World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Over 300 dead and 1,000 injured

Sri Lankan government launches a major military offensive to boost its electoral prospects

300க்கும் அதிகமானோர் மரணம், 1000 பேர் காயம்

இலங்கை அரசாங்கம் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க ஒரு பெரும் இராணுவ எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது

By a correspondent
9 September 2000

Use this version to print

அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெற உள்ள பொதுத் தேர்தலில் தனது வெற்றிவாய்ப்புக்கான சாத்தியங்களை பூதாகரப்படுத்திக் காட்டும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான சந்திரிகா குமாரதுங்க கடந்த வாரம் ஒரு பரந்த அளவிலான இராணுவத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டார். கடந்த ஏப்பிரல், மே மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை திருப்பிக் கைப்பற்றுவதே இதன் நோக்கமாக விளங்கியது.

கடந்த இரண்டு மாதங்களாக யுத்த களத்தில் நிலவிய ஒரு மந்த நிலையின் பின்னர் இலங்கை இராணுவம் சமீபத்தில் கொள்வனவு செய்த பல் குழல் றொக்கட் செலுத்திகள் (MBRL), பீரங்கிகள், Mig-2 குண்டு வீச்சு விமானங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாண நகரின் வெளிக்களப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரியாலை, கொழும்புத்துறை, பூம்புகார், மணியந்தோட்டம் முதலிய இடங்களில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டது. அத்தோடு இராணுவத்தின்ர் தென்மாராட்சியில் சரசாலை, மட்டுவில், மீசாலை ஆகிய இடங்களையும் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர்.
அரசாங்க செய்தி அறிக்கைகள், அரச படைகள் தமது இலக்கை எட்டிவிட்டதாகக் கூறிக்கொண்டன. எவ்வாறெனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முழு அளவிலான இருட்டடிப்பு உட்பட்ட, ஒரு வெகுஜனத் தொடர்புச்சாதன தணிக்கையை அமுல் செய்துள்ளது. இதனால் எந்த ஒரு பத்திரிகையாளரும் யுத்தம் இடம்பெறும் இடத்துக்கு விஜயம் செய்யவோ அல்லது யுத்த நிலைமைகளை நேரில் கண்டு அறிக்கை செய்யும் வாய்ப்போ இல்லாது போயுள்ளது. ஆனால் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் இந்த இராணுவ நடவடிக்கை கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது என நம்புவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. இங்குமங்குமாக அரசாங்கப் படைகள் நடாத்திய குண்டுவீச்சுகள், ஷெல் அடிகள், பல்முனை குழல் றொக்கட் செலுத்தி ஏவுகணை வெடிப்புகளுக்கு மத்தியிலும் புதன்கிழமை அளவில் அவை ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டன.

ஆனால் இந்த யுத்தத்தில் மனித உயிர் இழப்புக்களின் எண்ணிக்கை பிரமாண்டமானது. கொழும்பில் உள்ள விசேட ஊடக தகவல் நிலையம் (SMIC) வெளியிட்ட தகவல்களின்படி இராணுவம் 114 பேரை -9 அதிகாரிகள் உட்பட- இழந்தது. மேலும் 766 பேர் காயமடைந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் 230 பேரை இழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் இத்தகவல் நிலையம் தெரிவித்தது. பத்திரிகை செய்திகளின்படி விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்ட 36 பேரின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் கையாண்ட குண்டு வெடிப்புக்களின் தாக்கம் காரணமாக இச்சடலங்கள் அடையாளம் காணமுடியாதபடி சிதையுண்டு போய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அரசாங்கப் படைகள் ஆரம்பித்து வைத்த இந்த புதிய இராணுவ நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கானோர் புதிய அகதிகளாக இடம்பெயரத் தள்ளப்பட்டனர். சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் கச்சேரியை சூழ வசித்து வந்த மக்கள் இத்தாக்குதல்களால் வெளியேறத் தள்ளப்பட்டனர். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, புனித திருக்கன்னியர் குடும்பம், நல்லூர் விக்னேஸ்வரா பாடசாலை, சென் ஜோன்ஸ் பொஸ்கோ ஆகிய பாடசாலைகள் திங்கட்கிழமை காலை மூடப்பட்டன. திங்கட்கிழமை பொதுத் தேர்தல் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதிநாளாக விளங்கியது. ஆனால் இந்தக் குண்டுவீச்சுக்கள் காரணமாக வேலைத்தளங்களுக்கு வருகை தந்தோர் வரவு இடாப்புக்களில் கையெழுத்திட்டுவிட்டு வீடுதிரும்புமாறு கேட்கப்பட்டனர்.

செவ்வாய் இரவு கோப்பாய், இருபாலை பகுதிகளுக்கு சமீபமாக இடம்பெற்ற கடும் ஷெல் அடி காரணமாக நடராஜா நந்தராணி (33 வயது) என்ற பெண் கொல்லப்பட்டார். ஒரு ஏழு வயது குழந்தை உட்பட மேலும் ஐவர் காயமடைந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எஸ்.சுப்பிரமணியம்(75), வீ.இராஜரத்தினம்(70), வீ.ராணி(30), எம்.அமிர்தராஜா(7), இ.துஷ்யந்தி. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை "யாழ்ப்பாண நகருக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பொருட்டு" கொழும்புத்துறையில் உள்ள படைகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்தியங்களை "விஸ்தரிக்க" எதிர்த்தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றதாகக் குறிப்பிட்டது. ஆனால் இராணுவப் பேச்சாளர் சனத் கருணாரத்னவின் கருத்துக்கள் ஒரு இராணுவ நிலைப்பாட்டில் இருந்து பார்க்குமிடத்து இராணுவ நடவடிக்கை அர்த்தமற்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. யாழ்ப்பாண தினசரியான உதயனுக்கு அளித்த பேட்டியில் கருணாரத்ன "நாம் ஈட்டிக் கொண்டதைவிட உயிரிழப்பு பிரமாண்டமானது என்பதை மறுக்க முடியாது" என்றுள்ளார். அத்தகைய பெரும் உயிரிழப்புக்களுடன் "வெறும் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் அர்த்தம் இல்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் இந்த எதிர்த் தாக்குதலின் நோக்கம் அரசியல் என்பது தெளிவானது. கடந்த ஏப்பிரலில் முக்கிய இராணுவத் தளமான ஆனையிறவு வீழ்ச்சி கண்டமையும் அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றிகளும் 1994ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இராணுவ முன்னேற்றங்கள் மூலம் குமாரதுங்க அடைந்த கீர்த்திகளுக்கு பெரும் தாக்குதல் கொடுத்துள்ளது.

பெரும் வல்லரசுகளதும், பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினரதும் நெருக்குவாரம் காரணமாக குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு அடிப்படையாக ஒரு சில அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல் செய்ய முயன்றார். ஆனால் கடந்த மாதம் அரசியல் தீர்வுப் பொதி பாராளுமன்றத்தில் அவசியமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து குமாரதுங்க பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே அழைப்புவிடுத்தார்.
இறுதியாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு அரசியல் இலாபத்தை சுருட்டிக் கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது என்பதற்கு பல சாட்சியங்கள் இருந்துகொண்டுள்ளன. புதிதாக நியமனம் செய்யப்பட்ட பிரதமரும் ஒரு பேர்போன இனவாதியுமான ரத்னசிரி விக்கிரமநாயக, கம்பளை நகரத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில் பின்வருமாறு தெரிவித்தார்: "நாம் விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான ஒரு நவீன குண்டு வீச்சு விமானத்தை கொள்வனவு செய்துள்ளோம். இந்த விமானத்தின் மூலம் நாம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது குண்டுகளை சொரிவோம்".

இராணுவ உயர் மட்டத்திலான பதவி மாற்றங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25ம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரால் லயனல் பலகல்ல கூறியதாவது: "ஆனையிறவு உட்பட இழந்த பகுதிகளை திரும்பக் கைப்பற்றும் புதிய இராணுவ நடவடிக்கை இடம்பெறும்" என்றார்.

ஆகஸ்ட் 27ம் திகதி பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த உயர் மட்ட இராணுவ கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததாக கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே டைம்ஸ்" பத்திரிகை அறிவித்தது. இப்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தி நிருபர் குறிப்பிட்டது போல்: "... தேர்தலுக்கு முன்னர் ஒரு இராணுவ வெற்றி அரசாங்கத்துக்கு ஒரு மேலதிக காரணியாகும். முன்னைய சிந்தனைகளுக்கு முரணான விதத்தில் இது இன்று பெரிதும் சாதகமானதாக உள்ளது." உயர் இராணுவ அதிகாரிகள் -ஜெனரால் றொகான் டி எஸ் தலுவத்த- பலர் ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். தேர்தலுக்காக அந்தப் பிராந்தியத்தை பெற்றுக்கொள்வதற்கு இராணுவ நடவடிக்கை அவசியமாகியுள்ளது என்ற அரசாங்கத்தின் வாதம் இந்த இராணுவத் தாக்குதல்களுக்கான ஒரு நொண்டிச் சாட்டாகும். இந்தத் தேர்தல் சமூகக் குழப்பங்களின் மத்தியில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டோடத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையின்படி இந்த ஆண்டில் வட இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 160,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

அத்தோடு இராணுவச் சட்டத்துக்கு சமமான ஒன்றை பாதுகாப்பு படைகள் வடக்கில் திணித்துள்ள நிலையில் ஜனநாயகத்தின் நிழலாட்டத்தை தன்னும் அங்கு காண முடியாது. தடுத்துவைப்புக்களும் "காணமற்போதலும்" அன்றன்றாடைய சம்பவங்களாகிவிட்டது. வவுனியாவில் உள்ள இராணுவப் படைப் பிரிவுக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் இரண்டு பெண்கள் உட்பட 38 பேர் "விடுதலைப் புலிகள்" சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த 38 பேரில் 25 பேர் 25 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.

செப்டம்பர் 2ம் திகதி 'சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு', அதிகரித்த அளவில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் "காணாமல் போவோர்" பற்றியும் விசாரணை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொண்டுள்ளது. "வவுனியாவில் இறுதியாக இராணுவத்தினரின் கைகளில் இருந்த 7பேர் ஆகஸ்ட் 10-16க்கும் இடேயே காணாமற் போயுள்ளனர். இது இந்நகரில் இவ்வாண்டு காணாமற் போனவர்களின் எண்ணிக்கையை 9 ஆக அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது. 1994ல் குமாரதுங்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனக்கு 540 காணாமல் போன சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அம்னாஸ்டி இன்டர்நஷனல் அறிக்கை கூறுகின்றது.

குமாரதுங்க நூற்றுக்கணக்கான -சிங்கள, தமிழ்- உயிர்களை பலிகொண்டுள்ளார் என்ற முடிவுக்கே வர முடியும் இன்னும் பலரை சீவியம் பூராவும் அங்கவீனர்களாக்கியுள்ளார். தீவிர வலதுசாரி அமைப்புக்களில் இருந்தும் சமூகத் தட்டினரிடம் இருந்தும் ஒரு சில வாக்குகளை வெற்றிகொள்ளும் முகமாக பல்லாயிரக் கணக்கானோரை இராணுவ நடவடிக்கை மூலம் இடம்பெயரச் செய்துள்ளார்.