WSWS: செய்திகள் & ஆய்வுகள்:பிரான்ஸ்
Corruption at Paris city hall
பாரீஸ் நகரசபை ஊழல்
By our correspondent
25August 2000
Use
this version to print
கடந்த கிழமை நிகழ்வுகள் பிரெஞ்சு அரசியல் கட்சிகளின்
பிளவுகளையும் ஊழல்களையும் அடிக்கோடிட்டு காட்டின. பாரீஸ்
நகரசபை தேர்தல் மோசடி, சலுகைகள் (favoritism) செய்யும்
மையமாக இருந்து வருவது உண்மையாகும். இது நீண்டகாலமாக
அறியப்பட்டிருந்ததுடன் பாரீஸ் நகரசபை நிர்வாகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒரு விடயமாகும். இன்று இந்த விடயம் அரசியல் வட்டத்தில் உட்பூசல்களுக்கும்
-உட்சண்டைகளையும் பயமுறுத்தல்களையும் செய்வதற்கான
ஒரு விடயமாக வந்துள்ளது.
தேர்தல் மோசடி சம்பவம் மே மாதம்வரை
பத்திரிக்கைகளின் தலையங்கமாக இருந்துவந்தது. முதலாவதாக
பாரீஸ் துணை நகரபிதாவான (mayor) Jacques
Dominati யும் மற்றும் RPR
ä
(குடியரசுக்கான ஐக்கியம்) சேர்ந்த
பொலீஸ் அதிபரான Guy Legris யும் பாரிசின்
3வதுபிரிவில் ல் பொய்யானவாக்காளர் பத்திரங்களை உருவாக்கியதற்காக
பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் பாரீசின்
தற்போதைய நகரபிதாவான (mayor) Jean
Tiberi (RPR) யின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னரே பிரெஞ்சு பத்திரிகைகள் 5 வதுபிரிவில் நடந்த தேர்தல்
மோசடி பற்றி கேள்வி எழுப்பின. Jean Tiberi
நகர
பிதாவாக (mayor) நகரசபைக்கு செல்ல
முதல் அவர் 5வது பிரிவில் தான் அதிகாரத்தில் இருந்தார். முதலில்,
1997ல் தான் இதுபற்றி அரசியல் கிண்டல் ஏடான Le Canard
Enchaîné எழுதியிருந்தது. இதில் நகரபிதாவின் (mayor)
மனைவியான Xavière Tiberi க்்கு
தொடர்பு இருந்ததை எடுத்துக்காட்டியது 5வது பிரிவின் நிர்வாகத்துறையின்
முன்னாள் பொதுச்செயலாளரான Raymond Nentien, Tiberi
க்்கு
நேரடியாக தொடர்புஉண்டு என அறிவித்ததை யூலை 4ல் Le
Canard Enchaîné பத்திரிகை பிரசுரித்ததை
தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஒழுங்கீனத்தால்
சட்டபூர்வ விசாரனண தடைப்பட்டதுடன் 5வது பிரிவின் விசாரணையும்
Xavière Tiberi's யின் வக்கீலின் வேண்டுகோளின்
அடிப்படையில் நிறுத்தப்பட்டது. விசாரணையாளர்கள் பாரிசின்
இன்னும் நான்கு வட்டாரங்களில் தேர்தல் மோசடி நடந்திருக்கலாம்
என கருதுவதுடன் இந்த நிகழ்வு 198 வரை செல்வதுடன் இது
மொத்தமான 20வது வட்டாரங்களில் இன்னும் 6 இடங்களில் நடந்திருக்கலாம்
எனவும் தாம் சந்தேகப்படுவதாக கூறியிருந்தனர்.
பிரெஞ்சு இடதுகளின் இதற்கான எதிர்ப்பு சிடுமூஞ்சித்தனமானதாகவும்
சுயநலமிக்கதாகவும் இருந்தது. பசுமைக் கட்சியின் பாரிஸ்
பொறுப்பாளரான Yves Contassot உம்
மற்றும் பசுமைக் கட்சியினர் சில வலதுசாரி தலைவர்களை விசாரணை
செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இது தாம் சோசலிச கட்சியில்
இருந்து சுதந்திரமானவர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக
இருந்தது.சோசலிசக் கட்சி Tiberi யிடம்
மேற்கொண்டு இது பற்றி வெளிப்படையாக கூறும்படி கேட்பதுடன்
மட்டுப்படுத்திக் கொண்டதோடு மட்டும்மல்லாது பசுமைக்
கட்சியினர் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றி அதிகமாக
பேசியபோது கெட்டவார்த்தைகளால் சத்தமிட்டுக் கத்தினார்கள்.
சோசலிசக் கட்சி இந்த பிரச்சனை சம்பந்தமாக
விவாதிக்க பசுமை/சோசலிச கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள
மறுத்ததுடன் சோசலிசக் கட்சியின் நிதியமைச்சர் Elisabeth
Guigou பசுமைக் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட
விசாரணையின் வேகத்தை குறைத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
சோசலிச கட்சியினது சொந்த வாக்காளர் பட்டியலிலுள்ள
இதே போன்ற ஒழுங்கீனங்கள் காரணத்தினால்தான் இந்தவிவாகாரத்தில்
சோசலிசக் கட்சி உண்மையிலே பின்னடிக்கிறது என பசுமைக் கட்சியில்
சிலர் குறிப்பிடுகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் இந்த ஊழல் விவாகாரம்
பிரெஞ்சு 'இடது' களுக்குள் மோசமான உட்சண்டையை உருவாக்கியுள்ளது.
அவர்களது உள்ளார்ந்த உறவு பிரெஞ் வலதுசாரிகளின் உள்முரண்பாட்டை
போன்றே இருக்கின்றது.
இவ் வலதுசாரிகளிடையேயும் புதிய முரண்பாடுகள்
தோன்றாது விடவில்லை. 1999ல்ன RPR தலைமையில்
இருந்துவிலகிய Philippe Séguin, Tiberi க்கு
எதிரான பலம் வாய்ந்த போட்டியாளர் ஆவார். இவர் மீண்டும்
அதேகட்சியில் இணைந்துள்ளதுடன் 2001 பாரிஸ் நகரபிதாவுக்கான RPR
வேட்பாளர் ஆவார். அவர் பாரிஸ் தேர்தல்
பட்டியல் மாற்றப்படவேண்டும் எனவும் இந்த மோசடிகளில்
சம்பந்தப்படாதவர்களை தேர்தலில் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரம்பரிய பிரெஞ்சு கட்சிகள் இந்த ஊழல்
மோசடியின் முக்கியத்துவத்தை குறைக்கப் பார்த்தனர் அல்லது
தமது எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக மட்டுமே அதனை
பாவித்தனர்.எப்படியிருந்த போதும் எந்தக் கட்சியோ அல்லது
குழுவோ பாரிசின் கடைசி நகரபிதாக்களாக இருந்த Tiberi,
மற்றும் இன்றைய ஜனாதிபதியான ஜாக் சிராக்கின்
மீதோ எந்த ஒரு கடுமையான குற்றச்சாட்டையும் சுமத்தாதுடன்,
பாரிசின் இந் நியாயபூர்வமற்ற வலைப்பின்னலின்(network)
கண்டுபிடிப்பினது தர்க்கவியல் முடிவை விளக்கப்படுத்தவும் தயாராக
இல்லை.
Canard Enchaîné இன் கடைசி
வெளியீடு நிலமைகளை தொடர்ந்து மறைப்பதை கடுமையாக்கியுள்ளது.
கடைசி இரண்டு நகரபிதாக்களும் தெரிந்துகொண்டே பொறுமையாக
இருந்ததுடன் 1986ல் ("left-leaning")
'இடது போக்கு' என்ற நகரசபையின் வெளியீடு (municipal
press) தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்பு
பாரிஸ் நகரபை வெளியீடுகளை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனமான
Sempap நிறுவனத்திற்கு அளித்த சட்டபூர்வமற்ற
சலுகைகளை மறைத்துள்ளனர் என இந்த பத்திரிகை சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன், Sempap நிர்வாகத்தின் தலைவரான
Jacques Brats அவரது நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினரால் வழிநடத்தப்படும் ஒரு தொடர் நிறுவனங்களுக்கு
Sempap இனது 80 வீதமான ஒப்பந்தங்களை
கொடுத்துள்ளதுடன், அவர் அடிக்கடி இந்த ஒப்பந்தங்களுக்கு
சந்தைப் பெறுமதியிலும் பார்க்க இரண்டு அல்லது மூன்று தடவை
செலுத்தியுள்ளார் என Canard Enchaîné அம்பலப்படுத்தியிருந்தது.
நகரசபை விசாரணையாளர்கள் 1990களில் இதை
கண்டுபிடித்ததுடன் இந்த விவகாரம் பகிரங்கமாக அம்பலப்படுத்தல்
'வெடிப்பு' நிறைந்த தன்மையைகொண்டிருக்கும் என அறிக்கையில்
வெளிப்படுத்தியிருந்தனர்.அதன் பின் பாரிஸ் மேயரான சிறாக் Canard
இல் ஆகஸ்ட் 2ல் பிரசுரிக்கப்பட்ட விசாரணையாளர்களுக்கு
அனுப்பிய கடிதத்தில் தாங்கள் செய்த இந்த வேலையின் விளைவுகள்'
பாரிய முக்கியத்துவத்தையுடையது' எனதான் அனுமானிப்பதாக முண்டியடித்துக்கொண்டு
குறிப்பிட்டிருந்தார். எப்படியிருந்தபோதும், 1992 இல்
Canard இந்த சலுகைகள் மற்றும் வெட்கக்கேடான
விலைகள் பற்றி குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை பிரசுரிக்கும் வரை
மாநகரசபை எதையுமே செய்யவில்லை.
Brats அவருக்கு தெரிந்த
நிறுவனங்களுக்கு சாதகமானபல ஒழுங்குகளை செய்த பின்னர் நீதி
விசாரணை மீண்டும் தொடங்கியது. நீதிபதிமற்றும் விசாரணையாளர்கள்
Brats இன் உபாய வழிமுறைகளை உடனடியாக
அறிந்துகொண்டனர். இவர்களின் முழுமுயற்சி அவரை பதவியில் இருந்து
வெளியேற்றும் என பாரிஸ் மாநகர சபை திகில் அடைந்தது. 1996இல்
(Tiberi) ரிப்பேரி உடனடியாக Sempap
நிறுவனத்தை கலைத்துவிட்டதுடன் சிராக்குடனான
சமரசம் பற்றிய முழு அறிக்கைகளையும் வெளியேவிடாமல்
பாதுகாத்துக்கொண்டார்.
''சலுகைகள் அளித்ததுடன் சமூகநிதியை தவறாக
பயன்படுத்தியது, பொதுச் சொத்தை சூறையாடியது, சட்டபூர்வமற்ற
முறையில் பொதுச் சொத்தை சொந்தமாக்கி கொண்டதுடன்
தனது அனுகூலத்திற்காக எடுத்துக்கொண்டது, சட்டத்திற்க்கு
மாறாக இரகசியங்களை பாதுகாத்தது மற்றும் தவறான
நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது'' பற்றி சாத்தியமான
ஒரு விசாரணையை 1997இல் நீதிபதிகள் தொடங்கியபோது அந்த
முழு அறிக்கைகளையும் கையளித்தனர். இந்த வருடம் யூலை 26 மற்றும்
ஆகஸ்ட் 2 இல் Canard Enchaîné பிரசுரித்திருந்த
கட்டுரையில் இந்த விடயம் பற்றி அம்பலப்படுத்தியிருந்ததுடன்
சிராக்கினது செயலற்ற தன்மையை கண்டித்திருந்தது.
இந்த விவகாரத்தில் இருந்து இன்னொரு கேள்வி
ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்தது. அது1996 ல் Sempap
கலைக்கப்பட்டபோது விசாரணையாளர்களின் அறிக்கைகளும்
அழிக்கப்படவேண்டும் என்ற அவரது அமைச்சரவை தலைவரின்
ஆலோசனையை ஏன் அவர் கடைப்பிடிக்கவில்லை? என்பதாகும்.
இதற்கான பதில் முழுதுமாக தெளிவாக இல்லை,
ஆனால் அவரது சொந்த 5வது வட்டாரதில் விசாரணைகள் ஏதும்
நடத்தப்படும் பட்சத்தில் தேவையெனில் அதை சிறாக்கிற்கு இதில்
தொடர்பு இருப்பதாகக் காட்டி சிராக்கை சிக்கலுக்குள்ளாக்கி
இவ் விசாரணையை அமைதிப்படுத்த அந்த அறிக்கைளை டிப்பரி வைத்திருந்தார்
என பலர் கருதுகிறார்கள்.இது முற்றுமுழுதாக ஒரு கேலிக்கூத்தான
அமைப்பாகும்; அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டிருப்பது,
ஒவ்வொருவரும் சமூகத்திற்கு தெரியாது இழிவான இரகசியங்களை
ஒழித்துவைத்திருப்பதுடன் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது 'சகாக்களை'
அம்பலப்பபடுத்தும் சான்றுகளை வைத்துள்ளார்கள்.
எப்படியிருந்தபோதும் பிரெஞ்சு அரசியல் வாதிகள்
எவரும் ஊழல் மற்றும் கேலிக்கூத்தான இந்த விடயத்தில் ஏகபோகமான
முறையில் மனம் ஒத்து இருக்க முடியாது. Le Canard
Enchaîné பத்திரிகை Sempap
ஊழல் விவகாரம் பற்றிய சான்றுகளை வெளியிட்டதுடன், தேர்தல்
ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்துவதிலும் முக்கிய பாத்திரத்தை
வகித்தது. இதை விட வழங்களை கொண்ட சில குறிப்பிடும் படியான
நாளாந்த பத்திரிக்கைகளான LeMonde, Le
Figaro
மற்றும் Libération போன்றவை
பிரெஞ்சு அரசியலின் ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்துவதில்
எதையுமே செய்யவில்லை.
அவர்கள் Canard இனது
விசாரணைகளுக்கு சாட்சியங்களை அளித்து அவர்களுடன் இணைந்து
கொள்ளவோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யவோ முயற்சிக்கவில்லை
மாறாக அந்த விவகாரத்தை சாதரணமாக தமது பத்திரிக்கையில்
குறிப்பிட்டிருந்தனர். இந்த அனுபவங்களில் இருந்து பொதுமக்கள்
பிரெஞ்சின் பெரிய பத்திரிக்கைகள் பற்றிய ஒரு கணிப்பீட்டை எடுப்பது
அவசியமாகும்.நாங்கள் ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயககட்சியின்
தலைவரான Helmut Kohl இன் அரசியல்
நிதி ஊழல் விவகாரத்தினை ஒத்த பொருளாதார சலுகையளிப்புவாதம்,
பத்திரிக்கைகளின் மூடிமறைப்பு மற்றும் அரசியல் மோசடி நிறைந்த
ஒரு அமைப்பின் பிரெஞ்சு பிரதியைகாண்கின்றோம்.
யுத்தத்திற்கு பிந்திய ஐரோப்பாவின் மத்திய, வலதுசாரி
கட்சிகள் அனைத்தும் துண்டுகளாக உடைந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் வலது அல்லது இடதை சார்ந்த எந்தவொரு பாரம்பரிய
கட்சிகளும் மதிப்பிழந்த கட்சிகளை பதிலீடு செய்ய இலாக்கற்றவைகளாக
இருப்பதுடன் ஏதொவொரு வகையில் அனைத்துமே ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளன.
இன்று தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கும் மற்றும் உணர்மை
பற்றிய கேள்விகளே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
|