World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

What does Milosevic's downfall portend?

மிலோசிவிக்கின் வீழ்ச்சி எதனை முன்னறிவிக்கின்றது?

By Chris Marsden
7 October 2000

Back to screen version

மேற்குலகின் அரசியல் தொலைத்தொடர்பு சாதனங்கள் யூகோஸ்லாவியாவில் மிலோசிவிக்கின் வீழ்ச்சியை "அக்டோபர் 5 புரட்சி" என அறிவித்துள்ளன. ஆனால் பிற்போக்குத்தனமும், ஊழல்மிக்க அரசியல் சூழ்நிலைமிக்க விமர்சனமற்ற பார்வையுமே வியாழக்கிழமை நிகழ்வினை "கம்யூனிசத்தின் வீழ்ச்சி" எனவும் ஜனநாயகத்தினை நோக்கிய மாற்றம் என உலகம் முழுவதும் புகழமுடியும்.

மிலோசிவிக்கிற்கு எதிரான இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதன் தலைமையினதும், முன்னோக்கினதும் அடிப்படையில் சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கம் அமெரிக்க தயாரிப்பு என அடையாளப்படுத்தப்படகூடியது. மிலோசிவிக்கின் வலதுசாரி தேசியவாத அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு வருடத்தின் முன்னர் சேர்பிய மக்கள் மீது திட்டமிட்டவாறு குண்டுவீச்சினை நடாத்திய அதே ஏகாத்தியபத்திய சக்திகளால் நிதியுதவி செய்யப்பட்டு, ஆதரவழிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டது. அவர்களது நோக்கம் பால்கன் மீது முழுதான கட்டுப்பாட்டை உருவாக்கிக்கொள்வதும், யூகோஸ்லாவியாவின் குழப்பத்தை தமது அரசியல் நோக்கமான வர்த்தக, மூலோபாய நலன்களுக்கு தடையாக நோக்குவதுமாகும்.

மிலோசிவிக்கின் வீழ்ச்சி ஆச்சரியப்படத்தக்க ஒன்றோ அல்லது விசனப்படக்கூடியதோ ஒன்றல்ல. அவர் அறியாமலே மேற்கின் சதிக்கு ஆழாகியது அவர் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளி என கூறுவதை நியாயப்படுத்தப் போவதில்லை. சோவியத் யூனியனில் அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முன்னோக்கையும், நடைமுறையையும் அதிகளவில் எடுத்துக்கொண்ட டிட்டோ அதிகாரத்துவத்தில் இருந்து தோன்றிய முதலாளித்துவ, தேசியவாத போக்காகவே அவரது அரசாங்கம் தோன்றியது.

பத்துவருடங்களுக்கு மேலாக மிலோசிவிக் மேற்கு சக்திகளின் கூட்டாளியாக இருந்ததுடன், பொஸ்னிய யுத்தத்தில் முடிந்த 1995 இல் டேற்ரன் உடன்படிக்கையின் போது வாஷிங்டன் மேற்கினால் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முக்கிய பங்கை மிலோசிவிக்கிடம் வழங்கியிருந்தது. பின்னர் எவ்வாறிருந்தபோதும் அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் யூகோஸ்லாவிய குடியரசின் உடைவுடன் பின்னர் தோன்றிய பால்கனை பொருளாதார காலனித்துவ மயமாக்கலுக்கு சேர்பியாவை உடைப்பது தேவை என முடிவெடுத்தன. இதன்படி மிலோசிவிக் உலக அரங்கில் இறுதியான பேயாக காட்டப்பட்டதுடன், யூகோஸ்லாவியா ஈராக்கிற்கு சமமான ஐரோப்பாவின் "மோசமான அரசு" என பிரசாரம் செய்யப்பட்டது.

மிலோசிவிக்கின் அரசுக்கும் பிரன்ஜோ ருஜ்மனின் குரோஷியாவிற்கும், மிலான் குக்கானின் சுலோவேனியாவிற்க்கும், அலியா இஸ்பெற்கோவிற்கின் பொஸ்னியாவிற்கும் கொள்கை ரீதியில் எவ்வித வித்தியாசமும் இல்லாததுடன், இவர்கள் மீளகட்டியமைக்கப்பட முடியாத கம்யூனிச சேர்பியாவின் தாக்குதலுக்கு எதிரான "இளம் ஜனநாயகத்தின்" பாதுகாவலர் என புகழப்பட்டனர்.

இன்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் யூகோஸ்லாவியாவின் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து யூகோஸ்லாவியாவின் பிரச்சனைகளுக்கு எல்லாம் மிலோசிவிக்கை காரணமாக காட்டுகின்றனர். மிலோசிவிக்கின் பங்கு இதில் குறைந்தளவு இல்லாத போதும் யூகோஸ்லாவியாவை உடைத்ததிலும், பொஸ்னிய யுத்தத்திற்கும் அண்மைய கொசோவோ யுத்தத்திற்கும் காரணமான இன, குழு முரண்பாடுகளையும் தூண்டிவிட்டதிலும் மேற்கு நாடுகள் முக்கிய பங்கு வகித்தன. யூகோஸ்லாவிய மக்களின் பிரச்சனைக்கு காரணம் நேட்டோ அதன் அடிக்கட்டுமானத்தினை குண்டு வீசு அழித்ததும், அதனை தொடர்ந்த பல வருட பொருளாதார தடையுமாகும்.

யூகோஸ்லாவிய மக்களுக்கு உண்மையான ஜனநாயகமும், சமூக நீதியும் யூகோஸ்லாவியாவை பொருளாதார அழிவிற்கும் இன மோதல்களுக்கும் காரணமான இதே ஏகாதிபத்திய நாடுகளின் பாதுகாப்பின் கீழ் சாத்தியமாகும் என்பதை உண்மையான, விமர்சன ரீதியாக நோக்கும் ஒருவரால் நம்பமுடியாது. யூகோஸ்லாவிய நிகழ்வுகளை "கம்யூனிச கொடிய ஆட்சிக்கு" எதிரான "மக்கள் புரட்சியின்" தொடர்ச்சியின் இறுதியான அத்தியாயம் என விபரிப்பது மிலோசிவிக்கின் காலத்தின் பின்னர் மக்களுக்கு என்ன காத்திருக்கின்றது என்பதை மறைமுகமாக காட்டுகின்றது.

பெல்கிராட்டின் பாராளுமன்ற கட்டிடம் வியாழக்கிழமை தாக்கப்பட்டதை மேற்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் பேர்லின் மதிலின் வீழ்ச்சியுடனும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடனும், ருமேனியாவின் செசஸ்கோவின் வீழ்ச்சியுடனும் ஒப்பிட்டதுடன் ருமேனிய நண்பருக்கு நிகழ்ந்த இரத்தம் தோய்ந்த முடிவு மிலோசிவிக்கிற்கு நிகழலாம் எனவும் ஊகம் தெரிவித்தன. உண்மையில் இவ்வகையான எடுத்துக்காட்டு அவர்களின் ஸ்ராலினிச சர்வாதிகாரங்கள் "கம்யூனிசத்தை" உள்ளடக்கி இருப்பது எனப்படும் பிழையான தத்துவார்த்தத்துடன் இணைந்துள்ளது. ஆனால் இவ்வரலாற்று திரிபுபடுத்தலை கவனத்திற்கு எடுக்காவிட்டாலும், பத்து வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்த முன்னைய "ஜனநாயக புரட்சிகள்" எதனை கொண்டுவந்துள்ளன என்ற கேள்வி எஞ்சியுள்ளது.

1980 களின் இறுதியில் வெறுப்பிற்குரிய பொலிஸ் அரசுகளின் வீழ்ச்சி பல பத்து வருடங்களாக உண்மையான மார்க்சிசம், ஸ்ராலினிசத்தால் ஒடுக்கப்பட்டதன் விளைவான தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்த அரசியல் குழப்ப நிலைமை கூர்மையடைந்திருந்த நிலைமையில் கீழ் நிகழ்ந்தது. இது முன்னைய ஆழும் தட்டின் பிரிவினரும், குட்டிமுதலாளித்துவ புத்திஜீவி பிரிவினரும் புதிதாக உருவாகிய அரசுகளின் தலைமையை எடுத்துக்கொண்டதன் ஊடாக மேற்கு சக்திகளுக்கு இந்நிகழ்வுகளின் வெளிப்பாட்டின் மீது கட்டளையிட கூடியதாக இருந்தது.

கிழக்கு ஜரோப்பாவிலும் சோவியத் யூனியனினுள்ளும் "மக்கள் அதிகாரம்" சர்வதேச நாணய நிதியத்திற்கும், உலக வங்கிக்கும், சர்வதேச நிதி மூலதனத்திற்குமான பாதையை திறந்து விட்டது. வாக்குறுதி வழங்கப்பட்ட ஜனநாயகத்தின் புத்துயிரளிப்பும் பொருளாதார செழிப்பும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. மாறாக தொழிலாள வர்க்கம் கிரிமினல் அதிகார அமைப்பையும், யுத்தத்தையும், இது இல்லாத நிலைமையில் வாழ்க்கைத் தரத்தில் எதிர்பாராத பாரிய வீழ்ச்சியையுமே பெற்றுக்கொண்டது.

கோர்பச்சேவ், ஜெல்ட்சின், புட்டினின் கீழ் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் நிலைமையை கவனித்தால், பொருளாதார உற்பத்தி 50%க்கும் 60%க்கும் இடையில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளதுடன், தீவிரமாக பரவும் நோய்களாலும், சத்துணவு இல்லாததாலும், ஏனைய சமூக நோய்களாலும் 2050ம் ஆண்டளவில் சனத்தொகை 1/3 பாகத்தால் வீழ்ச்சியடையும்.

புதிய "ஜனநாயக நாடுகளிலும்" இதே மாதிரியான பயங்கர நிலைமையை காணக்கூடியதாக உள்ளது. சமுதாயத்தில் ஒரு கையளவிலானவர்கள் அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதன் மூலம் நம்பமுடியாதளவு செல்வந்தராகியுள்ளதுடன், மில்லியன் மக்கள் வறுமையுள் உழலவிடப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் பலம்வாய்ந்த பொருளாதாரத்தின் பகுதியான முன்னாள் கிழக்கு ஜேர்மனி குறைந்த சம்பளத்தாலும், பாரிய வேலையின்மையாலும், சமூக இழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வோயிஸ்லாவ் கொஸ்ருனிகாவிடமிருந்தும் [Voyislav Kostunica] அவரது கூட்டிடமிருந்தும் இதை விட வேறெதெயும் எதிர்பார்க்க முடியாது. யூகோஸ்லாவிய மக்களின் எதிர்காலம் தொடர்பாக கவனமுள்ள எவரும் முன்னைய பழமொழியான "வாத்தியக்காரனுக்கு பணம் கொடுப்பவர் வாத்திய இசையை வரவழைக்கிறார்" என்பதை ஞாபகபடுத்தாமல் இருக்கமுடியாது. 18 கட்சி கூட்டின் வெற்றிக்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 100மில்லியன்$ இற்கு மேல் உதவியளித்துள்ளன. இதற்கு பிரதி உபகாரமாக போலந்தில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்ட "அதிர்ச்சி வைத்திய" முறை அவர்களின் பொருளாதார திட்டமாக கொள்ள செய்யப்பட்டுள்ளதுடன், இது கிழக்கு ஐராப்பாவில் பாரிய நாசத்தை உருவாக்கியுள்ளது.

கொஸ்ருனிகாவின் அரசாங்கம் யூகோஸ்லாவியாவை உடனடியாக கிழக்கு ஐரோப்பிய பாதுகாப்பு உடன்படிக்கையில் இணைத்துக்கொள்ள முயல்வதுடன், பாரிய பூகோள நிறுவனங்களின் பொருளாதார உட்புகுதலுக்கு நாட்டை முற்றாக திறந்து விடுவதாக உத்தரவாதமளித்து சர்வதேச நாணய நிதியத்திலும், உலக வங்கியிலும் அங்கத்துவத்துத்திற்கும் விண்ணப்பித்துள்ளது.

இதை பின்பற்றுவதற்கான திட்டமாக சேர்பிய ஜனநாயக எதிர்ப்பியக்கம் தனது வேலைத்திட்டத்தில் "தீவிர பொருளாதார சீர்திருத்தம்", "சந்தையுடன் இணைதல்" போன்றவற்றையும், வரி விகிதங்களில் வெட்டு, "நிழல் பொருளாதாரத்தை" சட்டபூர்வமாக்குதல், சமூக செலவினங்கள் மற்றும் இராணுவ செலவினங்களில் வெட்டுதல் மூலம் அரசு செலவீனத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.மற்றும் சகல ஏற்றுமதி, இறக்குமதி கோட்டாக்களையும் இரத்துச்செய்துள்ளது.

யூகோஸ்லாவிய நாணயம் நிலையற்றதாவதுடன், பாரிய மதிப்பிறக்கம் செய்யப்படவுமுள்ளது. ஜேர்மன் மார்க் டினாராவிற்கு பதிலாக உள்ளூர் பாவனைக்காக சட்டபூர்வமாக்கப்படவுள்ளது. DOS என்ற வேலைத்திட்டம் "வெளிநாட்டு வங்கிகளின் சுதந்திர தலையீட்டுக்கு" வழிவகுத்துள்ளது.

அரசுடைமையான நிறுவனங்கள் "கட்டாய தனியார்மயமாக்கப்படுவதுடன்" வெளிநாட்டு நேரடி முதலீட்டை பாதுகாக்க முக்கியமாக அரசு நிறுவனங்கள் நேரடி விற்பனைக்குள்ளாக்கப்படவுள்ளது. சோவியத் யூனியனிலும், ஏனைய கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச நாடுகளைப் போன்று பாரியளவு கைத்தொழில்கள் தவிர்க்கமுடியாதபடி இல்லாதொழிக்கப்படும். பொருட்கள் மீதான விலைக்கட்டுப்பாடு அகற்றப்படவுள்ளது. DOS வேலைத்திட்டத்தின் வார்த்தைகளில் "தற்போது கட்டுப்பாட்டு விலை மூலம் வித்தியாசமான மக்கள் பிரிவினர் தேவையற்ற முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிலோசிவிக்கின் வீழ்ச்சி மூலம் பால்கனை கட்டுப்படுத்தும் வித்தியாசமான தேசியவாத குழுக்களிடையே சமாதானமான உறவுகளுக்கான புதிய காலகட்டம் ஒன்று உருவாகும் என கருதுவதற்கு எவ்வித காரணமுமில்லை. 20ம் நூற்றாண்டின் கூடுதலான காலகட்டத்தில் இப்பிரதேசம் பாரிய ஏகாதிபத்திய சக்திகளின் வெடிப்புமிக்க மோதல்களுக்கான மூல ஊற்றாக இருந்தது. மேற்கின் கைகளில் யூகோசிலாவிய கூட்டமைப்பின் இறுதி கலைப்பானது பால்க்கன் பிரதேசத்திலும், நில எண்ணைவளம் மிக்க கிழக்கு பகுதிகளிலும் ஆதிக்கத்திற்க்கும், மலிந்த கூலிக்கும், மூலப்பொருள்களுக்குமான அமெரிக்காவிற்க்கும் அதனது ஐரோப்பிய போட்டியாளருக்கும் இடையேயான போட்டியை அதிகளிக்கவே செய்யும்.

மேற்கினால் புதிதாக "ஜனநாயகவாதி" என முடிசூடப்பட்ட கொஸ்ருனிகா ஏகாதிபத்திய சக்திகளின் அரசியலுக்கும், மேற்கு தொலைத்தொடர்பு சாதனங்களில் பரவியிருக்கும் சிடுமூஞ்சித்தனத்திற்கான அறிவுரைமிக்க உதாரணத்தை வழங்குகின்றது. பொஸ்னிய சேர்பிய தலைவரான றடோவான் கராசிக் [இவரும் மிலோசிவிக்கினை போல் ஹக் யுத்த நீதிமன்றத்தின் முன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்] இன் முன்னாள் நண்பரான இவர் ஒரு கடும் சேர்பிய தேசிய வாதியாகும். இவரது அரசியல் உருவமைப்பு ஈராக்கின் சதாம் ஹூசெயின், பனாமாவின் நொரேகாவை போன்றவர்களில் பார்த்தது போன்ற அரசியலில் நேற்றைய கூட்டாளி திடீரென இன்றைய எதிரியாகலாம், இன்றைய எதிரி நாளைய நண்பலாகலாம் என்ற அரசியல் உண்மையை தெளிவுபடுத்துகின்றது. இத் தலைவர்கள் "ஐனநாயகவாதியாகவோ" அல்லது, "கொடுங்கோலனாகவோ" இருப்பது என்பது வாஷிங்டனின் வெளிநாட்டு கொள்கையின் தேவையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

இதுவரை கொஸ்ருனிகா அமெரிக்காவிலிருந்தும், வாஷிங்டனின் ஐரோப்பிய எதிரிகளில் இருந்தும் விலகி நிற்பதாக காட்ட முயல்கின்றார். இதற்கான காரணம் எதிர்க்கட்சிகளுள் ஒரு பிரிவினர் ஏற்கெனவே அமெரிக்காவிடமிருந்து கைக்கூலியாகியுள்ளதன் முரண்பாடுகளாகும். இது ஏகாதிபத்திய சதிகளுக்கும், அரசியல் குழப்பநிலைக்குமான வழமான நிலத்தை வழங்குவதற்கான ஒரு காரணமுமாகும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved