World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French anti-globalisation protest calls for trade war measures against u.s

பிரான்சின் பூகோளமயமாக்கலுக்கான எதிர்ப்புப் பிரச்சாரம் அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக யுத்தத்திற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுகின்றது

By Francis Dubois
19 July 2000

Use this version to print

பூகோள வர்த்தகத்திற்கும், கைத்தொழில்மயமான விவசாயத்திற்கும் மற்றும் பலம்கொண்ட பூகோள தொழில் நிறுவனங்களுக்கும் எதிராக களியாட்டம் மாதிரியான ஒன்றுகூடலுக்காக தெற்கு பிரான்சின் மியோ (millau) என்ற ஒரு சிறிய நகரத்தில் பத்தாயிரத்திற்கும் மேலாக மக்கள் ஒன்று திரண்டனர்.

இந்த ஒன்று கூடல் 12 ஆவணி 1999 அன்று மியோ வில் உள்ள McDonald's இடித்ததில் ஈடுபட்ட விவசாயக் கூட்டுறவு தொழிற்சங்க (சிறு விவசாயக் தொழிற்சங்கம்) 11 அங்கத்தவர்கள் மீதான வழக்்கு நாளன்றுக்கு இணைந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் சுற்றுப்புற சூழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிக பழைய வரலாறு கொண்ட தீவிர நடமுறைவாதியும் ஆகிய ஆட்டுப்பண்ணையாளரும், ஆடு வளர்ப்பவருமான 47 வயதுடைய (José bové) யோசெ போவெ என்பவர் மக்டோனாலை சேதப்படுத்தியதற்கு தலைமை தாங்கினார்.

ஏறக்குறைய 30.000 ஆயிரம் பேர் இந்த (கண்டன கூட்டத்தில்) ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள் எனக் கணிப்பிடப்பட்டது. அதில் பெரும்பாலானோர் நீதிமன்றத்தில் இருந்து200 அடி தூரத்தில் போடப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் வழக்கை கவனித்தர்கள். இதில் பங்குகொண்டோரில் 25000 க்கும் மேலானோர் அன்றிரவு நிகழ்ந்த இலவசமான ரோக் (rock) இசைநிகழ்ச்சியிலும், 'பிரெஞ்சு கலாச்சார விருந்தோம்பல்' (traditional french feast) விழாவிலும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

இந்த விழாக்கோலம் சர்வதேசத்தின் கவனத்தை கவர்ந்திருந்தது. 'தார்ன் நதியோரத்தில் சியாட்டில்', ("Seattle-on-Tarn") என்று இந் நகரத்தைக் கடக்கும் ஆற்றின் பெயரையும், மற்றும் கடந்த வருடம் உலக வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்தின்போது நடந்து முடிந்த பூகோளமயமாக்கத்திற்கு எதிரான பிரச்சார ஊர்வலத்தை ஞாபகப்படுத்துவதற்காகவும் இப்பெயர் சூட்டப்பட்டது. வழக்கும் மற்றும் இத்துடன் இணைந்த ஆர்பாட்ட ஊர்வலமும் பிரான்சின் "சிறிய மக்களின்" [Little people] பாரிய நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சார இயக்கமாக அறிமுகப்படுத்தச் செய்யப்பட்டது. இந்த ஒன்றுகூடலுக்குள் பங்குகொண்டவர்களுள் சிலர் உண்மையாகவே மிகத்தீவிரமான முறையில் முதலாளித்துவ எதிர்ப்பை கொண்டிருந்திருந்தாலும், ஆர்ப்பாட்ட ஊர்வலம் அடித்தளமிட்டிருந்த அரசியல் முன்னோக்கு முற்றுமுழுதாக வேறு திசையில் முன்னெடுக்கப்பட்டது.

பல பத்திரிகைகளில், பிரான்சிலும் மற்றும் உலகமெங்கும், இந்த வழக்கை டாவிட்டிற்கும் [David] கோலியாத்திற்கும் [Goliath] இடையிலான நவீன யுத்ததின் ஒரு பிரதியாகக் காட்டினார்கள். ஒருபுறம் போவெயால் வழிநடாத்தப்பட்ட விவசாயிகள் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட பிரதிநியானவர்களாகவும், மறுபுறம் வழக்கு தொடுநர்களும் மக்டோனால்டும் (Mcdonald's) மற்றும் இதேமாதிரியான பூகோளநிறுவனங்களின் பிரதிநிதியாகளும் இருந்தார்கள். 'எமது சமுகத்தால் உருவாக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனிதர்கள் மரண போராட்டத்தை நடத்துகிறார்கள்' அதற்காக அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என எதிர்த் தரப்பு வழக்கறிஞரான பிரான்ஸ்சுவா. றூ ( François Roux), நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இறுதித் தீர்ப்பு புரட்டாசியில் வழங்கப்படும். குறைந்த பட்ச தண்டனைகள்தான் விவசாயிகளுக்கு கிடைக்கலாம். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் யோசெ போவெக்கு 10 மாத சிறைத்தண்டனையை பரித்துரைத்தார். ஏற்கனவே இவருக்கெதிராக இப்படியான தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தும் 9 மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஏனையவர்களுக்கு கூடிய பட்ச தண்டனையாக 3 மாத சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.
பெரும் முதலாளிகளின் எதிரியை அனுசரணையுடன் அணுகியது வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. முக்கியமான பிரெஞ்சு அரசியால்வாதிகள் யோசெ போவெ (josé bové) யை வரவேற்றார்கள். விவசாயிகளின் தலைவராக உத்தியபூர்வமற்ற அங்கீகாரம் பெற்றுக்கொண்டதுடன், அவரை பிரெஞ்சு ஜனாதிபதியான ஜாக் சிறாக் (Jacques chirac) விவசாயக் கூட்டத்தின்போது ''salon de l'Agriculture'' (விவசாயப் பொருட்களின் வருடாந்த அறிமுகம்) போய்சென்று உரையாடினார். மற்றும் பிரதம மந்திரி லியோனல் யோஸ்பன் (Lionel Jospin) அவரை அழைத்து இரவு விருந்தளித்தார்.

1999 புரட்டாசி மாதம் Jacques Chirac வெளிப்படையாக யோசெபோவெ யை ஆதரித்ததுடன், மற்றும் 'தனியான ஒரு சக்தியின் ஆழுமை' உலக உணவுச் சந்தையை பங்கிடாது ஆட்சி செலுத்த அனுமதிப்பதற்கு எதிராக பேசினார். இது அமெரிக்காவை சீண்டுவதாக இருந்தது.

அரசு ஆழும் வட்டத்துக்குள் யோசெபோவெ யின் புகழிற்கான காரணம் அவரின் எதிர்ப்பு நடவடிக்கை செயல்கள் சொந்த முதலாளித்துவத்துக்கு நேரடியாக எதிராக இல்லாமல் முற்றுமுழுதாக அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிராக இருந்ததனாலேயாகும். அவரின் சொந்தக் கருத்தின் அடிப்படையில், ஐரோப்பாவிற்கு அமெரிக்காவின் ஓமோன் (Hormone) கலந்த மாட்டிறச்சி ஏற்றுமதி தடைக்்கு ஏதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை பழிவாங்கும் முகமாக சில பிரெஞ்சு பொருட்கள் மீது 100 வீதத்திற்கு மேல் வரி அதிகரிப்பை திணிக்கும் அமெரிக்காவின் முடிவானது (Mcdonald's) மைக்டோனால்ட் உணவு விடுதியை இடித்து சேதப்படுத்தத் தூண்டியது. இதில் யோசெபோவெ யின் பண்ணையில் இருந்து தயாரிக்கபடுகின்ற பாலாடைக்கட்டி Roquefot(chees) பாதிக்கப்பட்ட பண்டங்களில் முக்கியமானது. சில காலத்துக்கு முன்னரே பரம்பரை அலகுகளை மாற்றி[genetically] உருவாக்கும் விளைச்சலை அழிக்கும் நடவடிக்கையில் யோசெ போவெ முன்னேடுத்திருந்தார். சமீபத்தில் பிரெஞ்சு அரசும் இவ்வாறான உற்பத்தியை அழிக்க உத்தரவிட்டது.

சில வருடங்களாக பிரான்ஸ் ஐரோப்பாவுக்குள் அமெரிக்காவின் கடும் எதிர்ப்பாளனாக இருந்துவருகிறது. சமீப காலங்களில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகயுத்தம் விவசாய துறையில் மிக கூர்மையடைந்துள்ளது. உலகளவில் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா முக்கிய நாடாகும். பிரான்சும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பிரதான நாடாக இருந்து வருகிறது. அமெரிக்காவின்"'தரம்குறைந்த உணவை" எதிர்த்து பிரான்சின்'தரமானஉணவை' பாதுகாப்போம் என்ற பதாகையின் கீழ் யோசெபோவெ யின் பிரச்சார ஊர்வலம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிரான்சை பாதுகாப்பது என்பது உண்மையில் உலகச் சந்தையில் அமெரிக்க போட்டியாளர்களுக்கு எதிராக மாபெரும் பிரேஞ்சு விவசாய ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதாகும்.

சமீப மாதங்களில் வாசிங்டனிலும் (washington), டவோஸ்சிலும் (Davos), மற்றும் ஜெனீவாவிலும் (Geneva) நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தியவர்களின் முன்னோக்கும் யோசெபோவெயின் முன்னோக்கும் அடிப்படையில் ஒரேமாதிரியானவையே. 'பூகோளமயமாக்கலுக்கு எதிரான எதிர்ப்புவாதம் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் அரசியல் போக்காக இருந்தது. இந்த ஒன்று கூடலின் ஒழுங்கமைப்பாளர்கள், உலகம் பூராவுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த பூகோள வர்த்தகத்தினதும் மற்றும் பூகோள உற்பத்தியினதும் அபிவிருத்திதான் காரணம் என பார்த்தனர் ஆனால் பூகோளமயமாக்கம் விசேடமாக உற்பத்திச் சாதனங்களினது தனிச்சொத்துடமையினதும் மற்றும் தனியார் இலாப அமைப்பு முறையினதும் நிலமையின்கீழ் தோன்றியதன் விளைவு தான் என பார்க்கவில்லை.

நாடுகடந்த நிறுவனங்கள் மீதும் மற்றும் பூகோள அமைப்புகள் மீதும் உதாரணமாக உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, பூகோள தொழில் நிறுவனங்கள் ஆகிய சகலதையும் தாக்கிக்கொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்த தலைவர்கள் தேசிய முதலாளித்துவ அரசை பாதுகாக்கும் முன்னோக்கை முன்னெடுக்கின்றனர்.
பூகோளமயமாக்குதலுக்கு எதிரான பிரச்சாரத்தில் யோசெபோவெ அடித்தளமிட்டிருந்த சமூகத்தட்டு தொழிளாளவர்க்கம் இல்லை, மாறாக சிறு பண்ணை விவசாயிகள் ஆகும்.

யோசெபோவெ விவசாய பாதை(Via Campesina- peasant road) என்ற ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்குவதற்கு உதவிசெய்து, இதை ஒரு 'சர்வதேச விவசாயிகள்' (peasant international) என அவர் வர்ணித்துக்கொண்டார்.

வழக்கில் யோசெ போவெ யுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாதிரியே, யோசெபோவெயின் தீவிர அரசியல் பிரச்சார நடவடிக்கை 60 களின் இறுதியிலும் 70 களின் ஆரம்பத்திலும் அபிவிருத்தியடைந்தது. யூன் மாத கடைசியில் குற்றம் சாட்டப்பட்ட அங்கத்தவர்களிள் பலர், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை'Larzac" லார்சாக் இயக்கத்துக்குளால் ஆரம்பித்து இருந்தனர். இதன் பிறப்பு, லார்சாக் என்ற சிறுபான்மை விவசாயிகாளால் ஆழுமைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தளங்களின் அதிகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனை70 களின் நடுப்பகுதியிலிருந்து10 வருடத்திற்குமேலாக நீடித்தது.

('via compesina') "விவசாய பாதை' யின் இலக்கு சிறிய விவசாயிகளுக்கு தற்போதைய பொருளாதார நிலமைகளுக்குள் சலுகைகள் பெற்றுக்கொடுப்பதாகும். போவெ யின் கருத்தின்படி அரசுகள் மற்றும் தேசிய சர்வதேசிய ஸ்தாபனங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர்கள் "வெவ்வேறு அமைப்புகளுடன்", தற்போது இருக்கும் சிறிய விவசாயிகளினது போன்ற 'சமூக இயக்கங்கள்' மீது கவனம் எடுக்கவும் கலந்தாலோசிக்கவும் தள்ளப்படுவார்கள்.

போவெயின் பூகோளமயமாக்கலுக்கு எதிரான உரை நேரடியாக குறுகிய தேசியவாத போக்கை கொண்டுள்ளது. 'கொடூரமான புதிய ஏகாதிபத்தியத்தின்' கீழ் பல்வேறு தேசிய அரசுகளின் தனித்தன்மைகளும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன என்று அவர் முறையிட்டுள்ளார். மேலும் பிரெஞ்சு கலாச்சாரத்தையும் இறையாண்மையையும் மெக்டோனால் 'சமையல் ஏகாதிபத்தியம்' (Culinary imperialime) இற்கு எதிராக கண்டிப்பாக பாதுகாக்கபடவேண்டும் என கூறுகின்றார். யோசெபோவெ என்னதான் சர்வதேச நடவடிக்கைகளைப் பற்றி பேசும்போதும், அவர் தேசிய மண்ணின் பாரம்பரியம் உள்ளடக்கியிருக்க வேண்டும் என வலியுறித்தினார்.

பிரெஞ்சு தேசிய அரசை பாதுகாக்கவேண்டும் என் இந்தப் பேச்சுத்தான் போவெக்கு அரசியல் வட்டாரத்துக்குள் பரந்த ஆதரவையும் மதிப்பையும் ஏற்படுத்தியது. மோம்பெலியெ பல்கலைகழகத்தில் (Montpellier university) யில் கடந்த யூன் கடசியில் நடந்த விவாத அரங்கில் முக்கிய பேச்சாளனாக விவசாயியான போவெ இருந்ததுதான், பிரெஞ்ச் ஐக்கியத்திற்கான சோவினிச தலைவரான சார்ல் பஸ்குவா (charles pasqua) வை அதில் கலந்துகொள்ள ஊக்கிவித்தது.

சகல தீவிர குட்டிமுதலாளித்துவ குழுக்களும் அவரின் தேசியவாத முன்னோக்கை கட்டித் தழுவிக்கொண்டனர். காலஞ்சென்ற பப்பலோவாதியான ஏர்னெஸ்ட் மன்டெல்(Ernest Mandel) லின் ஐக்கியசெயலகத்துடன் இணைத்துக்கொண்ட பிரான்சிலுள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட்கழகம் (the lique comuniste Revolutionaire) (LCR) பலமாதங்களாக போவெ யின் பிரச்சாரத்தை அதன் நடவடிக்கையின் மிக முக்கிய செயலாக கொண்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு முன்னமே அவர்கள் தங்கள் பத்திரிகை முழுவதும் போவெயினதும் மற்றும் அவரின் ஆதரவாளர்களினதும் அரசியல் நிலைப்பாட்டுக்காக அர்ப்பணித்திருந்தனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) மீயோவில் நடந்த பிரச்சார ஊர்வலத்தை ஒழுங்கமைக்க, பசுமைக் கட்சி (greens), ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவையுடன் கூடிவேலை செய்ததுடன் மேலும் 'பூகோள முதலாளித்துவத்துக்கு' எதிரான இந்தபோராட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனையென மகிழ்ச்சியின் உச்சியில் நின்று வர்ணித்தது.

ஸ்ராலினிச கம்மியூனிஸ்ட் கட்சியும், பசுமைக் கட்சியும் (greens) யோஸ்பன் (Jospin) னின் ஆழும் கூட்டரசாங்கமான சோசலிச கட்சி (socialist Party) யுடன் பங்கெடுத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது சமூக நலக்காப்புறுதிகள், வைத்திய நலன், கல்வி, ஓய்வூதியம் ஆகியவற்றை தனியார்மயப்படுத்துலும் மற்றும் பரந்த பொருளாதார துறைகளையும் மறுசீரமைப்பதிலும் முன்னிற்கின்றது.