WSWS :செய்திகள்
& ஆய்வுகள் :
விளையாட்டு
Performance enhancing drugs and the commodification of
elite athletes
சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுக்களின்: போதை மருந்துகளின் செயல்பாடுகளின்
அதிகரிப்பும் சிறந்த விளையாட்டு வீரர்களை வியாபாரமயமாக்குதலும்.
By Erika Zimmer
28 September 2000
Use
this version to print
கடந்த சில நாட்களாக சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டி அதிகாரிகளால் (IOC)
அறிவிக்கப்பட்ட அமெரிக்க விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளினதும்
போதை மருந்துசெயல்பாடுகளின் அதிகரிப்பு பரவலான விளம்பரத்திற்குள்ளாகியுள்ளது.
அதிவேகஓட்ட வீராங்கனை மாரியோன் யோன்ஸ் இன் கணவரான
அமெரிக்க குண்டெறிதல் வீரரான சி.யே.கண்டர் கடந்த செவ்வாயன்று
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC)
Steroid Nandralone போதை மருந்து
பாவித்துள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளார். இவர் விளையாட்டு
அதிகாரிகளின் கருத்துப்படி சிட்னி நிகழ்ச்சிகளுக்கு முன்னரே காயப்பட்டுள்ளாரென
கோரி ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவர் இவ்
வருடம் நான்கு முறை போதைமருந்துகள் பாவித்துள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு அமெரிக்க
அதிகாரிகள் ஓர் விசேட பத்திரிகை மாநாட்டை கூட்டியதுடன்,
கன்டர் ஓர் குற்றமற்றவரென கோரியுள்ளனர். இவ் வெளிப்படுத்தல்கள்
அமெரிக்கவிளையாட்டு வீரர்கள் குழுவின் மேல் சந்தேகத்தை கிளப்பியதுடன்,
குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமெரிக்க விளையாட்டு
அமைப்புகள், 15 மற்றைய அமெரிக்க விளையாட்டு வீரர்கள் யார்
போதைமருந்து வகைகளை கடந்த ஒன்றரை வருடமாக பாவித்தார்கள்
என்ற பெயர்களை மறைத்துவிட்டார்கள்.
35 விளையாட்டுவீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளும்,
கண்டர் சம்பந்தமான வெளிப்படுத்தலும் சிட்னி ஒலிம்பிக்
விளையாட்டின் "100 வீதம்போதை மருந்துகள் இல்லை"
என்பதன் முயற்சியின்பகுதியென IOC அதிகாரிகள்
தெரிவித்தவேளையில், பல வல்லுனர்களும் விமர்சகர்களும் சர்வதேச
ஒலிம்பிக் கமிட்டியின் செயல்களை நிராகரித்ததுடன் இது ஓர் வழக்கமான
ஒலிம்பிக் சடங்குகளே ஒழிய வேறு எதுவுமில்லையென கோரியுள்ளனர்.
சிட்னி ஒலிம்பிக் விளையாட்டின் ஒழுங்குகள் கமிட்டி
குழுவின் வைத்தியரான பீற்றர் லாக்கின்ஸ், இவ் நிகழ்ச்சிகளுக்கு
முன்னர் அவுஸ்ரேலிய ஒலிபரப்பு குழுவின் (ABC)
தற்பொழுதய விவகாரங்கள் நான்கு
மூலைகள் என்ற நிகழ்ச்சிக்கு பேட்டி அளிக்கையில், "சிட்னி
விளையாட்டுகளின் போதை மருந்துகளை பரீட்சிப்பதன் இறுதி
நோக்கம் "ஓர் முக்கிய பொதுமக்களுடன் தொடர்புபட்ட
பயிற்சி" என கூறினார்.
ஒழுங்கு நடவடிக்கை மூலம் கிழக்கு ஜரோப்பாவிலும்,
வளர்ச்சியடையாத நாடுகளிலும் இருந்துதான் கூடியளவு பதக்கங்கள்
திருப்பி வாங்கப்பட்டுள்ளன. இது அவர்களுக்கு அநேகமாக நிகழக்கூடிய
காரணம் அவர்களால் மருந்து கண்டு பிடிப்பதை மறைப்பதற்கான
வழிமுறைகள் தெரியாமையும், மற்றும் ஆயிரக்கணக்காண டொலர்கள்
செலவளித்து மிகவும் இலகுவில் மூடிமறைக்கக்கூடிய சாதுரியமான
போதை மருந்து வகைகளை வாங்க முடியாமல் இருப்பதுமாகும்.
Kazakhstan நீச்சல் வீரர்
Evgueni Yermakoga, Diuretic என்ற
போதை மருந்தினை பாவித்ததாக நிருபிக்கப்பட்டுள்ளார். சீன-
தாய்பாய் பாரம் தூக்குபவரான
chen po-ou உம் செக்காய்யை சேர்ந்த
பாரம் தூக்குபவரான Zynek
Vacura இருவரும் Steroids
காணப்பட்டதுடன் வீட்டிற்கு திருப்பி
அனுப்பப்பட்டனர். ஈரானிய குத்து சண்டை வீரரான Anonshirvan
Nounian, பல்கேரியா முப்பாய்ச்சல்
வீராங்கனையான Iva Pranadjera இருவரும்
Stesod Nandrelone இனை
பாவித்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரேனியன் பந்தைய, மைதான அதிகாரிகள்
அநுமதித்திருந்த போதும் உக்ரேனியன் குண்டெறிதல் வீரரான
அலெக்சாந்தர் பகாச் திரும்பவும் ஸ்ரிடேபாட்டுக்கு நிரூபிக்கப்பட்டதுடன்
அவரின் போதைமருந்து மட்டும் "ஓர் குதிரையை சாகசெய்யும்"
என தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் பரீட்சித்துப் பார்க்கும்
முறையுடன் சந்தேகம் கொண்டுள்ளனர். கென்ய 4x400
மீற்றர் அஞ்சல் ஓட்டக் குழு உறுப்பினர் சிமொன் கெம்பொய்,
ஆகஸ்ட் 21ந் திகதி விளையாட்டுகளுக்கு முன் நடந்த பயிற்சிகளில்
நான்டறலீன் (Nadaralione) இற்கு
சாதகமாக நிரூபிக்கப்பட்டதன் காரணமாக விளையாட்டை விட்டு
வெளியேற்றப்பட்டார். பைலோ-ரஷ்ய சுட்டியல் எறிபவரான
வாடிம் டேவயாட்டேஸ்கியும் கூட போதைமருந்துகள் பாவிப்பதற்கான
சோதனையில் தவறியதையடுத்து நீக்கப்பட்டுள்ளார். கங்கேரி,
புல்காரியா இரண்டு குழுவில் இருந்தும் பல பாரம் தூக்குபவர்கள்
சாதகமாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர், பாரம் தூக்குவதை முற்று
முழுவதாகவே இல்லாமல் செய்யவேண்டுமென அழைப்புவிடப்பட்டது.
பல்கேரியா முழு குழுவினருமே வெளியேற்றப்பட்டனர்.
அன்ரியா ராடுகான், 16 வயது ரோமோனியா
விளையாட்டு வீராங்கணை கடைசியாக மருந்துகளுக்கு சாதகமாக
நிரூபிக்கப்பட்டுள்ளார். Pesndoepherne
எனப்படும் பொதுவாக காச்சல்,
குளிர் குளிசைகளில் காணப்படுவது அவரில் கண்டு பிடிக்கப்பட்ட
பின் அவரின் தங்கப்பதக்கம் திரும்பி வாங்கப்பட்டது. அவருடைய
குழு வைத்தியரால் முன்னரே வைத்திய குழுவிற்கு அறிவித்தபடியே
ராடுகானுக்கு 2 காச்சல் குளிசைகள் உடனேயே கொடுக்கப்பட்டன.
இருந்தும் ராடுகானின் விளையாட்டில் குளிசைகள் ஏதுவித மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லையென்ற போதும் சர்வதேச ஒலிம்பிக்கமிட்டி
தயவு காட்டும் கோரிக்கையை மறுத்ததுடன்,
மருந்து பாவிக்கும் சகலவிளையாட்டு வீரர்களுக்கு மேல் கடுமையான
நடவடிக்கைகளை எடுப்பதற்கு கோரியுள்ளது.
ராடுகான் பற்றி இன்று கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 20 வருடமாக போதை மருந்துகள் பாவனையில் ஆராய்ச்சி
செய்பவரான Penn State
பல்கலை கழகத்தில் வைத்தியரான Chuck
Yulsalis, ABC
நிகழ்ச்சியில் கூறியதாவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்
பரிசோதனைமுறை படுதோல்வியில் அடைந்துள்ளது என்றார். அற்லான்டா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்ததில் இருந்து அநேகமாக
மாற்றமடைந்துள்ளது என்வெனின், பத்திரிகையாளர் போதைமருந்துக்கள்
பரீட்சிக்கும் விளையாட்டுக்கள் பற்றி எழுதுவதில் குற்றம் குறை
கூறுவதும், தாக்குதலும் கூடியுள்ளது என யூஸ்சாலிஸ் குறிப்பிட்டார்.
"அத்துடன் படுதோல்வி அநேகமாக எங்கிருந்து
வருகிறதெனின் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் உறுப்புகளின்
வளர்ச்சிக்கு பாவிக்கும் மருந்துவகைகள், EPO
Testosterhe பசைகள்
பூச்சுகள் பாவிப்பதாலாகும். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
என்ன செய்கிறார்கள் என்றால்17 வயது பிள்ளை காய்ச்சலுக்காக
அவருடைய குழு மருத்துவரால் கொடுக்கப்பட்ட குளிசையை
பாவித்ததில் பிடிபட்ட பின் தங்கப்பதக்கத்தை திரும்பி வாங்கி விட்டனர்.
இது துக்கமில்லையென்றாலும் பரிகாசிக்க கூடிய மாதிரியுள்ளது"
Sports illustrated
என்ற பத்திரிகைக்கு யூஸ்சாலிஸ் "அட்லான்டா விளையாட்டில்
பின் 18 மாத ஆய்வுகளின் எடுத்துக்காட்டு போதை மருந்துகளின்
பாவனை பரவுகின்ற மட்டத்தினை அடைந்திருக்கின்றது. அதன் விசாரணைகளின்
வெளிப்பாடுகாட்டியது என்னவெனில், அங்கே ஓர் சிறிய வீதமான
விளையாட்டு வீரர்கள் மட்டுமே போதை மருந்து பாவிப்பதில்லை.
அங்கே ஓர் சிறிய பகுதி யார் போதை மருந்துகள் பாவித்து
பிடிபடுகின்றார்கள் அத்துடன் கூடிய வீதமானவர்கள் யார் போதைமருந்து
பாவித்து பிடிபடாமல் இருக்கின்றார்கள்" என கூறினார்.
Andrew Jennings இனுடைய
கடைசியில் புத்தகத்தின்படி, மைதானங்களின் புதிய பிரபுக்கள் (The
New Lords of the rings) சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டி களவாகப்பாவிக்கும்
போதைமருந்தை மறைப்பதில் சுயநலமிக்கதாக உள்ளனர். ஏனெனில்
இதன் மூலம் அன்பளிப்பாளர்களை இழக்கலாம் என பயப்படுகிறது.
நீண்ட கால சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
யின் விமர்சகர் அன்டிறு யெனிங்ஸ் உறுதி செய்வதாவது,
"போதை மருந்து உள் எடுப்பது ஒலிம்பிக் விளையாட்டில்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அளவு கடந்துள்ளதுடன்,
பன்நாட்டு நிறுவனங்களின் திறந்த செக் புத்தகங்களை சர்வதேச
ஒலிம்பிக் கமிட்டியிடம் கொடுத்துள்ளதன் மூலம் சுத்தமான
விளையாட்டு வீரர்களை அவமதிப்பது போல அதிகாரமளித்துள்ளது".
அமெரிக்காவில் முன்னைனாள் சிறந்த நீச்சல்வீரரான
மார்க் ஸ்பிஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பிரகடனத்திற்கு எதிராக
"சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு போதை மருந்துகள் எடுப்பது
பற்றி முழுக்க தெரியும், இது முழுவதுமே தொலைகாட்சியின் தரப்படுத்தலும்
வியாபாரத்திற்கு நேரத்தை விற்பதும், காசுக்காகவுமே"
எனக் குறிப்பிட்டார்.
விளையாட்டு
வீரர்கள்மேல் வியாபார அழுத்தம்
பரவலாக கூறப்படுவது போல்விளையாட்டு வீரர்களால்
களவாகப் பரந்தளவில் பாவிக்கப்படும் போதைமருந்துகள்
"தனிப்பட்டவர்களின் விருப்பம்" என்பதல்ல கேள்வி, ஆனால்
இது விளையாட்டுகள் இனிமேல் இல்லையென்ற வியாபாரமயமாக்கப்பட்டதின்
நேரடி விளைவும், போட்டியாளர்கள் வெல்வதற்கு பாரிய அழுத்தம்
கொடுக்கப்பட்டுள்ளதுமாகும். அமெரிக்காவை தளமாக
அமைந்த விளையாட்டு சந்தைப்படுத்தும் தலைமை அதிகாரியான
JimMillman
அனுமதித்தது போல "சந்தையின் பார்வையில் இருந்து, தங்கப்பதக்கம்
வெல்வதே தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். வெள்ளியையும்
பித்தளையையும் வெல்வது குறைந்த வியாபார பெறுமதியுள்ளது".
பத்தாண்டுகள் காலமான பயிற்சியும் அர்ப்பணிப்பும்
வாழ்க்கை பூரான வெற்றியையும், நிதி வெகுமானத்தையும்......
நூற்றில் ஓர் செக்கன் இல்லை சில
சென்றிமீற்றர் தான் நிச்சயிக்கின்றது. வளர்ச்சியடையாத நாட்டில்
இருந்துவந்த விளையாட்டு வீரருக்கு, சிலவேளை தொடர்ச்சியான
பஞ்சத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஊடகமாக அமையலாம்.
தங்கப்பதக்கத்தை வென்ற அதி சிறந்த விளையாட்டு
வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் புத்தியை குழப்பும் செயலாகும்.
சிட்னி விளையாட்டில் தங்க பதக்கத்தை வென்றதற்கான 400-மீற்றர்
ஓட்ட விராங்கனை Cathy Freemann
$4000,000 தொகையாக வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 3 வருடங்களில்
10 மில்லியன் Cathy Freemann சம்பாதிக்க
முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னுமோர் "சூடான சொத்து"
பல தங்க பதக்கங்களை வென்ற அவுஸ்ரேலியரான நீச்சல் வல்லுனர்
ஜயன் தோர்ப்பே. இவருடைய சம்பாதிக்கும் சக்தி ஒரு வருடத்திற்கு
1,5 மில்லியன் இருந்து 8 மில்லியனிற்கு மேல் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேனர் ரைற்றர் 2 தடவை பொதுநல நாடுகளிலும்
ஒலிம்பிக் விளையாட்டிலும் தங்க பதக்கங்களை பெற்றவர். அண்மையில்
அவருடைய positive என்ற
புத்தகத்தில் 1994 கனடா பொதுநல நாடுகளின் விளையாட்டில் தங்கப்பதக்கங்கள்
வெற்றிக்கு பின்னர்தான் போதை மருந்துகள் எடுப்பதற்கு தீர்மானித்ததாக
தெரிவித்தார். இதுதான் ஒலிம்பிக் மட்டத்தில் போட்டியிடுவதற்கான
ஒரே ஒரு வழி என்ற உண்மையை தெரிவித்தார். மேலும் அவுஸ்திரேலிய
உயர் அதிகாரிகள் கண்ணை மூடி எப்படியான மருந்துவகையை
பாவிப்பது, எவ்வாறு பரிசோதனையிலிருந்து தப்புவது என்ற வழிகளை
கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அற்லாண்டா ஒலிம்பிக் 400 மீற்றர் ஓட்ட வீரரான
அவுஸ்ரேலியரான பவுல் கீறின், சிட்னிமேர்னிங் கரால்ட் என்ற பத்திரிகைக்கு
கூறியதாவது, பல கேடயங்களுக்கு உத்தியோகபூர்வமாக பண
உதவி செய்யும் பழக்கம்" போதைமருந்து பாவிப்பவர்களை
நேரடியாக வெகுமதி கொடுப்பதுடன், ஊக்குவிக்கின்றது"
"துப்பரவாக இரு அத்துடன் நான்காவதாக வா, உன்னுடைய
பின்பக்கம் மேசையை பார்க்கும், குளிசைகளை எடு அத்துடன் 3
வதாக வா- நாங்கள் உங்களுடைய வழிக்கு கொடுக்கின்றோம்"
என்றார்.
அவர் 1996 அட்லான்டாவில் வெற்றியடைய தவறியதை
அடுத்து அவருடைய பணஉதவி துண்டிக்கப்பட்டுவிட்டது எனக்கூறினார்.
முக்கியமான
ஆரோக்கிய அபாயங்கள்
ஒலிம்பிக் சின்னத்தின் பெயரையும் உயர்ந்தளவு
லாபத்தை பாதுகாப்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும்
விளையாட்டு அமைப்புகளும் சிந்தனையில் கொண்டுள்ளன. பத்தாண்டுகாலமாக
அவர்கள் கண் மூடித்தனத்திற்கு திரும்பியது தனியே ஆயிரக்கணக்கான
விளையாட்டு வீரர்களை போதைமருந்து என்ற வர்த்தக சந்தையை
நோக்கி தள்ளியது மட்டுமல்ல மிகவும் முக்கியமாக விளையாட்டு
வீரர்களின் நீண்டகால ஆரோக்கியத்தில் பாரியவிளைவுகளையும்
துன்பங்களையும் ஏற்படுத்தும். புதிய அலைகளில் ஒன்றான EPO
போதை மருந்து கூட மிகவும் அபாயமானது.
எலும்பிற்குள் உள்ள மச்சையினுள் புதிய சிவப்பு இரத்த உயிரணுக்களை
உருவாக்க தூண்டி விடுவதற்கான ஓமோன்களை EPO
உற்பத்தி செய்கிறது. ஓர் ஊசியின் விலை கிட்டத்தட்ட $
1000, இது 15வீதம் வரை செயல்பாடுகளை
கூட்டுமென கூறப்படுகிறது. பக்க விளைவுகள் பயங்கரமானதும்
கூட. இரவில் புதிய சிவப்பு உயிரணுக்களின் அலைகளினால் இரத்தத்தை
உடல்பூராக நகர்த்துவதற்கு இதயம் மிகவும் கடினமாக
வேலை செய்ய வேண்டும். கடந்த 25 வருடங்களுக்கு மேலான
மதிப்பீட்டின் படி, EPO
வின் பக்க விளைவால் நித்திரையில் இளம் விளையாட்டு வீரர்கள்
இறந்துள்ளனர்.
சிட்னி விளையாட்டில் போதை மருந்துகளின் தெரிந்தெடுப்புகளில்
மனித வளர்ச்சி ஓமோன்கள் (hGh)
புகழ்பெற்றது. புரோட்டின் உற்பத்தியை தூண்டுவதன் ஊடாக
தசைகளின் எலும்புகளின், உயிரணுக்களின் வளர்ச்சியை விரைவாக்கும்.
அதே வேளை குறைந்த கொழுப்பை உருவாக்கும். பல
விளையாட்டு வீரர்கள் செயற்கை மனித வளர்ச்சி ஓமோன்களை
பாவிப்பதாக தோன்றினாலும் அவர்களுடைய இயற்கையான
அமைப்பில் அவர்கள் CJD இற்கு
தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார்கள். இது மூளைக்
குழப்பத்தையும், கட்டிகளின் வளர்ச்சியையும், எலும்புகளும்
மூளையும் அளவிற்கு அதிகமாக வளர்ச்சியையும், இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்தலாம் என கூறப்படுகின்றது.
Hemopure என்ற பிரபல்யமான
போதைமருந்து இரத்தமாற்றுக்கான பிரதியாக கண்டுபிடிக்கப்பட்டது.
Dan Pfaft என்ற
கனேடிய- தலைவர் இம்மாத Time
புத்தகத்திற்கு "விளையாட்டு வீரர்கள்
Hemopure கூட
நாடுகிறார்கள், அத்துடன் அவர்கள் வெறி பிடித்துள்ளார்கள். இந்த
புதிய பொருள்- செயற்கையான இரத்தம், தசை நார் இழைகளுக்குள்
ஆக்சிசனின் (oxygen) உள்
எடுப்பை உயர்த்தி இவற்றில் சில உங்களுடைய அமைப்பை உயர்த்த
பற்றாக் குறைவாக்கிவிடும். நீங்கள் இறக்கவேண்டியுமிருக்கலாம்"
என தெரிவித்தார்.
உண்மையான நிலை என்னவெனில், பில்லியன் கணக்கான
டொலர்கள் விளையாட்டிலிருந்து கறந்து எடுப்பதற்காக முதலிடப்படுகின்றது.
அத்துடன் அவர்களுடைய சாதகமான திறமைகளை கவனத்திற்கு எடுத்தாலும்
மருந்துகளின் பாவனை அதிகரிப்பதுடன் அவ்வீரர்களின் உயிருக்கு பாதகமாகின்றது.
|