World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Image and reality in Sydney's Olympic opening ceremony

சிட்னி ஒலிம்பிக் தொடக்க விழாவின் பிரதிமையும் ஜதார்த்தமும்

By Linda Tenenbaum
22 September 2000

Use this version to print

கடந்த வெள்ளியன்று நடந்த சிட்னி ஒலிம்பிக் 2000 விளையாட்டுகள் ஆரம்ப கொண்டாட்டம் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிசந்தோசமான பாராட்டுதலும் அத்துடன் கசப்பூட்டும் குற்றச்சாட்டுதலுமான இரண்டு தீவிர பிரிவுகளுக்கிடையேயான மாறிமாறி குற்றம்சாட்டுதல் பிரதிபலித்தன. நாவல், ஓவியம், பாட்டு, நடனம், நாடகம் ஒவ்வொன்றையும் கணக்கில் எடுக்கும்போது -இவ் நிகழ்ச்சி சில சமயம் அவுஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் முக்கியமான கலைத்திறமைசெயல் என நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் பொப் கார் [Bob Carr] அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கூறினார். இதேமாதிரியான கருத்துக்களை மெல்போர்ன் ஏஜ் [Melbourne's Age] ஆசிரியர் தலையங்கம் இந்தக் கொண்டாட்டம் "அவுஸ்ரேலியா செய்துவிட்டது....பெருமை". இது"ஓர் வெற்றி", அவுஸ்ரேலியா இருந்து வந்ததும் தற்போது இருப்பதும் போன்ற "ஓர்" வர்ணங்கள் நிறைந்த காட்சியென குரல் கொடுத்ததது.

ஆர்வம் ஊட்டுபவர்களை ஏளனம் செய்யும்வகையில் அவுஸ்ரேலிய தேசிய காலரியில் அவுஸ்ரேலிய கலைகளுக்கு பொறுப்பாக கன்பராவில் இருக்கும் யோன் மக்டொனால்ஸ், திங்கள் அவுஸ்ரேலியன் என்ற பத்திரிகையில் "இது ஆரம்பத்திலிருந்து முடிவுவரை ஓர் வீண் பகட்டானது என" விபரித்தார்.

அவர் மேலும் "வீண் பகட்டானது பந்தயம் கட்டுவதிலிருந்தும் பாசாங்கிலிருந்தும் நாணயம் வரை செல்கின்றது" எனவும் வீண் பகட்டானது பாரிய கலைகளுடன் இணைந்த உணர்வுகளை எடுத்துக்கொண்டதுடன், சாதாரண சிநேகித பூர்வமான பாவனைகளுடன் கூட்டாக இணைத்துக் கொண்டதுடன், பிரச்சனைக்குரியதை அல்லது சிக்கலானவற்றை அகற்றிவிட்டது" எனவும் கூறினார்.

இருபக்க எதிர்ப்புகளும் கவனத்தை ஈர்ந்தது. இரண்டும் அதனதன் வழியில், 1980 இதனுடைய உண்மையான தன்மைகளுடன் உலகத்திற்கு ஆச்சரியப்படக்கூடிய வகையில் மொஸ்கோவில் தொடங்கியதிலிருந்து, 1984 இல் லொஸ் ஏன்ஜல்சில் இல் விளையாட்டுக்கள் ஓர் வியாபார ஏற்பாடாக உருவாகிவிட்டதையும், நடந்த ஒலிம்பிக் திறப்பு விழாவுடைய முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன் ஓர் அபூர்வமான சம்பவம், இந்த விழா நாடகமும் இல்லை, சங்கீதகச்சேரியும் இல்லை; விளையாட்டோ, இராணுவ மகா வேடிக்கையோ அல்ல: சர்க்கஸ் மாதிரியோ அல்லது அணிவகுப்போ அல்ல, ஆனால் இவற்றையெல்லாம் சேர்ந்த ஓர் கலவை ஆகும். அதன் முக்கியபணி விருந்தளிக்கும் நாட்டை புகழ் படுத்துவதற்காக/ விற்பதற்காக குறிப்பான நிகழ்ச்சி: ஓர் சில குறுகிய மணித்தியாலங்களில், என்ன மாதிரியை சர்வதேச பாவனையாளர்களுக்கும் , உள்நாட்டு பாவனையாளர்களுக்கும் வழங்கலாம் என்பதாகும்.

"கலை" என்று சொல்வதாயின் அது பிழையாகும். அது எவ்வளவு நன்றாக நடத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும், நான்கு மணித்தியாலமாக "கலை" என குறிப்பிட்டபோதும் இதனை ஒருவர் நியாயப்படுத்தக்கூடிய வகையில் விளம்பரம் என விபரிக்கலாம்.

ரிக் பேர்ச்சின் கருத்தின் படி இந்த விழாவிற்கென கிட்டத்தட்ட 50 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்னியின் வழங்களை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு வாழ்க்கையில் ஓர் முறை கிடைக்கும் சந்தர்ப்பமென இந்த விளையாட்டுகளை விளம்பரத்தின் மிகத் திறமை வாய்ந்த செயலாக நியூசவுத் வேல்ஸ் முதல்வருக்கு இருந்தது. மற்றய அவுஸ்ராலிய பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் போல Bob Carr நாட்டின் "பழைய பொருளாதாரம்" என்ற கருத்திலிருந்து வெளிவருவதற்கானதும், அத்துடன் சர்வதேச முதலீட்டை கவர்வதற்குமான முயற்சியாக இருந்தது. அவுஸ்ரேலியா ஒரு அறிவுமிக்க, சக்திவாய்ந்த, தொழில்நுட்ப வழங்களை கொண்ட, பல்-கலாச்சார நாடு என்ற இந்த தகவல்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக, பூர்வீக குடிகளுடன் "சமாதானத்தை" ஏற்படுத்தியுள்ள தகவல்களை தெளிவுபடுத்த வேண்டியுமிருந்தது.

இரண்டாவதாக குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது, மத்திய அரசாங்கம் பூர்வீக குடிகளை பராமரிக்கும் முறையில் கெட்ட பெயர் எடுத்ததின் பிரதிபலிப்பு சம்பந்தமாக ஆளும் வட்டங்களிடையே ஓர் நிம்மதியற்ற நிலை வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. இது அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு பிரச்சனைகளும் சர்வதேச ரீதியில் விமர்சனத்தை கவரத் தொடங்கியுள்ளது.

இந்த விழா உள்ளதை அப்படியே வழங்கியுள்ளது. இது பூர்வீக குடிகளின் கலாச்சாரம், அவுஸ்ரேலிய நில அமைப்பு, நாட்டின் கிராமிய பாரம்பரியம் போன்றவற்றிற்கு மரியாதை செலுத்தியுள்ளது. இது நாட்டினுடைய கைத்திறமையும் தொழில் நுட்பத்தின் 20ம் நூற்றான்டின் வளர்ச்சியையும், நகரங்களையும் மக்களும் அதை எப்படி கட்டினார்கள் எனவும் அத்துடன் நாட்டின் குடியேறியமக்களையும் சேர்த்து கொண்டாடியது. இது மிகவும் சுய உணர்வுடன் வெளிப்படையாகவே போர்க்குணாம்சம் கொண்ட தேசியவாதத்தில் இருந்து திசை திரும்பியுள்ளது. உத்தியோகபூர்வ அவசியமாக திறப்புவிழாக்களில் வால்சிங் மலித்தா [ஓர் உத்தியோகபூர்வமற்ற தேசிய கீதம்] ஜாஸ்- சங்கீதமுறையில் உடன் இணைந்து ஆரம்பித்து, ஜேம்ஸ் மொசன்னின் கூர்மையான ஊதுகுழல் இசையுடன் தொடங்கியது. இந்த விழாவின் தலையங்கமானது "சகலதையும் உள்ளடக்குதல்" "ஒருமைப் படுத்துதல்" ஒற்றுமை அத்துடன் நம்பிக்கை என்பனவாகும்

இது அரசியல்வாதிகள், வியாபார அதிகாரிகள், செய்தி விமர்சகர்கள் மற்றும் அதே மாதிரியானவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலாக நிறைவுசெய்துள்ளது.

அதே நேரம், எல்லா அதி வெற்றிகரமான விளம்பரங்கள் போல, இது மக்களின் பரந்த தட்டினரிடையே எதிரொலியை உருவாக்கியிள்ளது. கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட கங்காரு, குவாலகரடிகள், கடல் விளையாட்டில் ஈடுபடுவோரும், புகழ் பெற்றோரும் இங்கே நேரில்வரத்தை தவறிவிட்டனர். மாறாக இவ்விழா ஆயிரக்கணக்கான சாதாரண இளம் மக்களாலும், உண்மையான கலைத்தன்மையாலும் உயிரூட்டப்பட்டிருந்தது.

பாசிலோனாவிலும் அட்லான்டாவிலும் திறப்பு விழாக்களை ஒழுங்கு செய்திருந்த Birch இன் தலைமையில் நடனக்காரரும், நாட்டியக்காரருமான David Atkins உள்ளடங்கலாக, Genesis இன் உலக பயணத்தை ஒழுங்கமைத்திருந்த கலைத்துறை தயாரிப்பாளரான MorrisLyda, தொழில்நுட்ப தயாரிப்பாளர்களான Phil Collins, Pink Floyd, David Bowie ஆகியோரை உள்ளடக்கிய கனகாத்திரமான குழு இந்நிகழ்ச்சியையும் ஒழுங்கு செய்திருந்தது. Morris Lyda நீர் கொதிக்கும், வாயு தொழில்நுட்பத்தினையும், தந்திர, திடீர் காட்சிகளுக்கும், விசேட வெளிப்பாடுகளுக்கும், விதம்விதமான உடைகளுக்கும் பொறுப்பாக இருந்தார். 24 பேர்களை கொண்ட நாட்டிய கலைத்துறை தயாரிப்பாளர்களும், வடிவமைப்பாளர்களும் ஒவ்வொரு தயாரிப்பின் பாகங்களுக்கும் பொறுப்பாகவிருந்ததுடன், 3.3 மில்லியன் சக்திவாய்ந்த வித்தியாசமான ஒளியமைப்பினை தயாரிக்க 4.600பேர் நவீன கருவிகளுடன் கலந்து கொண்டனர். 12.500 இற்கு மேற்பட்ட நடனகாரர்களும், நெருப்பு விளையாட்டுக்காரர்கள் உட்பட 121 குதிரைக்காரர்களும், 20 வித்தியாசமான நாடுகளை சேர்ந்த 2000 பலம் வாய்ந்த வாத்திய இசைக்காரர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பகுதியை ஒழுங்கமைத்திருந்த நாட்டியக்காரரான Meryl Tankard ஆல் முக்கிய நாட்டியகாரரான [சிறிய வெண்ணிற முடிகளையுடைய பெண்] திடீரென 30 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்பட்டு, கண்காணமுடியாத சேணத்தினால் கீழ், மேல் நோக்கி பறந்து திரிய விடப்பட்டிருந்தார். விளையாட்டு மைதானம் முப்பரிமாண பிரதேசமாக மாற்றப்பட்டிருந்து, 110.000 பார்வையாளர்களும் நீல நிற கடலால் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர். கவர்ச்சிகரமான கடல்காட்சி உருவாக்கம் தரையிலிந்து 45 மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது.

Djakapurra Munyarryan என்ற ஆதிவாசி பிரபல்யமான பாடகர் ஆதிவாசிகளின் பிரிவை தலைமை தாங்கியிருந்தார். இது சாதாரணமான காட்சியல்ல மாறாக உத்தியோகபூர்வ தேவையை ஒட்டியதாகும். Stephen Page இனால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நியூ சவுத் வேல்சிலிருந்தும், வட அவுஸ்திரேலியாவின் ஆர்ன்கெம் இலிருந்தும், ரொரஸ் ஸ்ரெய்ட் இனை சேர்ந்த 1150 ஆதிவாசி குழுக்களினதும் மலைவாசிகளினதும் நிகழ்ச்சிகள் மிகவும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியாக இருந்தது.

இந் நிகழ்ச்சி மனதுக்கிசைவான, இளம் உணர்வுமிக்க, அழகான, கண்ணிற்கு நிறைந்த காட்சியாகும்.

உலோக தகடுகள் மீதான Nigel Triffit's இன் zanytap நடனம் உள்ளூர் நடனக்காரரான நூற்றுக்கணக்கான இளைஞர்களால் செய்யப்பட்டமை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரியாதையாகும்.

இறுதியாக ஒலிம்பிக் விளக்கினை ஏற்றியமை இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்தது. பாசிலோனாவில் விளக்கு முகமது அலியால் ஏற்றப்பட்டதையும் விட மேலாகிவிட்டது. ஆதிவாசி வீராங்கணையும், தற்போதய 400 மீட்டர் ஓட்ட உலக வீரருமான Cathy Freeman விளக்கினை ஏந்தியவாறு நீர்த்தடாகத்தில் ஏறி நிற்கையில் அவரின் முன்னே பாரிய நீர்வீழ்ச்சி ஒன்று அருவியாக வீழ்ந்து கொண்டிருந்தது. நீரின் மத்தியில் நின்றவாறு அவர் நெருப்பு வளையத்தினை ஏற்றினார். இவ்வளையம் நீர்வழிந்து கொண்டிருக்கும் பாரிய வளையத்தால் தூக்கிச்செல்லப்பட்டது. நெருப்பு எரியத்தொடங்க இவ்வளயம் மைதான உச்சியை நோக்கி கொண்டுசெல்லப்பட்டது.

இது மிக சாதுர்யமானதுடன், வழக்கத்தை குறிக்கும் தேவையான சகல அடையாளங்களையும் வழங்கியது.

சாதாரண மக்கள் இந்நிகழ்ச்சிகளால் ஆச்சரியப்பட்டு நிற்கையில், இது ஏன் என்பதை விளங்கிக்கொள்வது கடினமானதல்ல. மில்லியன் கணக்கான டொலர்கள், பலவருட தயாரிப்பு, அதீதமான வழங்களும் திறமையும் ஒழுங்கமைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒலிம்பிக்கின் தன்மை சமாதானத்திற்கான கருவியாகவும், சர்வதேச கூட்டிணைப்பிற்கும், சகோதரத்துவத்திற்கும் உரியதெனகாட்டி விற்க முயற்சிக்கப்பட்டது. உண்மையில் இவ்விளையாட்டு வித்தியாசமான நோக்கத்தை கொண்டிருந்தது.