WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா : ஐக்கிய
அமெரிக்கா
The working class and the 2000 US elections
Part 2: The social structure of America in 2000
தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத்
தேர்தல்களும்
பகுதி2: இரண்டாயிரத்தில் அமெரிக்காவின் சமூகக்கட்டமைப்பு
Statement of the Socialist Equality Party of the United
States
4 October 2000
Use
this version to print
நிகழ்கால அமெரிக்காவின் அடிப்படை சிறப்பியல்பு
எதிர்பார்த்திரா அளவுக்கு பொருளாதார சமத்துவமின்மையின்
வளர்ச்சியாகும். இது செய்தி சாதனங்களிலும் அதிகார பூர்வ
அரசியலிலும் மிக விருப்பமில்லாமல் உறுதி செய்யப்பட்டடுள்ளதாக
மட்டும் இருக்கிறது. நம்பமுடியாத சிறிய செல்வந்த தட்டுக்கும்
சம்பளத்தை மட்டும் நம்பி வாழும் மக்கட் தொகையின் பரந்த
பெரும்பான்மையினருக்கும் இடையில் இடைவெளி ஆரம்பமாகி உள்ளது.
ஒரு கட்சியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை. ஏனெனில் அவை இரண்டும்
அவற்றை உருவாக்கிய பொருளாதார அமைப்பு மற்றும் கொள்கையைப்
பாதுகாக்கின்றன.
அமெரிக்கா ``பங்குகளைக் கொண்ட ஒரு
சமுதாயம்`` எனக் கூறிவருவது செய்தித் தொடர்பு சாதனங்களிடமும்
கல்விக்கூடங்களிலும் ஒரு பாணியாக இருக்கிறது. பெரும்பான்மை
அமெரிக்கர்கள் இப்பொழுது பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் கடந்த பத்தாண்டில் பங்குகளில் ஏற்பட்ட மூன்று
மடங்கு விலையேற்றம் இறுதியில் ஒவ்வொருவருக்கும் நன்மையை
ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார கட்டமைப்பு
பற்றிய எந்தவித சீரிய ஆய்வும் நிதி செழிப்பு, அமெரிக்காவில் சமூக
துருவப்படலை திடீரென உக்கிரப்படுத்தியிருக்கிறது என்பதை எடுத்துக்
காட்டுகிறது.
அமெரிக்க மக்கட்தொகையின் பரந்த பெரும்பான்மை
பாட்டாளி மயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாள வர்க்க
குடும்பங்கள் முழுவதுமாய் வார, இருவார அல்லது மாத சம்பளத்தை
நம்பி உள்ளன. அடிக்கடி இரண்டு, மூன்று அல்லது நான்கு சம்பளக்
காசோலைகளை தொடர்ச்சியாக நம்பி உள்ளன. சம்பளம்
வாங்கும் மற்றும் குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்கள்
401(K) திட்டங்ககிளின்
படி திரட்டப்பட்ட தொகையின் பங்கோ அல்லது பரஸ்பர நிதிகளின்
பங்கோ ஆகிய சிறு தொகையானது வால்ஸ்டீரிட்டில் வாங்கவும்
விற்கவும் செய்யும் நிதி நிறுவனங்கள் மற்றும் பெரும் பங்குதாரர்களின்
தொகைக்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால் அது இத்தொழிலாளர்களைப்
பொறுத்தமட்டில், இவர்களின் ஓய்வூதியங்கள் அல்லது சேமிப்புக்கள்
பங்குச் சந்தையின் நடைமுறைக் கோளாறுக்கு பணயமாக வைக்கப்பட்டுள்ளதாகத்தான்
அர்த்தமாகிறது.
1980கள் மற்றும் 1990களில் தோன்றிய சமூகக்கட்டமைப்பு
25 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயத்தை விட மிகவும் பரந்த
சமத்துவமற்ற அமெரிக்காகவாகும். (CEO)
தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வெகுமதியாக அளிக்கப்பட்ட
தொகை வெற்றிகரமானது, ஆனாலும் அந்த அளவு வெற்றிகரமானதல்ல,
ஒரு தலைமுறைக்கு முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி இவ்வளவு
பெறுவதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 1000 கோடி டாலர்கள்,
2000 கோடி டாலர்கள், 5000 கோடி டாலர்கள் என்பது - அதிர்ஷ்டங்களின்
அளவு மட்டும் அல்ல அத்தொகை பெரும் அமெரிக்க மாநிலங்களின்
வரவு செலவுத் திட்டங்களை விட அதிகமானது - அவை திரட்டப்பட்டிருக்கும்
விதமும் தான்.
பெரும்பான்மை மக்கள் ஏழ்மையாகி வரும்போது
சலுகை மிக்க தட்டினர் செல்வந்தராகி வருகின்றனர். உழைப்பின்
உற்பத்தித்திறன் அதிகரிக்கும் அதேவேளையில் உண்மைக் கூலிகள்
தேக்கம் அடைந்துள்ள நிலையில் தொழிலாள வர்க்கத்தை என்றுமில்லா
அளவுக்கு சுரண்டுவதன் மூலம் இந்நிகழ்ச்சிப்போக்கு தூண்டிவிடப்பட்டுள்ளது.
இதன் விளைவு ஊழல் அதிகரிப்பும் சமுதாயம் முழுமையுமான உள்
அரிப்பும்தான்.
செல்வத்திரட்சியானது உண்மையான சரக்கு உற்பத்தியிலும்
உழைப்பு நிகழ்ச்சிப் போக்கிலும் இருந்து அதிகமாய்த் துண்டிக்கப்பட்டு
வருவதுடன் அது பங்கு மற்றும் பணச் சந்தைகளை வெற்றிகரமாகக்
கையாளுபவர்களுக்கு பெரும் பரிசுகளாக போய்ச் சேர்கிறது.
தலைமை நிர்வாக அலுவலர்கள்(CEO)
பங்கு வாய்ப்புக்களை தனி நபர் வருமானங்களை அதிகரிக்கச் செய்வதற்கு,
அதன்மூலம் அவர்கள் பெயரளவில் சேவை செய்யும் நிறுவனங்களின்
நீண்ட கால சரிவுக்குப் பங்களிக்கும் வண்ணம், இலாபத்திற்கும்
உற்பத்திக்கும் இடையிலான இந்தப் பிளவானது, நிறுவனங்களின் கட்டமைப்புக்குள்ளேயே
கூட காணப்படுகின்றது.
சலுகைமிக்க செல்வந்த தட்டு
அமெரிக்க சமூகத்தின்
மேலே உள்ளது உடைமையாளர் வர்க்கம், அது செல்வம்
வருவாய் இரண்டிலும், வரலாற்றில் வேறு எவரையும் விட செல்வம்
மிக்கது. அமெரிக்க குடும்பங்களில் செல்வம் படைத்த 1 சதவீதம்
10,000 கோடி டாலர்களுக்கும் அதிகமாக செல்வத்தைக் குவித்து
வைத்துள்ளது - அதாவது 1 கோடி பத்து லட்சம் டாலர்களை -
இது மொத்த தேசிய செல்வத்தில் 40 சதவீதம் ஆகும். இந்த
கோடீசுவரர்களின் இணைந்த நிகர செல்வ மதிப்பு அடிமட்டத்து
95 சதவீதம் பேரின் மொத்த செல்வத்தைவிட அதிகமாகும்.
1970களின் நடுப்பகுதிக்குப் பின்னர், மேல் தட்டினரான
ஒரு சதவீதத்தினர் தேசிய செல்வத்தின் தங்களது பங்கை 20 சதவீதத்திற்குக்
கீழிருந்து 38.9 சதவீதம் வரை ஆக இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளனர்.
இது 1929க்குப் பின்னர் ஏற்பட்ட உயர்ந்த அளவாகும். இந்த ஆண்டு
பங்குச்சந்தைப் பொறிவுதான் மாபெரும் பொருளாதாரத்
தாழ்வினை முன்னறிவித்தது. இன்னொரு ஆய்வின்படி, 1 சதவீத குடும்பங்கள்
அனைத்து பிரதான சரக்கு முதலின் பங்குகளில் அரைப் பகுதியினை
சொந்தமாகக் கொண்டுள்ளனர், அனைத்து நிதிப்பத்திரங்களில் 3ல்
2 பகுதியையும் வர்த்தகச் சொத்துக்களில் மூன்றில் 2 பகுதிக்கு
மேலும் தங்களது உடைமையாகக் கொண்டுள்ளனர்.
வருமானத்தில் சமத்துவமின்மையானது சொத்துடமையில்
சமத்துவமின்மையைப் போல் தெளிவாகத் தெரிகிறது. 1999ல் மக்கட்
தொகையில் ஒரு சதவீதம் செல்வந்தர்கள், வருமானவரிக்குப்
பின்னர் அடிமட்டத்து 38 சதவீதம் பேர்களின் இணைந்த வருமானத்தின்
அளவுக்குப் பெற்றனர். அதாவது குறைந்த வருமானம் உடைய
100 கோடி அமெரிக்கர்களின் வருமானத்தை, வருமானம் அதிகம்
உடைய 27 லட்சம் அமெரிக்கர்கள் வருமானவரிக்குப் பின்னர்
பெற்றுள்ளனர். மேல் தட்டு ஒரு சதவீதம் பேரின் வரிக்குப் பின்னர்
பெறும் சராசரி ஆண்டு வருமானம் 1977க்குப் பின்னர், 2,34,700
டாலர்களில் இருந்து 8,68,000 டாலர்களாக, 370 சதவீதம் அளவில்
உயர்ந்துள்ளது.
பெரும் பணக்காரர்களை அடுத்து கீழுள்ளவர்கள்
அதைவிடக் குறைந்த செல்வம் படைத்தவர்கள். ஆனால் இன்னும்
வசதி படைத்த மிகவும் சலுகை மிக்க தட்டினராவர். மக்கட்
தொகையில் இந்த 4 சதவீதம் பேர் 1998ன் தனி நபர் செல்வத்தில்
21.3 சதவீதத்தை கொண்டிருந்தனர். இது சராசரி 14 லட்சம்
டாலர்கள் மதிப்பாகும்.
1983 லிருந்து 1995 வரையிலான காலகட்டம்
முழுவதும் செல்வந்த மற்றும் மிக செல்வத் தட்டினரான இவ்விரு
செல்வந்தத்தட்டினரும், மக்கட் தொகையில் 5 சதவீதம்
ஆவர். இவர்கள்தான் சராசரி மொத்த நிதி மதிப்பில் உயர்வை அனுபவிக்கக்
கூடிய குடும்பங்களாவர். இது திரும்பக் கூறலில் புள்ளி விபர ரீதியில்
முக்கியமானது. நேரடி 12 ஆண்டுகள், ரேகன், புஷ் மற்றும்
கிளின்டன் குடியரசுத் தலைவராட்சிக் காலங்கள் அனைத்தும் அல்லது
பகுதிகள் உள்ளடங்கலாக, ``சந்தையின் மாயாஜாலங்கள்`` மேல்
தட்டு 5 சதவீதம் பேரே நன்மை அடைந்த அதேவேலையில், 95
சதவீத அமெரிக்க மக்கள் மொத்தமாய் நஷ்டமடைதலை விளைவித்தது.
1990கள் முழுவதும் உழைக்காத பண வருவாய்க்கான
உண்மையான வெறியொன்று ஆளும் வர்க்கத்தைப் பிடித்துக்
கொண்டது. அது லாபக் குவிப்பு மீதான எந்த சக்திமிக்க தடைகளிலிருந்தும்
தன்னை விடுவித்துக் கொண்டது. தனிநபர் செல்வத்துக்கான அப்பட்டமான
வேட்கையானது முந்தைய (``GILDED
AGE``) ``பொன் முலாம் பூசிய காலத்தி``னை
விட தாண்டிச் சென்றது. கிளின்டன்-கோர் நிர்வாகத்தின் பொழுது
535 சதவீத அளவு தலைமை நிர்வாக அலுவலர்களுக்கான இழப்பீட்டுத்
தொகை ஒரேயடியாய் உயர்ந்தது. ஒரு மாதிரி நிறுவனத்தின் அதிபர்
சராசரி தொழிலாளியின் வருமானத்தை விட 475 மடங்குகள் வருமானம்
பெற்றார்: குறைந்த பட்சக் கூலி பெறும் தொழிலாளியின்
வருமானத்தைவிட 728 மடங்குகள் பெற்றார். 1990களில் கூலிகள், CEOக்கள்
அனுபவித்த பங்கு முதல் வாய்ப்புக்கள், போனஸ்கள் மற்றும் சம்பளங்களைப்
போல் வேகமாக உயந்திருந்தால், சராசரி தொழிலாளியின் ஆண்டு
வருவாய் 1,14,000 டாலர்களாகவும் குறைந்த பட்சக் கூலி மணிக்கு
24 டாலர்களாகவும் இருந்திருக்கலாம்.
சம்பளத்தில் இருந்து சமபளத்திற்கு வாழ்க்கையை
ஒட்டல்
அமெரிக்க சமூகத்தின் மற்றொரு முனையில் கிட்டத்தட்ட
10 கோடி மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு சம்பளங்களையும்
கூலிகளையும் நம்பி உள்ளனர். அதாவது மக்கள் தொகையின்
பெரும்பகுதியினரான தொழிலாள வர்க்கத்தினர் ஆவர். இத்தொழிலாளர்கள்
அமெரிக்க சமுதாயத்தின் வியக்க வைக்கும் செல்வத்தை உற்பத்தி
செய்கின்றனர். ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கை நிலைமைகள்
மிகவும் மோசமடைந்து வருகின்றது. வீழ்ச்சியடையும் உண்மைக்
கூலிகள் நீண்ட மணிநேரக் கணக்கில் உழைப்பதன் மூலம் மட்டுமே
பகுதியளவு சரியீடு செய்வதாய் இருக்கும்.
வருமானம், வேலை நிலைமைகள், குடும்ப அமைப்பு
மற்றும் முதலாளிகளுடனான ஒப்பந்த உறவுகள் காரணமாக
(தொழிலாளர்கள் முழு நேர வேலை செய்பவர், பகுதி நேர
வேலை செய்பவர், தற்காலிக வேலை செய்பவர் போன்ற ஒப்பந்த
உறவுகள் காரணமாக) - மற்றும் சமூக நனவுகளில் பரவலாய் வேறுபடும்
அளவினராய் வாழ்க்கைத் தரங்களில் பெருமளவு வேறுபாடுகள்
உள்ளன தான். ஆனாலும் இந்த வேறுபாடுகள் இருந்த போதிலும்,
பெரும்பாலான உழைக்கும் மக்கள் தங்களை ``நடுத்தர வர்க்கம்``
எனக் கருதிக் கொள்வது உண்மை ஆயினும், அமெரிக்கர்களில் மிகப்
பெரும்பான்மையினர் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் சொத்துடைமையிலிருந்து
வருமானம் சிறிதளவே பெறுபவராய் அல்லது எதுவுமே பெறாதவராய்
உள்ளனர்.
சரியாகச் சொன்னால் தொழிலாளர்கள் மேலும்
மேலும் சொத்துடைமை அற்றவர்களாக இருக்கின்றனர். 1983க்கும்
1995க்கும் இடையில் மக்கள் தொகையின் 40 சதவீத அடிமட்டத்தினரில்
குடும்பங்களின் சராசரி மதிப்பு 4,400 டாலர்களிலிருந்து 900 டாலர்களாக,
80 சதவீதம் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 20 சதவீத அடித்தட்டினரைப்
பொறுத்த அளவில் நிகர மதிப்பு பூச்சியத்திற்கும் கீழானது. வீட்டு
மதிப்பையும் சேர்த்தாலும் கூட அவர்களின் கடன்கள் அவர்களின்
சொத்துக்ளைத் தாண்டிவிட்டன.
தொழிலாள வர்க்கத்தில் மிக ஏழ்மையான தட்டுக்களின்
வருவாய் கடும் சீரழிவை அடைந்தது வெறும் அச்சுறுத்தல் அல்ல,
மாறாக தொடர்ச்சியான நிகழ்வாகும். அனைத்து அமெரிக்கத்
தொழிலாளர்களில் 26 சதவீதம் பேர் வறுமைக் கோட்டு மட்டத்துக்கு
கூலிகளைப் பெறுகின்றனர். அமெரிக்க குடும்பங்களின் மிக ஏழ்மையான
20 சதவீதம் குடும்பத்தினரின் சராசரி வருவாய் கடந்த ஆண்டில்
12,990 டாலர்கள் மட்டுமே ஆகும். இது அதிகாரப்பூர்வ வறுமைக்
கோட்டுக்கு கீழாகும். ஏழைகளின் நிலைமையானது, 1996ல் பண
உதவியில் வெட்டு மற்றும் உணவுச்சீட்டுகள், மருத்துவ உதவி கேட்கும்
அல்லது மாநில மற்றும் கூட்டரசின் உதவிகளை நாடுபவர்களுக்கு
தீங்கிழைக்கும் நடவடிக்கையால் ஏழையின் நிலைமை மேலும் கிளறி
விடப்பட்டிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான சமூகப் பிரச்சினைகளின்
அடிவேரில் பரந்து பரவி வரும் ஏழ்மையானது கொள்ளை நோய்
போல் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் வர வர புறநகர்ப்
பகுதிகளிலும் பரவி வருகிறது: குடும்பக் கட்டமைப்புக்கள் உடைதல்,
உள்ளுர் கலவரம், குற்றம், போதை மருந்து உட்கொள்ளல்,
வீடின்மை ஆகியன இவையாகும். அமெரிக்கா முன்னேற்றகரமான
மற்றும் ஆரோக்கியமான சமுதாயம் என்பதைப் பொய்யாக்குவதில்
மற்றெல்லாவற்றையும் விட முக்கியமானது: 20 லட்சத்திற்கும்
அதிகமானோர் இப்போது அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்
என்பதுதான். இது தொழில்மயமான வேறு எந்த நாட்டையும்
விட இங்குதான் அதிகம். இவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு
முன்னால் சிறையிடப்பட்டோரைப் போல் மூன்று மடங்கு ஆகும்.
தொழிலாள வர்க்கத்தின் நன்கு சம்பளம்
பெறுபவர்கள் மத்தியில், வருமானங்கள் தேக்கம் அல்லது வீழ்ச்சியடைகின்றன
- இது இரண்டாம் உலகப் போரைப் பின் தொடர்ந்து வந்த
பொருளாதார செழுமை தசாப்தங்களில் இருந்து பெரிதும் மாற்றமடைந்துள்ளது.
1947-79 மிக ஏழைகள் முதல் பெரும் பணக்காரர் வரையிலான
அமெரிக்க மக்கள் ஒவ்வொரு பகுதியினரின் சராசரி வருமானம்
இரட்டிப்பாகியுள்ளது. 1979லிருந்து 1998 வரை மேல் தட்டு 20
சதவீதத்தினர் 38 சதவீதம் வருவாயை லாபமாய் பெற்றனர் (மேல்
தட்டு 1 சதவீதம் பேருக்கு 64 சதவீதம்) அதேவேளை மிகக்
குறைந்த 20 சதவீதம் பேர் உண்மை வருவாய் 5 சதவீதம் அளவில்
சரிவடைந்ததைக் கண்டனர் மற்றும் இடையில் உள்ளோர் சிறு
அதிகரிப்பைக் கண்டனர்.
1 லட்சம் டாலர்களுக்கும் மேலாக மொத்த
வருவாய் உடைய இரண்டு பேர் வருவாய் கொண்ட குடும்பங்கள்
ஒரே ஒரு குறிப்பிடத் தக்க சொத்தை - வீட்டை கொண்டிருப்பர்.
வழக்கமாக அது பெரும்பாலும் அடமானம் வைக்கப்பட்டிருக்கும்
அத்துடன் சிறு சேமிப்பு இருக்கும் அல்லது சேமிப்பு இல்லாதும்
இருக்கும். ஒரு ஆய்வின்படி, வருமானம் ஈட்டும் நடுத்தர 20
சதவீதத்தினர் (நடுத்தர வர்க்கத்தின் பகுதி எனக் கூறப்படுவோர்)
திடீர் வேலை இழப்பு வந்தால் 1,2 மாதங்களுக்கு தங்களது தற்போதைய
வாழ்க்கைத் தரத்தைத் தக்க வைக்க மட்டுமே போதுமானதாக
இருக்கும் (அல்லது வறுமைக் கோட்டு மட்டத்தில் தற்போதைய
நுகர்வினை 1,8 மாதங்களுக்குத் தக்க வைக்க போதுமானதாக
இருக்கும்.)
வருமானம் வீழ்ச்சியுற்ற அதேவேளை, நுகர்வானது
இப்பொழுது வரை கடன் பெறுவதன் மூலமாக சமாளிக்கப்பட்டு
வருகின்றது. தனிநபர் வருமானத்தில் வீட்டுக் கடனானது 1973ல் 58
சதவீதத்திலிருந்து 2000ல் கிட்டத்தட்ட 100 சதவீதம் ஆக உயர்ந்தது.
ஒரு ஆய்வின் படி ``தற்போது குடும்பங்கள் வரி பாதுகாக்கப்பட்ட
அடமானங்கள் மற்றும் வீட்டு அடமான கடன்களை பயன்படுத்தி
வழக்கமான நுகர்வுகளுக்கு பணம் திரட்டிக் கொள்கின்றனர்``.
பொருளாதாரக் கொள்கைக் கழகத்தால்
நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு ஒன்று, உழைப்பு நேரங்களைக்
கூட்டுவதன் மூலம் தங்களின் வருவாயில் ஏற்பபட்டுள்ள வீழ்ச்சியை
எப்படி சரி செய்ய முனைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.
குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்பம் ஒன்று 1969ல்
ஒரு ஆண்டுக்கு 68 வாரங்கள் வேலை செய்த நிலையிலிருந்து, 1998ல்
ஆண்டுக்கு 83 வாரங்களாக உழைப்பு நேரத்தை அதிகரித்துள்ளனர்.
இது பெரும்பாலும் உழைக்கும் தாய்மார்களினால் உழைப்பு
நேரத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணத்தினாலாகும். அமெரிக்கத்
தொழிலாளர்கள் ஏனைய தொழிற்துறை நாடுகளில் உள்ள
தொழிலாளர்களை விட நீண்ட நேரங்கள் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் குறைந்த விடுமுறை நாட்களுடனும் குறைந்த பருவ
விடுமுறை காலத்துடனும் வேலை செய்கிறார்கள்.
வீழ்ச்சியடைந்து வரும் நடுத்தர வர்க்கம்
ஆளும் தட்டுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும்
இடையில் கணிசமான அளவிலும் பெரிதும் குறைந்து வரும் நடுத்தவர்க்கத்
தட்டு உள்ளது. அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சியானது
மிகவும் முக்கியமான -மிகவும் ஆய்வு செய்யப்படாத- சமூக இயல்
நிகழ்ச்சியாகும். ஒரு சமயம் இடைத் தட்டு சமூக நிலைகளை
வகித்திருந்த கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் - சிறு வணிகர்கள்,
குடும்ப விவசாயிகள், தனிப்பட்ட துறை சார்ந்தவர்கள், நடுத்தர
மேலாளர்கள்- தங்களின் நிலைமைகள் கடுமையாய் மோசமடைந்துள்ளதைக்
காண்கின்றனர், அதேவேளையில் ஒப்பிட்டளவில் விரல்விட்டு எண்ணக்
கூடியவர்கள் நிதிப்பூரிப்பின் மூலம் வசதி படைத்தவர்களாகவும் ஊழல்வாதிகளாகவும்
ஆகியுள்ளனர்.
1980களில் தங்களது நீல உடை உழைக்கும் மக்களின்
எண்ணிக்கையை வெட்டிக் குறைத்த நிறுவனங்கள், 1990களில் வெள்ளையுடை
தொழிலாளர்களுக்கும் இடைநிலை மேலாளர்களுக்கும் எதிராகத்
திரும்பின. பெரிய கம்பெனியில் வேலையிலிருப்பது வாழ்க்கைக்கு
பாதுகாப்பை வழங்கும் என்ற பிரமையை அவை உடைத்தன.
கோடிக் கணக்கான வெள்ளையுடை மற்றும் துறைசார்ந்த
தொழிலாளர்கள் தங்களை பணி நீக்கப்பட்டோராய் கண்டு
கொண்டனர் அல்லது ஒப்பந்தத் தொழிலாளராய் மாறினர்.
அவர்கள் ``சுதந்திரமானவர்கள்`` என்பது வேலை வசதிகள் மற்றும்
வேலைப் பாதுகாப்பு இவற்றிலிருந்து ``சுதந்திரமாய்`` இருக்கின்றனர்
என்ற அர்த்தத்தில் தான்.
நிதிச் சந்தைகள் மூழ்கிக் கொண்டிருப்பதற்கு
இடையில், திவாலான சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல எண்ணிக்கையிலான
தனிநபர்கள் அதிகரித்துள்ளனர். தனிப்பட்ட விவசாயக் குடும்பங்களின்
எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் கீழானதாக குறைந்துவிட்டது
-இது அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை
விட குறைவானதாகும். உணவகங்கள், உதிரிப்பாக விற்பனை நிலையங்கள்
(Hardware stores),
சில்லறை விற்பனைக் கடைகள் லும்பர்
சூப்பர் ஸ்டோர்கள் (Lumber
superstores) மற்றும் வால் மார்ட் (Wal-Mart)
ஆக மாற்றப்பட்டுள்ளன. வால்மார்ட் குறைந்த கூலி பெறும்
8,00,000 தொழிலாளர்களைக் கொண்ட பெரிய அமெரிக்க
நிறுவனமாகும். அமெரிக்க மக்கட் தொகை பற்றிய அண்மைய
கணக்கெடுப்பின்படி, 14 லட்சம் பேர் ``சுயமாய் வேலை அமைத்துக்
கொண்டவர்கள்`` என வகை பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ``வியாபார
நிலையங்களின்`` சராசரி வருவாய் வெறுமனே 30,000 டாலர்களாகும்
- பெரும்பான்மையானவை வறுமைக் கோட்டு அளவு வருமானத்தைக்
கூட தங்களது உரிமையாளருக்கு வழங்க முடியாத நிலையிலுள்ளன
என்பதுதான் இதன் அர்த்தம்.
நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சியானது திட்டவட்டமான
அரசியல் விளைவுகளைக் கொண்டுள்ளன. கணிசமான அளவு முன்னேற்றகரமான
நடுத்தர வர்க்க இடைத்தட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தின்
பிரதான சமூக அடித்தளமாக எப்போதும் இருக்கும். இத்தகைய
தட்டு, செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும்
அதனை உடைமையாகக் கொண்ட முதலாளிகளுக்கும் இடையிலான
சமூகப் பிளவினால் உண்டு பண்ணப்பட்ட கடும் பகையை சமநிலைப்
படுத்தும் சேவையைச் செய்யும். இந்த இடைநிலைத்தட்டு இல்லாத
நிலையில் முதலாளித்துவத்தில் உள்ளியல்பாய் இருக்கின்ற வர்க்க
மோதல்கள் வெளிப்படையான யுத்தத்தின் நிலைமைக்கு ஈவிரக்கமற்ற
வகையில் அபிவிருத்தியடையும்.
கடந்த இருபதாண்டுகளாக பெரும்பான்மையான
அமெரிக்க நடுத்தர வர்க்கம் பாட்டாளி மயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சலுகைமிக்க சிறுபான்மை, சிறப்பாக ஒரு சமயம்
அரசியல் மிதவாதத்தினை பிரதானமாகத் தாங்கிப் பிடித்தவர்களான
துறைசார்ந்தோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உள்ள
சலுகை மிக்க சிறுபான்மையினர், நிதி பூரிப்பினால் ஊழல் மயமாக்கப்பட்டதுடன்
மிக வலதுபுறத்திற்கு நகர்ந்துள்ளனர்.
See Also :
தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத்
தேர்தல்களும்
பகுதி1. அமெரிக்க அரசியலின் மாறும்
தளங்கள்
பகுதி3: அரசியல் அமைப்பின் நெருக்கடி
|