|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
Globalisation: The Socialist Perspective
பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு
ByNick Beams
5 June 2000
Use
this version to print
உலக சோசலிச வலைத்தளத்தின்
சர்வதேச ஆசிரியர் குழுவினருள் ஒருவரும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின்
தேசிய செயலாளருமான நிக் பீம்ஸ் அண்மையில் ஆறு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில்
வெற்றிகரமான சொற்பொழிவுச் சுற்றினை முடிந்திருந்தார். பீம்சின் சொற்பொழிவான
-பூகோளமயமாக்கல்: சோசலிச முன்னோக்கு- க்கு சிட்னி, மெல்பேர்ன், நியூகாசில்
மற்றும் கான்பேராவில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும்
கல்விமான்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். உலக சோசலிச வலைத்தளம் தமிழில்
இச்சொற்பொழிவை மூன்று பகுதிகளாக வெளியிடுகிறது.
பகுதி 1 |
பகுதி 2 |
பகுதி 3
21ம் நூற்றாண்டின் வருகையானது கடந்த நூறுஆண்டு காலத்தின் பின்னோக்கிய ஆய்வினையும்
நாகரிகத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றிய கேள்விகளையும் மிக இயல்பாகவே
தூண்டிவிட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகள் வெறுமனே நாட்காட்டியின் மாறுதல்களால்
தூண்டிவிடப்படவில்லை மாறாக வரவிருக்கும் தலைமுறைகளுக்கான முக்கிய நிகழ்வுகளை
வடிவமைக்கப் போகின்ற, ஆழமான மாற்றங்களூடாக தற்போதய சமுதாயம் கடந்து சென்று
கொண்டிருக்கிறது என்ற உணர்வில் தூண்டிவிடப்பட்டுள்ளது.
கடந்த காலகட்டம், சில வருஷங்களுக்கு முன்னால் கனவாக மட்டுமே இருந்தவையான,
உதாரணமாக கணணி மயமாதல், மரபணுத்தொழில் நுட்பம்மற்றும் தொடர்பு சாதனங்களின்
உற்பத்தி போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞான அறிவுகளில் உண்மையான வியப்பூட்டும்
வளர்ச்சியைகண்டிருக்கிறது. ஆனால் இந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவின்
வியப்பூட்டும் வளர்ச்சி மற்றும் மனிதகுலத்தின் உற்பத்தி ஆற்றல்கள் இந்தக்கால
கட்டத்தின் மேலாதிக்கம் செய்திருந்த சமூக அதிகாரமின்மை மற்றும் சமூகச் சீரழிவு
ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைகளுடன் கூர்மையான முரண்பாட்டிற்க்கு
உள்ளாகியுள்ளது
.
கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தின் சகலதுறையிலும் பூகோளமயமாக்கலுடன் தொடர்புடைய
உற்பத்தி போக்குகளில் ஏற்ப்பட்ட பெரும் மாற்றங்களினால் விரைவான வேகத்தில்
வந்த மாற்றங்கள் அனைத்து பழைய அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளை எல்லாம்
ஒருபுறமாய் அடித்துச் சென்றுவிட்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர்களால்
கட்டுப்படுத்தமுடியாத மற்றும் எவராலும் கட்டுப்படுத்தமுடியாத சக்திகளால் இந்த
அல்லது அந்த வழியில் திரும்புகின்ற சூழலில், ஏதோவகையான நீர்ச்சுழற்சியில்
அகப்பட்டுக் கொண்டதைப்போல் காண்கின்றனர்.
ஒவ்வொருநாளும் ஏதோ புதிய அழிவினைக் கொண்டுவருகிறது: பஞ்சத்தின் அபிவிருத்தி,
உள்நாட்டு யுத்தவெடிப்பும், இனக்குழு மோதலும், ஆலைமூடல், நிறுவனங்களில் ஆட்களின்
அளவை குறைத்தல் அல்லது சமூகசேவைகளை வெட்டல் ஆகியவற்க்ை கொண்டுவருகிறது.
முழு உலகின் மீதும் தொடங்கிக்கொண்டிருப்பது பிரதான நிதி நெருக்கடியின் அச்சுறுத்தல்தான்,
அதாவது கடந்ததசாப்தத்தில் பூகோள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வழியாகப்
பிளந்து கொண்டுவந்த நிதிப்புயல்களில் இதற்கான எச்சரிக்கை அடையாளங்கள் காணப்பட்டன.
புராதன காலங்களில், மனிதர்கள் தங்களது நடவடிக்கைகளுக்காக நட்சத்திரங்களின்
வழிகாட்டலை தேடினார்கள் அல்லது கடவுளர்கள் தங்களை கருணையுடன் பார்க்கிறார்களா
என்று இயற்கை உலகில் அடையாளங்களைத் தேடினார்கள். நவீனமனிதன் அத்தகைய நடவடிக்கையைப்
புறந்தள்ளிவிட்டான். ஆனால் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான
மக்கள், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி இலக்கங்களால் தீர்மானிக்கப்பட்டால்
அது தங்களுக்கு என்ன மாதிரி எதிர்காலம் இதனுள் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது
என்று உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கும் வகையில் டோவ் ஜோன்ஸ் [Dow Jones]
அல்லது நாஸ்டாக் [NASDAQ] அல்லது வேறு ஏதாவது பங்குச் சந்தை குறியீட்டெண்ணை
கண்காணிக்கின்றனர்.
இவ்வகையிலான உறுதியற்ற தன்மையின் பரந்த அளவில் அபிவிருத்தி அடைகின்றதுடன்,
அது புதிதான ஒன்றல்ல. உண்மையில் தற்போதைய நிலைமை பூகோள முதலாளித்துவ அமைப்பின்
அபிவிருத்தியின் பிறப்பிலிருந்தே உள்ளடங்கியிருக்கின்ற போக்கின்
விளைபொருளாகும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் கம்யூனிஸ்ட்கட்சி
அறிக்கையில் பின்வருமாறு எழுதினார்:
"முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக்கருவிகளிலும், இதன்மூலம்
உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர
மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது. ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்க்கங்களுக்கு
எல்லாம் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக்
கொள்வதுதான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது. ஒயாது ஒழியாது
உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும் சமூக உறவுகள் யாவும் இடையறாது
அமைதிகுலைதலும் முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதலாளித்துவ
சகாப்தத்தை அதற்கு முந்திய எல்லா சகாப்தங்களிலிருந்ததும் வேறுபடுத்திக்
காட்டுகின்றன. நிலையான இறுகிக் கெட்டிப்பிடித்துப் போன எல்லா உறவுகளும்,
அவற்றுடன் இணைந்த பழங்காலத்தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன,
புதிதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே
பழமைப்பட்டுவிடுகின்றன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன,
புனிதமானவையாவும் புனிதம் இழக்கின்றன, முடிவில் மனிதன்தெளிந்த புத்தியுடன்
தனது வாழ்க்கையின் மெய்யான நிலைாமைகளையும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள
உறவுகளையும் நேர் நின்று உற்று நோக்க வேண்டியதாகிறது.``
இந்த சொற்பொழிவில் நாம் எடுக்கமுயற்சிக்கும் பணி வாழ்க்கையின் உண்மையான
சூழ்நிலைகளை தெளிவுடன் எதிர்கொள்வது மற்றும் இந்த முரண்பாட்டிலிருந்து
எதிர்காலத்துக்கான வழியைச் சுட்டிக்காட்டுவதுதான்.
இருப்பினும் சிலரின் கருத்தின்படி இத்தகைய ஆய்வு தேவையற்றது. ஆஸ்திரேலிய
நிதி ஆய்வு (Australian Financial Review) இதழின் மே23 பதிப்பு "அந்த அளவு
நல்லதை நாம் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை" எனும் தலைப்பின் கீழும்``
முன்னரே எண்ணிப்பார்க்கமுடிந்திராத நமது முன்னேற்றத்திற்காக சுதந்திர
முதலாளித்துவ சந்தைக்குநன்றி`` என்ற துணைத் தலைப்பின் கீழும் பின்வருமாறு
தொடங்குகிறது: ``முன்னேறிய பொருளாதாரத்தின் மக்கள் தொகையினர் இன்று உலகம்
நன்கு அறிந்த செல்வந்த மற்றும் சுதந்திர மக்களாவர். நாம் முன்
என்றுமிருந்திராத மட்டத்துக்கு தனிப்பட்ட உடல் நலத்தை, நீண்ட வாழ்வு,
சுலபமாக நகருதல், பாதுகாப்பு, கல்வி மற்றும் வசதிகளை அனுபவிக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் விடியலிலிருந்து தொடர்ந்திருந்த மனிதகுலத்தின்
மையப்பிரச்சினைகளான சுதந்திரம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைப் பெறுவதும்
பாதுகாப்பதும் பற்றிய பிரச்சனைகள் இப்பொழுது முக்கியமாக
தீர்க்கப்பட்டிருக்கிறது``.
சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் முன்னேற்றத்தை சோசலிசம்
துல்லியமாக சிறப்பாகச் செய்யும் என்று கூறப்பட்ட விஷயத்தில்,
முதலாளித்துவம் சோசலிசத்தின்மீது தனது மேலாதிக்கத்தை நிரூபித்துள்ளது என்று
உறுதியாகக் கூறி கட்டுரை மேற்செல்கிறது. ``நாம் அனைவரும் இப்போது
முதலாளித்துவ வாதிகளாக இருந்தால் அது நாம் நவீனவாதிகளாக இருப்பதாலும்,
இதனால் வலது, இடது மற்றும் மத்தியவாதிகள் ஆகிய நாம் அனைவரும் மிக ஆழமான
சமத்துவவாதிகள் ஆவர். மற்றும் முதலாளித்துவமானது மிகவும் சமத்துவமான
ஆட்சியாக தன்னைக்காட்டியிருக்கிறது.
இங்கு கூறப்பட்டுள்ளது முட்டாள்தனமானதுதான். 90ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்,
சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள்
நொருங்கிய பொழுது அது ``சோசலிசத்தின் மரணம்`` மற்றும் ``சந்தையின் வெற்றி``
என்று வானத்தை நிரப்பியிருந்த வரவேற்கப்பட்ட வலியுறுத்தல்களிலிருந்து
அடிப்படையில் வேறுபடவில்லை.
பாராளுமன்ற அரங்கிலிருந்து பல்கலைக்கழக விரிவுரை மண்டபம் வரை செய்தித்தாள்
கட்டுரைகள் மற்றும் கல்வியியல் இதழ்கள் போன்றவற்றிலும் இருபதாம்
நூற்றாண்டின் மகத்தான அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டம் முடிந்து
விட்டது என்ற அதே கருத்து முடிவற்றமுறையில் திரும்பத் திரும்பக்
கூறப்பட்டது. இதிலிருந்து உற்பத்திச் சக்திகளின் தனி உடைமை மற்றும்
நிதிவளங்களை அடிப்படையாகக் கொண்ட, மூலதனத்தின் நலன்களின் பேரில் இலாபத்தைத்
திரட்டுவதற்கான விடாப்பிடியான போட்டிமிக்க போராட்டம் சவால்செய்ய முடியாது
ஆட்சி செய்யும் என்பதாகும். சிலர் அதனை ``வரலாற்றின் முடிவு`` என்று
பிரகடனம் செய்யும் வரை கூட சென்றார்கள்.
ஸ்ராலினிச ஆட்சிகளின் மரணத்தின் இந்த உரிமை கோரல்கள் அடித்தளத்தை
கொண்டிருந்தன. இந்த ஸ்ராலினிச ஆட்சிகள் எந்த வழியிலும் உண்மையான
சோசலிசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை
கொடூரமாக ஒடுக்கியும் அதன் புரட்சிகர தலைமையைப் படுகொலை செய்தும் அதன்
மூலமாக ஆட்சிக்கு வந்த கொடுங்கோலான அதிகாரத்துவ ஆட்சியாகும். இவை ஒருபோதும்
கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. முதலாளித்துவ சந்தையானது மட்டும்தான்
நீடித்த சரியான சமூக அமைப்பு என்று எடுத்துக்காட்டியது என துணிபுரைகளின்
வழியில் நிறுவுவதற்கு நிகழ்வுகளின் எந்த ஆய்வும் அனுமதிக்கப்படவில்லை.
அனுபவத்தின் சோதனை
1980 களில் தாட்சர் மற்றும் ரீகன் ஆட்சியாளர்களால் முன்கொண்டு செல்லப்பட்ட
அடித்துச்செல்லும் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்கள், கட்டுப்பாடற்ற
சுதந்திர சந்தை முதலாளித்துவம் எனும் வேலைத்திட்டமாக அடுத்தடுத்த
காலகட்டங்களில் இந்தப் பிரகடனங்களுடன் சேர்ந்து கொண்டன- இவை பூகோளம்
முழுமையும் அடித்துச்சென்றன. பொதுமக்களின் நலன்களின்பேரில்
முதலாளித்துவத்தைச் சீர்திருத்தம் செய்தல் சாத்தியம் என பத்தாண்டுகளாக
பிரகடனம் செய்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகள், தங்களின் சமூகசீர்திருத்தக்
கருத்துக்களை முறித்துக் கொண்டுவிட்டன. தொழிற்சங்கத் தலைமைகள் இலாபத்தையும்
``சர்வதேசப் போட்டியையும்`` உறுதிப்படுத்துதற்கு மூலதனத்துடன் பங்குதாரராக
நுழைவதில் விரைந்தனர். அதேவேளையில் வளர்ச்சி பின்தங்கியுள்ள நாடுகள் என்று
அழைக்கப்படுவனவற்றின் தேசிய ஆட்சிகளின் தலைவர்கள், பூகோள மூலதனத்துக்கு
முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் ``சுதந்திரச்சந்தைக் கோட்பாடுகள்``
மீதான தங்களின் பற்றுக்குமான தங்களின் ஆர்வத்தினைப் பிரகடனம் செய்துகொண்டு,
தங்களின் தேசியப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கைவிட்டனர்.
கடந்த பத்தாண்டின் மூர்க்கமான அளவிலான அபிருவித்தி நிலைகளில்,
உச்சக்கட்டமாக கடந்த 25 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் பொருளாதார அமைப்பு
வடிவம் பூகோள முதலாளித்துவ சந்தையின் அதிகாரத்திற்க்கு கீழே
வந்திருக்கிறது. மனித வரலாற்றின் எந்த ஒரு கால கட்டமும் முதலாளித்துவ சந்தை
அத்தகைய மேலாதிக்கத்தினை செய்திருக்கவில்லை. இது அதன் ஆதரவாளர்களின்
கோருதல்களை மதிப்பீடு செய்வதற்கும், வரலாற்று அனுபவத்தின் சோதனையில் எப்படி
அவர்கள் எழுந்துநிற்கின்றனர் என்று ஆய்வு செய்வதற்கும் எம்மை
ஈடுபடுத்தியுள்ளது.
அண்மைய காலகட்டத்தில் உலகளவில் திகைப்படையச் செய்யும் அளவிலான சமூக
துருவப்படுத்தலின் வளர்ச்சியைக் காட்டுகின்ற தகவல்கள் வெள்ளம்போல்
வெளியிடப்பட்டன. உதாரணமாக 475 உலக கோடீசுவரர்களின் செல்வம் உலக ஜனத்
தொகையின் 50% ற்கும் அதிகமானோரின், அதாவது 300 கோடி மக்களது
வருமானங்களுக்கு இப்போது சமமானது. இந்த செல்வக்குவிப்பானது விரைவான
வீதத்தில் உயர்ந்து கொண்டுசெல்கிறது. அமெரிக்காவில் கோடீசுவரர்களின்
எண்ணிக்கை 1982ல் 13லிருந்து 1996ல் 149 ஆக உயர்ந்திருக்கிறது.
1998 ஐக்கிய நாடுகளின் உலக அபிவிருத்தி அறிக்கையின்படி, உலகில் உள்ள மூன்று
மிகப்பெரும் பணக்காரர்கள் குறைந்த வளர்ச்சியுடைய 48 நாடுகளின் ஒட்டு மொத்த
உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமான அளவு மதிப்புடைய சொத்துக்களைக்
கொண்டிருக்கின்றனர். 15 செல்வந்தர்கள் துணை ஆப்பிரிக்க சகாராவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகக் கொண்டிருக்கிறார்கள். 32 செல்வந்தர்கள்
தெற்காசியாவினைவிட அதிக மதிப்புடைய சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். 84
செல்வந்தர்கள், நீடு தங்கியிருக்கும் 12 லட்சம் பேருடன் சேர்த்து சீனாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புக்கு மேலாகக்கொண்டிருக்கின்றனர்.
மற்றும் உலக மக்கட் தொகையின் பெரும்பான்மையினரது நிலை என்ன?
வளர்ந்து வரும் நாடுகள் என்று அழைக்கப்படுவனவற்றின் 44 லட்சம் மக்களின்
3/5பங்கினர் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி உள்ளனர். 1/3பங்கினர்
பாதுகாப்பான குடிநீர் இன்றியுள்ளனர்: 1/4பகுதியினர் போதுமான வீடற்றவர்கள்,
1/5பங்கினர் ஊட்டச்சத்து இல்லாதவர்கள். அதேவீதத்தினர் நல்ல சுகாதார வசதிகள்
கிடைக்காதவர்கள். 1960 மற்றும் 1994க்கு இடையில் உலகமக்கள் தொகையின் பெரும்
செல்வந்தர்களில் 1/5பங்கு செல்வந்தர்களுக்கும் வறியோரில்1/5பங்கு
வறியவர்களுக்கும் இடையிலான தனிநபர் வருவாயில் உள்ள இடைவெளி 30:1லிருந்து
78:1 வரை இருமடங்காக அதிகரிக்கின்றனது. 1995 அளவில் வீதமானது 82:1 என்ற
வீதத்தில் அதிகரிக்கிறது.
1997ல் உலகமக்கட் தொகையில்1/5பகுதி செல்வந்தர் உலக வருமானத்தின் 86%
பெறுகின்றனர் 5% ஏழ்மையானவர்கள் வெறுமனே 1.3% பெறுகின்றனர். 13 கோடி
மக்களின் வாழ்க்கை ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கும் குறைவாகப் பெற்றுப்
பிழைக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்- ஐ.நா. அறிக்கையின்படி,
147 நாடுகளுள் ``அபிவிருத்தி அடைந்துவரும்`` என்று வரையறை
செய்யப்படுபவற்றில் 100 கடந்த 30 ஆண்டுகளில் "கடுமையான பொருளாதாரச்
சரிவினை" அனுபவித்துள்ளன.
உலகத்தின் பெரும்பான்மை மக்களது ஏழ்மையானது "இயற்கை பேரழிவு" களின்
விளைபயனால் அல்ல மாறாக சர்வதேச மூலதனத்தின் ஆதிக்கத்திற்காக நிலைமைகளை
உருவாக்கும் நோக்குடன், வங்கிகள் மற்றும் பெரும் சர்வதேச நிதி
நிறுவனங்களின் சார்பாக, சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்படும்
"கட்டமைப்பை சீர்திருத்தம் செய்யும்" வேலைத்திட்டத்தினாலும், மற்றும் நிதி
சந்தைகளின் நடவடிக்கைகளின் நேரடிவெளிப்பாடாகும்.
பெருமளவு சமூகச்செலவினை வெட்டி கடன்கள் மீழ் அளிக்கப்படும் போதும் கடனின்
மட்டம் தொடர்ந்து உயர்கிறது.1990ல் வளர்ந்துவரும் நாடுகளினால் வாங்கப்பட்ட
மொத்தக்கடன் இருப்பு 1.4 ஆயிரம் கோடி டொலராக இருந்து 1997இல் 2.17 ஆயிரம்
கோடி டொலராக உயர்ந்தது. ஆபிரிக்கா கண்டத்தின் ஒவ்வொரு ஆளுக்குமான
மொத்தக்கடன் 370 டாலர்களாகும். சில நாடுகளில் மொத்தக்கடன் மட்டம் உள்நாட்டு
மொத்த உற்பத்தியைப்போல் நான்கு மடங்கிற்கும் அதிகமாகும்.1998ல் மூன்றாம்
உலக நாடுகள் ஒவ்வொரு நாளும் பெரிய வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் 7170
லட்சம் டாலர்களை கடன் செலுத்துமதியாக செலுத்தினர்.
சந்தை உண்மையில் அதன் ``மாயவித்தையை`` காட்ட முடியும் என்று முதலாளித்துவ
பேச்சாளர்கள் கூறிவந்த, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் எல்லைகளுக்குள்
இருந்த அளவினை விட பேரழிவு வேறெங்கும் நிகழ்ந்திருக்கவில்லை.
1989க்குப் பின்பு ரஷ்யப் பொருளாதாரம் பாதியாகக் குறையும் என்று
கணக்கிடப்பட்டது. பொருளாதார அர்த்தத்தில் அது இப்பொழுது நெதர்லாந்தைவிட
பெரியது அல்ல. 1942ல் நாட்டின் பெரும்பகுதி நாஜி ஆக்கிரமிப்பாளர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டபோது இருந்ததைவிட உற்பத்தி அதிகமான இழப்புடன் உள்ளது.
1985க்குப் பின்னர் பிறப்பு வீதம் பாதியாகக் குறைந்தது மற்றும் அது இறப்பு
வீதத்தால் 1.6 அளவால் விஞ்சிவிட்டது. அதன் விளைவாக தற்போதைய போக்கில் ரஷ்ய
மக்கள் தொகை அடுத்த பத்தாண்டில் ஐந்தில் ஒரு பகுதியாக வீழ்ச்சியுடையும்.
கடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் 16 வயது ரஷ்ய ஆணின் ஆயுட்காலம்
இன்றையதைவிட அதிகமாக இருந்தது. அதாவது இரு உலக யுத்தங்கள், உள்நாட்டு
யுத்தம், பஞ்சம், ஆட்கள்களை எடுப்பில் இறப்பு மற்றும் குலாக் பிரச்சினை
இருந்த போதும் 1900ல் 16 வயது ஆண் 60 வயதை அடைவதற்கான வாய்ப்பு, 2000
ஆண்டில் அவன் 60 வயதை அடையலாம் என்பதைவிட இரண்டு சதவீதம் அதிகமாகவே
இருந்திருந்தது.
சில கெட்ட ஆவிகள் மனித குலத்தின் மீது கொடுமையான நகைப்பை ஏற்படுத்த
முடிவெடுத்திருந்தாலும்கூட, இப்போது விரிந்து வரும் நிலையை ஜாலவித்தையால்
கட்டுப்படுத்த முடியாது. புதிய நூற்றாண்டு தொடங்குகையில் ``சந்தையின்
வெற்றி`` முன்னொருபோதும் இல்லாத பேரழிவின் வடிவத்தை எடுத்திருக்கிறது.
உலகின் அனைத்து மூலைகளிலும் சமூக நிலைமைகள் ஆழமாகிவரும் வறுமை மற்றும்
குவிந்துவரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன. இதன்
விளைவாக மனிதப் பேரழிவுகளின் வெடிப்பு தொடர்கின்றன. இந்த சமூக பேரழிவுகளின்
மத்தியில் முதலாளித்துவ சந்தையின் ``புதிய உலக ஒழுங்கு`` அதன் உண்மை
முகத்தைக் காட்டியிருக்கிறது-ஏகாதிபத்திய பெரும் அரசுகள் பூகோள
ஆதிக்கத்துக்கான முயற்சியாக கொடும் யுத்தங்களைத் தொடுக்கின்றதைக்
காட்டியிருக்கிறது.
``சுதந்திர சந்தை`` யின் மேலாதிக்கத்திற்கும் இராணுவ
பலத்தைபயன்படுத்துதற்கும் இடையிலான தொடர்பு, நியூயோர்க் டைம்ஸின்
வெளிநாட்டு ஆசிரியர் தோமஸ் பிரைட்மன் [Thomas Friedman] ஒரு ஆண்டுக்கு
முன்னால், யூகோஸ்லாவியாவுக்கு எதிரான நேட்டோவின் தாக்குதல்
நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எழுதிய கட்டுரையில் பின்வருமாறு
ரத்தினச்சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
``சந்தையின் மறைமுகமான கையானது மறைமுகமான முஷ்டி இல்லாமல் ஒருபோதும்
இயங்காது. F-15 ரக விமானத்தை கட்டும் மக் டொன்னல் டக்ளஸ் [MaDonnell
Douglas] இல்லாமல் மக்டொனால்ட் [MaDonald's] பூத்துக் குலுங்க முடியாது.
சிலிகன் வலி [Silicon Valley] தொழில்நுட்பங்களுக்கு பாதுகாப்பாக உலகை
வைத்திருக்கும் மறைமுகமான முஷ்டி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தரைப்படை,
வான்படை, கடற்படை மற்றும் கடற்படை சிப்பாய்கள் ஆவர்...... அமெரிக்கா
கடமையில் இல்லாமல் அமெரிக்கா இணையத்தில் [America Online] இருக்க
முடியாது``.
முதலாளித்துவம் உலக மக்களின் பரந்த வெகுஜனங்களுக்கு எப்போதும் துன்பத்தை
உருவாக்கி வருகிறது. ஆனால் கடந்த 50ஆண்டுகளாக அதற்கு வக்காலத்து
வாங்குவோர், குறைந்தபட்சம் செல்வந்த நாடுகளிலாவது அது உழைக்கும் மக்களின்
பெரும்பான்மையோரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதாக விவாதிக்கிறார்கள்.
அது நிலைமை தற்போது இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக பொருளாதார விரிவாக்கமானது
செல்வத்தின் ஆழமான துருவபடுத்தலை மட்டும் உண்டுபண்ணவில்லை, பெரும்பான்மையான
சம்பளம் பெறுவோரது நிகர வருவாயில் உண்மையாக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூகோளப் போக்கானது ``சுதந்திர சந்தை`` பொருளாதாரத்திற்கான மாதிரியாக
கருதப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட வேறு எங்கும் மிகவெளிப்படையாகத்
தோற்றமளிக்கமுடியாது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உண்மைக்கூலி வீதம் 1973ல் இருந்ததைவிட 7 சதவீதம்
குறைவாகும். 1930களில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை உள்ளடக்கிய 25
ஆண்டுகளில் காலத்தில் கூட உண்மைக் கூலி வீதங்கள் அத்தகைய நீண்டகாலத்துக்கு
சுருங்கி இருக்கவில்லை.
பெரும்பான்மை தொழிலாளர்களின் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியானது, செல்வம்
மேல்நோக்கிய மறுபங்கீட்டின் வெளிப்பாடாகும். 1962ல் அடிமட்டத்து 90% மக்கள்
வருமானத்தில் 69சதவீதம் பெற்றனர். 1992 அளவில் இது 59% ஆக
வீழ்ச்சியடைந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தக் காலகட்டத்தில்
வருமானத்தில் 10 சத வீதம் வருமான அளவில் மேல்மட்டத்தில் மறுபங்கீடு
செய்யப்பட்டது. பெரும்பாலானவை 1சதவீத செல்வந்தர்களின் கைகளில்
போய்முடிவடைந்தது. முழுமையான அளவில் இந்தத் தொகைகள் ஆண்டுக்கு 700
பில்லியன் டொலர்களாகும்.
போர்ப்ஸ் 400 எனப்படும் பணக்கார அமெரிக்கர்களின் ஒவ்வொருவரது செல்வமும்
1997 முதல் 1999 வரை சராசரியாக 940 மில்லியன் டொலர்களாக வளர்ந்தன. 1983
முதல் 1995 வரை கடந்த 12 ஆண்டுகளில் அடித்தளத்து 40 சதவீதம் பேரின் மொத்த
மதிப்பு 80 சதவீத அளவில் வீழ்ச்சியுற்றது. சுதந்திரச் சந்தை ஆதரவாளர்களால்
நேசிக்கப்படும் "படிப்படியாக செல்வம் கைமாறும்" விளைவு இதுதான். இன்னும்
சொல்லப்போனால் ``மேல் நோக்கிய உறிஞ்சல்`` நிகழ்ச்சிப்போக்கு
நிகழ்ந்துள்ளது.
போர்ப்ஸ் 400 செல்வந்தர்களின் இணைந்த மொத்த மதிப்பு 1999 செப்டம்பரில் 1
ரில்லியன் டொலர்கள் ஆகும். இது அதன் முந்தைய ஆண்டு மதிப்பான 738 பில்லியன்
டாலர்களில் இருந்து உயர்ந்தது. அந்த அதிகரிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது
சுமார் 48 பில்லியன் டாலர்கள் இருந்தால், அதிகாரப்பூர்வமாக வறுமையில்
வாழ்வதாகக் குறிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை (வறுமைக் கோட்டுக்குக் கீழ்
உள்ள மக்கட் தொகையில் 15 சத வீதத்தினரையும் குழந்தைகளில் 25 சத
வீவதத்தினராக வறுமையில் உழல்பவர்களையும்) வறுமைக் கோட்டு அளவுக்காவது
உயர்த்த முடியும்.
அதேஅளவு எண்கள் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் மேற்கோள்
காட்டப்படமுடியும். எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவைப் பற்றிய ஒரு அண்மைய
ஆய்வின் படி "1994ல்மேல்மட்ட 20 சதவீத குடும்பத்தினர் மொத்த செலவிடக்கூடிய
வருமானத்தில் 40 சதவீதம் பெறுகின்றனர். கீழ்மட்ட 20 சதவீதத்தினர் இதில் 6
சதவீதமே பெறுகின்றனர். 1984 உடன் ஒப்பிடுகையில் மிக கீழ்மட்ட முக்கால்
பங்கினர் தங்களின் செலவழிக்கும் பங்கினைக் குறைத்துள்ளனர், கீழ்மட்ட கால்
பங்கினர் தங்களது பங்கினைப் பராமரித்து வருகின்றனர் மேல்மட்ட கால்பங்கினர்
தங்களது பங்கினை அதிகரித்துள்ளனர். 1994ல் அனைவருக்குமான
செலவிடக்கூடியவருமான ஒதுக்கீடு மிகக் குறைந்த அளவாகும். இரண்டு வருமானம்
தரும் குடும்பங்களில் அதிகரிப்பு இருந்த போதும், மேல்மட்டத்திலும் இது
குறைவாகும்".1 வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் ஒப்பீட்டளவில்
மக்கட்தொகையில் பரந்த பெரும்பான்மையினர் மோசமான நிலையில் இருப்பது
மட்டுமல்ல, உண்மையான அளவிலும் மிக மோசமான நிலையில் உள்ளனர், உண்மை வருமானம்
வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பு:
1. பிரையன் மற்றும் ராபெர்ட்டி, ஆஸ்திரேலியாவில் பூகோளப் பொருளாதாரம்.
|
|