World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

Bosnia-Herzegovina faces dissolution

பொஸ்னியா-ஹேர்ஸெகோவினா முடிவினை எதிர்நோக்குகின்றது

By Tony Robson
28 March 2001

Use this version to print

பொஸ்னியா-ஹேர்ஸெகோவினா உருவாக்கப்பட்டு 5 வருடங்களின் பின்னர் தனது முடிவினை எதிர்நோக்குகின்றது. பொஸ்னியாவிலுள்ள குரோசிய ஜனநாயக யூனியனின் [HDZ] அதிதீவீர தேசியவாதிகள் சுதந்திர அரசை பிரகடனப்படுத்தியுள்ளனர். இது குரோசிய முஸ்லீம் கூட்டமைப்பான Republika Srpska வினை முடிவிற்கு கொண்டுவருவதுடன் பொஸ்னியா ஹேர்ஸெகோவினாவிலுள்ள ஏனைய சுயாதீன பிரிவுகளுடனான அதன் இணைப்பையும் கேள்விக்குரியதாக்கின்றது.

குரோசிய ஜனநாயக யூனியனின் பிரிவினைவாத நோக்கத்திற்கான காரணம்,பொஸ்னியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த டேட்டன் உடன்படிக்கையின் கீழ்அதன்உள்நாட்டுவிடயங்களை தீர்மானிக்கும் பல சர்வதேச கையாட்களில் ஒன்றான ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பு [Organisation for Security and Cooperation in Europe -OSCE] சிறிய பிரிவுகளின் மட்டத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் சட்டங்களை மீள்பரிசீலிக்க எடுத்த முடிவாகும். கடந்த வருடத்தின் இறுதிவரை மக்கள் அவையின் [House of Peoples -the Croat-Muslim Federation'supper house] பிரதிநிதிகள் பத்து கன்டோன் சபைகளில் இருந்து இனத்தின் அடித்தளத்திலேயே தெரிவுசெய்யப்பட்டனர். கன்டோனின் பிரதிநிதிகள் தமது சொந்த இனமக்களை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படமுடியும். கடந்த நவம்பர் பொதுத்தேர்தலின் முன்னர் இந்தநிபந்தனை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பால் [OSCE] திருத்தியமைக்கப்பட்டு, வேறு இனத்தவரை சேர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கக் கூடியதாக மாற்றப்பட்டது.

இம்மாற்றத்தினால் &ஸீதீsஜீ;முக்கிய தேர்தல் தாக்கத்திற்கு உள்ளானது &ஸீதீsஜீ;குரோசிய ஜனநாயக யூனியனாகும். ஏனெனில் அது இனவாத அடிப்படையிலான பிரிவினை பாதுகாக்க விரும்பியதுடன், குரோசியர் நலன்களை தாம்மட்டுமே பாதுகாப்பதாக எடுத்துக்காட்ட விரும்பியதாகும். நவம்பர் தேர்தல்களில் அவர்கள் குரோசியர்களுக்கான ஒரு சர்வசனவாக்கெடுப்பை நடாத்தி பொஸ்னியாவிற்கு ஒரு தீர்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இது ஒரு பிரிவினைக்கான ஒரு கோரிக்கைக்கு குறைவானதாக இருந்தபோதும், இக்கட்சியின் தேர்தல் சுலோகமாக ''சுயநிர்ணயம் இல்லையேல் அழிந்துபோதல்'' என்பதாகவே இருந்தது. தேர்தலின் பின்னர் &ஸீதீsஜீ;குரோசிய ஜனநாயக யூனியன் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளையும், பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவின் மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் பின்வாங்கிக்கொண்டது. மார்ச் 1ம் திகதி குரோசிய ஜனநாயக யூனியனின் தலைவரான Ante Jelavic "இன்றிலிருந்து இக்கூட்டமைப்பு குரோசியர்கள் அற்ற Bosniak [பொஸ்னிய முஸ்லீம்களுக்கான] தேசியபிராந்தியமாகும். இவ் பொஸ்னிய நிர்வாகம் சட்டபூர்வமற்றதுடன், சட்டவிரோதமானதுமாகும். நாம் இந் நிர்வாகத்தில் கலந்துகொள்ளப் போவதுமில்லை, அவர்களின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை'' என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்த குரோசிய தேசிய சபையின் கூட்டத்தில் குரோசிய ஜனநாயக யூனியனுடன் மேலும் 7 குரோசிய கட்சிகள் இணைந்து 15 நாட்களுக்குள் இப் புதிய தேர்தல் சட்டத்தை இரத்து செய்யுமாறும் இல்லையேல் தனியான குரோசிய பிராந்தியம் ஒன்று நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் கூட்டுழைப்பிற்குமானஅமைப்பிற்கு [OSCE] காலக்கேடு விதித்தனர். குரோசிய ஜனநாயக யூனியன் பிரேரித்துள்ள புதிய பிராந்தியமானது தனது சொந்த அரசினையும், சட்டசபையையும், நீதிபரிபாலன அமைப்பையும் கொண்டிருக்கும். இப்பிராந்தியமானது பொஸ்னிய கூட்டமைப்பின் 10 கன்டோன்களில் 5 இனையும், 1992-95 பொஸ்னிய யுத்தத்தின்போது தற்காலிகமாக இருந்தும், முன்னாள் &ஸீதீsஜீ;பிரதமரான பிரங்கோ ருஜ்மானால் தலைமை தாங்கப்பட்ட ஸாகிரப் அரசாங்கத்தின் இணைப்பாக இருந்த Herceg-Bosna எனப்படும் சிறிய அரசினையும் இணைக்கின்றது. அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் 1994 இல் குரோசியர்களும் முஸ்லீம்களும் யுத்தநிறுத்தத்திற்கு கையெழுத்திட்டதுடன், சேர்பிய எதிர்ப்பு கூட்டினுள் இணைந்து கொண்டதினூடாக இது குரோசிய-முஸ்லிம் கூட்டமைப்பிற்கான அடிக்கல்லாகியது. எவ்வாறிருந்தபோதும் பாரிய குரோசியாவை நிர்மாணிக்கும் நோக்கமானது குரோசிய ஜனநாயக யூனியனாலோ அல்லது அதன் குரோசியாவிலுள்ள மூல ஆரம்ப அமைப்பினாலோ நிராகரிக்கப்படவில்லை. பிரிவினைவாதிகளால் விதிக்கப்பட்ட காலக்கேடு முடிவடைந்துவிட்டது. இதற்கான மேற்கு அரசுகளின் பதிலானது AnteJelavic ஐ பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவின் முக்கூட்டு தலைமையிலிருந்து நீக்கியதும், ஏனைய மூன்று தலைவர்களை அரசியலில் இருந்து விலக்கியதுமாகும். பொருளாதாரத் தடைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்படுகின்றது.

பொஸ்னியாவில் புதிய இராணுவ மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களான சர்வதேச நெருக்கடிகுழுவினால் [International Crisis Group-ICG] பரிந்துரைக்கப்பட்டவற்றால் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதனது 106 ஆவது இலக்க பால்க்கன் அறிக்கையில் ''முன்வெளியாக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடு'' என்ற தலையங்கத்தின் கீழ் ''S-FOR [பொஸ்னியாவிற்கான நேட்டோபடை] படையினர் ''பயிற்சியும் ஆயுதமாக்கலும்'' என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது உட்பட, பொஸ்னிய கூட்டரசின் இராணுவத்தின் குரோசிய படைப்பிரிவுகளிடம் இருக்கும் கனரக ஆயுதங்களையும், தளபாடங்களையும் அவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகத்தினுள் பங்குகொள்ள தமது சம்மதத்தை தெரிவிக்கும் வரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்வைத்திருக்கவேண்டும் '' என குறிப்பிட்டுள்ளது.

பொஸ்னிய குரோசிய இராணுவத்தை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. மொஸ்டாரில் நிலைகொண்டிருக்கும் பொஸ்னிய கூட்டரசின் இராணுவத்தில் கூடுதலாக குரோசியர்களை கொண்டிருக்கும் முதலாவது படையணி இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் கட்டளைகளை ஏற்கமறுத்துள்ளது. இப்படையணியானது இப்பிரதேசத்தில் 7.000-10.000 வரையிலான படைவீரர்களை கொண்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதய அரசியலமைப்பு நெருக்கடியானது பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவின் அரசுகளின் உருவாக்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையின் வெளிப்பாடாகும். அதன் உருவாக்கத்திற்கு காரணமான 1995 டேட்டன் உடன்படிக்கையானது, முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ள முன்னர் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கைகளின் திருப்தியின்மையின் எல்லைகளை தாண்டிச்செல்கின்றது.

முன்னாள் யூகோசிலாவியாவின் குடியரசான பொஸ்னியா சர்வதேச ரீதியாக ஒரு தனிஅரசாக ஏற்றுக்கொள்ள்ப்பட்டுள்ள போதிலும், மேற்கு உலகம் அதன்மீதான முழுக்கட்டுப்பாட்டை வைத்திருப்பதுடன், இப்புதிய அரசினது கட்டுமானத்தை தீர்மானிப்பதுடன் அதன் மீதான முற்றுமுழுதான கட்டுப்பாட்டையும் வைத்துள்ளது. இது மேற்கின் தலையீட்டினால்தான் ஜனநாயகத்தை உருவாக்கமுடியும் எனவும், இனமுரண்பாடுகளை முடிவிற்கு கொண்டுவரமுடியும் என நியாயப்படுத்தப்படுகின்றது. ஆனால் இது ஒரு நப்பாசை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

யூகோசிலாவியாவின் உடைவு

1991ம் ஆண்டு ஸ்லோவேனியாவும் குரோசியாவும் சுதந்திர அரசுகளாக பிரகடனப்படுத்திக் கொண்ட பின்னர் யூகோசிலாவியாவின் உடைவு ஆரம்பமானது. இதனை அடுத்து இக் குடியரசுகளில் நிலைகொண்டிருந்த யூகோசிலாவியாவின் இராணுவத்திற்கும் பிரிவினைவாத படைகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகின.

இதற்கான ஐரோப்பிய நாடுகளின் முதலாவது நடவடிக்கை பிரியோனி பிரகடனத்தின் ஊடாக [Brioni Declaration] முரண்பாடுகளை நிறுத்த முயன்றதாகும். அதன் நோக்கம் பிரிந்துபோகும் நடவடிக்கைகளை மூன்று மாதத்திற்கு தடுத்துவைத்தலும், இதேவேளையில் கூட்டரசு கட்டுமானத்தின் உள்ளே கூடியளவு சுயாட்சியை வழங்க பேச்சுவார்த்தை நடாத்துவதாகும். ஜேர்மனியின் தீவிர ஆதரவு பிரசாரத்தின் [இது ஏற்கனவே அவ்விரு குடியரசுகளுடனும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளை உருவாக்கியிருந்தது] மூலம் 1991ம் ஆண்டு டிசம்பர் மாஸ்ரிட் மாநாட்டில் பிரிவினைக்கான ஐரோப்பிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஐரோப்பாவின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் ஒரு சமரசமாகும். இதனூடாக அது ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கான பாதையை இலகுவாக்கியது. அண்மையில் ஒன்றிணைந்த ஜேர்மனி இவ் ஐரோப்பிய வெளிநாட்டு கொள்கையின் மாற்றத்திற்கு பதிலாக அனைத்து ஐரோப்பிய அமைப்புகளிலும் தாம் பங்கெடுக்க தயார் என அறிவித்தது. குரோசியாவினுள் வாழ்ந்த சிறுபான்மையான சேர்பியர்களின் நிலை உறுதியற்று இருந்தபோதிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குரோசியாவின் குடியுரிமை பூரணமாக இன அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. அந்நாட்டின் சிறுபான்னையினர் இரண்டாம் தரமானவர்களாக்கப்படும் நிலைதொடர்பாக பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். சேர்பியர்கள் தமது அரசாங்க உத்தியோகங்கள் அனைத்தும் இழந்ததுடன், அவர்கள் மீது ஒரு சொத்துவரி விதிக்கப்பட்டது. அவர்களை தனியாக அடையாளம் காட்ட பிரத்தியேகமான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையின் அந்நாள் செயலாளரான பூட்ரோஸ் பூட்ரோஸ் காலியின் அறிக்கையின்படி 1991-1992 வரை 250.000 சேர்பியர்கள் குரோசியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களில் பலர் அண்மைநாடான பொஸ்னியாவில் தஞ்சம் புகுந்தனர்.

ஆரம்பத்தில் அமெரிக்கா இவ்விரு குடியரசுகளின் பிரிவினையை எதிர்த்தது. பின்னர் அது பொஸ்னியாவிற்கான &ஸீதீsஜீ;&ஸீதீsஜீ;பிரிவினையை முன்கொண்டுவந்தது. இது மேலும் மோசமானது என நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் இக் குடியரசானது இனப்பிரிவுகளின் அடிப்படையில் மிகவும் பிரிந்துள்ளது. மூன்று முக்கிய இனப்பிரிவுகளில் முஸ்லீம் மக்கள் சிறிய பெரும்பான்மையை கொண்டிருந்தனர். அவர்கள் 40% ஆகவும், சேர்பியர்கள் 30%ஆகவும், குரோசியர்கள் 17% ஆகவும் இருந்தனர். மூன்று முக்கிய தேசியவாத கட்சிகளும் இப்பிரிவினையை பிரதிபலித்து பொஸ்னிய பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை வெளிப்படுத்தினர். அங்கு சுதந்திரத்திற்கான பாரிய ஆதரவு இருக்கவில்லை. பொஸ்னிய பிரதமரும், முஸ்லீம் தேசியவாதக் கட்சியான SDA இன் தலைவரான Alija Izetbegovic ஸ்லோவேனியாவினையும் குரோசியாவினையும் அங்கீகரித்ததை இதனாலான முரண்பாடுகள் பொஸ்னியாவினுள்ளும் பரவிவிடும் என்ற பயத்தால் எதிர்த்தார். 1992 பெப்ரவரி, மார்ச்சில் பொஸ்னியாவின் சுதந்திரத்திற்கான சர்வசனவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பை சேர்பியர்கள் பகிஸ்கரித்ததால் அதற்கு பெரும்பான்மை கிடைத்தது. மூன்று மக்கள் பிரிவினரும் கலந்துகொண்டாலே இது செல்லுபடியாகும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருந்தபோதும் பொஸ்னியாவின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இப் புதிய அரசு உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தவராக இணைக்கப்பட்டு, அங்கு யூகோசிலாவியாவின் இராணுவத்தின் பிரசன்னம் ஆக்கிரமிப்பு என கூறப்பட்டது.

பொஸ்னியாவிலுள்ள சேர்பிய மக்கள், மேற்கு நாடுகளால் ஆழப்படும் ஒரு புதிய அரசில் அவர்களுடைய அரசியலமைப்பு ரீதியான உரிமைகள் வித்தியாசமாகவே இருக்கும் என்ற நியாயமான கவலையை கொண்டிருந்தனர். சேர்பிய ஜனநாயக கட்சி [Serb Democratic Party-SDS] இதனை தனது தேசியவாத நோக்கங்களுக்காக பாவித்தது. இதன் மூலம் குரோசியாவிலும் பொஸ்னியாவிலும் இருக்கும் சேர்பிய பிரதேசங்களை ஒன்றிணைத்து ''பெரிய சேர்பியா'' வின் கீழ் அனைத்து சேர்பியர்களையும் ஒன்றிணைக்கும் கோரிக்கையை உயிர்ப்பிக்கும் நோக்கத்திற்கு ஆதரவுதேட முயன்றது. தொலைத்தொடர்பு சாதனங்களால் உருவாக்கப்பட்ட பிரசாரங்கள் எவ்வாறுஇருந்தபோதும் அவர்கள் மட்டும் இவ்வகையான விரிவாக்கும் கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. 1992 இல் &ஸீதீsஜீ;குரோசிய ஜனநாயக யூனியன் தமது பங்கிற்கு பாரிய குரோசியாவின் ஒரு பகுதியாக பொஸ்னியாவினுள் ஒரு தனி அரசை பிரகடனப்படுத்தியது. மேற்கு நாடுகளால் இதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இம்மூன்று பிரிவினரிடையேயும் சேர்பிய ஜனநாயக கட்சி ஆகக்கூடிய ''சகிக்கத்தக்கதாக'' காட்டப்பட்டது. ஏனைனில் அது ''பல-இன'' பொஸ்னியாவிற்கு தனது ஆரதவை வழங்கியதாலாகும். எவ்வாறிருந்தபோதும் சேர்பிய ஜனநாயக கட்சி சேர்பியாவில் இருந்த Sandzak பிரதேசத்திலும், Montenegro &ஸீதீsஜீ;வில் இருந்த முஸ்லீம் மக்களை அதன் பொஸ்னியபகுதிகளுடன் இணைக்க அழைப்புவிட்டது. உண்மையில் சேர்பிய ஜனநாயக கட்சி குரோசியர்களையும் சேர்பியர்களையும் போல் அப்பிரதேசங்களை பாரிய பொஸ்னியாவுடன் இணைக்க விரும்பாததுடன், ஒரு தனியான அரசுக்காக அமெரிக்காவை முழுமையாக நம்பியிருந்ததுடன், இதன்மூலம் முஸ்லீம்களை &ஸீதீsஜீ;ஒரு சிறுபான்மையாகவே வைத்திருக்க விரும்பியது.

மேற்கு நாடுகளின் நடவடிக்கைகள் பொஸ்னிய யுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனைத் தொடர்ந்த இனசுத்திகரிப்புக்கு &ஸீதீsஜீ;இம்மூன்று பிரிவினரும் குற்றவாளிகளாவார். முக்கியமாக தலைநகரான சறஜேவோ [Sarajevo] உட்பட குறிப்பின இனவாதத்திற்கு ஒரளவு பகிரங்க எதிர்ப்பு இருந்த போதிலும் பரந்த மக்கள் மோசமான குழு முரண்பாடுகளுக்குள் உள்ளிழுக்கப்பட்டிருந்தனர். பொஸ்னியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அந்தஸ்து வழங்கியதன் மூலம் மேற்கின் நேரடித்தலையீட்டிற்கான பாதை வகுக்கப்பட்டது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட யூகோசிலாவியாவை மிலோசிவிக்கின் அரசாங்கம் பெல்கிராட்டிலிருந்து கட்டுப்படுத்துவதை தடுப்பதற்காக மேற்குநாடுகள் சேர்பிய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தன. ஆனால் அவை &ஸீதீsஜீ;சிறிய அரசுகள் உருவாக்கப்பட்டால் அவற்றை அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக முரண்பாட்டை கொண்டிருந்தன. பொஸ்னியாவை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இனங்களின் அடிப்படையிலான 10 கன்டோன்களாக ஒரு உடன்பாட்டினூடாக பிரிக்க முயன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டன. அமெரிக்கா இப்பிரதேசத்தில் &ஸீதீsஜீ;ஒரு முஸ்லீம் -குரோசிய அடித்தளத்தை திணிக்க முயற்சி செய்தது. 1994 இல் அது இருபகுதியினருக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை உருவாக்கியது. குரோசிய தலைவரான ருஷ்மானின் உடன்பாட்டுடன் ஒரு குரோசிய- முஸ்லீம் கூட்டு உருவாக்கப்பட்டது. இது குரோசிய பகுதிகளை உள்ளடக்கிய பொஸ்னியா &ஸீதீsஜீ;குரோசியாவுடன் ஒரு கூட்டாட்சி முறையையும் உருவாக்குவதற்கான அடித்தளமானது. இவ்வருட இறுதியில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் குரோசிய-முஸ்லீம் இணைந்த ஒரு கூட்டு இராணுவ கட்டுப்பாட்டு தலைமையகம் உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கியதற்கான சாட்சியங்கள் உள்ளன. 1994-95 யுத்தத்தில் குரோசியாவிலும் பொஸ்னியாவிலும் இருந்த சேர்பிய இராணுவ நிலைகள் மீது அமெரிக்க விமானப்படை குண்டுத்தாக்குதலை நடாத்தி Krajina, வடமேற்கு பொஸ்னியாவின் பகுதிகளை குரோசிய-முஸ்லீம் படைகள் தரைமூலம் கைப்பற்றுவதை அனுமதித்தது. Krajina தாக்குதலானது பால்கன் மோதல்களில் இனசுத்திகரிப்புக்கு காரணமான தனியொரு பாரியதாக்குதலாக இருந்ததுடன் 5 இலட்சம் சேர்பியர்களை அகதிகளாக்கியது. இதனால் பொஸ்னிய சேர்பியர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளப்பட்டனர். இனசுத்திகரிப்பை உருவாக்கலாம் என ஐரோப்பாவின் சமாதான முன்னெடுப்புகளை முன்னர் அமெரிக்கா நிராகரித்தபோதிலும் டேட்டனில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இறுதி உடன்படிக்கை இதனிலும் பாரிய மக்கள் இடப்பெயர்வுக்கு காரணமாகியது. பொஸ்னியாவின் சாதாரண மக்களால் நாடு இன அடித்தளத்தில் பிரிக்கப்படுவது தொடர்பாக எதுவும் கூறமுடியாது இருந்தது. இத்திட்டம் அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவுடன் தேசிவாத பிரதிநிதிகளும் இணைந்து Wright Patterson அமெரிக்க விமானப் படைத்தளத்தில் &ஸீதீsஜீ;வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது. கணணி மென்பொருட்கள் பொஸ்னியாவின் பிரதேசங்களில் போலியான நிலைமைகளை வடிவமைக்க பயன்படுத்தப்பட்டு அமெரிக்க விமானப் படையின் தாக்குதலுக்கான திட்டங்களுக்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டது. யூகோசிலாவிய ஜனாதிபதி மிலோசிவிக் சேர்பியாவின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை மேற்கின் பொருளாதாரத்தடைகளை முடிவிற்கு கொண்டுவரும் என உறுதியளிக்கப்பட்டது. ருஜ்மானின் உடன்பாடு பாதுகாக்கப்பட்டது ஏனைனில் ஒரே இனத்தைக்கொண்ட குரோசியாவிற்கான அவரது நோக்கத்திற்கு மேற்குநாடுகள் பாதுகாப்பு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்ககூடியாதாக இருந்ததாலாகும். மேலும் குரோசிய-முஸ்லீம் கூட்டமைப்பானது பொஸ்னியாவிலுள்ள குரோசிய பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான அடிக்கல்லாக இது இருக்கும் என ஸாகிரப் [Zagreb] கருதுகின்றது. பொஸ்னிய ஜனாதிபதியான Izetbegovic விற்கு இவ்வுடன்படிக்கை இப் புதிய குரோசிய-முஸ்லீம் கூட்டமைப்பினுள் தான் தொடர்ந்தும் அமெரிக்காவின் கையாளாக இயங்க கிடைத்த உத்தரவாதமாகும்.

பொஸ்னியா-ஹேர்ஸெகோவினா பெயரளவில் &ஸீதீsஜீ;இரண்டு சுயாட்சி பிரதேசங்களை கொண்டு இணைந்த ஒரு அரசாக இருப்பதால், இவ்யுத்தமும் &ஸீதீsஜீ;மேலும் புதிய எல்லைகளை ஒட்டிய தொடர்ந்த இனக்குழுக்களின் இடப்பெயர்வும் &ஸீதீsஜீ;தேசியவாத அரசியலுக்கே ஆதரவை அதிகரிக்கச்செய்யும்.

தொடரும்........