World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா

The US elections

George W. Bush's drunk driving arrest: revelation from the past spotlights political cynicism of the present

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மது போதையில் வாகனம் ஓட்டி கைதானவர்: கடந்த கால அம்பலப்படுத்தல்கள் இன்றைய அரசியல் சிடுமூஞ்சித்தனத்துக்கு வெளிச்சம் போடுகின்றது

By David Walsh and Barry Grey
4 November 2000

Use this version to print

எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு தனிப்பட்ட பிரஜையாக விளங்கிய டெக்சாஸ் மாநில ஆளுனர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 1976ல் மெயினியில் [Maine] மதுபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்டமை ஒரு பெரும் அதிர்ச்சிக்கு உரியதா விடயம் இல்லை. இச்சம்பவம் புஷ்சை ஒரு கிறிமினலாக்கி விடவில்லை. அத்தோடு அரசியல் ரீதியில் பகுத்துணரும் நோக்கு அற்ற ஒருவர் அந்த மனிதனைப் பற்றி ஏற்கனவே அறிந்தவற்றுக்கு மேலதிகமாக எதையும் வழங்கிவிடப் போவதும் இல்லை.

இந்த அபிவிருத்தி அடுத்த செவ்வாய்க்கிழமை தேர்தலை கணிசமான அளவு பாதிக்கச் செய்யுமா என நோக்கப்பட வேண்டும். பெரும்பாலானவை இதை வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் எந்த இலட்சணத்தில் கையாண்டுள்ளன என்பதில் சார்ந்துள்ளன. இதை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பெரிதும் அக்கறையோடு அணுகுகின்றது.

பொது வாழ்க்கையில் அத்தகைய விபத்துக்கள் எல்லா வகையான மக்களுக்கும் ஏற்படுவதுண்டு. இருப்பினும் இந்த அம்பலப்படுத்தல்கள் ஒரு திட்டவட்டமான அரசியல் அடிப்படையில் தலைநீட்டிக் கொண்டுள்ளது. அது வெறுமனே அரசியல்வாதியான புஷ் மீது மட்டுமன்றி மொத்தத்தில் குடியரசுக் கட்சி, வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள், அமெரிக்க அரசியல் அமைப்பு என்ற அனைத்தின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றது.

புஷ்சின் கைதின் அம்பலமும் அதை பொதுமக்களிடம் இருந்து மூடிமறைக்கும் அவரின் முயற்சியும் குடியரசுக் கட்சியின் பிரச்சாரத்தினதும் அதற்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் திட்டமிட்டு உழைத்து வந்த வெகுஜனத் தொடர்பு சாதனங்களதும் எல்லையற்ற பாசாங்குகளையும் கோடிட்டுக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய டோரி கட்சி தலைவரான பெஞ்சமின் டிஸ்ரேலி ஒரு முறை டோரி கட்சி நிர்வாகத்தை "ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாசாங்கு" என குறிப்பிட்டார். இந்த வெறுப்புக்கிடமான புனைபெயர் புஷ் முகாமின் சிடுமூஞ்சித்தனத்துக்கு நீதி வழங்கிவிடாது. அது பொதுமக்களுக்கு தன்னை நேர்மையினதும் விசுவாசத்தினதும் சின்னமாகக் காட்டிக் கொள்வதோடு ஐனநாயகக் கட்சி எதிர்ப்பாளரை பொய்யுடன் கூடிப் பிறந்தவனாகவும் பில் கிளின்டனுடனான உறவுகளால் ஒழுக்கக் கேடானவனாகவும் காட்டிக் கொள்கின்றது.

தெய்வ பக்தியை பொழிந்து கொட்டும் அதே வேளையில் குடியரசுக் கட்சிக்காரர்கள் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் மறைமுகமான ஆதரவோடு புஷ் ஜனாதிபதியாகுவது வெள்ளை மாளிகைக்கு நீதி நெறிகளின் பெறுமானங்களை மீளக் கொணர்வதை பிரதிநித்துவம் செய்யும் என கூறிக்கொள்கின்றனர். கடந்து சென்ற 8 வருடங்களும் -கிளின்டன் ஒழுக்கவியல் குஷ்டரோகியாகவும் கோர் அவரின் விருப்புக்குரிய சகபாடியாகவும் சித்தரிக்கப்பட்டனர்- இருண்ட கலரில் பூசப்பட்டுள்ளன.

இப்போது புஷ்சின் தனிப்பட்ட சொந்த தவறுகள் -தேர்தல் பிரச்சாரம் முற்றுப் பெறும் ஒரு கட்டத்தில்- அம்பலத்துக்கு வந்துள்ளன. புஷ்சின் பிரச்சார இயக்கத்தை ஏதோ ஒரு புனிதப் போராக்கிக் காட்டும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் நிஜமான அல்லது கற்பனையான தவறுகளை தூக்கிப் பிடித்து வந்தவர்கள் இப்போது வேறு தரத்திலான அளவீடுகளை பிரயோகிக்கிறார்கள்.

இந்த 1976ம் ஆண்டு கைது பற்றிய செய்தி வெளியானதும் டெக்சாஸ் மாநில ஆளுனர் வியாழக்கிழமை இரவு ஒரு சிறிய பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தினார். அச்சம்பவத்துக்காக வருந்துவதாகக் கூறிய அவர் இன்றைய பிரச்சாரத்துக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்றார். தனது பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு அச்சம்பவங்களை இரகசியமாக வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புஷ் மறைமுகமாக இதை ஒப்புக்கொண்ட அதே வேளையில் புஷ்சின் பேச்சாளரான கரேன் ஹுக்ஸ் கோர் முகாமைச் சேர்ந்தவர்கள் "அசிங்கமான தந்திரங்களின்" ஒரு பாகமாக இச்செய்தியை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மாலை தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியில் தோன்றிய வித்துவான்கள் புஷ்சை பற்றிய தகவல்கள் அம்பலமானதை சுடச்சுட கண்டனம் செய்தனர். கடைகெட்ட அலம்பல் பேர்வழிகளான கிறிஸ் மத்தியூவும் (Cabk News Network's) Repert Murdoch's, Fox Network's ன் பிற்போக்காளர்களும் அத்தோடு அவர்களின் நிலையான விருந்தினர்களான டேவிட் ஜெர்கன், பில் பெனட் போன்றவர்களும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவிச் செல்வதும் கடந்தகால தவறுகளை தூக்கிப் பிடிப்பதும் முற்றிலும் தவறானது என பிரகடனம் செய்தனர். 1976ன் சம்பவங்கள் புஷ்சின் ஜனாதிபதி வேட்பாளர் தகுதியுடனோ அல்லது அவரின் அரசியல் கருத்துக்களுடனோ எதுவித தொடர்பும் கொண்டவை அல்ல என்பதில் அவர்கள் உடன்பாடு கண்டார்கள். புஷ் கோரினால் அல்லது கிளின்டனால் அல்லது அவர்கள் இருவராலும் அடைகாக்கப்பட்ட சதியின் பலிகடா என்ற இலட்சணத்தில் அவர்கள் விடயத்தை அலசினார்கள்.

பொதுஜன அபிப்பிராயத்தை மாசுபடச் செய்வதையே தமது தலையாய கடமையாகக் கொண்ட இந்த போக்கிரிகள் கிளின்டன்- மொனிக்கா லிவின்ஸ்கி ஊழல் உறவுகள் சம்பந்தமாக தலைகீழான நிலைப்பாட்டை வகித்தார்கள் என்ற உண்மையை மூடி மறைக்கிறார்கள். அவர்களின் பாசாங்குகள் வெறுமனே வெறுப்பைத் தருவன மட்டுமல்ல. குறிப்பிட்ட ஒரு சில சமூக அடிப்படையினுள் அவை அரசியல் ரீதியில் கொலைகாரத்தனமான பரிமாணத்தையும் பெறுகின்றன.

1998-99ல் கிளின்டனின் "குணநலன்கள்" பற்றிய விவகாரத்தின் பேரில் எத்தனை மணித்தியால ஒலி ஒளி பரப்பல்கள் இடம்பெற்றன? அந்தரங்க உரிமைகள், கட்சிசார்பு ஊக்கிகள் அல்லது பிற்போக்கு அரசியல் சக்திகள் திரைக்குப் பின்னால் இருந்து செயற்படுவது என்ற பேச்சு சகிக்கப்படுவதாக இருக்கவில்லை. அத்தகைய சகல எதிர்ப்புக்களும் உண்மையிலிருந்து தடம் புரளுவதாக கணிக்கப்பட்டது. ஒரே விடயம்- கிளின்டன் மேலதிக திருமண உறவுகளை கொண்டிருந்தார்; அவர் அதை மூடி மறைத்துவிட்டார்! என்பதே.

தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி ஒரு தனிப்பட்ட உடலுறவின் பேரில் பதவியில் இருந்து வேட்டையாடப்பட்டு விடக் கூடாது எனக் கூறியதுதான் தாமதம் அக்கணமே அவர்கள் பிரச்சினை உடலுறவு சம்பந்தப்பட்டது அன்றி; நேர்மையீனம் பற்றியது எனப் பிரகடனம் செய்யும் காம இச்சை கொண்ட வதந்தியைப் பரப்புவதில் ஈடுபட்டனர். வெகுஜனத் தொடர்புச் சாதனத் துறையினர் அவர்கள் செயற்படுவதற்கு அளவுகணக்கற்ற களத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே வலதுசாரி சதிகார நாசகாரர்கள் -வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், அறிக்கையாளர்கள், குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள்- ஒரு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான முன்னொரு போதும் இல்லாத குற்ற வலுவை (Impeachment) நிர்மாணிக்கவும் நீதிமன்றத்தில் நிறுத்தவும் முடிந்ததோடு செனட் சபையில் முடியாது போயிற்று. மோகினியாட்டக்காரர்களை சமரசம் செய்யும் கிளின்டனதும் ஜனநாயகக் கட்சிக்காரர்களதும் அளவுகணக்கற்ற முயற்சிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரை அம்பலப்படுத்த மறுத்தமையும், அதற்கு ஊக்கமளித்த அவர்களின் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலும் சதிமுயற்சிகள் முடிந்த மட்டும் தொடர்ந்து முன்நோக்கிச் செல்வதை சாத்தியமாக்கும் ஒரு தீர்க்கமான காரணியாக விளங்கியது.

இப்போது நாம் புஷ் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் பொய் கூறிவிட்டதாகவும் கேள்விப்படுகின்றோம். டல்லாஸ் மோர்னிங் நியூஸ் (Morning News) பத்திரிகையாளர் வெயின் சீலேற்றர் 1998ல் கேட்டபோது புஷ் "இல்லை" எனப் பதிலளித்ததாகவும் 1968ல் ஒரு கல்லூரி மாணவனாக இருந்த சமயம் அங்கீகரிக்கப்பட்ட சில ஓட்டு விதிகளுக்கு அப்பால் சென்றதை தவிர ஒரு போதும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்ததாவும் எழுதுகின்றார். 1996ல் டெக்சாஸ் பத்திரிகையாளர்கள் புஷ்சிடம் நேரடியாக மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டீரா இல்லையா எனக் கேட்கப்பட்ட போது, ஆளுனர் (Governor) இக்கேள்வியைத் தட்டிக் கழித்தார்.

புஷ்சின் முகாமைச் சேர்ந்தவர்கள் ஸ்லேட்டரின் வாதத்தை நிராகரிக்கின்றனர். ஆனால் கறேன் ஹியுக்ஸ் கடந்த காலத்தில் டெக்சாஸ் ஆளுனர் ஒரு போதுமே கைது செய்யப்பட்டதே கிடையாது என இதை ஊர்ஜிதம் செய்கின்றார். "தாம் கைது செய்யப்பட்டதை தமது பெண் பிள்ளைகளிடம் இருந்து காக்கும் அவரின் விருப்பத்தை தாம் மதிப்பதாக" ஹியூக்ஸ் வலியுறுத்துகின்றார். சுயாதீனமான வழக்கு விசாரணையாளர் கெனத் ஸ்டார் தலைமையிலான பிரமாண்டமான விசாரணையின் போது கிளின்டன் லுவின்ஸ்கியுடனான (வன்முறையல்லாத ஆனால் சங்கடத்துக்குரிய) தனது உறவுகளை பற்றிய கசப்பான உண்மைகளை குடும்பத்தினர் அறிவதை தடை செய்யும் பொருட்டு விசாரணையாளர்களை தவறான வழியில் இட்டுச் சென்றார் என்ற சாத்தியம் ஒரு நியாயமான சாட்டாகத் தன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

வைட்வாட்டர் (White Water) எனப்பட்ட ஆர்க்கன்சஸ் டெவலப்மன்ட் கம்பனி (Arkansas development Company), கிளின்டனின் குற்றவலுவின் இரு தசாப்தங்களுக்கு முன்னரும் சுயாதீன நீதிவிசாரணையாளரின் விசாரணைக்கு 16 வருடங்களுக்கு முன்னரும் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. எவ்வாறெனினும் அது ஆறு ஆண்டுகளுக்கு நீண்டு சென்றதும், 50 மில்லியன் டாலர்கள் செலவை உண்டுபண்ணியதும், கிளின்டனின் தவறான கிறிமினல் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான சாட்சியங்களை வழங்காததுமான வைட்வாட்டர் (White Water) விசாரணையையிட்டு ஒரு முழு அளவிலான விசாரணையை நடாத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியதன் மூலம் புஷ்சுக்கு சார்பாக தோன்றிய அதே சக்திகள் வளர்ச்சி பெறுவதை தடுக்க முடியவில்லை.

கிளின்டனின் குற்றவலுவின் போது கிளின்டன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் அதைத் தொடர்ந்து வந்த காலத்தில் அச்சம்பவத்தை மூடிமறைத்ததாகவும் ஒரு கதை வெளிக்கிளம்பி இருக்குமானால் அமெரிக்க காங்கிரசிலும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களிலும் உள்ள குடியரசுக் கட்சிக்கார்களுக்கு அது எவ்வளவு வாய்ப்பானதாக இருந்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். புதிய ஜூரர்கள் சபை அமைக்கப்பட்டு இருக்கும்; புதிய நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருக்கும்; இன்னும் பல டசின் கணக்கான மேலதிக ஆட்களின் நற்பெயர் கறைபடிந்து போவதோடு அவர்களின் சேமிப்புக்களும் சட்டச் செலவுகளுக்காக கரைந்து போகின்றன.

புஷ்சின் சச்சரவு ஸ்டாரின் வெறியாட்டத்தை ஒரு முன்நோக்கு வடிவத்தில் கொணர கைகொடுப்பதோடு இது அறநெறி பற்றிய ஒன்றன்றி அரசியலையும் அதிகாரத்தையும் பற்றியது என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகின்றது.

இன்னொரு விடயமும் இருந்து கொண்டுள்ளது. அது புஷ்சின் குணநலன்களை ஒரு தனிப்பட்ட நபராக மட்டுமல்லாது சமூக வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாகவும் பேச வைக்கின்றது. இந்த மனிதன் ஒரு குழம்பிப்போனதும் நிலையற்றதுமான கடந்த காலத்தைக் கொண்டுள்ளான். போதைப் பொருள் பாவித்தது பற்றிய பரந்த அளவிலான அறிக்கைகள் வெளிவந்துள்ளன. புஷ் மதுபோதை பிரச்சினை இருந்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நீண்ட பல காலம் அலைந்து திரிந்துள்ளார். வெள்ளிக்கிழமை மிச்சிக்கனில் கிறாண்ட் றபிட்சில் (Grand Rapids) சனக்கூட்டத்தின் முன் பேசும்போது அவர் "நான் எனது வாழ்க்கையில் தவறுகள் செய்தவன். ஆனால் நான் அந்த தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொண்டுள்ளேன் எனக் கூறுவதில் பெருமைப்படுகின்றேன்".

ஆனால் கேள்வி: அவர் கற்றுக் கொண்டது என்ன? என்பதேயாகும்.

மனித தவறுகளோடு குஸ்திபோடுவதன் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் ஏதோ ஒரு அளவுக்கு கருணைகொண்டிருக்க வேண்டியதன் அவசியமாகும். ஒரு தனிநபரை அவரின் சொந்த சாத்தான்கள் சட்டத்துடன் பூசலுக்கு இட்டுச் செல்லுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக தனியாட்கள் பிரபலமான குடும்ப உறவுகளையும் செல்வங்கள் வசதிவாய்ப்புக்களின் அனுகூலங்களையும் கொண்டிருக்கும் போது அத்தகைய அனுபவங்களில் இருந்து ஏனையோரின் பிரச்சினைகளின் பேரில்-சிறப்பாக தனது சமூக அனுகூலங்களை கொண்டிராதவர்களின் பிரச்சினைகளின் பேரில்- ஆழமான உணர்வுகளையும் பெரும் புரிந்துணர்வையும் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும் இந்தப் படிப்பினையை புஷ் பெற்றுக் கொண்டார் என்பதற்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கடந்த கால தவறுகள் அவருக்கு எதையேனும் வழங்கியிருப்பின் அது அவரை மேலும் இரக்கமற்றவனாக்கியதேயாகும். டெக்சாஸ் ஆளுனராகவும் அமெரிக்கன் தரத்திலான ஒரு நீதி அமைப்புக்கும் அவர் பெருமையுடன் தலைமை தாங்கும் போது அது ஒரு காட்டுமிராண்டித்தனத்தினதும் மிருகத்தனத்தினதும் சின்னமாக விளங்குகின்றது.

புஷ் தனிப்பட்ட முறையில் 145 பேரின் கொலைத்தண்டனைகளை அங்கீகரித்தவர். இவர்களில் பெருமளவிலானோர் ஏழைகள்; வழிதடுமாறிய சிறுவர்கள்; போதைவஸ்து, மதுவுக்கு பலிகடாக்களானவர்கள். பொதுவில் இவர்கள் உரிய வழக்கறிஞரினை அமர்த்தும் வாய்ப்பில்லாமல் போய், வழக்கு விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களில் சிலர் முற்றிலும் அப்பாவிகள் என்பதில் சிறிதளவேனும் சந்தேகம் கிடையாது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் டெக்சாஸ் சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். போதை வஸ்த்து தொடர்பான குற்றங்களுக்காவும் பெரும்பாலும் வன்முறையற்ற குற்றங்களுக்காவும் நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெக்சாஸ் சிறைகளில் அல்லது மரணதண்டனை கியூவில் காத்துக்கிடக்கும் துர்அதிஸ்டவசமானவர்களில் எத்தனை பேர் புஷ்சைக் காட்டிலும் பெரிதும் பாரதூரமற்ற அற்ப விடயங்களுக்காக அவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பொலிசாரின் தொந்தரவுக்கு உள்ளானார்கள்? புஷ்சை போலல்லாது இவர்கள் குற்றப்பணத்தைச் செலுத்த பணம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதிகாரிகள் மிகவும் மென்மையாக நடந்துகொள்ள குடும்ப பெயர் துணைபோகாது போயிருக்கலாம். சிறிய குற்றங்களுக்காக அழித்தொழிக்கப்படாது போனாலும் பல உயிர்கள் அமெரிக்காவில் வர்க்க உறவுகளை ஆட்கொண்டுள்ள வறுமையாலும் வன்முறையினாலும் நாசமாக்கப்பட்டுள்ளன.

தனது தவறான நடத்தைகள் மறக்கப்பட்டுவிடவேண்டும் எனக் கோரும் புஷ்சின் நடவடிக்கைகள் வேறெதையுமன்றி பிறருக்கு அட்டூழியம் புரிவதையே காட்டுகின்றது. சமீபத்தில் இடம்பெற்ற ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் டெக்சாஸ் ஆளுனர் என்ற விதத்தில் அவரின் மிகவும் சாதுரியமான நடவடிக்கையை நினைவு கூரும்படி கேட்கப்பட்டார். கார்னா பைய் டக்கரின் மரண தண்டனையை அங்கீரித்ததை புஷ் அதற்கு உதாரணமாக குறிப்பிட்டு இருந்தார். இந்தக் காட்டுமிராண்டித்தனத்திலும் கர்வத்திலும் ஒருவர் தனிப்பட்ட விசேட குணாம்சங்களையன்றி அமெரிக்கன் ஆளும் வர்க்கத்தின் அசிங்கமான கோலத்தையே காண்கிறார்.

1976ம் ஆண்டின் கைது அதற்கென தனிச்சிறப்பு முக்கியத்துவங்களை கொண்டிருக்கவில்லை. எவ்வாறெனினும் இந்த அம்பலம் சம்பந்தமான புஷ்சினதும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களதும் ஜனநாயகக் கட்சியினதும் அக்கறை என்னவாக இருந்தாலும் இது புஷ்சின் பிரச்சார இயக்கத்தின் ஆழமான பிற்போக்கு வேலைத்திட்டத்தின் மீதும், அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூக சக்திகள் மீதும், ஒரே பிரமுகர்களின் வெவ்வேறுபட்ட குழுக்களைப் பற்றி பேசிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் கோழைத்தனம் சம்பந்தமாகவும் வெளிச்சம் பாய்ச்சுகின்றது.