World Socialist Web Site www.wsws.org |
WSWS : செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா: பிரான்ஸ் In wake of Israeli violence against Palestinians Anti-Jewish attacks mount in Britain and France பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய வன்முறையின் எழுச்சியில் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரிக்கின்றன By Francis Dubois மத்திய கிழக்கின் இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல்கள் ஐரோப்பாவில் யூத எதிர்ப்பு (anti-Semitic) தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளன. இலண்டன் நகரில் ஹஷிடிக் மதம் சார்ந்த (Hasidic theology) கல்வி கற்க்கும் 20 வயது மாணவன் டேவிட் மையேர்ஸ் ஒரு அல்ஜீரிய மனிதனால் மரணத்தை அண்மிக்கும்வரை தாக்கப்பட்டது நடத்துவரும் பயங்கர விளைவுகளில் ஒன்றாகும். ஆனால் இதே நேரத்தில், 5 மில்லியன் அளவில் முஸ்லீம்களையும், இவர்களில் பெரும்பானமையர் அரேபியராவர், 700,000 யூதர்களையும் கொண்ட பிரான்ஸ் நாட்டில் பதட்டமான நிலமை காணப்படுகின்றது. பாரிஸ் நகரில் சியோனிச இயக்கங்களின் அழைப்பை தொடர்ந்து 5,000 மக்கள் அங்குள்ள ஷோம்ஸ் எலிசே (Champs Elysées) வீதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்த நாட்க்களில் லியோன், பாரிஸ், மார்செய் மற்றும் ஸ்த்ராஸ்பூக் உள்ளடங்கலாக பல பெரிய நகரங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த எதிர்ப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கும் விதத்தில் இனவாதமானதும் யூத எதிர்ப்பு வாதமானதுமான வடிவத்தை எடுத்தன. கடந்த மூன்று கிழமைகளில் synagogues எனப்படும் யூதமத வழிபாடு நடக்கும் இடங்கள், யூத வியாபார இடங்கள் மற்றும் பாடசாலைகளில் 80 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பிரெஞ்சு பொலீசாரினால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சைனகோக்களில் பல திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் பாரிஸ் நகரில் திறப்பர்ஸ் (Trappes synagogue) யூத வழிபாட்டு தலங்கள் முற்றாக நொருக்கப்பட்டதுடன் நினைவு ஸ்தூபிகள் பிய்த்துதெறியப்பட்டு சுவர்களின் மேல் யூத எதிர்ப்பு கோசங்கள் எழுதப்பட்டிருந்தன. யூதக்குடியிருப்புப் பிரதேசங்களில் பயங்கரங்களும் தாக்குதல்களும் இப்போது வழமையாகிவிட்டதுடன் அங்கே ஓர் திகில் நிறைந்த சூழ்நிலை காணப்படுகின்றது. யூத அமைப்புகளின் பிரதிநிதிகள் பொலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி அரசாங்கத்திடம் அழைப்புவிடுத்ததுடன் இராணுவ பாதுகாப்பிற்கும் அழைப்புவிட்டனர். பாரிஸ் உளள்டங்கலாக, அனேகமான பெரிய நகரங்களைச் சூழவுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலேயே தாக்குதல்கள் அனேகமாக இடம்பெற்றன, முகலாயர்களும் யூதர்களும் நெருக்கமாக வாழும் இப்பிரதேசங்களில் சமூகப் பதட்டம் தீவிரமாக இருக்கின்றது. இத்தாக்குதல்களுக்கான பெரும் பொறுப்பு வறிய முகலாய இளைஞர்களைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. வட ஆபிரிக்காவினை பூர்வீகமாகக் கொண்ட பிரான்சில் வாழும் பல இளைஞர்கள் இஸ்ரேலிய அரசுக்கு எதிராக போரிடும் பாலஸ்த்தீனிய இளைஞர்களுடன் தம்மை அடையாளம் கண்டுகொள்கின்றனர். அனேகமான பிரஞ்சுப் பத்திரிகைகள் குறிப்பிடுவது போல, இந்த அடையாளம் காண்பதற்கான முக்கிய காரணம் அவர்களது சொந்த சமூக நிலமையே: அவர்கள் சமூக, அசியல்ரீதியில் ஓடுக்கப்படுவதுடன் சராசரி வறுமைமட்டத்திற்கும் கீழான நிலமைகளுக்கும் வேலையின்மைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அவர்கள் பிரெஞ்சு பொலீசாரினால் தொடர்சியான முறையில் இனவாத தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன் இத்தாக்குதல்கள் பலசந்தர்ப்பங்களில் மரணமடையும் விளைவுகளையும் கொண்டிருக்கின்றன. இவ் இளைஞர்களில் ஒரு பகுதியினர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செல்வாக்கின் கீழ் இருக்கின்றனர், அவர்கள் சியோனிச -இஸ்ரேலிய- அரசின் கொள்கைகளுக்கும் யூத மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை பொதுவாக காண்பதில்லை. அவர்கள் யூத எதிர்ப்பு ஸ்லோகங்களையும், இஸ்ரேலிய இராணுவத்தின் காட்டுமிராண்டித் தனத்தின் மீதான கோபாவேசங்களையும் பிற்கோக்குத்தனமான இன, மத கால்வாய்களின் ஊடாகப் பரப்புகின்றனர். அனேக உயர் பாடசாலைகளில் முகலாய பூர்வீகம் கொண்ட மாணவர்கள் பாலஸ்தீனியர்களுடன் அரசியல் ரீதியான உறுதிப்பாடு கொண்டுள்ளனர். சில ஆசிரியர்கள் இதற்கு ஆக்ரோசமான அரசியல் விவாதங்களின் மூலம் பதிலளிக்க முயன்றனர், ஆனால் ஏனையோர் இம் மோதுதல்களின் வரலாற்று, அரசியல் பின்னணிகளை மூடிமறைக்க முயன்றதுடன் மேலும் அவற்றினை தூய மதவாத திரிபுரைகளினால் நிராகரித்தனர். யூத எதிர்ப்பு தாக்குதல்கள் சியோனிசத்திற்கு விளைநிலமாவதுடன் அது எல்லா யூதர்களின் நலன்களின் பிரதிநிதியாக தன்னை மேலும் கூறிக்கொள்வதற்கும் ஏதுவாகும். பிரான்ஸ் நாட்டில் சியோனிச இயக்கங்கள் எப்பொழுதுமே இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய எழுச்சியினை யூத கலாச்சார இருப்பின் மீதான தாக்குதலாகவே வெளிக்காட்டி வந்துள்ளன. அதி வலதுசாரிகள் ஓரு சமூகத்தினரை மற்றய சமூகத்தினருக்கு எதிராக தூண்டிவிடுவதன் மூலம் இந்நிலமையை அவர்களது சொந்த அனுகூலங்களுக்காகப் பயன்படுத்த முயன்றனர். பாரிஸ் நகரில் தேசிய முன்னணியின் இளைஞர் குழுவொன்று இஸ்ரேலிய கொடியை எதிர்த்ததுடன் யூதமாணவர் சங்கத்தின் அங்கத்தினருடனும் சண்டையிட்டனர், இதன் போட்டியாள மற்றைய பாசிச இயக்கமான புருனோ மேக்றே இனால் தலமைதாங்கப்படும் தேசிய குடியரசு இயக்கம் "அரேபிய ஆபத்து" க்கு எதிராக சியோனிச கூட்டிணைவுக்கு அழைப்பு விடுத்தது.
Copyright
1998-2000 |