World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

LinuxWorld Conference highlights corporate interest in alternative computer operating system

Linux உலக மாநாடானது மாற்றீடான கணனி நெறியாழ்தல் அமைப்பில் கூட்டு நலன்களை துல்லியமாக காட்டுகிறது

By Mike Ingram
18 August 2000

Back to screen version

இந்த வருடம் கலிபோர்னியாவிலுள்ள சன்ஜோசே என்னும் இடத்தில், US இன் பெரும் மென்பொருள் (Software) உற்பத்தி கம்பனியான Microsoft , நீதி மன்றத்தால்-துண்டாடப்பட வேண்டும்- என்ற ஆணைக்கு முகம் கொடுத்ததுடனும், அதற்கு சிலநாட்கள் பின்பாக ஐரோப்பாவில் அதனது பல ஏகபோக நடவடிக்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பல அறிவிப்புகளுக்கிடையில் Linux உலக மாநாடு மற்றும் கண்காட்சியும் நடந்தேறியது.

இந்த மாநாடு தொழில் நுட்ப எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்கள் Microsoft இனது எழுச்சியும் வீழுச்சியும் எந்தளவிற்கு நிலமை Linux நெறியாழ்தல் அமைப்பிற்கு (Linux operating system) இலாபகரமானது என கணிப்பிட ஆர்வமாக இருந்தது அதிசயமானதல்ல. கணனி துறையில் Linux இனதும் ஏனைய வெளிப்படையான (திறந்த) மூல உள்ளடக்க தொழில் நுட்பங்களினதும் (open source technology) அதிகரித்து வரும் நலன்கள் எவ்வளவிற்கு Microsoft இனது சிக்கல்களுடன் இணைந்துள்ளது? என கேள்வியை மாற்றி கேட்பது மிக சரியானதாகவிருக்கும்.

Microsoft இன் ஏகபோகத்திற்கு எதிரான நடவடிக்கையின் மத்திய விடயமாக இருப்பது, மென்பொருள் சந்தையில் இந்த நிறுவனத்தினது ஏகபோகம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஸ்தம்பிதம் அடைய செய்யும் என்பதும், இது எதிர்கால கணனித்துறை வளர்ச்சியின் பாரிய அபிவிருத்திக்கு அமெரிக்காவை தயாரற்ற நிலையில் வைத்திருக்கும் என்னும் US அரசாங்கத்தினது பயமாகும்.

Microsoft வழக்கிற்கு முன்னதாகவே, வெளிப்படையான(திறந்த) மூல உள்ளடக்க தொழில் நுட்பத்தில் (open source technology) அடித்தளமாக கொண்ட Linux அதிகரித்து வரும் வர்த்தக நலனிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது Microsoft Windows, மேலும் மற்றைய தனிநபர்களுக்கு சொந்தமான நெறியாழ்தல் அமைப்பு (operating system) போலல்லாது Linux உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தன்னிச்சையான மென்பொருள் உற்பத்தியாளர்களின் (programmer) முயற்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் ஓர் உற்பத்தி பொருளாகும். இது ஒரு முடிவடைந்த உற்பத்தி பொருளல்ல, அத்துடன் இணையத்தில் (internet) கிடைக்கக்கூடியதாகவிருக்கின்ற உருவாக்கப்பட்ட இதன் மூல உள்ளடக்கத்தை (source code) எவரும் உள்ளீட்டம் (download) செய்து திருத்தியமைக்கலாம். இதற்கு தேவையானது மூல உள்ளடக்கத்தில் இருந்து (source code) உருவாக்கப்படும் எந்தவொரு புதிய பிரயோகங்களும் (new application) இலவசமாக தருவிக்கப்படக்கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த வகையான நெறியாழ்தல் அமைப்பின் (system) அனுகூலமானது செலவற்றதாகவிருக்கின்றது. ஏனெனில் இதன் மூல உள்ளடக்கம் தயாராகவே கிடைக்கின்றதால், புதிதாக தோன்றிவரும் கருவிகளான (new devices) internet-readymobile phones, hand-held computers மற்றும் தொலைகாட்சியினூடாக இணையம் (internet) பாவிப்பதற்கான உபகரணம் (set-top boxes) போன்றவற்றில் வேலைசெய்வதற்கு Linux நெறியாழ்தல் அமைப்பு(Linux operating system) இலகுவாக மாற்றியமைக்க கூடியதாகவுள்ளது. Desktop அல்லது தனிமுறைக்கணனி (PC) இன் மேலான ஆதிக்க நலனை பேணிவரும் Microsoft இப்படியான தொழில்நுட்பங்களை நாச வேலை செய்து வருகின்றது என்பது, US நீதி இலாகாவின் (US justice Departement) முக்கிய விவாதங்களிலொன்றாக இருக்கின்றது.

இந்த உடைப்புக்கான பிரேரிப்பு Linux உடனான கூட்டு நலனில் அதிகரிப்பை உருவாக்கும் என பரந்தளவில் விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. Linux உலக மாநாட்டிலும் அதைச் சூழவும் இருந்து இதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவிப்புக்கள் வெளிவந்துளன.

ஆகஸ்ட்15 கணனி உற்பத்தி நிறுவனமான IBM, Linux விநியோகஸ்தர் Red Hat உடனான கூட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது இரு கம்பனிகளினதும் மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு(programmers) நிதியுதவி வழங்கி IBM இன் சிலபிரயோகங்களுடன், DB2 database software,Lotus Domino குழு திட்ட பிரயோகங்கள் (groupprojects application), Tivoli முகாமைத்துவ மென்பொருள் (Tivoli management software), WebSphere e-business மென்பொருள் மற்றும் Linux இற்கான சிறிய வியாபாரத்திற்கான மென்பொருளின் (small-business software) தொகுப்பு உள்ளடங்கலாக Linux இனுடைய Red Hat வடிவத்தை சேர்த்துக்கொள்வதாகும்.

அதே நாளில், Linux உலக மாநாட்டிற்கு Dell Computer இன் தலைமை அதிகாரி Michael Dell பிரதான உரையை வழங்கினார். அவர்,'' வெளிப்படையான மூல உள்ளடக்கத்தின் கூட்டான (open-source) அபிவிருத்தியின் உருவாக்கம் இணைய (Internet) காலத்தை வெற்றிகரமாக்கியுள்ளது, இது தனிச்சொத்துரிமை வகையை விட மேலானதா விளங்குகின்றது" என குறிப்பிட்டார்.

Dell நிறுவனம் desktop நெறியாழ்தல் அமைப்பாக (operating system) ஆக Linux இனது தகைமையை தாம் பரிசோதித்துபார்க்க வேண்டுமென அறிவித்துள்ளது,மேலும் ஏற்கனவே சேவகன்களில் (Server) Linux உட்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. Dell நிறுவனம் தற்போது Eazel நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. Eazel நிறுவனம் பழைய Macintosh மென்பொருள் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் Linux இலகுவாக பாவிப்பதற்கும் அதனை நவீன நிலமைகளில் பேணுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

Hewlett Packard (HP) இனது சொந்த தயாரிப்பான Unix, HP-UX, Microsoft Windows போன்றே Linux உம் ஒரு "மூலோபாய நெறியாழ்தல் அமைப்பு(strategic operating system)" என்னுமளவிற்கு உயர்துள்ளது என முன்னர் HP அறிவித்திருந்தது. HP பொது முகாமையாளர் Jim Bell , இவரே அண்மையில் வெளிப்படையான மூல உள்ளடக்க Linux நெறியாழ்தலை(OSLO), உருவாக்கியவராவார், இவர் HP-UX உயர்தரமான சேவகன்களில் (servers) பாவிக்கப்படும் (முக்கியமாக database மற்றும் E-வியாபார(e-business) பிரயோகங்கள் போன்றவற்றில் இயங்குகின்றது) அத்துடன் இது நம்பகத்தன்மை வாய்ந்ததும் அதி உயர்வானதுமான தன்மையை வேண்டி நிற்கின்றது எனவும், இப்படியான வலை சேவகன்களில் (Web server) களில் இணைய அடிப்படை வசதிகளை (internet infrastructure) அமைப்பதற்கு Linux பாவிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

Intel இனால் வெளிவிடப்பட்ட புதிய IA-64 chip திட்டமானது Microsoft முகம்கொடுக்கும் ஓர் பிரச்சனையின் அறிகுறியாக காணப்படுகின்றது.இது விரைவில் Itanium என பெயரிடப்படவுள்ளது;1994 இல் Pentium அறிமுகப்படுத்தப்பட்டதிற்கு பின்னர் இதுவே முதலாவது புதிய chip திட்டமாகும். இது அதி உயர் Pentium chip இலும் பார்க்க அதிக வேகத்தையும் பெருமளவிலான நினைவக (memory) பாய்சல் அளவையும் கொண்டுள்ளதென உறுதியளிக்கின்றது. கடந்த காலத்தில் புதிய Chip களில் முன்னேற்றகரமான திட்டங்களைக் பெற்றுக்கொள்வதற்கான ஒரே நிறுவனம் Microsoft மட்டுமே. இப்பொழுது, Intel அதனது திட்டத்தின் மூலப்பிரதிகளைஅதிகளவில் முக்கிய Linux அபிவிருத்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன் மேலும் அவர்களில் சிலபேருடன் நியாயமான போட்டியில் ஈடுபட்டுள்ளது.

Linux இனுடைய மேலதிக அனுகூலம் என்னவெனில், Linux சேவகனாக (servers) வரையறுக்கப்பட்ட கணனிகளிலுள்ள Chip களை பாவிப்பதால் திறமையாக தொழிற்படும். Netcraft இன் பிரகாரத்தின் படி, இது 18 மில்லியனிற்கும் மேற்பட்ட வலைத்தளத்தில் தொழிற்படுகின்ற சேவகனில்(servers) ஆராயப்பட்டுள்ளது. Windows 2000 உம் NT உம் 28.3 வீதமாக இருக்கும்வேளையில் Linux 30 வீதமான வலை சேவகனில்(Web servers) தொழிற்படுகின்றது. Sun இனுடைய Sparc உம் Compaq இனுடைய Alpha போன்றவகையான chips களில் ஏற்கனவே திறமையாக தொழிற்படுவதற்கு Linux பொருத்தமாகவுள்ளதுடன், Windows ஆனது அவை போன்ற chips களில் வேலை செய்வதற்கு ஒரு போதும் திட்டமிட்டிருக்கப்படவில்லை.

இது சேவக(server) சந்தையில் மட்டுமல்ல, இதன் பாரம்பரிய வீட்டு பாவனையிலும், வியாபார கணனியிலுமான (desktop computer) அதிகரிப்பானது Microsoft முகம் கொடுக்கும் அபாயமாகும்.கடந்த காலத்தில் Linux இற்கு desktop சந்தையில் தடையாகவிருந்தது என்னவெனில், அதன் சிக்கலான பதிவுகளும் (installation), வாடிக்கையாளர்களின் நோக்கத்திற்கான மென் பொருள் பிரயோகங்களின் பற்றாக்குறையினால், மற்றும் மென்பொருள்களை உருவமைப்பவர்களுக்கு பாவிப்பதற்கு இலகுவாகவில்லாததும் ஆகும்.

Gnome அமைப்பை ஸ்தாபித்தல் Linux உலகமாநாட்டின் முக்கியமான அறிவிப்பாகவிருந்தது. இந்த அறிவிப்பானது Gnome, Linux இற்கான கூடுதலாக பாவிக்கப்படும் graphics interfaces இற்கு கிடைக்ககூடிய ஒன்றாகும். இதன் முக்கிய போட்டியாளர் ஐரோப்பாவில் உள்ள ஒரு முக்கிய Linux விநியோகஸ்தரான Suse Linux கொண்டுள்ள KDE ஆகும். முக்கிய பங்கு வகிக்கும் Sun Microsystems, VA Linux Systems, Collab.Net,Compaq Computer மற்றும் IBM ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அமைப்பு Gnome ஐ பொதுவானதாக(standard) ஸ்தாபனம் செய்வதை தோற்றுவிக்கிறது.Sun Microsystems 50 மென்பொருள் உற்பத்தியாளர்களை Gnome ஸ்தாபனத்தை நோக்கி ஈடுபடுத்தியுள்ளது. தனது சொந்த நெறியாழ்தல் அமைப்பான (operating system) ஆன solaris இன் user interface இற்கு Gnome இன் எதிர்கால உருவாக்கம் எடுத்துக்கொள்ளப்படுமென கூறுகிறது.

Red Hat, Gnumatic, Nenzai, Eazel and Helix Code போன்ற Gnome அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள கம்பனிகளும் உட்பட Gnome ஸ்தாபன அங்கத்தவர்சபையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது. ஒரு திறந்த மூல உள்ளடக்க மென்பொருளின் முன்னனியான நிறுவனமான The free software foundation உம் மென்பொருள்களை பொதுவானதாக (standard) அபிவிருத்தி செய்யும் Object Management Group உம் இதில் ஒன்றிணைந்து வேலை செய்வதில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது.

திறந்த மூல உள்ளடக்க இயக்கத்தினுள் (open-source movement) சிலர் Linux இனுடைய வர்த்தக நலனால் மென்பொருள் கடத்திச்செல்லப்படலாம் எனவும் புதிய தனியார் உரிமை வடிவங்கள் தோன்றலாம் எனவும் பயப்படுகிறார்கள். இந்த விவகாரம் நியாயமாகவிருக்கிறது. அவர்களுடைய நாட்டம் பாரிய இலாபத்திற்கு, IBM , Dell மற்றும் Compaq போன்றவை திறந்த மூல உள்ளடக்க தொழில்நுட்பத்தை (open-source technologie) தழுவிக்கொண்டுள்ளன. கை தொலைபேசிகள்(Mobile phones) மற்றும் கம்பியில்லா கருவிகள்(wireless devices) போன்றவற்றின் புதிய பாவனைகளுடன் இவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றியுள்ளது. இவற்றின் உற்பத்தியாளர்கள் மென்பொருளை மாற்றியமைப்பதும் அபிவிருத்தி செய்யக்கூடியதுமான மென்பொருளை உற்பத்தி செய்யவேண்டுகின்றனர். ஏனென்றால் இதன் மூலம் மூல உள்ளடக்கத்தினை(source code) அணுகுவதற்கான வழி அவர்களுக்குள்ளது.

இந்த நிறுவனங்களுக்குள் ஏதாவதொன்று தலைமை அந்தஸ்தை பெறுமானால், ''திறந்த தன்மை'' மற்றும் '' பொதுவானது" போன்ற வேண்டுகோள்கள் கைவிடப்பட்டுவிடும். அந்த இடத்தில் புதிய தொழில்நுட்பத்தை சொந்தமாக்குவதற்கான சட்டபிணக்குகள் வரும். வெளிப்படையான உருவாக்கம் (open architecure) வர்த்தக நலனிற்காக கடத்தப்படுவது இதுவல்ல முதற்தடவை. 1970 களில் இத்தொழிற்துறையில் மேலாதிக்கம் செலுத்திய வழமைக்கு மாறான உயர்ந்த தகவல் சார்ந்தகூட்டினூடு தங்களது ஆற்றலை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட Unix மென்பொருளாளர்கள் (unix programmers) , Unix தொடர்பாக AT&T புத்திஜீவி உடமை உரிமைக்கு உரிமை கோரத்தொடங்கியபோது தங்களது பெரும்பாலான வேலைகள் தங்களை விட்டுப்போவதைக்கண்டனர்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம் (WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved