World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Splits in Sri Lankan government coalition deepen

இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள சமயத்தில் பொதுஜன முன்னணி கூட்டரசாங்க பிளவுகள் ஆழம் கண்டு வருகிறது

By Sarath Kumara
4 September 2000

Use this version to print

இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெற இன்னும் ஒரு மாதமுள்ள சமயத்தில் அனைத்து பெரும் அரசியல் கட்சிகளும் உள்வாரி பிளவுகளாலும், உடைவுகளாலும், மீளிணைப்புக்களாலும் சிதறுண்டு போயுள்ளன. இது முழு ஆளும் வர்க்கப் பிரமுகர்களிடையே ஆழமாக வேரூன்றிப் போன நோயை எடுத்துக் காட்டுகின்றது. நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவது இன்று நிறைவு பெறுவதோடு, பாராளுமன்ற பொதுத் தேர்தல் அக்டோபர் 10ம் திகதி இடம்பெறவுள்ளது.

அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி, நீண்டு வரும் உள்நாட்டு யுத்தத்தின் தாக்கம் காரணமாக ஒரு பரந்த அளவிலான வெறுப்புக்கு முகம் கொடுத்துள்ளன. ஆனால் இந்தக் கட்சிகள் எதுவும் சாதாரண உழைக்கும் மக்கள் முகம் கொடுத்துள்ள தேவைகளுக்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண எதுவித கொள்கையையும் கொண்டிருக்கவில்லை. இதுகாறும் இடம்பெற்றுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் தனிப்பட்ட சேறடிப்புக்களும் தேர்தல் ஆசனங்களுக்கும் கூட்டுக்களுக்குமான குதிரை ஓட்டங்களும் வெளிவெளியான காடைத்தனங்களுமே மேலாதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளன.

1994ல் ஆட்சிக்கு வந்த இன்றைய ஆளும் பொதுஜன முன்னணி, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை சூழ அணிதிரண்ட ஒரு தொகை கட்சிகளின் கூட்டரசாங்கமாகும். இது பாரம்பரிய இடதுசாரி கட்சிகளையும் தற்சமயம் பெரிதும் வங்குரோத்து கட்சிகளாகவும் மாறிவிட்ட லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPSL) களையும் பல்வேறு தமிழ், முஸ்லீம் முதலாளித்துவக் கட்சிகளையும் கொண்டிருந்தது. பொதுஜன முன்னணி வடக்கு-கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முடிவு கட்டவும் வேலையின்மை, வறுமை, நலன்புரி சேவைகள் ஒழிப்பை போக்கவும் வாக்குறுதி அளிப்பதன் மூலம் முன்னைய யூ.என்.பி. அரசாங்கத்துக்கு இருந்து வந்த எதிர்ப்பைச் சுரண்டிக் கொண்டது.

ஆனால் தேர்தலில் வெற்றிகண்டு ஆட்சிப் பீடம் ஏறியதும் குமாரதுங்க யுத்தத்தை உக்கிரமாக்கினார். விலைவாசி உயர்வுகளையும் வேலையின்மையையும் அதிகரிக்கச் செய்தார். அத்தோடு இவர் இந்தத் தேர்தலில் ஈடுபடுவது நான்கு மாதங்களுக்கு முன்னர் அமுலுக்கு கொணர்ந்த படுபயங்கரமான அவசரகாலச் சட்ட செய்தித் தணிக்கை இன்னமும் அமுலில் இருந்து கொண்டுள்ள ஒரு நிலைமையிலாகும். யுத்தத்தை முடிவுக்கு கொணருமாறு பொதுஜன முன்னணி அரசாங்கம் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினரதும் பெரும் உலக வல்லரசுகளதும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதே சமயம் இராணுவ நடவடிக்கைகளை உக்கிரமாக்கும்படி கோரும் பெளத்த பிக்குகளிலும் பல்வேறு பாசிச அமைப்புகளிலும் பொதுஜன முன்னணி சாய்ந்து கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் சமாதானப் பேச்சுக்களுக்கான அடிப்படையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு தொகை அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அமுல் செய்ய குமாரதுங்க தவறிவிட்டார். இப்போது இவர் அரசியல் சீர்திருத்தப் பொதியை தமிழர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் நடவடிக்கையாக விமர்சனம் செய்து வந்த சிங்கள சோவினிச குழுக்களுக்கு விண்ணப்பம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

இந்த முரண்பாடுகளின் தாக்கங்களின் கீழ் ஆளும் கூட்டரசாங்கம் பிளவுண்டு போயிற்று. கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டமை நிரூபணமாகியது. அவர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட போதிலும் ஒரு சிறு பெரும்பான்மை வாக்குகளையே திரட்ட முடிந்தது. இதன் பெறுபேறாக பல்வேறு பொதுஜன முன்னணி பங்காளிகளும் தேர்தலுக்கு முன்னைய இழுபறிகளில் தாம் நல்ல பலமான நிலைமையில் இருந்து கொண்டுள்ளதாக உணர்ந்தனர். ஆனால் குமாரதுங்க தனது பங்காளிகளுடனான கூட்டினை தக்கவைத்துக்கொள்ளச் செய்யும் முயற்சியில் மற்றைய கோஷ்டிகளை பறிகொடுப்பதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.

ஒரு கிழமைக்கு முன்னர் பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணியுடன்(MEP) ஒரு தேர்தல் ஒப்பந்தம் செய்துகொண்டது. இக்கட்சி இதற்கு ஒரு சில கிழமைகளுக்கு முன்னர் அரசியலமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இருந்தது. இந்தப் புதிய கூட்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் எம்.ஈ.பி. ஒரு பொதுஜன முன்னணி எதிர்ப்பு தேர்தல் கூட்டினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு கட்சியும் எத்தனை ஆசனங்களில் போட்டியிடுவது சம்பந்தமாக உருவான இழுபறிகளால் இப்பேச்சுவார்த்தை முறிவுகண்டது.

குமாரதுங்க எம்.ஈ.பி. யுடன் இணைந்து கொண்டதன் மூலம் தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினரை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுடனான பிளவுகளை மேலும் அகட்டிக் கொண்டுள்ளார். 1994ல் பொதுஜன முன்னணி தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட்ட அனைத்து தமிழ் கட்சிகளதும் ஆதரவைப் பெற்றது. எதிர்வரும் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது மற்றும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியோ (TULF) குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலையில் இல்லை.

கடந்த வியாழக்கிழமைதான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முக்கிய கூட்டணி பங்காளியான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் (SLMC) ஏற்பட்ட உடைவுகளுக்கு ஒட்டுப் போட முடிந்தது. ஒரு கிழமை பூராவும் இடம்பெற்ற கெஞ்சல்களுக்கும் ஆரவாரங்களுக்கும் பின்னரே இது ஒருவாறு சாத்தியமாகியது.

சி.ல.மு.கா.வுடனான பிளவு ஆகஸ்ட் 22ம் திகதி வெடித்தது. மற்றொரு முஸ்லீம் அமைச்சரான ஏ.எச்.எம்.பவுசி (சி.ல.சு.க.) சி.ல.மு.கா. தலைவர் ஏ.எச்.எம்.அஷ்ரப்பை 'கார்ட்போட் கிங்மேக்கர்' (cardboard kingmaker) எனச் சாடியிருந்ததோடு அஷ்ரபின் கட்சி இத்தேர்தலில் 5 ஆசனங்களுக்கு மேல் வெற்றி பெறாது எனவும் குறிப்பிட்டு இருந்தார். பவுசியின் இத்தாக்குதல் சி.ல.மு.கா. 10 தேர்தல் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பேரம் பேசல்களில் பொதுஜன முன்னணியுடன் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இடம்பெற்றது.

அன்று மாலை அஷ்ரப் அமைச்சரவையிலிருந்து இராஜினாமாச் செய்யும் கடிதத்தை கையளித்ததோடு சி.ல.மு.கா. பவுசியின் சவாலை ஏற்பதாகவும், ஜனாதிபதி குமாரதுங்கவிடம் தெரிவித்தது. குமாரதுங்க இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாததோடு அஷ்ரபை பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார். அத்தோடு பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான டீ.எம்.ஜயரத்னவை பவுசியின் கருத்தை மறுதலித்து அறிக்கை வெளியிடுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அஷ்ரப் ஜனாதிபதியை சந்திக்க மறுத்தார். அவர் 25 பக்கங்களைக் கொண்ட ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு, மக்கா பயணமானார். சி.ல.மு.கா.வின் இரண்டு பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் யூ.எல்.எம்.மொகைதீனும் இராஜினாமாச் செய்தனர்.

பெளசியின் கருத்துக்கள் பொதுஜன முன்னணியினுள் நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்தார். 10 நாட்களுக்கு இழுபட்ட பதட்டங்களுக்கும், அந்தரங்க நடவடிக்கைகளுக்கும் பின்னர் குமாரதுங்க பொதுஜன முன்னணியின் சார்பில் மன்னிப்புக் கோரத் தள்ளப்பட்டார். ஆகஸ்ட் 31ம் திகதி சி.ல.மு.கா.வுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதத்தில் "பெளசியின் அநாகரிகமானதும் நெறிமுறையற்றதும் ஆபத்தானதுமான பழக்கத்தை" கண்டனம் செய்திருந்தார். "எனது சார்பிலும் எனது கட்சியின் சார்பிலும் சி.ல.மு.கா. தலைவர் என்ற முறையில் தங்களிடமும் சி.ல.மு.கா.விடமும் மன்னிப்புக் கோர விரும்புகின்றேன்" என அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஜனாதிபதியின் கடிதம் அஷ்ரப் பொதுஜன முன்னணியுடன் ஒரு உடனபாட்டுடன் கூடிய இணக்கத்துக்கு வர வழிகோலியது. இந்த உடன்பாட்டின்படி சி.ல.மு.கா. திகாமடுல்ல (அம்பாறை) மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் பொதுஜன முன்னணி பதாகையின் கீழ் போட்டியிடும் அஷ்ரபும், ஹிஸ்புல்லாவும் திகாமடுல்ல, மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியல்களில் முதன்மை வேட்பாளர்களாக விளங்குவர். ஆனால் மேலும் 10 மாவட்டங்களில் -கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம் உட்பட்ட- சி.ல.மு.கா. தனது சொந்த பதாகையின் கீழ்- தேசிய ஐக்கிய முன்னணி (NUF) போட்டியிடும்.

யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லீம் முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினர் 1986ல் சி.ல.மு.கா.வை ஒரு பிராந்தியக் கட்சியாக ஸ்தாபிதம் செய்தனர். சி.ல.மு.கா. முஸ்லீம்களுக்கென தனியாக ஒரு பிராந்திய நிர்வாக அலகையும் கோரியது. 1988, 1994 தேர்தல்களில் கட்சி கிழக்கிலேயே சகல ஆசனங்களையும் வெற்றிகொண்டது. 1994ல் சி.ல.மு.கா. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் அதனால் ஒரு இடத்தைத் தன்னும் வெற்றிகொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சியான யூ.என்.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியம் இல்லை என்பது அப்பட்டமான ஒரு நிலையிலேயே சி.ல.மு.கா. தலைவர்கள் பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர்.

சி.ல.மு.கா.வுக்கும் சி.ல.சு.க.வில் இருந்த முஸ்லீம் தலைவர்களுக்கும் இடையே ஒரு பதட்ட நிலை இருந்து வந்தது. இது கிழக்கு மாகாணத்துக்கு வெளியே -கொழும்பிலும் ஏனைய இடங்களிலும்- தமது செல்வாக்கை விஸ்தரிக்க அவர்கள் எடுத்த முயற்சியால் உருவானது. அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபிதம் செய்ததன் நோக்கம் தனது அடிப்படையை விஸ்தரிக்கவும் சி.ல.மு.கா. முஸ்லீம்களுக்கு மட்டும் சார்பான ஒரு இனவாத இயக்கம் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுமேயாகும். அத்தோடு தனது சொந்தக் கட்சியின் சில அமைப்பாளர்கள் யூ.என்.பி.க்கு ஓட்டம் பிடித்ததால் உருவான நெருக்கடிக்கும் அஷ்ரப் முகம் கொடுத்துள்ளார். கடந்த வாரம் யூ.என்.பி.காரர்கள் சி.ல.மு.கா. தலைமையை சந்தித்து தேர்தல் ஒப்பந்தம் செய்வது தொடர்பான சாத்தியங்கள் பற்றி ஆராய்ந்ததாகவும் சில செய்தி அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

குமாரதுங்க இன்னும் பல கட்சிகளின் பிளவுகளுக்கும் கட்சி மாறல்களுக்கும் கூட முகம் கொடுத்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (CWC) முன்னைய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் -இவர்கள் சகலரும் இ.தொ.கா.வின் உப தலைவர்கள்- யூ.என்.பி.யின் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிட விலகிச் சென்றுள்ளனர். இ.தொ.கா. இன்னமும் பெருந்தோட்டத்துறையிலான பெரும் தொழிற்சங்கமாக இருந்து வருவதோடு ஒரு அரசியல் கட்சியாகவும் செயற்படுகின்றது. இ.தொ.கா.வில் இருந்து வெளியேறியோர் இ.தொ.கா.வை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் சண்டையில் இன்றைய தலைமையுடன் ஈடுபட்டு இருந்ததோடு, தோட்டத் தொழிலாளர்களிடேயே பொதுஜன முன்னணிக்கு எதிராக வெடித்துள்ள கசப்புணர்வுகளையும் சுரண்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவரும் பிரதி அமைச்சருமான பீ.சந்திரசேகரன் ஆளும் பொதுஜன முன்னணியில் இருந்து விலகி, யூ.என்.பி.யுடன் சேர்ந்து கொண்டார்.
பொதுஜன முன்னணியின் மற்றொரு பங்காளியான ஐக்கிய ஜனநாயக (லலித்) முன்னணி -முன்னர் இது யூ.என்.பி.யில் இருந்து வெளியேறியது- பொதுஜன முன்னணியுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளது. இத்தேர்தலில் வழங்குவதாக வாக்குறுதியளித்த தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியே இப்பிளவுக்கு காரணம்.

பழமைவாத யூ.என்.பி.யும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. ஆட்சியில் இருந்த காலத்தின் வரலாற்று துர்நாற்றம் காரணமாக மக்களிடையே பெரும் செல்வாக்கிழந்து போன இக்கட்சியில் இருந்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் யூ.என்.பி.யின் ஒரு முக்கிய புள்ளியான சரத் கொங்கே அதில் இருந்து விலகி, பொதுஜன முன்னணியில் சேர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்தார். யூ.என்.பி. "பாசிச எல்.ரீ.ரீ.ஈ. கொலைகாரர்கள் சம்பந்தமாக ஒரு இளகிய போக்கை கடைப்பிடிப்பதாக" கொங்கே கூறியதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை செய்திருந்தது. இவரது கருத்துகள் கடந்த டிசம்பரில் தன்னைக் கொலை செய்ய யூ.என்.பி. விடுதலைப் புலிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது என்ற சந்திரிகா குமாரதுங்கவின் வெறிகொண்ட குற்றச் சாட்டை மேலும் அசைபோட வாய்ப்பு வழங்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.