ஐரோப்பா:
ஜேர்மனி
Official march against right-wing extremism
German government demonstrates "for
humanity and tolerance"
நெருப்பு வைத்தவர்கள் நேர்மையானவர்களாக நிற்கமுயலுகின்றனர்
''நாங்கள் மனித உரிமைக்காகவும் சகித்துக்கொள்ளும்
தன்மைக்காகவும் போராடுகின்றோம்'' என்ற நவம்பர் 9ம்
திகதி பேர்லின் ஊர்வலம் தொடர்பான கருத்தோட்டம்.
By Peter Schwarz
10 November 2000
Back to screen version
எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவது என்பது ஒரு அடிப்படையான
முக்கிய ஜனநாயக உரிமையாகும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு
எதிரான தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை
இது பரந்துபட்ட மக்களுக்கு வழங்குகின்றது.பேர்லினின் நடந்த
''நாங்கள் மனித உரிமைக்காகவும் சகித்துக்கொள்ளும் தன்மைக்காகவும்போராடுகின்றோம்''
என்ற நவம்பர் 9ம் திகதி ஊர்வலம் இக்கருத்தை தலைகீழாக்கியுள்ளது.
அராங்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்கள்,கட்சிகள், வர்த்தக
குழுக்கள், தொழிற்சங்கங்கள், ஆலயக்குருமார்கள் இந்த ஊர்வலத்தை
நடாத்தினர். ஆனால் யாருக்கு எதிராக? எதற்காக?.
வலதுசாரி குண்டர்கள் வேறுநிறத்தை கொண்டவர்களை
வீதிகளில் துரத்துவதையும்,புகலிடம் கோரிவந்தோரின் விடுதிகளுக்கு
நெருப்பு வைப்பதையும், யூதமக்களின் சமாதிகளை நாசம் செய்வதையும்
இதன்மூலம் நிறுத்த முடியாதென்பது இவ்வூர்வலத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கும்
தெரியும். எனவே ''இந்நாட்டு குடிமக்கள்'' இவ்வூர்வலத்தில்
'உறுதிப்பாட்டிற்க்கும், திடமான தன்மைக்கும்' அழைப்புவிடுகின்றனர்.
ஆனால் இவ் ''உறுதிப்பாடும், திடமான தன்மையும்''
பேர்லினில் ஊர்வலமாக செல்லும் அரசியல் முடிவு எடுப்பவர்களிடம்
உள்ளதா என்பது முதலில் முக்கியமானது. இவர்கள் தமது சகித்துக்கொள்ளும்
தன்மையை அரசியல் புகலிடம் கோரும் உரிமையை இல்லாதொழிப்பது,
புகலிடம் கோரியுள்ளோரின் சமூகநல வசதிகளை வெட்டாது விடுவது,அகதிகளை
திருப்பி அனுப்பவைத்துள்ள சிறைக்கூடங்களை மூடுவது, மனிதத்தன்மையற்ற
இந்நடவடிக்கைகளை இல்லாமல் செய்வது மூலம் அதாவது வெளிநாட்டவர்களுக்கு
எதிரான போக்கிற்கு எதிராக வாயால் அல்லாது செயலால்
நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும். இவர்கள் இதனை கனவில்கூட
நினைத்துப்பார்ப்பது கிடையாது. இதற்கு மாறாக இவ்வூர்வலத்தை
நடாத்த கையெழுத்து இட்டவர்களுள் மிகக்கேவலமான தேசியவாதிகள்
அனைவரும் அடங்குவர்.
ஜேர்மன் பாராளுமன்றத்தில் வலதுசாரிக்கட்சியான
கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவரான Friedrich
Merz ''நாங்கள்வித்தியாசமான கருத்துக்களை,
மதத்தை,கலாச்சாரத்தை, நிறத்தைக் கொண்ட மக்கள் சமாதானமாக
சேர்ந்து வாழக்கூடிய, மனிதாபிமான, திறந்த, சகித்துக்கொள்ளும்
தன்மையுடைய ஒரு ஜேர்மனிக்காக போராடுகின்றோம்'' என்ற
அழைப்பிற்கு ஆதரவை வழங்கியுள்ளார். இதே Friedrich
Merz கடந்த கிழமைகளாக இவ் அழைப்பிற்கு
எதிரான எவ்வித அர்த்தமுமற்ற ''ஜேர்மன் உயர் கலாச்சாரம்''
தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளார். கிறிஸ்த்தவ சமூககட்சியின்
தலைவரும் பவேரியா மாநிலத்தின் தலைவருமான
Edmund Stoiber
உம் இதற்கு கையெழுத்திட்டவர்களில்
ஒருவராவார். இம்மாநிலத்தின் உள்நாட்டு அமைச்சரான Beckstein
மோசமான நாடுகடத்தலுக்கு பேர்பெற்றவர்
மட்டுமல்லாது வெளிநாட்டவர்களை ''எம்மை பாவித்துக்கொள்வோரும்'',
''எமக்கு பிரயோசனமானவர்களும்'' எனவேறுபடுத்தி கூறியுள்ள
இவரும் இதில் கையெழுத்திட்டுள்ளார்.
கபடநாடகம் எனக்கூறுவது மிகைப்பட்டதாக
தெரிந்தாலும், அது இங்கு பொருத்தமானதே.
தற்போதய ஊர்வலம் 8 வருடங்களுக்கு முன்னர்
இதே இடத்தில் நடந்ததின் கலந்து கொண்டோரின் கூட்டினை
ஞாபகப்படுத்துகின்றது. சோலிங்கனிலும் மோலனிலும் நடந்த
கொலைகார நெருப்புவைத்தலின் பின்னர் அன்றைய ஜனாதிபதி Richard
von Weizsaecker ஒரு தொகைஅரசியல்
வாதிகள், மதவாத அதிசயப்பிறவிகள், பாரியளவிலான பொலிசாரின்
பின்னே நின்று 'மனிதகெளரவம் மதிப்பிற்கு உரியது' எனக்கூறி ''வலதுசாரிகளின்
ஆத்திர மூட்டும் கோசங்களுக்கும், இடதுசாரிகளின் கத்தல்களுக்கும்
எதிராக அரசினை பலப்படுத்த வேண்டும் எனவும், அதே மூச்சில்
வெளிநாட்டவரின் படையெடுப்பு குறித்தும் எச்சரித்தார். சிலகிழமைகளின்
பின்னர் சகல கட்சியினரும் இணந்து அகதி அந்தஸ்த்து கோரும் உரிமையை
அடியோடு இல்லாதொழித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்கு
ஆதரவளித்தனர். இவ் ஊர்வலமானது வலதுசாரிகள் தமது அரசியலுக்கு
வெற்றி கிடைத்துள்ளதென்ற மனோவியல் மூடுதிரையையே வழங்கியது.
தற்போதைய ஊர்வலமும் இதைத்தவிர வேறு
ஒன்றையும் வழங்காது.கலந்து கொண்டோரில் பலருக்கு உண்மையாகவே
வலதுசாரிகளுக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வு
இருக்கலாம். ஆனால் அரசியலாக இந்நரகத்திற்க்கான
பாதை நல்ல முன்னுரைகளால் மூடப்பட்டுள்ளது. மனிதத்தன்மை
அற்றமைக்கும், சகிப்புத்தன்மை இன்மைக்குமான அரசியல்,சமூகக்காரணங்கள்
என்ன என்பதை அறிந்து கொள்ளாது மனிதத்தன்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும்
போராடமுடியாது. இது இவ் ஊர்வலத்திற்க்குஅழைப்புவிட்ட
அரசியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது.
இது Friedrich
Merz, Edmund Stoiber
போன்றவர்களுக்கு மட்டுமல்ல இவ்
ஊர்வலத்திற்கு அழைப்புவிடுத்த ஜேர்மன் பிரதமரான Gerhard
Schroeder இற்கும் அவரது நிதியமைச்சரான
Hans Eichel இற்கும்
பொருந்தும். இவர்களது பொருளாதார நலன்களை மட்டும்
கவனத்திற்குள்ளான அரசியலானது சமூகத்தை வசதிபடைத்தோருக்கும்,
ஏழைகளுக்கும் இடையில் ஆழமாக பிரித்துள்ளதுடன், இது உருவாக்கிய
முன்னோக்கின்மையும் நம்பிக்கையற்ற தன்மையும் வலதுசாரிகளுக்கான
விளைநிலத்தை உருவாக்கியுள்ளது.
சமூக நெருக்கடியானது கட்டாயமாக வலதுசாரிகளை
அவசியமாக பலப்படுத்தும் என்பதல்ல.கடந்த பேர்லின் ஊர்வலத்தின்
முன்னர் நாங்கள் பின்வருமாறு எழுதியிருந்தோம். ''வைமார் குடியரசின்
அனுபவங்கள் தொழிலாளவர்க்கம் சமூகநெருக்கடிக்கான
பாதையைக் காட்டாது விட்டால் பாசிசம் சீரழிந்து கொண்டுபோகும்
சமூகத்தட்டினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பதை காட்டியது.
மில்லியன் கணக்கானோரின் தலைவிதியை தீர்மானிக்கும் பலமான
பொருளாதார நலன்களுக்கு எதிரான போராட்டம்
தொழிலாள வர்க்கத்தின் அமைதியாலும், அதன் அமைப்புகளாலும்
தடைசெய்யப்படுமானால் எல்லாம் மீண்டும் வழமைக்கு திரும்ப
என்ன செய்வது என்பதற்கான பதில் அவர்களிடமுள்ளது 'கீழே உள்ளவர்களை
நசுக்கு என்பதாகும்',''.
இன்றைய நிலைமையும் இதேபோன்றதே. வலதுசாரிகளுக்கு
எதிரான உண்மையான போராட்டத்திற்கு தேவையானது சமூக
நெருக்கடிக்கான முற்போக்கான தீர்வு ஒன்றாகும். அதற்கான
முன்நிபந்தனை தற்போதய அரசியலுடனான விட்டுக்கொடுப்பற்ற
போராட்டமாகும். இம் முழு ஊர்வலத்தின் நோக்கமும் இப்படியான
ஒரு போராட்டத்தை நசுக்குவதாகும். இதில் பேச்சாளர்களாக
ஜேர்மன் ஜனாதிபதியான Johannes
Rau உடன் யூதமக்களின் சபையை சேர்ந்த
தலைவரான Paul Spiegel
உம் அடங்குவார். எந்தவொரு கட்சிக்கும் பேசும் உரிமை இல்லாததுடன்,
அரசியல் கட்சிகளின் தகவல் மேசைகளுக்கும் இடமில்லை. இதனை
ஒரு தொகை பொலிசார் கண்காணித்துக் கொள்வர்.
இவ் ஊர்வலத்தில் ஒருபரந்த கூட்டு கலந்து
கொள்ளும். கிறிஸ்த்தவ சமூக கட்சியின் தலைவரும் Edmund
Stoiber, கிறிஸ்தவ
ஜனநாயக கட்சியின் தலைவரான Angela
Merkel, பல வியாபாரத்துறையை சேர்ந்த
பிரதிநிதிகளும், சோசலிச ஜனநாயக்கட்சியின் தலைவர்களான
Gabriele Zimmer, Gregor Gysi போன்றோரும்,
தொழிற்ச்சங்கத் தலைவர்களும், மதப் பிரதிநிதிகளும் கலந்து
கொள்வர். இது அரசியலிருந்து மக்கள் அந்நியப்படுவதனால்
ஜேர்மன் பிரதமரான Gerhard
Schroeder மேற்க்கொள்ள முயலும் கூட்டுறவுவாத
அரசியலின் வெளிப்பாடாகும். இதனூடாக அவர் பலகட்சிகளுடனும்
தொழிற்சங்கங்களுடனும் ஒரு கூட்டை உருவாக்க முயல்கின்றார்.
இவ் ஊர்வலத்தை அழைப்புவிட காரமாக இருந்தவர்களும் Schroeder
இன் 1998 தேர்தல் பிரசாரத்தை ஒழுங்கமைத்த
சமூக ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான Kajo
Wasserhoevel இதற்கான பிரதம அமைப்பாளராகும்.
இது சிடுமூஞ்சித்தனத்தின் உச்சகட்டமாகும். இதில்
கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக நெருக்கடிக்கு
எதிரான போராட்டத்தை கருவிலேயே அழிக்கும் வேலையை செய்வதன்
மூலம் வலதுசாரிகளுக்கான களம் அமைத்துக் கொடுப்பவர்களாகும்.
இவ் ஊர்வலத்தை ஒழுங்கமைத்தவர்கள் அனைவரினதும்
வலதுசாரிகளுக்கு எதிரான பதில் அரசின் அமைப்புக்களை பலப்படுத்து
என்பதாகும். இது இவர்களின் தனிமைப்படும் உணர்மையை வெளிப்படுத்துகின்றது.
இதுவரை வலதுசாரிக் கட்சியான ஜேர்மன் தேசிய கட்சியான German
National Party (NPD) ஐ தடைசெய்வதில்
ஒன்றுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இப்படியான
தடையினால் வலதுசாரிகளின் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவோ
அல்லது வெற்றிகொள்ளவோ முடியாதென்பது தெரியும். இது தமது
விருப்பமற்ற எதிராளிகளுக்கு எதிராக தமது அதிகாரத்தை பலப்படுத்தும்
ஒர் முன்னுதாரணமாகும். இதன் மூலமாக சமூகநிலைமைக்கு எதிரான
எந்தவொரு இடது எதிர்ப்பையும் நசுக்க பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே German National Party க்கு
எதிரான வழக்கினூடாக இரகசியப் படையினரினுடைய நடவடிக்கைகள்
மாற்றியமைக்கப்படவுள்ளது.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|