSWS: செய்திகள் & ஆய்வுகள் : ஐரோப்பா
:
பால்கன்
Bosnia-Herzegovina faces dissolution
பொஸ்னியா-ஹேர்ஸெகோவினா முடிவினை எதிர்நோக்குகின்றது
By Tony Robson
28 March 2001
Use
this version to print
இக் கட்டுரையின் முதல் பாகம் ஏப்பிரல்
4ம் திகதி பிரசுரிக்கப்பட்டது. இறுதிப் பாகத்தை கீழே காணலாம்.
பல்
இன பொஸ்னியா
பல இன பொஸ்னியாவை பாதுகாப்பது என்ற
போர்வையின் கீழ் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பெயரளவில்
ஒரு சுதந்திரமான அரசாங்கத்தின் மீது முன்னொருபோதும் இல்லாதளவிலான
கட்டுப்பாட்டை பெற்றுள்ளன. இது நேட்டோவின் ஆதிக்கத்திலுள்ள
S-For படைகளால்
ஆக்கிரமித்துள்ளதையும் கடந்து சென்றுள்ளது. உலக வங்கியும் சர்வதேச
நாணய நிதியமும் அதன் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகையில்,
உயர் அதிகாரிகளுக்கான அலுவலகத்தை [Office
of the High Representative-OHR] அங்கு
உருவாக்கியதன் மூலம் அந்நாட்டின் முழு அரசியல் போக்கினையும்
மேற்கு நாடுகள் கட்டுப்படுத்துவதற்கான வீட்டோ அதிகாரத்தை
உறுதிப்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகளுக்கான அலுவலகம் [OHR]
தேவைப்பட்டால் புதிய அரசாங்க அமைப்புகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட
பிரதிநிதிகளை அகற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது. இவ்
உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பாவின் கூட்டுழைப்பை
உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா தனது முன்னணிப் பாத்திரத்தை
பாதுகாத்துள்ளது. முன்னாள் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரான
மடலீன் அல்பிரைட் ''டேட்டின் உடன்படிக்கையும் சமாதான
பேச்சுவார்தைகளும் அமெரிக்க தயாரிப்பாகும்'' என பின்னர்
குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தல்
யுத்தம் முடிந்த பின்னர் மூன்றாவது தேர்தலாகும். பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவின்
தேர்தலுடன் சிறுபிரிவுகள் மட்டத்திலான பாராளுமன்ற தேர்தல்களும்
குரோசிய முஸ்லிம் கூட்டமைப்பின் கன்டோன்களுக்கான தேர்தல்களும்
இடம்பெற்றன. இதன் முடிவுகள் தேசியவாத கடும்போக்காளர்களின்
ஆதரவு பெருகிவருவதை காட்டுகின்றன. இன்றுவரையில் திரும்பும்
சிறுபான்மையினரின் அளவு குறைவாகவே உள்ளது. அதாவது சிறுபான்மையாக
அவர்கள் இருக்கும் பகுதிகளில் அவர்களது சொந்த வீடுகளுக்கு
திரும்பும் அளவு 10% இற்கு குறைவாகவுள்ளது. தாம் பெரும்பான்மையை
அனுபவிக்கும் பிரதேசங்களில் தமது கட்டுப்பாட்டை அதிகரித்துக்கொள்வதற்காக
இத்தேசியவாத தலைவர்கள் இடம்பெயர்ந்த மக்கள் நாடுதிரும்புவதை
தடைசெய்கின்றனர். அவர்கள் பரஸ்பர அவநம்பிக்கையிலான சூழ்நிலையை
பாவித்து தமது சொந்த இன சமூகத்தின் பாதுகாவலராக காட்டமுனைகின்றனர்.
கிட்டத்தட்ட 50% ஆன வயோதிபத்தை அடைந்த
சமுதாயத்தில் அவர்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய பங்குவகிக்கின்றது.
போட்டி தேசியவாதிகள் சர்வதேச உதவிகளையும், கடத்தல்களால்
கிடைக்கும் இலாபத்தையும், பொது நிறுவனங்களில் அவர்களின்
உயர்பதவிகளையும் தவறாக பாவித்து தமக்கான ஆதரவை
தேடுகின்றனர். எவ்வாறிருந்தபோதும் பரந்த சமூக பிரச்சனைகள்
முன்வருவதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. கடந்த பத்துவருடங்களாக
கடும் தேசியவாதிகளுக்கான வாக்குகள் 10-20% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.
Srpska குடியரசு
வழங்கப்படாத ஊதியங்களை வழங்ககோரி அரசாங்க ஊழியர்களின்
வேலைநிறுத்த அலையால் தாக்கப்பட்டதுடன், கடந்த வருட
உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் SDA
குரோசிய ஜனநாயக யூனியனிற்கும் வாக்குகள்
பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
நவம்பர் தேர்தலில் தேசியவாதிகளுக்கு கிடைக்கும்
ஆதரவை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் சில வெற்றியளித்திருப்பதாக
தெரிகின்றது. குரோசிய ஜனநாயக யூனியனிற்கு கிடைத்த வாக்குகள்
1998 இல் கிடைத்ததை விட 20,000 ஆல் குறைந்துள்ளதுபோதிலும்
பொஸ்னிய குரோசியர்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருந்தனர்.
இக்கட்சி கூட்டமைப்பின் மேற்சபைக்கான வாக்குளிப்பு முறையில்
செய்யயப்பட்ட மாற்றத்தை பொஸ்னிய குரோசியர்களின் உரிமைகளை
மட்டுப்படுத்தியுள்ளதாக எடுத்துக்காட்டி தமது பிரிவினைக்கான
ஆதரவை உறுதிப்படுத்திக்கொண்டது. இது சேர்பிய ஜனநாயக கூட்டு
[SDA]
ஆதரவை அதிகரிக்கவும் செய்தது.
அவர்கள் ''எல்லோரும் தமக்கு விருப்பமானதை தெரிவுசெய்கின்றார்கள்.
உங்கள் நிலை என்ன? '' என்ற கோசத்துடன் பொஸ்னிய முஸ்லீம்களை
இன அடித்தளத்தில் வாக்களிக்க கோரினர்.
இது Srpska குடியரசுக்கும்
பொருத்தமானது. தேர்தலுக்கு இரண்டு கிழமைக்கு முன்னர் அமெரிக்க
தூதுவரும், டேட்டன் உடன்படிக்கையின் முக்கிய ஆக்கதாரருமான
றிச்சட் கோல்புறுக் பொஸ்னியாவிற்கு சென்று உயர் அதிகாரிகளுக்கான
அலுவலகத்திடம் [OHR]
சேர்பிய ஜனநாயக கட்சி [SDS]
ஐ தடைசெய்ய கோரினார்.ஆனால்
இது அதன் ஆதரவை பெருக்கவே வழிவகுத்தது. சேர்பிய ஜனநாயக
கட்சி 1999 உயர்
அதிகாரிகளுக்கான அலுவலகம் தடைசெய்த முக்கிய சேர்பிய கட்சியான
SRS இனது
வாக்குக்களையும் எடுத்துக்கொண்டது.
சிறிய பிராந்திய அடித்தளத்தில் ஒரு அரசாங்கத்தை
உருவாக்குவதற்கு பெரும்பான்மையை எந்தவொரு தேசியவாதிகளாலும்
வெற்றிபெறாததால் கூட்டரசாங்கம் அமைக்கவேண்டியிருந்தது.
இதன் மூலம் தமது ஆதரவை உறுதிப்பத்திக்கொள்ள சமாளித்துக்கொண்டனர்.
பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவினா அரச மட்டத்தில் பல் இன
சமூக ஜனநாயக கட்சி [SDP]
சிறிய பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது.
பெப்ரவரி 22ம் திகதி சமூக ஜனநாயக கட்சியின் Bozidar
Matic சூழ்ச்சி மூலமாக பொஸ்னியாவின்
பிரதமராகிக் கொண்டார். Bozidar
Matic பாரிய மின்சக்தி நிறுவனம் ஒன்றின்
நிர்வாகியும் சுதந்திர சந்தையின் புகழ்பாடுபவரும் மட்டுமல்லாது
மேற்குநாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டவராவார். அவர்
சுயபொருளாதாரத்தின் தேவையையும், ஏற்றுமதியை அதிகரிக்கவும்
முதலீடுகளை உள்நோக்கி கவரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அரசாங்கம் 10 கட்சிகளின் பலவீனமான கூட்டாக இருப்பதுடன்,
''மாற்றத்திற்கான கூட்டு'' என்ற பெயரின் கீழ் இயங்குகின்றது.
இடம்பெயர்ந்த அகதிகளை அவர்களின் சொந்த
இடத்திற்கு திரும்ப தொடர்ச்சியாக எதிர்ப்பதுடன், ஒரேமாதிரியான
அரசாங்க வடிவங்களுக்கு முடிவுகட்டுவதும் டேட்டன் உடன்படிக்கையின்
மதிப்பை இழக்கசெய்கின்றது. இவ்வுடன்படிக்கை பால்க்கனில்
புதிய சமாதானத்திற்கான ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கும்
எனகூறப்பட்டமை நேட்டோவின் இராணுவத் தலையீட்டினை நியாயப்படுத்துவதற்கான
முக்கியமானதாக இருந்தது.
மேற்குநாடுகள் அவர்களின் நடவடிக்கைகளுக்கான
நிதிவெகுமதிகளை பெற்றுக்கொள்ளலாம் என நம்புவதாக தெரியவில்லை.
பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவினா ''நிதி உதவியில் தங்கியிருக்கும்''
ஒரு நாடாக கருதப்படுவதுடன், கடந்த 5வருடங்களில் 5மில்லியன்
டொலர் வாரியிறைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தேசியவாதக்
குழுக்களின் ஊழல்களும், பொதுச்சேவைகள் மீதான அவர்களின்
கட்டுப்பாடும் தனியார்மயமாக்கலுக்கு ஒரு பாரிய தடையாக
கருதப்படுகின்றது. 3% இற்கு குறைவான அரசாங்க நிறுவனங்களே
தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச உதவிகள் கடத்தல்
நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க பயன்படுத்தப்படுவதுடன்,
பொஸ்னிய சந்தையில் விற்கப்படும் பொருட்களில் 40% ஆனவை
வரியில்லாது விற்பனை செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
4.3 மில்லியன் மக்களை கொண்ட சிறிய பிரதேசத்தில் இனப்பகுதிகளாக
பிரிக்கப்பட்டிருப்பது வழமையான வர்த்தக வடிவங்களை குழப்புவதுடன்,
நீண்டகால வெளிமுதலீடுகளை கவர்ந்தகொள்வதற்கு எதிர்கால
முரண்பாடுகள் தொடர்பான அபாயம் முக்கிய தடையாகவுள்ளது.
பால்கனில் அமெரிக்காவின் பின்வாங்கல்
இது அரசின் முக்கிய ஆதரவாளர்கள் மத்தியில் அமெரிக்காவை
பால்கனில் அதனது தொடர்ச்சியான தலையீட்டினை மறுபரிசீலனை
செய்யவைத்துள்ளது.
ஒரு பக்கத்தில் மேற்குநாடுகள் தமது கட்டுப்பாடுகளை
திணிப்பதில் குறைந்த கட்டுப்பாட்டை காட்டவேண்டும் என்ற
நிலைப்பாடு உள்ளது. பால்கன் தொடர்பான அறிக்கை ஒன்று
''பொஸ்னியாவின் நவம்பர் தேர்தல்கள்: டேட்டன் தள்ளாடுகின்றது''
என்ற தலையங்கத்தின் கீழ் ''நவம்பர் தேர்தல்களில் SDS
இனை தடைசெய்வதற்கு எதிராக இருந்த
முக்கிய காரணம் அப்படி செய்வதால் பெரும்பான்மை வாக்காளர்களின்
வாக்குரிமையை பறிப்பதாக இருக்கும் என்பதாகும். இது பொஸ்னியா
ஏற்கனவே பகுதியாக வேறு நாட்டின் பாதுகாப்பில் இருப்பதை
கவனமெடுக்காதுள்ளதுடன், வாக்காளர்கள் இதன் மூலம் ஏற்கனவே
பலவித கட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேச சமூகம்
கட்சிகளை தடைசெய்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை
பதவிவிலக்கல், சட்டங்களை திணித்தல், சாட்சியங்களை இல்லாது
செய்தல், யுத்தக்குற்ற கைதிகளை கைதுசெய்தல் போன்றவற்றை
செய்துள்ளது. சர்வதேச சமூகம் தனது தியாகங்களை நிறுத்தி தனி
அதிகாரிகளையும் கட்சிகளையும் முடக்குவதை நிறுத்துவதற்கான
நேரம் இதுதான். பொஸ்னியா வேறு நாட்டின் பாதுகாப்பில்
இருப்பதை ஒத்துக்கொண்டு உள்ளூர் கட்சிகளும் அதிகாரிகளுக்கும்
தமது நடவடிக்கைகளை செய்ய வழிவிடவேண்டும். பொஸ்னியா வேறு
நாட்டின் பாதுகாப்பில் இருப்பதை ஒத்துக்கொள்வதன் மூலம்
இது ஒரு நீடித்த இயங்கும் கட்டமைப்பை உருவாக்கும் சந்தர்ப்பத்தை
வழங்கவேண்டும்'' என குறிப்பிட்டுள்ளது.
மற்றைய பக்கத்தில் இன்றைய பிரச்சனை பொஸ்னியாவின்
தற்போதய கட்டுமானத்தில் இருப்பதால் பிரதேசம் மறுபிரிவிற்குள்ளாக்க
வேண்டும் என கூறுகின்றது. பொஸ்னியாவில் அமெரிக்காவின் தலையீடினின்மையை
பார்க்கவிரும்புவதாக ஜனாதிபதி புஸ் தெளிவாக்கியுள்ளார். தனது
தேர்தல் பிரசாரத்தின்போது பால்கனில் இருந்து அமெரிக்கப்
படைகளை பின்வாங்க அழைப்புவிட்டார். ஆனால் அவர் ஐரோப்பாவில்
இருந்து விமர்சனத்தை எதிர்நோக்கியதால் அமெரிக்காவின் இராணுவ
பிரசன்னம் அதன் கூட்டுக்களுடன் கலந்துரையாடல் மூலமும்,
கூட்டான பாதுகாப்பு உடன்பாட்டின் மூலமுமே குறைக்கப்படும்
என தன்னுடைய கருத்தை நியாயப்படுத்திக்கொண்டார்.
எவ்வாறிருந்தபோதும் அவர்களின் கொள்கை
மாற்றத்திற்கான தெளிவான அடையாளங்களை காணக்கூடியதாகவுள்ளது.
இப்பிரதேசத்தில் அமெரிக்காவினுடைய இராணுவபிரசன்னம்
தொடர்பான கூட்டமொன்றில் ஐரோப்பிய-ஆபிரிக்க அரசியல்
இராணுவ விடயங்களுக்கான உதவி அதிகாரியும், கூட்டுப்படை கட்டைளையிடும்
அதிகாரியுமான ஜெனரல்.டேட்டன் 2003 அளவில் அமெரிக்கா படைகளை
பின்வாங்கும் என கூறியுள்ளார். S-For
படைகளுக்கான அமெரிக்காவின் பங்களிப்பின்
பாரிய குறைப்பு S-For ஆன
அடுத்த மறுபரிசீலனையில் கவனமெடுக்கப்படும் என அவர் மேலும்
தெரிவித்தார். S-For இற்கான
அதிகாரி லெப்ரினட் மைக்கல். டொப்சன் பொஸ்னியா தொடர்பான
கொள்கை மாற்றத்தை தூண்டிவிட்டுள்ளதாக ஜெனரல். டேட்டன்
குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொஸ்னியாவின்
எதிர்காலம் தொடர்பாகவும், பல் இன அரசு, டேட்டன் உடன்படிக்கை
தொடர்பாகவும் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தற்போதைய பால்கனின் எல்லைகளை மாற்றிவரைந்து ''சிறிய,
உறுதியான ஓர் இன அரசுகளை'' உருவாக்குவதற்கான உடன்பாடு
ஒன்று அடைந்துள்ளதாக தெரிகின்றது.
மேலும் அமெரிக்க பத்திரிகையாளரான Thomas
L Friedman New York Times பத்திரிகைக்கு
எழுதிய 2 கட்டுரைகளில் பொஸ்னியா அண்டை நாடுளகான குரோசியாவுடனும்
சேர்பியாவுடனும் இணைக்கப்படவேண்டும் என அழைப்புவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரியில் வெளிவந்த அக்கட்டுரைகளில் பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவின்
இருப்பானது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது எனவும், இக்கரணத்திற்காக
அது அண்டைநாடுகளுடன் அமைதியாக பிரித்து இணைக்கப்படவேண்டும்
என குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்நிபந்தனையாக ஸாகிரப்பிலும்,
பெல்கிராட்டிலும் உள்ள Stipe
Mesic இனதும்
Vojislav Kostunica இனதும் புதிய அரசாங்கங்கள்
மேற்கிற்கு மிகவும் சாதகமானதாக கருதப்படவேண்டும் Thomas
L Friedman என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொஸ்னிய குரோசிய தேசியவாதிகள் அமெரிக்க வெளிநாட்டு
கொள்கையின் தற்போதயை நிலையற்ற தன்மையை பாவிக்கவிரும்புவது
மிகதெளிவானது. சுயாதீன ஆட்சியை உருவாக்கும் திட்டங்களை
அறிவித்த பின்னர் பொஸ்னியா-ஹேர்ஸோவினாவின் HDZ
இன் தலைவரான Ante
Jelavic புஸ்ஸின் ஆதரவை வேண்டி தனிப்பட்ட
முறையில் கடிதம் எழுதியுள்ளார். எவ்வாறிருந்தபோதிலும்
இதுவரை அமெரிக்கா உயர் அதிகாரிகளுக்கான அலுவலகத்தின் [OHR]
நடவடிக்கைகளில் தங்கியுள்ளது.
|