World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The working class and the 2000 US elections

Part 1: The shifting grounds of American politics

தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல்களும்

பகுதி1. அமெரிக்க அரசியலின் மாறும் தளங்கள்

Statement of the Socialist Equality Party of the United States
3 October 2000

Use this version to print

அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அது மீண்டும் ஒருமுறை பெருந்திரளான அமெரிக்க வாக்காளர்களுக்கும் இரண்டு அரசியல் ஸ்தாபனங்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது. குடியரசுக் கட்சி கவர்னரான ஜார்ஜ் டபிள்யு புஷ்-க்கும் ஜனநாயகக் கட்சி குடியரசு துணைத்தலைவர் அல்கோர்-க்கும் கோடிக்கணக்கான டாலர்கள் செலவு செய்த நிலையிலும் கூட, ஒருவர்கூட தாம் மக்கள் ஆதரவைப் பெற்றதாகக் கூறிக் கொள்ள முடியவில்லை. வாக்காளர்கள் வேட்பாளர்களையும் நம்பவில்லை, அவர்களின் கட்சியையும் நம்பவில்லை.

அமெரிக்க அரசியலில் தேர்தல் நடைமுறை, வழக்கமாக உள்ளதைவிட அதிகமாய் மழுப்பல், ஏமாற்று மற்றும் மொத்தத்தில் பித்தலாட்டமாகஉள்ளது. பொதுமக்களின் ஆதரவினைப் பெற, இரு வேட்பாளர்களும் தங்களது கட்சிகள் பாடுபடும் உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மறைக்க தங்களால் முடிந்த அளவு செய்கிறார்கள். கோரோ அல்லது புஷ்ஷோ இப்பிரச்சாரத்தில் கிடக்கும் அடிப்படை அரசியல் யதார்த்தத்தை; நவம்பர் 7 வாக்குப்பதிவிற்குப் பின்னர் அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானிக்கப் போவது தேர்தல் வாக்குறுதிகள் அல்ல, மாறாக ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களின் தேவைகளே என்பதை வெளிப்படையாகச் சொல்வதில்லை.

தேர்தல் நெருங்குகின்ற போதிலும் கூட திருப்புரிபோல் ஏறும் எண்ணெய் விலைகள், பரவிவரும் வேலை வெட்டுக்கள் மற்றும் குருட்டாம் போக்கில் முதலாளித்துவ வாதிகளால் பெரிய அளவிலும் தாக்குப் பிடிக்காத வகையிலும் செலவு வெய்வதால் தூண்டிவிடப்பட்ட உலகப் பொருளாதார கீழிறக்கம் செழுமைக்கு முடிவு நேர்வதாய் கட்டியம் கூறும் குறிகாட்டிகள், பொருளாதார நெருக்கடியின் அறிகுறிகள் குவிகின்றன. மிகவும் தொலைநோக்குடைய ஆய்வாளர்கள் சர்வதேச பொருளாதாரப் பதட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள்ளே கடும் பொருளாதாரத் தளர்ச்சிக்கு வினை ஊக்கியாக அமையலாம் - பொருளாதார மந்தத்தையும் கூட ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் பிசினஸ்வீக் அதன் அக்டோபர் 2ம் இதழில் எச்சரித்தாவது: `` உலகப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் வடுப்படும் நிலைகள் மறைவாய் இருக்கின்றன......

இப்போது பிரச்சினை என்னவெனில் உலகப் பொருளாதாரம் உண்மையான பிரச்சினைகளாக வெடிக்கப்போகின்ற வாய்ப்புள்ள அழுத்தங்களினால் பாதிக்கப்படுமா என்பதுதான். வீண் பகட்டான வளமானது நவம்பர் தேர்தலைத் தொடர்ந்து, வரும் மாதங்களில் வீழ்ச்சியை நோக்கித் திரும்புமா திரும்பாதா, கடந்த பத்தாண்டின் வர்த்தக விரிவாக்கம் மக்கட்தொகையின் 5 அல்லது 10 சதவீத செல்வந்தர்களுக்கு திணற அடிக்கும் அளவுக்கு போய்ச் சேர்ந்துள்ளது. இருபதாண்டு கால அரசியல் எதிர்வினையின் போக்கில் குவிந்துள்ள சமூக முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் அமெரிக்க அரசியலின் பரப்பெல்லையையும் மாற்றியமைக்கும்படி அவர்களிடம் உறுதியாகக் கூறியுள்ளது.

தேர்தலைப் பின் தொடர்ந்து ஆழமான சமூகப் பதட்டமும் வர்க்க மோதலும் கொண்ட காலப் பகுதி பின் தொடரலாம். அடுத்த நிர்வாகம் குடியரசுத் தலைவர் கோரால் தலைமை தாங்கப்பட்டாலும் சரி அல்லது குடியரசுத்தலைவர் புஷ்ஷால் தலைமை தாங்கப்பட்டாலும் சரி, அது நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகின் மீது வைக்க முயற்சிக்கும்.

இரு சிறிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்வு ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சியினருக்கு உண்மையான மாற்றீடை பிரதிநிதித்துவப்படுத்தாது. சீர்திருத்தக்கட்சி வேட்பாளர் பாட்ரிக் புக்கானன் ஒரு வலதுசாரி தேசியவாதி. இவர் ஐரேப்பாவில் உள்ள அதி வலதுசாரியான புலம் பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் இனவாதக் கட்சிகளுடன் ஒத்த இயல்புடைய பாசிச அடிப்படையில் அரசியலை வளர்க்க விரும்புபவர், பசுமைக் கட்சியின் ரால்ப் நாடேர் ஜனநாயகக் கட்சியினரால் கைவிடப்பட்ட மிதவாத சீர்திருத்தக் கொள்கைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் புதுப்பிக்க முடியும் என்ற பிரமைகளை ஊட்டுகிறார். அதேவேளை அவர் புக்கானன் பிரச்சாரத்தின் பிழைப்புத் தொழிலான அதே தேசியவாத உணர்வுகளுக்கு வேண்டுகோளும் விடுக்கின்றார்.

இந்த அனைத்து வேட்பாளர்களும் பரந்த உழைக்கும் மக்களுக்கும் சலுகைமிக்க தட்டுக்கும் இடையில் உள்ள சமூக இடைவெளியின் மூலம் இலாப அமைபினுள்ளேயே உள்ளது என்ற அடிப்படை உண்மையை மறைக்க விரும்புகிறார்கள்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்படி, தவிர்க்க முடியாதவாறு, தேர்தல் நெருங்குகையில் தொழிலாளர்கள் ``குறைந்த துன்பம் தருபவருக்கு``-- கோர் ஜனநாயக கட்சியாளருக்கு வாக்களிக்குமாறு அதிகம் அழுத்தத்தின் கீழ் வருகின்றனர். சோசலிச சமத்துவக் கட்சி இந்த போலி முன்னோக்கை நிராகிரிக்கிறது. உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு வரும் முக்கிய பணி, ஜனநாயகக் கட்சிக்கு அரசியலைக் கீழ்ப்படுத்திய பலபத்தாண்டுகளின் படிப்பினைகளைப் பெறத் தொடங்குதலே ஆகும்.

பில் கிளிண்டன் கீழான ஜனநாயகக் கட்சியின் கடந்த எட்டு வருட ஆட்சியானது, முதலாளித்துவ இரு கட்சி முறையின் கட்டமைப்புக்குள்ளேயே சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அரித்தலுக்கு ஒரு முற்போக்கான விடைதேடும் அனைத்து முயற்சிகளின் பயனின்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியானது, அதன் அரசியல் ஆய்வின் சர்வதேச அங்கமான உலக சோசலிச வலைத்தளத்தின் முலம், உழைக்கும் மக்களுக்கான உண்மையான மாற்றீடைக்கட்டி எழுப்ப அர்ப்பணித்துள்ளது. 2000 ஆண்டின் தேர்தலால் முன் வைக்கப்பட்ட தீர்க்கமான பிரச்சினை சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் அணிதிரட்டல் ஆகும்.

சமூக நெருக்கடியின் அடிநீரோட்டம்

கடந்த பத்தாண்டின் பங்குச் சந்தை பூரிப்பிலிருந்து உழைக்கும் மக்களை கொண்ட பெரும்பான்மை அமெரிக்க மக்களுக்கு சிறிதளவு நன்மை கிடைத்திருந்தால் அது பெரிய ஆச்சரியம் தான் என்ற ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் தீடீர்கண்டுபிடிப்பே 2000 ஆண்டின் அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் பளிச்சிடும் சிறப்பியல்பாகும்.

20ஆண்டுகளுக்குப் பின்பு செல்வந்தர்களுக்காக வரித்தள்ளுபடி கொள்கையையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுக்கான திட்டங்களில் வெட்டும், உழைக்கும் மக்களிடம் இருந்து செல்வத்தை பணக்காரர்களுக்கு மறு விநேயாகம் செய்தும், முதலாளித்துவ சந்தையின் மேலாதிக்கத்தின் பேரில், ஜனநாயகக்கட்சிக்காரர் அல் கோரும் குடியரசுக்கட்சிக்காரர் டபிள்யு. புஷ்ஷீம், ``கடினமாய் உழைத்து அதிகமாய் செலவிடும்`` திட்டத்தின் ஆதரவாளராய் வாக்காளர்களுக்கு தங்களைக் காட்டிக் கொள்வதில் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றனர்.

நேரத்துக்கு நேரம், சிறப்பாக தொழிற்துறை மத்திய மேற்கில் உள்ள முக்கிய மாநிலங்களில், செய்தி ஊடகங்களில் ததும்பி வழியும் விளம்பரங்கள் அமெரிக்க சமுதாயத்தின் செல்வம் படைத்த தட்டால் சக்திமிக்க வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் நிதி உதவி செய்யப்படுகிறது என்பதை விளம்பரப்படுத்துவதுடன், அவற்றை மக்களின் மண்ணுரிமைக் காவலராகக் காட்டுகிறது.

உதவி குடியரசுத் தலைவர் கோர் ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்குப் பின்னர் முன்னணிக்கு நகர்ந்தார். அங்கு அவர் சக்திமிக்க நிறுவனங்களின் நலன்களுக்கு தன்னை எதிராளியாக பாவனை செய்து கொண்டார். ``உழைக்கும் குடும்பங்களுக்காக`` தாம் போராடுவதாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதேவேளை குடியரசுக் கட்சியின் வரிச் சலுகைத் திட்டங்களை செல்வந்தர்களுக்கு பரிசு எனச் சாடினார்.

கோர் செப்டம்பர் மாதம் முழுவாரமும் மிகவும் செல்வாக்கில்லாத தொழிற்சாலைகளை -HMOs, மருத்துக் கம்பனிகளை சரிப்பண்ணுவதற்காக ஒவ்வொரு நாளையும் அர்ப்பணித்தார். அதன் உச்சக்கட்டமாக பெரும் எண்ணெய்க் கம்பெனிகளின் விலைச் சுரண்டலுக்கு எதிராக மத்திய எண்ணெய் இருப்பில் இருந்து எண்ணெயை வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.

குடியரசுக்கட்சி மாநாட்டு தலைமையைப் போல் அல்லாமல், செயலில் அவர்களைப் போல் நடுநிலையல்ல என்று கூறிக்கொண்டு குடியரசுக்கட்சி டெக்சாஸ் கவர்னர் புஷ், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பு மனுதாக்கல் பிரச்சாரத்துக்கு ''இரக்கமுள்ள பழமைவாதம்'' எனும் முழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டார். அவர் கல்வி, வயோதிகருக்கான உதவிகள் மற்றும் சமூகப்பாதுகாப்பு தொடர்பான முன்மொழிவுகளுடன் ஜனநாயகக் கட்சிகாரர்களுடன் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வாக்குகள் சரிகையில், புஷ் ``நடுத்தர வர்க்கத்துக்கான நகல்``ன் மைய விஷயமாக தனது வரித்திட்டத்தை திரும்பக் கொண்டு வர விரும்பினார் குடியரசுக்கட்சியினரின் பிரச்சார ஊர்வலம் மற்றும் விளம்பரங்கள், 40,000 டாலர்கள் வருமானம் உள்ள குடும்பங்கள் எப்படி புஷ் திட்டத்திலிருந்து பயடைந்தன என்பதைக் கட்டுரைக் குறிப்புக்கள் காட்டின.

அமெரிக்க சட்டமாமன்றத்தில் அதேவிதமான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன, டயர் துன்பத்தை சாத்தியமாக்கிய 1980கள் மற்றும் 1990களின் கட்டுபாடு தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு இதே அரசியல்வாதிகள் ஆதரித்த போதிலும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் Firestone வழக்கில் நிறுவனங்களைக் கண்டித்தனர்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டிற்கான போட்டியில், இருகட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வழக்கமான சட்டம் ஒழுங்கு வாய்ச்சவடாலை, தேசபக்த கொடி அசைப்பை அதிகமாய்ப் பயன்படுத்திக் கொண்டு, சமூக சலுகைகள் பெறுபவர்களுக்கு பேரிடியாக, மற்றும் அவர்களை கட்டண சுகாதார சேவை, கல்விக்கு, சுற்றுச் சூழலுக்கு மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கும் அதிகம் செலவழிப்பதன் ஆதரவாளர்களாக தங்களை கண்டுபிடித்துக் கொண்டார்கள்.

ஆளும் வர்க்கத்தின் இரண்டு கோடீசுவரர்களின் வழித்தோன்றல்களது பொதுக் கண்காட்சியில் தெளிவான கேலிச் கூத்தின் அம்சம் இருந்தது. ஒருவர் செனட்டரின் மகன், இன்னொருவர் குடியரசுத்தலைவரின் மகன், இவ்விருவரும் தங்களைத் தொழிலாள வர்க்கத்தின் நலம் விரும்பிகளாகக் காட்டிக் கொண்டனர். அமெரிக்க அரசியலின் குவிமையத்தில் திடீர் இடப் பெயர்வை வெறும் குற்றம் நாடுகிற தேர்தல் தந்திரம் என அலட்சியப்படுத்திவிடக் கூடாது. பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் சம்பந்தமாக உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இரு கட்சிகளின் முயற்சி அரசியல் ஸ்தாபனத்திலுள்ளேயே ஆழமாகி வரும் நடுக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதிகாரபூர்வமான அரசியல் வாழ்வின் மேல்தோற்றத்திற்கு அடியில் அபிவிருத்தி அடைந்துவரும் பொதுமக்களின் மனநிலைகளில் ஏற்படும் நகர்வுக்கான பதிலே அதுவாகும். அதனை பெரும் வர்த்தகர்களின் இருகட்சிகளும் உணரத் தொடங்கியுள்ளதுடன் அஞ்சத் தொடங்கியும் உள்ளன.

முந்தைய இருபத்தாண்டுகளாக வலது புறத்துக்கு இடப் பெயர்ச்சி மிதவாதம் என்று உச்சரிக்கப்பட்டது, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் நாட்களின் பின்னர் முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கம் செய்யும் அரசியல் தத்துவமாக இருந்தது, அதிகாரப் பூர்வ அரசியலில் அவமானப்படுத்தும் சொல்லாக ஆகிவிட்டது, அதேவேளை செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளிபற்றிய எந்த விமர்சனமும் கிட்டத்தட்ட துரோகமாக கருதப்பட்டது.

ஜனரஞ்சகம் என்ற பொறிகளின் 2000 ஆண்டு தேர்தல் பிரச்சாரம் கணிசமான அளவு புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக வர்க்க பிரச்சினைகளில் இருந்து மிகப் பாதுகாக்கப்பட்ட அரசியல் அமைப்பில், பொதுமக்களின் கருத்தை நெறிப்படுத்தவும் திசை விலகச் செய்யவும் பரந்த அளவில் பணம் செலவு செய்யப்பட்டது. பெரும்பான்மையினரைப் பொருத்தமட்டில் பொது முன்னேற்றம் பற்றிய அதிகாரப் பூர்வ உருவகத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை மறைப்பது சாத்தியமில்லாததாயிருக்கிறது.

இதன் விளைவாக, தேர்தல் பிரச்சாரம் பதட்டத்துடன் நெருக்கடியையும் கூட பங்களிப்பு செய்கிறது. 1980கள் மற்றும் 90களில் பொதுமக்களின் கருத்தை வெறியூட்டச் செய்த பழைய வலதுசாரி திட்டங்கள் இனியும் அதே விளைவைக் கொண்டிருக்கப்போவதிவில்லை. குடியரசுக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் வலதுசாரி பேச்சரங்க பேச்சாளர்கள் ஒருவர் கூறியபடி ``வரி வெட்டுக்களைச் செய்வதில் இனிமேல் ஒருவரும் ஆர்வம் கொள்ளமாட்டார்கள்`` என்று ஒரே மாதிரி புலம்புகின்றனர்.

உண்மையான பொருளாதார மற்றும் வர்க்கப் பதட்டங்கள் அமெரிக்க அரசியல் வாழ்வின் மேல் மட்டத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. செல்வந்தருக்கும் ஏழைக்கும் இடையில் அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், செல்வந்தருக்கும் ஒவ்வொருவருக்கும் இடையில் அதிக அகலமான இடைவெளியுடன், அமெரிக்க ஐக்கிய நாடானது பிரதான தொழில்துறை நாடுகளிலேயே மிகவும் சமூக ரீதியாய் துருவமுனைப் படுத்தப்பட்டுள்ளதாக இருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் நீண்ட பொருளாதார பூரிப்பு இருப்பினும், மக்கட் தொகையில் மிகப் பெரும்பாண்மையினரின் வாழ்க்கைத் தரங்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளன. 1970களில் பின்னர், அமெரிக்க பொருளாதார உற்பத்தி மூன்று மடங்குக்கும் அதிகமாகிய அதேவேளை மணி நேர சம்பளம் பெறும் மற்றும் மாத சம்பளம் பெறும் இருவகைத் தொழிலாளர்களின் உண்மைக் கூலிகளும் நேராக வீழ்ச்சியடைந்திருக்கின்றன. உழைக்கும் மக்கள் மேலும் மேலும் செல்வத்தை உற்பத்தி செய்யச் செய்ய, பதிலுக்கு குறையப் பெற்றனர். பெரும்பான்மை குடும்பங்களைப் பொருத்தவரை, இது நீண்ட நேரம் உழைப்பதையும் மற்றும் முறையே அடுத்தடுத்து கடனில் மேலும் முழ்கவும், கடன் செலுத்துவதற்காகவே உழைப்பதாகவும் கூட இருந்தது. சமுதாயத்தில் மிகவும் அருவருப்பாக ஏழ்மை, வீடின்மை, பசி, படிப்பறிவின்மையாக அதன் விளைவுகள் மோசமாகவும் கூட இருந்தன.

பத்து லட்சக்கணக்கான அமெரிக்கக் குடும்பங்களின் வருமான மட்டத்தில் ஒப்பிட்டளவு அல்லது மொத்த அளவு சரிவைப் பற்றிய பிரச்சினை கூட அல்ல இது, மாறாக சமூக உள்கட்டுமானம் மற்றும் சமுகத்தின் நாளாந்த தொழிற்பாடுகளில் உள்ள புலன்களால் அறியக்கூடிய அழுகல் ஆகும். பொதுக் கல்வியில் நெருக்கடி, மருத்துவ உதவி கிடைக்காமை மற்றும் விண்முட்டும் மருத்துவச் செலவு, போக்குவரத்துக்களில் அரிப்பு -அதாவது கரடுமுரடான சாலை, வெடிக்கும் டயர்கள், அபாயகரமான வான் போக்குவரத்து ஆக போக்குவரத்துக்களில் அழிவு.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் சமூக நெருக்கடியைப்பற்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

*உலகின் மிக செல்வந்த நாட்டில் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் 30 சதவீதக் குழந்தைகள் பசியின் ஆபத்தில் உள்ளதாக செப்டம்பர் 10 அன்று ஒன்று வெளியானது.

*செப்டம்பர்17ல் நியூயார்க் டைம்ஸில் உள்நாட்டு வருவாய் சேவை புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை, மக்கட் தொகையின் மேல் மட்டத்தின் 1 சதவீதம் பேருக்கு சராசரி வருமானம் 89 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனை ஒப்பிடுகையில் அடிமட்டத்தில் உள்ளோரில் 90 சதவீதம் பேரின் சராசரி வருமானம் கடந்த பத்தாண்டில் 1.6 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது.

*செப்டம்பர் 20ல் வெளியிடப்பட்ட வீடு கோரும் குழு ஒன்றின் ஆய்வு, கூட்டரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் பெறும் தொழிலாளியால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எந்த மாவட்டத்திலும் இரண்டு- படுக்கை அறை கொண்ட அடுக்கு மனைக்கு வாடகை செலுத்த முடியாது என்று கண்டறிந்தது.

*செப்டம்பர் 22ன் ஆண்டு இறுதி போர்ப்ஸ் பட்டியல், அமெரிக்காவின் செல்வம் படைத்த தனிநபர்களின், பெரும்பாலும் கோடீசுவரர்களின் வருகைப் பதிவேடு, உயர்மட்டத்தில் செல்வம் குவிவதற்கும் மக்கட் தொகையின் பரந்த பெரும்பான்மையினரைப் பொருத்த மட்டில் சூழ்நிலைகள் மோசமடைந்து வருவதற்கும் இடையில் உள்ள கடும் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்காவில் சமூகப் பிரிவுகளைக் குறிப்பிடும் அண்மைய பத்திரிகைக் குறிப்பு ``எழும் கணினி அலைகள் துடுப்புப் படகை விட பந்தயப் படகை அதிக உயரத்துக்கு துாக்குகிறது என்பதை விளக்க, வரிக்குத் திரும்பப் பெறும் தொகை பற்றிய புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டுகிறது. ஆனால் அத்தகைய அறிக்கைகள் ஒரு அடிப்படைப் பிரச்சினையைத் தள்ளிவிடுகின்றன. எந்த விதமான பொருளாதார, ``பூரிப்பு`` பலரை பின் தள்ளிவிட்டு ஒப்பிட்டளவு சிலருக்கு மட்டும் ஆதாயங்களை தருகிறது? செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கே வர வர அதிகமாய்ப் கடும் போராட்டத்தை எதிர் கொள்ளும் பொழுது, பொருளாதார முன்னேற்றம் பற்றிகூட ஒருவர் எந்த அர்த்தத்தில் பேச முடியும்?

கோரும் சரி புஷ்ஷீம் சரி இந்தப் பிரச்சினைகளை விவாதிக்க விரும்புவதில்லை. இருவரும் இலாப அமைப்பின் வாழ் நாள் பாதுகாவலர்கள், தணியா ஆவல் கொண்டவர்கள். சமூக சமத்துவமின்மை 2000ல் தேர்தல் பிரச்சாரத்தின் மைய விஷயமாக்கப் பட்டிருக்குமானால், அது ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி அரசியல் வாதிகளின் ஆவல்களின் காரணமாக அல்ல மாறாக அமெரிக்க சமுதாயத்திற்குள்ளேயான புறநிலை முரண்பாடுகளின் குவிதலால்தான். எந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்பதை பொருட்படுத்தாமல், அடுத்த நிர்வாகத்தின் கீழ், வெடிக்கும் அரசியல் மற்றும் சமூக மோதல்கள் தோன்ற விருக்கின்றன.

தொழிலாளர்கள் மீதான கால் நூற்றாண்டுகால தாக்குதல்கள்

உழைக்கும் மக்களுக்காக இருகட்சி காட்டும் அக்கறைப் போக்கில் அடிப்படை முரண்பாடு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் மீது இருகட்சிகளாலும் நடத்தப்பட்ட கால் நூற்றாண்டு கால ஈவிரக்கமற்ற தாக்குதலுக்குப் பிறகு வருகிறது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக்கட்சியினரும் அதிகரித்துவரும் கஷ்டமான சமூக நிலைமைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இந்த நிலைமைகள் 1970களில் இருந்து அடுத்தடுத்து வந்த ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் நேரடி விளைவு என்பதைப் பற்றிக் குறிப்பிடாமல் விடுகின்றனர். அவர்கள் அமெரிக்க மக்கள் பக்கத்தில் அரசியல் மறதியின் ஒரு வடிவத்தை எண்ணிப் பார்ப்பது போல் தெரிகிறது.

குடியரசுக்கட்சி மத்திய மற்றும் அரசு பட்ஜெட் செலவினங்களில் வெட்டலுடன் பொதுக் கல்வி கூடங்களின் நெருக்கடியை கூட்டியிருந்தபோதும் ஒட்டுமொத்தமாக பொதுக்கல்வியைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட தீவிர வலதுசாரி மற்றும் அடிப்படைவாதிகளுடன் அதன் கூட்டை வைத்திருந்தபோதும், புஷ் கல்வியின் நிலைபற்றிப் புலம்புகிறார்.

பல லட்சக்கணக்கானோர் மருத்துவக் காப்புறுதி இல்லாமல் இருப்பதற்காக கோர் வெளிப்படையாய் அக்கறைக்காட்டிக் கொண்டார். அதேவேளை கிளிண்டன்-கோர் நிர்வாகம், காப்புறுதி செய்யாதோர் தொகை 380 லட்சத்திலிருந்து 440 லட்சமாக அதிகரித்துக் காணப்படும் வகையில் பதிவுசெய்து குறித்து வைக்கப்படும் அளவுக்கு விட்டுச் சென்றுள்ளது.

இரு பெரிய கட்சிகளின் உணர்ச்சியைக் கிளறிவிடும் சுட்டிக்காட்டல்கள் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கான கூட்டுப் பொறுப்பை மறைத்துவிட முடியாது. 1976ல் ஜனநாயகக் கட்சி ஆள் ஜிம்மிகார்ட்டர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டதன் பின்னர், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஒவ்வொருவரும் வெள்ளை மாளிகையை 12 ஆண்டுகளுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகளாக ஒருகட்சி குடியரசுத் தலைவர் பதவியை வைத்திருந்தால் மற்றைய கட்சி அமெரிக்க சட்டமன்றத்தின் ஒரு அல்லது இரு அவைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒன்றை ஒன்று அழிக்கிற அவர்களின் எல்லா மோதல்களும் இருப்பினும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பொது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றியிருக்கின்றனர். மக்கட்தொகையில் சிறிய விகிதாச்சாரம் உள்ள சிறிய அளவினரை அனைவர் நலன்களையும் பலியிட்டு செல்வந்தராக வளப்படுத்தியுள்ளனர்.

1960களிலும் 1970களின் தொடக்கத்திலும் நிலவிய சமுக வெடிப்புகள் மற்றும் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, பெரும் வர்த்தகர்கள் வர்க்க உறவுகளை மறுவடிவமைக்க முயற்சிக்கையில் கார்ட்டரின் பதவிக்காலத்தின் பொழுது இந்நிகழ்ச்சிப் போக்குகளை தொடங்கின. உக்கிரமடைந்து வரும் சர்வதேசப் போட்டியை எதிர்கொண்டு, அமெரிக்க நிறுவனங்கள் வேலைத்தலங்களை மறுகட்டமைக்க தடையற்ற நிலையையும் ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலை திணிக்கவும் கோரின. தொழிலாளர்களுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக பெருமளவில் வேலையின்மையை வேண்டுமென்றே உருவாக்கல் அமைந்திருந்தது. இது தொழிலாளர்களைப் பெரிய அளவில் சுரண்டவும் தொழிலாளர்களது எதிர்ப்பைப் பலவீனப்படுத்தவும் ஆகும்.

20 சதவீதம் வட்டி வீதங்களை உயர்த்தவும் பண ஆட்சியைக் கட்டுப்படுத்துவதைத் திணிக்கவும் உரிமைக்கட்டளையுடன் கார்ட்டர், வால்ஸ்ட்ரீட் வங்கியாளர் பால் வோல்க்கர் என்பவரை கூட்டு நிதிவாரியத்திற்கு தலைவராக நியமித்தார். வோல்க்கர்ஸ் நடவடிக்கைகள் அவர்களின் விரும்பிய விளைவை, ஆழமான பொருளாதாரத் தளர்ச்சியையும் வேலையின்மையில் கடும் உயர்வையும் ஏற்படுத்தியது.

கார்ட்டர், கிறிஸ்லர் மீட்புக்கு தலைமை தாங்கினார். அதில் முதல்தடவையாக பிரதான தொழிற் சங்கமான ஐக்கிய மோட்டார் தொழிலாளர் சங்கம் பெரும் வேலைவெட்டுக்கள் மற்றும் ஆலைமுடல்கள் அச்சுறுத்தலின் கீழ், சம்பள வெட்டுக்களையும் அதனை விரைவுபடுத்தலையும் பேசித்தீர்த்தது. அவரது நிர்வாகம் வான்போக்குவரத்துத் தொழிற்துறையில் கட்டுப்பாடு தவிர்த்தலை முன்னறிவிக்கவும் செய்தது -ஐனநாயகக் கட்சியின் மிதவாதி எட்வர்ட் கென்னடியால் முன்னெடுக்கப்பட்ட- வரிசையான நடவடிக்கைளில் முதலாவது தொழிலாளர் ''நெகிழ்ச்சித் தன்மை'' யைத் திணிப்பதை நோக்கமாக கொண்டது மற்றும் பணியாற்றுவோரின் உடல் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நிறுவனங்களின் செலவுகளை வெட்டி வீழ்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

1980ல் ரொனால்ட் ரேகனின் தேர்தலும் தொழிலாளவர்க்கத்தின் மீது உள்நாட்டிலும் வெளியிலும் முன்னணி தாக்குதல் தொடுத்தலும் வந்தது. வரலாற்றிலேயே செல்வந்தர்களுக்கு பெரும் வரிவெட்டை திணித்துக் கொண்டு, அதேவேளை பெரும் இராணுவக் கட்டி எழுப்பலை முன் முயற்சித்தது இரு இலக்குகளைக் கொண்டிருந்தது: ஒன்று, குளிர்யுத்தத்தில் வாஷிங்டனின் போட்டியாளராக இருந்த சோவியத் ஒன்றியத்தைத் திவாலாக்கல், மற்றொன்று சமுகசேவைகளில் குறிப்பிடத்தக்க மட்டத்துக்கு செலவு செய்வதைத் தக்க வைக்க இனியும் முடியாத வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் வளங்களை வெறுமையாக்கல் ஆகும்.

ரேகன் நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் முக்கிய மோதல்களை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு பட்கோ வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தை வேலைநிறுத்தத்தைத் துாண்டவைத்தது. இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரை வெளியேற்றியது, வேலைநிறுத்தத் தலைவர்களை சிறையிலடைத்து மற்றும் சங்கத்தை திவாலாக்கியது. வெளியேற்றல்கள், சிறைப்படுத்தல்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை அபராதம் விதித்து திவாலாக்கல் ஆகியவை மூலம் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது கட்டற்ற தாக்குதலை கூட்டாட்சி அரசாங்கம் சட்டரீதியாக்கும் முறைகளால் தொழிலாளர்களின் பட்ட வர்த்தனமான தோல்வியைச் சாதிப்பது மற்றொன்று ஆக இருந்தது. சக்திமிக்க நிறுவனங்களான பெல்ட்ஸ் பாட்ஜ், கிரேஹவுண்ட், கான்டினென்டல் ஏர்லைன்ஸ், ஹோர்மல் மற்றும் டசின் கணக்கில் மற்றைய நிறுவனங்களாலும் அரைநுாற்றாண்டுக்கு முன்னெதிர்பார்த்திராத அளவில் சம்பளவெட்டு, சங்கத்தை உடைத்தல் அவைகளுக்கு பட்கோ சமிக்ஞை காட்டியது.

இந்தத்தாக்குதல்கள் AFL-CIO ஆல் அனுமதியளிக்கப்பட்டது. அது வேலைநிறுத்தத்தில் அல்லது கதவடைப்பில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்த முதலாளிகளுடன் ஒத்துழைத்து, தொழிலாளர்களை விரக்தியூட்டும் பொருட்டு அவர்களின் போராட்டங்களை நாசப்படுத்தியதுடன் தொழிற்சங்கங்களுங்குள்ளே கீழ்மட்ட அணியினரின் செல்வாக்கை பலவீனப்படுத்தியது. சங்க உறுப்பான்மை, வேலைநிறுத்த அளவு மற்றும் உண்மைக் கூலிகளின் மட்டம் சரிகின்ற அதேவேளை, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வருவாயும் தங்களைப் பாதுகாக்கும் வலிமையும் அதிகரித்தது.

1980களின் ஆரம்பத்தின் அரசியல் இடப்பெயர்வு தொழிற்சங்க உடைப்புக்கு எதிரான தசாப்தகால சமுக மனசாட்சிக்கு மட்டும் முடிவுகட்டவில்லை, மாறாக அரசாங்கக் கொள்கைகள் நிறுவனங்களின் நடத்தையை ஒழுங்குபடுத்தலாலும் குறைந்தபட்சம் சமுக நலன்களை வழங்குவதாலும் முதலாளித்துவத்தின் மோசமான அம்சங்களை மட்டுப்படுத்தும் என்ற உத்தேசத்தையும் முடிவுகட்டியது. ஜனநாயகக்கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த காங்கிரசின் ஆதரவுடன், ரேகன் நிர்வாகம் செல்வந்தர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில், கார்பொரேட் வரி மற்றும் வருமானவரிகளில் என்றுமில்லா அளவுக்கு வரிவெட்டை சட்டமாக்கியதுடன் அமெரிக்கத் தொழிற்துறையின் பெரும்பகுதிகளை கட்டுப்பாடற்றதாக்கியது மற்றும் ஏழைக்களுக்கான சமுக சேவை செலவினங்களில் வெட்டிக் குறைத்தலை ஆரம்பித்தது. விளைவு அமெரிக்க சமுகத்தின் மேல்தட்டினரின் வருவாய் மற்றும் செல்வத்தில் வெடிப்பான வளர்ச்சியாகவும் பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களினது நிலைகளில் உறுதியான சீர்கேடாகவும் இருந்தது.

அமெரிக்க சமுகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பலியிட்டு பணக்காரர்களை வளப்படுத்துதல் எதிர்பாராது விளைந்ததல்ல, அல்லது அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் உயர்அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செயல்படும் பூகோள சக்திகளின் விருப்பமில்லா விளைவும் அல்ல. அரசின் உயர்மட்டத்தில் உள்ளோரின் நனவு பூர்வமான இலக்கு நிறுவனங்களின் இலாபங்களுக்கும் தனிநபர்களது செல்வக்குவிப்புக்கும் தடைகளாய் இருக்கும் அனைத்தையும் அகற்றுவதாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கணினியில் மற்றும் செய்தித்தொடர்புகளில் ஏற்பட்ட புரட்சியான புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளுடன் இணைந்த அகநிலைக் கொள்கையானது சமுக துருவமுனைப்படலின் அதிகரிப்பை உண்டுபண்ணியது.

ரேகனிலிருந்து கிளிண்டன் வரை

1992ல் கிளிண்டனின் தேர்தல் பகுதி அளவில் பத்தாண்டுகளுக்கும் மேலான தொழிலாளர்கள் மீதான சம்பளவெட்டு, பட்ஜெட் வெட்டு மற்றும் ஏனைய தாக்குதல்கல்களுக்கு பொதுமக்களின் எதிர்விளைவாகும். ஆனால், 1992ல் ஆட்சிக்கு வந்த ஜனநாயகக்கட்சி, புதிய பொருளாதார ஒப்பந்தக் காலத்து நிர்வாகம் மற்றும் மாபெரும் சமுதாய கால நிர்வாகங்களைவிட, கார்ப்பொரேட் அமெரிக்காவுடன் மிகவும் வேறுபட்டஉறவுகளைக் கொண்டிருந்தது.

கிளிண்டனே ஜனநாயக கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான மனுதாக்கலில் வெற்றி பெற வால்ஸ்ரீட் பணத்தைத்தான் மிகவும் நம்பினார். ஜனநாயகக்கட்சி மீது அதிவலதுசாரி வேலைத்திட்டத்தைத் திணிப்பதற்கு பதவியிலுள்ளோரைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குழுவான ஜனநாயகக்கட்சி தலைமை அவையின் நிறுவனர் கிளிண்டன் ஆவார். இந்த அவை, நலஞ்சார்துறை, குற்றம் மற்றும் இராணுவம் போன்ற விஷயங்கள் மீதான குடியரசுக்கட்சியினரின் உணர்ச்சிப் பேச்சுக்கு முடிவுகட்டும். அதேவேளை, குறிப்பிடத்தக்க அளவு சமுக சீர்திருத்தம் மற்றும் வாக்குறுதிகளுக்கு முடிவுகட்டவும் மிகச்சரி சமமாக்கும் எந்த இலக்கையும் கைவிடுவதற்கும் அந்த வேலைத்திட்டம் இருந்தது.

எட்டாண்டு கால கிளிண்டன் நிர்வாகம் -அவற்றுள் ஆறு ஆண்டுகள் சட்டமாமன்றத்தின் குடியரசுக் கட்சியினருடன் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டுத்தலைமை ஆட்சியாகும் -அது 1980களின் ''பேராசை தசாப்தம்'' ஐ சிறியதாக்கும் செல்வக்குவிப்பின் களியாட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கிளிண்டன் ஒரே சீரான உடல் நலப்பாதுகாப்பு என்ற அவரது முற்றமுழுதான சீர்த்திருத்தவாத முன்முயற்சியைக் கைவிட்டபின்னர், அவரது நிர்வாகம் குடியரசுக்கட்சியினர் சட்டமன்றத்துக்கு 1994ல் தேர்வு பெற்றதால் சீர்குலைந்ததுடன் வரிசையாய் இட்டுக் கட்டப்பட்ட புலனாய்வு விசாரணைகளுக்கு ஆளாகியது.

அரசாங்க கொள்கையின் ஒரு தளத்தில், கிளின்டன் குடியரசுக்கட்சி முன்னோடிகளை விடவும் மிக முர்க்கத்தனமாக இருந்தார். உலகம் முழுவதிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் முலோபாய நலன்களையும் பொருளாதார நலன்களையும் ஆதரித்து இராணுவ பலத்தைப் பயன்படுத்துதலில் பெரும் ஏற்றத்தைச் செய்தார். கிளின்டனின் கீழ், டசின்கணக்கான பூகோள பதட்டம் மிக்க இடங்களுக்கு அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பட்டன மற்றும் முர்க்கத்தனமான நாடுகள் என்றழைக்கப்படும் ஈராக்கிலிருந்து சூடான் வரையும், ஆப்கானிஸ்தானிலிருந்து யுகோஸ்லாவியா வரையிலானவற்றின் மீதும் அமெரிக்க ஏவுகணைகள் மழையாய் பொழியப்பட்டன. கிளின்டன் அவருக்குப் பின்வருபவருக்கு உக்கிரப்படுத்தப்பட்ட இராணுவ மயக் கொள்கையை மரபுரிமையாக விட்டுச் சென்றிருப்பது, அவரது இறுதி இரண்டு வரவு-செலவுத் திட்டங்களில் பெண்டகன் செலவினங்களில் பெரும் அதிகரிப்பைச் செய்தலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

வெளிநாட்டில் அமெரிக்க பெரும் முதலாளிகளின் நலன்களை ஈவிரக்கமற்ற முறையில் பின்பற்றும் அதேவேளை உள்நாட்டில் சமுகக்கொள்கை பற்றிய பிரச்சனைகளில் ஆளும் தட்டின் ஆணைகளுக்கு கிளிண்டன் அடிபணிகிறார். 1995ல் அவருடைய ''பெரிய அரசாங்கத்தின் சகாப்தம் முடிந்தது'' என்ற மாநில ஒன்றிய கூட்டத்தில் அதை பிரகடனம் செய்தார். ஒற்றைப்பெற்றோருக்கான கூட்டரசாங்க நலம்சார் திட்டத்தை நீக்கும் 1996 மசோதாவிற்கான சட்டத்தில் கையெழுத்திட்டது, கடந்த 20 ஆண்டுகளின் கொடுமையான ஒரேஒரு நடவடிக்கையாகும். அவரது கருவூலச் செயலாளர் ரோபர்ட் ரூபின், கூட்டரசாங்க ரிசர்வ் வங்கியின் தலைவரான அலன் கிரீன்ஸ்பானுடன் நெருக்கமாக சேர்ந்து கொண்டு 1995-99 சந்தையை ஊக்கப்படுத்தினார். அப்பொழுது பங்குவிலைகள் மும்மடங்காகின மற்றும் கிட்டத்தட்ட ஒர் இரவிலேயே பேரளவு செல்வம் உருவாக்கப்பட்டது.

ரேகன் மற்றும் புஷ்ஷின் கொள்கைககளை நிராகரிப்பதற்கு மாறாக கிளிண்டன்-கோர் நிர்வாகம் மேல் தட்டு செல்வந்தர்களின் கைகளில் என்றுமில்லா அளவுக்கு அதிகமாய் செல்வம் குவிவதற்கு முன்நின்றது. குடியரசுக்கட்சியின் தலைமையால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் மிகவும் அரிதாக சமத்துவக் கொள்கையின் தட்டாக விளங்கும் சட்டமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் படி-வளர்ச்சியின் பத்தில் ஒன்பது மடங்கு தேசிய செல்வத்தின் பலாபலன்கள் கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்க மக்கள் தொகையில் ஒருசதவீதமாய் இருக்கும் செல்வந்தர்களுக்கே சென்றது.

See Also :

தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல்களும்

பகுதி2: இரண்டாயிரத்தில் அமெரிக்காவின் சமூகக்கட்டமைப்பு

பகுதி3: அரசியல் அமைப்பின் நெருக்கடி