World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா

Violent protests in Indian capital over factory closures

இந்தியத் தலைநகரில் ஆயிரக் கணக்கான பக்டரிகள் மூடப்படும் திட்டத்தை எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள்

By Terry Cook
23 November 2000

Use this version to print

சூழல் மாசடைவதற்கு எதிரான இந்திய உயர்நீதிமன்றக் கட்டளையின் பேரில் பல்லாயிரக் கணக்கான சிறிய தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுவதை எதிர்த்து, இந்திய தலைநகர் புதுடில்லி வீதிகளில் தொழிற்துறை தொழிலாளர்களும் தொழிற்சாலை சொந்தக்காரரும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

திடீரென தொழில்கள் இழக்கப்பட்டதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி போக்குவரத்துக்களை தடை செய்ததோடு சில இடங்களில் அரசாங்க கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ மூட்டினர். டில்லியின் பல பாகங்களிலும் குண்டாந்தடியுடனும் கண்ணீர் புகையுடனும் ஆயுதபாணிகளாக அலைந்த பொலிசாருடன் மோதுதல்கள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்ததோடு ஒரு இளம் தொழிலாளி சஜூபூர் (Chajjupur) பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தினால் திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நகரசபை அதிகாரிகள் குடிமனைப் பகுதிகளில் சூழலை "மாசுபட" செய்யும் தொழிற்துறை நிலையங்களுக்கு சீல் வைக்க அதிகாரிகள் குழுக்களை அனுப்பியதில் இருந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. 10 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை சேவைக்கு அமர்த்தும் 97,600 சிறிய தொழிற்துறை அலகுகள் ஒன்றில் இழுத்து மூடப்பட உள்ளன அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் செவ்வாய், புதன் கிழமைகளிலும் -சிறிய அளவில்- தொடர்ந்து இடம்பெற்றது. டில்லி அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொலிசாரையும் 40 ஆயுதம்தாங்கிய புதுடில்லி பொலிஸ் பிரிவுகளையும் நான்கு விசேட அதிரடிப்படை பிரிவுகளையும் மேலும் இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பிரிவுகளையும் சேவைக்கு அமர்த்தியது. இதைத் தொடர்ந்து தலைநகர் முற்றிலும் ஒரு பொலிஸ் முகாம் பிராந்தியமாக மாறியது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் புதுடில்லி ஆட்சியாளர்களையும் தேசிய அரசாங்கத்தையும் உடனடியாகவே பதட்டத்துக்குள் தள்ளியது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் (புதன்) கூறியதாவது: "திங்கட்கிழமை தலைநகர் ஒரு தசாப்தத்துக்கு மேலாக தரிசித்திராத காட்சிகளை தரிசிக்க வைத்தது... பஸ்கள் எரிக்கப்பட்டன. கும்பல்கள் காடைத்தனங்களில் ஈடுபட்டன. பொலிசார் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறங்கினர். இதே சமயம் புதுடில்லியிலான இன்றைய குழப்பநிலைக்கு பொறுப்பானவர்கள் சகலரும் இதன் பொறுப்பை ஆளுக்காள் -டில்லி முதலமைச்சர்- நகர நிர்மாண அமைச்சர் மீதும்- அவர் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மீதும்- கட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்" என்றது.

செவ்வாய்க்கிழமை புதுடில்லி சட்டசபை கூட்டப்பட்ட ஒரு சில நிமிடங்களுள் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியையும் பாரதீய ஜனதா கட்சியையும் சேர்ந்தவர்கள் அந்தளவுக்கு ஆளுக்காள் குற்றம் சாட்டுவதிலும் கவண் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தொடர் இயங்க முடியாது ஸ்தம்பித்துப் போயிற்று. இதே காரணங்களால் அன்று மாநகர சபை ஸ்தம்பித்துப் போயிற்று.

இந்த விவகாரம் புதிய ஒன்றல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகரில் உயர்மட்ட சூழல் மாசடைவு சம்பந்தமாக ஒரு தனிப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தலைநகரில் இந்த ஒழுங்குமுறையற்ற கைத்தொழிற்சாலை பெருக்கத்தை தடுக்கவோ அல்லது காற்று, நீர் மாசுபடுவதை தடுக்கும் அடிப்படை பாதுகாப்பு தரங்களை நிர்ணயிக்கவோ எதுவும் செய்யத் தவறிவிட்டனர்.

1996ல் உயர்நீதிமன்றம் புதுடில்லியின் வதிவிட பகுதிகளில் உள்ள பெருமளவிலான சிறிய கைத்தொழில்களை மூடிவிடும்படி ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. புதுடில்லி மாநகரசபை குடிமனை பகுதிகளில் புதிய சிறு தொழிற்சாலைகள் ஸ்தாபிதம் செய்ய புதிய லைசென்சுகள் வழங்காதிருப்பதை ஊர்ஜிதம் செய்யும்படியும் இத்தீர்ப்பு கேட்டிருந்தது. அவசியமான அங்கீகாரங்களை கொண்டிராத ஆயிரக்கணக்கான சூழலை மாசுபட வைக்கும் தொழிற்சாலைகள் 1997 ஜனவரியில் இருந்து உற்பத்தியை நிறுத்த வேண்டும் அல்லது தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய இணங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நீதிமன்ற கட்டளைக்கிடையேயும் மாநகர ஆட்சியாளர்களும், மாநில ஆட்சியாளர்களும் தேர்தலை பின்னணியாகக் கொண்டு இக்கட்டளையை முழுமையாக அமுல் செய்வதை தொடர்ந்து தாமதம் செய்து வந்தனர். இதுவைர 39000 அலகுகள் மூடப்பட்டுள்ளன. பெருந் தொகையானவற்றில் கைவைக்கப்படவில்லை. இதே சமயம் 15,000 புதிய லைசென்சுகளும் வழங்கப்பட்டன.

"டில்லி மாஸ்டர் பிளானின்" (Delhi Master Plan) கீழ் அரசாங்கம் மூடிய தொழிற்சாலைகளை இடம்மாற்ற புதிய பிராந்தியங்களை உருவாக்க வேண்டி இருந்தது. ஆனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் பிராந்தியங்கள் தண்ணீர், மின்சாரம் உட்பட்ட அடிப்படைத் தேவைகளைத் தன்னும் கொண்டவையாக இல்லை என முறைப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அத்தோடு அது பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பத்தில் ஒரு பங்கைத் தன்னும் உள்ளடக்கி கொண்டுவிடாது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடோ அல்லது உதவியோ வழங்கவில்லை.

இந்த குழப்ப நிலைக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லி அரசாங்கம் தொழிற்சாலைகள் மூடுவிழாவை "மெதுவாக" செய்ய இடமளிக்கும்படி கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. "நகரில் நிலைமை மோசமடைந்து போகும் சாத்தியம் இருப்பதால்" இதற்கு இடமளிக்க வேண்டும் என டில்லி ஆட்சியாளர்கள் கோரினர். மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றமோ "குண்டர்கள் சும்மா வீதிகளில் இறங்கி விட்டதைச் சாட்டாகக் கொண்டு நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற்றுவிடமுடியாது" என கூறி மறுத்துவிட்டது.

எவ்வாறெனினும் நகராட்சி சபை தொடர்ந்தும் நிறுவனங்களை மூடும்படி சீல்வைப்பது இல்லை என ஏற்கனவே தீர்மானம் செய்துள்ளதோடு சீல்வைத்து மூடப்பட்ட 650 அலகுகளின் சீலை உடைக்கவும் தொடங்கியுள்ளது.

ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான பாரதீய ஜனதாக் கட்சியின் தூதுக் கோஷ்டியைச் சந்தித்த பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் இதில் தலையிட்டார். அவர் நகர நிர்மாண அமைச்சர் ஜக்மோகனுடன் ஒரு அவசர கூட்டத்தை நடத்தினார். அவர் உயர்நீதமன்றத்தை வேறொரு முறையில் அணுக வேண்டும் என தெரிவித்தார். தொழிற்சாலைகளை வேறிடத்துக்கு நகர்த்த மேலதிக அவகாசம் கோருவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த தொழிற்சாலைகள் மூடப்படுவதை மேற்பார்வை செய்யும் ஏஜன்சிக்கு பொறுப்பான ஜக்மோகன் "சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளை" குடிவதிவு பகுதிகளில் தொடர்ந்தும் அனுமதிக்கும் வகையில் 'டெல்லி மாஸ்டர் பிளானை' திருத்த போவதாக தெரிவித்துள்ளார். உத்தேச திருத்தங்கள் "சிறிய வீட்டுத் தொழிற்துறைகள்", "மாசுபடுத்தாத" என்ற வரைவிலக்கணங்களை மாற்றியமைக்கும். இது உண்மையில் நகரின் வதிவிடப் பகுதிகளில் சகல தொழிற்சாலை அலகுகளுக்கும் தொடர்ந்து இயங்க இடமளிப்பதாக விளங்கும். தற்போது தீங்குவிளைவிக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 4000-5000 க்கும் இடைப்பட்டதாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் தலையெடுத்துள்ள பிரச்சினைகள் இலாப முறையின் தோல்விக்கு தெளிவான ஒரு உதாரணமாகும். மாநகரசபை, அரசு, தேசிய மட்டத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்க அதிகாரிகள் லஞ்சம், ஊழல், சந்தை சபலங்களால் சிருஷ்டிக்கப்பட்ட குழப்பம் நிறைந்ததும் திட்டமிடப்படாததுமான தொழிற்சாலைகள் அபிவிருத்திக்கு பொறுப்புச் சொல்லியாக வேண்டும். இதன் பெறுபேறாக தொழிற்துறை தொழிலாளர்கள் அழுக்கானதும் சுகாதாரமற்றதும் பெரிதும் ஆபத்தானதுமான நிலைமைகளின் கீழ் அற்ப சம்பளத்துக்காக உழைக்கத் தள்ளப்பட்டனர். இதே சமயம் உள்ளூர்வாசிகளின் சுகாதாரமும் வாழ்க்கையும்- இவர்கள் பெரும்பாலும் இதே தொழிலாளர்களாகவும் அவர்களது குடும்பத்தினராகவும் இருந்தனர்- ஆபத்தினுள் தள்ளப்பட்டது.

டில்லிக்கான புதிய திட்டங்களுக்கு இணங்கிப் போகக் கூடிய வகையில் ஆளும் பிரமுகர்களின் சில பகுதியினர் இந்தக் குழப்ப நிலைமையையிட்டு ஏதாவது செய்தாக வேண்டும் எனத் தீர்மானித்துள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் இது தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையிட்டு அசிரத்தை காட்டுகின்றன. இவர்களில் பலர் தொழிலோ அல்லது நலன்புரி சேவை வசதிகளோ இல்லாமல் அனாதரவான நிலைக்குள் தள்ளப்படுவர். சந்தையின் அராஜகமான தொழிற்பாடு காரணமாக தொழில் தேடும் தொழிலாளர்களின் அவசியங்களுக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகளால் சிருஷ்டிக்கப்பட்டுள்ள பரிதாபமான நிலைமைகளுக்கும் இடையேயான மோதுதல் தீர்த்துவைக்கப்படாது போய்விடுகிறது.

தொழிற்சாலைகள் கட்டுப்படுத்த முடியாத புகைகள், டொக்சிக் பொருட்களுடன் சேர்ந்து புதுடில்லியின் குடிமனைப் பகுதிகளில் தற்போதைக்கு தொடர்ந்தும் இருந்தும் வரும் போல் தெரிகின்றது. சுற்றாடல், வனவள அமைச்சின்படி டில்லி குடிமனைப் பகுதிகளில் அமைந்துள்ள 96,000 தொழிற்சாலைகளில் 683 பக்டரிகள் மட்டுமே அத்தகைய தன்மை கொண்டதான இயந்திரங்களை கொண்டுள்ளன. இந்த நகரின் ஊடாக ஓடும் யமுனா நதி ஒரு 'மகத்தான சிறந்த சாக்கடை' யாக ஓடிக்கொண்டுள்ளதாக தொடர்புச் சாதன அறிக்கைகள் வருணிக்கின்றன. ஏனெனில் தொன் கணக்கான கழிவுகளும் டொக்சிக் கழிவுகளும் இதனுள் கொட்டப்படுகின்றது.

புதன்கிழமை ஹிந்துஸ்தான டைம்சில் (Hindustan Tims) வெளியான ஒரு ஆசிரியத் தலையங்கத்தின்படி பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் வீடுகளுக்கு அருகே தொழிற்படுவதன் காரணமாக கடந்த ஆண்டு சுமார் 50 மக்கள் கொல்லப்பட்டனர். உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கையில் இந்த கட்டுரையாளர் ஆபத்துக்களையிட்டு பின்வரும் சித்திரத்தை தீட்டியிருந்தார்:

"தொழிற்சாலைகளுள் பலவும் அவற்றின் அயலில் உள்ள சுற்றாடலை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாது பலவும் சாத்தியமான நரகங்களாகவும் இருந்து கொண்டுள்ளன. அவற்றின் களஞ்சியங்கள் பெற்றோலியம் போன்ற இரசாயனப் பொருட்களால் நிறைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரிதும் தீப்பிடிக்கக் கூடிய மெதைல் இதைல் கிரோன் (Methyl ethyl ketone) மெக் பெரொக்சைட் என்பன அடங்கும். இவை பெயின்ட் (Paint), இரசாயன கைத்தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சமமான முறையில் ஆபத்தானது 'தின்னர்' (Thinners). இது பெயின்ரை நீராக்க பயன்படுகின்றது. இது அறையின் உஷ்ணத்தை ஆவியாக்குவதோடு உரிய முறையில் மூடிவைக்கப்படாது போனால் வெடிக்கவும் வாய்ப்புண்டு.

"இந்தக் களஞ்சியங்கள் பலவும் பல குடும்பங்களைக் கொண்ட வீடமைப்பு திட்டங்களின் அடித்தளத்தில் உள்ளன. 40 பேரை பலி கொண்ட லால் குவான் துயர நாடகம், அடித்தள களஞ்சியத்தில் தீப்பிடித்ததன் மூலம் ஆரம்பமாகியது. இந்தக் களஞ்சியத்துக்கு மேலாக 500 மக்கள் வசிக்கும் பிரமாண்டமான வீடமைப்பு திட்டங்கள் இருந்து கொண்டுள்ளன. குற்றப்புலனாய்வு கிளை அதிகாரி கூறுவதன்படி "களஞ்சிய அறை திறந்திருந்தது உண்மையில் அதிஸ்டமே. இல்லாது போனால் அதன் தாக்கம் இடைச் சுவரில் ஏற்பட்டு இருக்கும். அது முழு கட்டிடத் தொகுதியையே சிதறுண்டு போக வைத்திருக்கும்".

டில்லியின் தொழிற்சாலைகள் இடைவெளியே கிடையாத நெருக்கடி மிகுந்த குறுக்கு ஒழுங்கைகளால் பெரிதும் செருகிப் போயுள்ளன. குடிமனைக் கட்டிடங்களால் சுற்றிவளைக்கப்பட்ட சாரிய றோஹிலா கெமிக்கல் (Saria Rohilla Chemical) தொழிற்சாலை கடந்த வருடம் தீப்பிடித்த போது தீயணைப்போர் பல இயந்திரங்களில் இணைக்கப்பட்ட தண்ணீர் பைப்புகளை பொருத்த வேடிண்டி நேரிட்டது. இதன் பெறுபேறாக தண்ணீர் அளுத்தம் பெரிதும் குறைந்து போனதோடு தீயைக் கட்டுப்படுத்த பல மணித்தியாலங்களும் பிடித்தது. டில்லி தீயணைக்கும் அதிகாரி இதை நினைவு கூர்கையில் கூறியதாவது: "நடமாடுவது முடியாத காரியம். கைத்தொழில்களைத் தான் மறந்து விடுவோம் ஆனால் பிராந்தியம் மக்கள் குடிவாழத் தன்னும் பொருத்தமில்லாதது" என்றார்.