WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Big job cuts in US bank, auto, oil and retail
sectors
அமெரிக்க வங்கிகள், மோட்டார், எண்ணெய்
துறைகளில் பெரும் வேலை வெட்டு
By our correspondent
2 August 2000
Back to screen
version
அமெரிக்க கூட்டுத்தாபனங்கள்
தொழில் வெட்டுக்களில் ஈடுபட்டுள்ளன. ஜூலை கடைசி வாரத்தில் செலவீனங்களை ஓயாது
வெட்டும் நடவடிக்கையால் தொழிலாளர் பலிகடாக்களாகியுள்ளனர்.
இராட்சத கூட்டுத்தாபனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை ஒன்றிணைத்துக் கொண்டமை
தொழிலாளர்கள் மீது தாக்கம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும். பாங்க் ஒப் அமெரிக்கா
(Bank of America) அடுத்த ஆண்டளவில் 9000-10000 பேரை வேலைகளில் இருந்து
நீக்கப் போவதாக ஜூலை 28ல் அறிவித்துள்ளது. இது தொழிலாளர் படையின் 6.7 வீதமாகும்.
தொழிலாளர்களுடன் சேர்ந்து இடைநிலை, சிரேஷ்ட வங்கி முகாமையாளர்களும் இத்தாக்குதலுக்கு
இலக்காகுவர். புதிய தொழில் நுட்பம் காரணமாக இவர்களின் பதவிகள் இல்லாது செய்யப்படும்.
இந்தப் புதிய சுற்று தொழில் வெட்டின் முடிவில்- 1998ல் நேஷன் பாங்க் ஒப்
சார்லொட்டும் (Nation Bank of Charlotte) சான் பிரான்சிஸ்கோ பாங்க் ஒப் அமெரிக்கா
கோப்பரேசனும் ஒன்றிணைக்கப்பட்டதன் பின்னர் 34000 பதவிகள் ஒழிக்கப்படும். இந்த
வங்கி 65 பில்லியன் டாலர்களை சொத்தாகக் கொண்டுள்ளது.
1998ல் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மோட்டார் கம்பனியான டைம்லர் கிறிஸ்வர்,
வோல்ஸ்ரீட் முதலீட்டாளர் கண்ணில் "ஏமாற்றத்துக்குரிய" வருமானம் ஈட்டிய நிறுவனமாக
கணிப்பிடப்பட்டுள்ளது. 36 பில்லியன்களை கொண்டிருந்த அமெரிக்காவின் மூன்றாவது
பெரிய மோட்டார் உற்பத்தி நிறுவனமான, முன்னைய டைம்லர் பென்ஸ்சின் மட்டத்திலும்
பார்க்க அதன் பங்குகள் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கு பதிலடியாக,
அதன் தலைவரும் பிரதான உயர் அதிகாரியுமான யுஏர்கென் ஷிரெம்ப் [Juergen
Schrempp] 6.7 பில்லியன் டாலர்களை சேமிக்கும் முகமாக செலவு வெட்டு திட்டமொன்றினை
அடுத்த மூன்று ஆண்டுகளில் அமுலாக்கவுள்ளளார். அது ஏறத்தாள 6000 தொழில் இழப்புக்களை
ஏற்படுத்தும். இந்த நிறுவனமானது ஏறத்தாள 475,000 தொழிலாளர்களை சேவையில் அமர்த்தியுள்ளது.
அது தற்போது உலக ரீதியாக உள்ள தமது தலைமைக் காரியாலய அலுவலர்களை ? ஆகிய இடங்களில்
உள்ளவர்களில் 25 சதவீதத்தினரை அதாவது 1500 பேரை குறைக்க உள்ளது.
அமெரிக்காவின் பாரிய எண்ணெய்க் கம்பனியான எக்ஸோன் மொபைல் கோப்ரேஷன்,
மெகா-மேஜர் என்ற தனது இரு கம்பனி அலகுகளில் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட
சேமிப்புகள் அதிகரிக்கப்படலாம் என அறிவித்துள்ளது. இணைக்கப்பட்ட பின் ஆண்டொன்றுக்கான
வருமானம், முன்னர் மதிப்பிடப்பட்ட 3.6 பில்லியனிலும் பார்க்க 4.6 பில்லியனாக
அதிகரிக்கலாமென கணிப்பிடப்பட்டுள்ளது. செலவீன திட்டத்தின் ஒரு அம்சமாக, கம்பனி
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 16,000 தொழில் வெட்டுக்களுக்கும் மேலதிகமாக 3000
தொழில்களை மீண்டும் வெட்டித் தள்ள -அதாவது தனது உழைப்புப் படையில் 15 சதவீதத்தை-
உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூலை 25ம் திகதி மிச்சிகன் ரோயில் [Troy] உள்ள சில்லறை நிறுவனமான கேமார்ட்
கோபரேஷன், 72 களஞ்சியங்களை மூடி 5000 தொழில்களை வெட்டப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த வெட்டு அதன் முழு தொழில் வலுவின் 2 சதவீதமாகும். இரண்டு மாதங்களுக்கு
முன் நியமனம் பெற்ற புதிய தலைவரும் உயர் அதிகாரியுமான சார்ஸ் சீ கொன்னவே என்பவரது
முதல் அறுவடையான திட்டமே இதுவாகும். கிமாட் நிறுவனம் "தனது சொத்துடமைகள்
சகலவற்றுக்கும் சிறந்த பெறுபேறுகளை" கோரும் தேவையை கொண்டுள்ளது எனவும் அதனால்
கம்பனியின் முன்னர் இலாபமீட்டிய களஞ்சியங்கள் தற்போது போதிய இலாபகரமானதாக
இல்லாததால் மூடிவிட வேண்டியுள்ளதாக கொன்னவே குறிப்பிட்டுள்ளார். களஞ்சியம்
மூடப்படுவது வோல்ஸ்ரீட்டுக்கு திருப்தி தரவில்லை. அறிவித்தலைத் தொடர்ந்து
கேமார்ட் பங்குச் சந்தையில் 18.55 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச்
மாதத்தில் இருந்து கம்பனியின் பங்குகள் 30 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளன.
கொன்சிகோவில் காப்புறுதி நிதி கம்பனியின் புதிய நிர்வாகியான கரீ சீ வென்ட்
[Gary C. Wendt] தனது நிதிக் கூட்டுத்தாபனத்தில் 25000 தொழில்களுக்கு
வேட்டுவைத்தும், கடன் கொடுப்பனவுகளை சமாளிக்க நிதி திரட்டுவதற்கு பல சொத்துடமைகளை
விற்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்கம்பனி 1999 இரண்டாம்
காலாண்டில் 404.7 மில்லியன் டாலர் நட்டத்தை பிரதிபலிக்கிறது. நிதிப்பிரிவு
விற்கப்படுமா என கேட்டபோது, "எல்லாம் விற்கப்படவுள்ளன. எனது முழு விருப்பமும்
கம்பனியை விற்பதிலேயே உள்ளது -உங்களுக்கு தெரிந்த யாராவது இதை வாங்க இருந்தால்
அவர்களுடன் தொடர்புகொள்ளவும் நான் தயார் என வென்னட் தெரிவித்தார்.
ருக்ஸனில் உள்ள முதலாவது தரவு கூட்டுத்தாபனமான கடன் அட்டைகள் வழங்கும்
முக்கிய வர்த்தக நிலையம் 2000 தொழில்களுக்கு வேட்டுவைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ருக்ஸ்ன், அரிசோனா, பென்சகோலா, புளோரிடா பகுதிகளிலுள்ள 2000 தொழிலாளர்கள்
இதானால் பாதிக்கப்படுவர். கம்பனி, தனது தொலைத் தொடர்பு சேவைகளை மூடும்போது
தொழில் இழப்பு நேரும். ருக்ஸன், பென்சகோலா தொலைபேசி அழைப்பு மத்திய நிலையங்கள்,
தூர அழைப்புகள் உலக ரீதியில் வாடிக்கையாளர் அழைப்புகளை வழங்குவதை தமது ஒப்பந்தத்தை
கம்பனியுடன் புதுப்பிக்கும் வாய்ப்புகள் இதனால் மூடப்படும்.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எலக்ரோனிக் சங்கிலியான சேர்குயிட் சிட்டி
[Circuit City], எட்டு விநியோக தொடர்பு நிலையங்களை மூடி, ஆயிரம் தொழில்களை
வெட்டித்தள்ள உள்ளது. ஜூலை 25ம் திகதி தனது களஞ்சியங்களிலிருந்து உபகரணங்களை
விற்கப் போவதில்லை என அறிவித்தது. இதன் பங்குகள் 19 சதவீதத்தால் வீழ்ச்சி
கண்டுள்ளன. இரண்டாம் காலாண்டில் சராசரியாக விளங்கிய 43 சதவீதத்திலும்
குறைந்த 32 சதவீதத்தையே எதிர்ப்பார்த்திருப்பினும் 19 சதவீதமாகவே வீழ்ச்சி
கண்டது.
டெல்கோ ரெமி என்ற மோட்டார் உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் 860 தொழிலாளர்களை
அல்லது தொழில் வலுவில் 12 சதவீதத்தை ஒழித்துவிடும் மறு சீரமைப்பு திட்டம்
என்ற பெயரிலான திட்டத்தை முன்வைத்துள்ளது. அமெரிக்கா, கனடா,
பிரித்தானியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இது அமையும். அன்டர்சன்-
இன்டியனாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமானது ஸ்டாடர் மோட்டார், ஓல்டனேட்டர்,
உதிரி கருவிகள், என்ஜின் மறுசீரமைப்பு [Starter motors and alternators and
remanufactures engines] போன்ற மோட்டார் வேலைகளை கையாள்கிறது.
ஜூலை 31ம் திகதி பீட்டர் பில்ட்ஸ் மோட்டார் கம்பனி டிரக் உற்பத்தியாளர் ஒரு
மணித்தியால கணக்கிலான வேலையாட்களின் மூன்றில் ஒரு பகுதியினரை வேலை நீக்கம்
செய்து ஒரு வாரத்திற்குள் 20 சதவீதமான முகாமையாளர்களை நீக்கியுள்ளது. 1150
பேர் கொண்ட மடிசன், டென்னெஸ்ஸி கைத்தொழில் பேட்டையிகளில் வசதி வழங்கும்
துறையில் 60 முகாமையாளரும், 370 தொழிலாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். விற்பனை
6.5 வீதமாக சரிந்ததற்கு, டீசல் விலை உயர்வும் மற்றுமோர் காரணமாகும்.
ஜூலை 27ல் பாதுகாப்பு, விண்வெளி இராட்சத நிறுவனமான லொக்ஹீட் மாட்டீனைச்
சேர்ந்த அதிகாரிகள் 1997ல் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட
விண்கலத்துக்கு சமமான ஒன்றை 2003ம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்காக
நாசாவால் எடுக்கப்பட்டுள்ள முடிவு கம்பனியின் விண்வெளி அமைப்புப் பகுதியில்
வேலை நீக்கங்கள் இடம் பெறும் என்பதைக் குறிக்கின்றது. லொக்ஹீட் மார்டீன்
நிறுவனம் இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஒரு விண்வெளி கலத்தை அமைக்க எதிர்பார்த்து
இருந்தது. இக்கம்பனியின் பங்குகள் (1998ல்) 55டாலரில் இருந்து வியாழக் கிழமை
27.19 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
இயற்கை வாயுவின் அதி உயர்ந்த விலையானது, ஐ.நா.வின் உரக் கைத்தொழிலை
பாதித்து இயந்திரங்கள் மூடல், வேலை நீக்கங்களுக்கு இடமளித்துள்ளது. 63 சதவீத
காஸ் விலை அதிகரிப்பு கைத்தொழிலின் மொத்த உற்பத்தி செலவீனத்தை 70 சதவீதத்திலிருந்து
80-85 சதவீதமளவுக்கு உயர்த்தியுள்ளது. பிளதிவால் ஆர்கன்சஸ் உர தொழிற்சாலையானது
பிரதானமாக பெரிதும் பாதிக்கப்பட்ட 60 தொழிலாளரை வேலை நீக்கி, ஜூன் மாதத்திலிருந்து
மூடப்பட்டுள்ள ஒன்றாகும்.
சிக்காக்கோவில் உள்ள தொழில் வாய்ப்பு நிறுவன அறிக்கையின் பிரகாரம், சலேஞ்சர்,
கிரே அன்ட் கிறிஸ்மஸ் 122 டொட் கொம் கம்பனிகள் [Dot-com companies] ஏறத்தாள
7600 தொழிலாளரை டிசம்பரிலிருந்து வேலை நீக்கியுள்ளன. இருபத்திரண்டு அல்லது
இருபது சதவீதமான இக்கம்பனிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. "எமது கடந்த மாத அறிக்கையின்படி
இயங்கியதற்கான காலகட்டத்திற்கென தகுதியுள்ளதாக குறிப்பிடப்படவை
வீழ்ச்சியுறும் அளவு தீவிரப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளபடி நிகழ்ந்துள்ளன.
சீ.ஏ.ஓ. ஜோன் ஏ சலேஞ்சர் தெரிவித்துள்ளது. 1800க்கு மேற்பட்ட, பாரியளவிலான
தொழில் வெட்டு ஏற்படலாமென இன்டர்நெட் கணிப்பிட்டுள்ளது.
ஜூலை 28 ஸ்போட்ஸ் வெப்சைட் ரைவல்ஸ் கம்பனி [Sports web site Rivals.com] 40
ஊழியரை அல்லது தனது 21 சதவீதமான அலுவலர்களையும் மூன்று உபதலைவர்களும் இலாபத்தை
விரைவில் ஈட்டும் முகமாக தொழில் வெட்டுக்குள்ளாக்குவதாக அறிவித்துள்ளது.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|