World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா 

Market reforms fuel regional divisions

India creates first new states in 30 years

சந்தை சீர்திருத்தங்கள் பிராந்திய பிரிவினையைத் தூண்டுகின்றன

முப்பது ஆண்டுகளில் இந்தியா முதலாவது தடவையாக புதிய மாநிலங்களை உருவாக்குகிறது

By Ganesh Dev
20 October 2000

Use this version to print

இந்தியாவில் நவம்பர் 1ல் மூன்று மாநிலங்கள் வரவிருக்கின்றன. சட்டிஷ்கார், ஜார்க்கண்ட் மற்றும் உத்திராஞ்சல் ஆகிய மூன்று மாநிலங்கள் முறையே பெரிய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட இருக்கின்றனது. இந்தப் புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான சட்டம் இயற்றல் முப்பதாண்டுகளில் முதல்முறையாக ஆகஸ்டில் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் கீழ்சபையிலும் ஒரு சில நாட்களில் முன் தள்ளப்பட்டது.

இந்த புதிய மாநிலங்கள் உருவாக பிரதான ஊக்கி ஆக இருந்த உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி இந்த ஏற்பாடு ``மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக`` என்று கூறினார். ஆனால் மூன்று பிராந்தியங்களிலும் மாநிலம் உருவாக்கப் படுவதற்கான இயக்கங்கள், சிலவற்றுக்கு வரலாற்று வேர்கள் இருந்த போதிலும் அவை ஒப்பீட்டளவில் அண்மைய இயல் நிகழ்ச்சியாகும். அவை மேல் மட்டத்துக்கு வந்ததும் முக்கியத்துவம் பெற்றதும் 1990களில் தான் - அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கம் சந்தை சீர்திருத்தம் மற்றும் பொருளாதார கட்டுப்பாட்டில் தளர்ச்சியை நடை முறைப்படுத்துகையில் வெளித்தள்ளும் சக்திகளால் இவை உருவாக்கப்பட்டன எனலாம்.

தற்போது இருக்கும் மாநிலங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் இருபதாண்டுகளில், தேசிய வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுவதன் பகுதியாக நிறுவப்பட்டன. பல்வேறு மொழி, இன, பிராந்திய மற்றும் மத குழுக்களை ஐக்கியப்படுத்த பிரிட்டீஷ் ராச்சியத்தின் பகுதியை ஒரே தேசமாக அமைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் 1947ல் இந்தியா பாக்கிஸ்தான் என்று மத அடிப்படையில் இனக் கலவரங்கள் மத்தியில் இப்பிராந்தியம் துண்டிக்கப்பட்டதால் இந்த வேலைத்திட்டம் தொடக்கத்திலேயே தவறாக ஆனது. மேலும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் சில்லறை போட்டிகள், அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் இன, வகுப்புவாத தூண்டல் ஆகியவற்றால் உக்கிர மடைந்திருந்தது. 1960ல் பம்பாய் சகோதர கலவரங்கள் மகாராஷ்ட்ரா, குஜராத் எனும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைய வழிவகுத்தன.

1991ம் ஆண்டிலிருந்து, (இ) காங்கிரஸ் அரசாங்கம் முதல்கட்ட பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்த பொழுது, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட இரு நிகழ்ச்சிப் போக்குகள் எழுந்தன. இவை தேசிய ஜக்கியத்தை மேலும் பலகீனப்படுத்தி பிராந்தியங்களுக்கு இடையில் பகைமைகளை உக்கிரப்படுத்த தொழிற்பட்டு வருகின்றன மற்றும் பொருளாதார அரசியல் சுயாட்சிக்கான புதிய கோரிக்கைகளுக்குத் தள்ளுகின்றன.

முதலாவது, பூகோளரீதியாக இயங்கும் மூலதனத்தின் உச்ச அளவு வீதத்தில் இலாபத்தைப் பெறுவதற்கான விடாப்பிடியான தேடல் ஆகும். இப்பூகோள மூலதனம் இந்தியப் பொருளாதாரத்துடன் இணையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அது நாட்டின் பரந்த பிரதேசங்களை ஊடறுத்துக் கொண்டு பம்பாய், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரில் சிறு பொருளாதார வளர்ச்சித் திட்டுக்களை உருவாக்கியுள்ளது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் சமூக துருவமுனைப்படுத்தல் போல மாநிலங்களுக்கு இடையிலும் மாநிலத்திற்குள்ளேயும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

சுதந்திர வர்த்தக வலையங்கள் உண்டாகியுள்ளன. இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பலியிட்டு சிலர் செல்வந்தாராய் வளர்ந்துள்ளனர். சில வர்த்தகர்கள் அசாதாரணமாக வளர்ந்துள்ளனர். அதே வேளை இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மறுசீரமைத்தல், கார்ப்பொரேஷன்களாக மாற்றல் மற்றும் தனியார் மயமாக்கல் மூலம் தங்களின் வேலைகளை இழந்து வருகின்றனர். அதேபோல இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் உதவிக்கொடுப்பனவுகளும் உதவிகளும் வெட்டப்பட்டு விட்டன.

``பூகோள இந்தியா`` - பொருளாதார சீர்த்திருத்தங்களால் பயனடைந்திருப்பவர்கள் மற்றும் பூகோள நிதியிலும் முதலீட்டிலும் பங்கு கொண்டிருப்பவர்கள் 100 கோடி இந்திய மக்கள் தொகையில் ஒரு துளி பகுதியினர் தான்: அதாவது, 1999-2000ல் 50 லட்சம் பேர்தான்; இது மக்கள் தொகையில் வெறும் 0.5 சதவீதம்தான். இவர்கள்தான் இந்தியப் பங்குச் சந்தையில் 89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 4000 பில்லியன் ரூபாய்களை சம்பாதிக்கின்றனர். இது 67 கோடிப்பேர் தங்கள் வாழ்க்கைப்பாட்டுக்கு நம்பி உள்ள விவசாயத்துறையின் மொத்த உற்பத்திக்கு சமமான தொகையாகும்.

இரண்டாவது காரணி இந்த பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு இந்திய ஆளும் வட்டங்களில் உள்ள அரசியல் பதிலாகும். பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தலில் தேசிய அரசாங்கத்தின் பாத்திரம் வெற்றிகரமாகக் குறைந்து வருகின்றதால் அரசியலின் கவனம் தேசிய தளத்திலிருந்து சர்வதேச தளத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறது. முரண்பாட்டு ரீதியாக இவை, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ``தங்களது`` வட்டாரங்களை மலிவான கூலி உழைப்புக்கு கவர்ச்சி மிக்கதாய் ஆக்குவதில் வர்த்தகர் மற்றும் அரசியல் வாதிகளின் கூட்டுகள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் நகரங்களுக்கிடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

இருக்கின்ற பிராந்திய குறுகியவாதம் மற்றும் வகுப்புவாத அடிப்படையில் விசுவாசிகள் பாணியில் மொழி, இன, பிராந்திய மற்றும் சாதி வேறுபாடுகளைச் சுரண்டிக் கொண்டு, புதிய அரசியல் குழுக்கள், கட்சிகள், எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்திய மாநிலத்திற்கு அப்பால் சிறிலங்கா, மலேசியா, பிஜி மற்றும் எங்கும் உள்ள தமிழ்மக்களுக்கும் நீட்டிக்கும் 'தமிழ் தேசம்' எனும் பார்வைக்கு வேண்டுகோள் விடுக்கும், அதில் அளவுகளில் வேறுபடுகின்ற அரசியல் கட்சிகள் மேலாதிக்கம் செய்கின்றன.

பிரதான தேசியக் கட்சிகள் - ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான பங்காளரான பாரதிய ஜனதாக்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான (இ) காங்கிரஸ் அதிகமாய் இதே போக்குகளில் இழுபடுகின்றன. இருகட்சிகளும் தேசிய வேலைத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாக பிராந்திய, சாதி மற்றும் வகுப்புவாத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆதரவுக்காக விண்ணப்பம் செய்கின்றன. குறிப்பாக, இவ்விருகட்சிகளும் மூன்று மாநிலங்களை உருவாக்கும் சட்ட மசோதா மூலம் நீராவிரோலராக இணைந்து வேலை செய்தன.

பிரிட்டீஷ் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் சொந்தம் கொண்டாடிய (இ) காங்கிரஸ் புதிய மாநிலங்களை உருவாக்க கடந்த காலத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். ஆனால் ஆகஸ்டில் பாராளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது, அதற்கு எதிர்ப்பு வந்தது பிராந்திய மற்றும் பகுதிகளில் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடம் இருந்து மட்டுமே ஆகும். அவற்றின் எதிர்ப்பும் கூட உருவாக இருக்கும் புதிய மாநிலங்கள், பிராந்திய தட்டுக்களின் நலன்களை அச்சுறுத்தும் வண்ணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ மேலும் புதிய மாநிலங்கள் ஏற்படத் தூண்டிவிடக்கூடியதாக இருக்கிறது என்பதுதான் அவர்களது பிரதான ஆட்சேபனையாக இருந்தது.

இந்த எதிர்ப்பு பாராளுமன்றத்தின் இருபக்கங்களிலும் இருந்து வந்தன. சமதாகட்சி, ஐக்கிய ஜனதாதளம், ஷிரோன்மணி அகாலிதளம், தெலுங்கு தேசம் கட்சி, பிஜீ ஜனதாதளம், சிவசேனை மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய பிராந்தியக் கட்சிகளின் சாம்பார் உள்ளடங்கிய ஆளும் ஜனநாயக தேசியக் கூட்டணியினர் புதிய மாநிலங்களை உருவாக்க எதிர்த்து வாக்களித்தனர். பாராளுமன்றத்தின் மறுபுறம் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸ்) (சி.பி.ஜ(எம்) மசோதாவை எதிர்த்தன. சி.பி.ஜ.(எம்) ஐப் பொருத்த வரை, அதன் தலைவர்கள், தங்களது கட்சி இருபதாண்டுகளுக்கும் மேலாக மாநில அரசாங்கத்தை நடத்திவரும் மேற்கு வங்காள மாநிலம், உடைக்கப்படவிருக்கும் மாநிலப்பட்டியலில் அடுத்ததாக இருக்கலாம் என்பதில் தான் கவலை கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக பி.ஜே.பியும் (இ) காங்கிரசும் இணைந்து மசோதாவை நிறைவேற்றின. இருகட்சிகளும் குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிற அதேவேளை, இந்த பிரச்சினையில் இணைய முடிவு செய்தது முதலாளித்துவத் தட்டுக்களின் மத்தியில் உள்ள உணர்வைப் பிரதிபலிக்கிறது. அதாவது பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலை முன்னெடுத்துச் செல்ல அழுத்தம் கொடுப்பது, இருக்கின்ற மாநிலங்களை உடைத்து அதிக எண்ணிக்கையில் சின்னச் சின்ன மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் போட்டிகளை உருவாக்கி, பொருளாதார ரீதியில் தங்களைச் சார்ந்திருக்குமாறு வைக்கமுடியும் என்பதாகும்.

பிசினஸ் இந்தியா, மாதம் இரு முறை இதழ், இந்திய அரசாங்கம் புதிய மாநிலங்கள் பற்றிய மசோதாவை மே மாதம் வைக்கத் தவறியதன் பின்னால், இந்தக் கவலைகளைத் தெளிவுபடுத்தியது. பொருளாதாரத் ``திறமை`` தேவை என்று கூறி, ``கடந்த முப்பதாண்டுகள் சிறிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் நிதிரீதியாகவும் மிகவும் சாத்தியமானவை, என்பதுடன் சிறப்பாக ஆட்சி செய்யப்பட முடியும், எல்லா முறைகளிலும் சிறப்பாக நிர்வகிக்கப்பட முடியும் என்று எடுத்துக்காட்டியுள்ளன. கேரளா, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் மற்றும் அண்மையில் கோவா, தில்லி ஆகியன அதனை நிரூபித்துள்ளன. மறுபுறம் நிலப்பரப்பு ரீதியாகவும் மக்கட்தொகை ரீதியாகவும் அளவில் பெரிய - பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்காளம் போன்றவை பெரிய பலவித சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.``

அந்த இதழ் தொடர்ந்து கூறுகிறது: மறுபக்கத்திலிருந்து வரும் வாதம் பெரிய மாநிலத்திற்கு உட்கட்டுமானம் தொடர்பாக பொருளாதார ரீதியாக நலன் கிடைக்கும் என்கிறது. எடுத்துக்காட்டாக, சிறிய மாநிலத்தைப் பொருத்த வரையில் விரிவான தொலைத் தொடர்பு வளையத்தை நிர்மாணிப்பது மிகுந்த பொருட் செலவுள்ளதாக இருக்கும்: அதனை விசாலமான பிரதேசத்தில் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் இதற்கான விடை இந்த சேவைகளை தனியார் மயப்படுத்துவதில் இருக்கிறது. எங்கு சிறிய மாநிலம் அதன் சேவைகளை மற்றைய மாநிலத்துக்கு விஸ்தரிக்க முடியாதோ அதனை மாநிலம் கடந்த நிறுவனங்கள் நிச்சயமாய் செய்ய முடியும்``.

இந்தப் புதிய மாநிலங்களால் உட்கட்டுமானங்களை வழங்க முடியாது போனால் அவற்றின் பணிதான் என்ன? பிசினஸ் இந்தியாவைப் பொருத்தவரை, அது அக்கறைப் படுவது, இந்திய மக்களுக்குப் பெரிதும் தேவைப்படும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் நலப்பணிகளை கைவிடுவதாக இருக்கும். பெரிய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தச் சிறிய மாநிலங்களை ஏற்படுத்தலில் எதை எதிர்ப்பார்க்கின்றார்கள் என்றால், சிறிய மாநிலங்களை நிர்வகித்தலால் செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் அது தங்களது தேவைகளுக்கு கூடிய அளவு ஒத்துப்போகும் என்பதுதான், முதலீட்டாளர்களின் தேவைகளை ஒரு மாநிலத்தால் பூர்த்தி செய்ய முடியாது போனால், மூலதனம் வேறெங்கும் போய்விடும் அல்லது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய அந்தப் பகுதிகளில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும்.

இந்த அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகள் இந்த மூன்று புதிய மாநிலங்களும் வரவிருக்கும் வழிகளில் ஏற்கனவே காணப்படுவதைப் பார்க்க முடியும்.

சட்டிஸ்கார்

மத்தியப் பிரதேசத்தின் சட்டிஸ்கார் பகுதி மாநிலத்தின் 45 சதவீத வருமானத்தை பிரதானமாக சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து பெறுகிறது. ரெய்ப்பூர் டியோபோக் சுரங்கங்களில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வுகள் உலகின் வளமான வைரப் பிரதேசங்களுள் ஒன்றைக் கொண்டிருக்கக் கூடியதாக புதிய மாநிலம் வரப்போகிறதைக் காட்டுகின்றன. கடந்த மாதம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த செய்தியின் படி ``பண மூட்டைகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும்`` புதிய மாநிலம் அதிகாரப் பூர்வமாய் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னரே மொய்க்கத் தொடங்கிவிட்டன. தென்னாப்பிரிக்க வைர சுரங்கக் கம்பெனியான டீபியர்ஸ் அந்தப் பகுதியில் 12,000 சதுர கிலோ மீட்டர் பரப்பைத் தோண்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறது.

அதன் ஒப்பீட்டளவு பொருளாதார அபிவிருத்தி இருந்த போதிலும், சட்டிஸ்காரில் உள்ள பரந்த பெரும்பான்மை மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். 80 சதவீதத்தினர் விவசாயிகள் ஆவர். அவர்கள் வருடத்தில் ஒருபோகம் பயிர்த்தொழிலில் ஈடுபட்டபின்னர் மீதமுள்ள காலங்களில் வேறு வேலைகளைத் தேடி வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விடுவார்கள். அப்பகுதி அரசியல் வாதிகள் பிராந்தியத்தின் வளங்களின் மேலே தங்களின் ஆதிக்கத்திற்காக, அம்மக்களிடையே பரந்தளவில் காணப்படும் விரக்தியையும் நம்பிக்கையின்மையையும் வழிப்படுத்தி தேசிய வாதத்தைத் தட்டி எழுப்பி வருகின்றனர்.

ஆரம்பகாலங்களில் தனிமாநிலத்திற்கான கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தாலும், சட்டிஸ்கார் இயக்கமானது, 1991ல் பி.ஜே.பி. அந்தப் பிராந்தியத்தில் தனக்கு தேர்தல் செல்வாக்கை உண்டு பண்ணுவதற்காக சட்டிஸ்கார் பிரச்சினையை ஆதரித்த பின்னால் அதனை (இ)காங்கிரஸ் தொடர்ந்ததும் தான் புது வேகம் பெற்றது. சட்டிஸ்கார் ராஜ்ய சங்கர்ஷ் மோர்ச்சா 1999 மே-தான் தொடங்கப்பட்டது. 1994ல் சட்டிஸ்கார் சுயமரியாதைக் கழகத்தை நிறுவிய அறிவுஜீவுகளின் கூட்டத்தில் வரலாற்று அடையாளத்தைக் கொண்டிருக்கும் குழுக்களில் இருந்து தான் சட்டிஸ்கார் ராஜ்ய சங்கர்ஷ் மோர்ச்சா உதயமானது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலமானது, இந்தியாவின் மிகப் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான மாநிலங்களுள் ஒன்றான பீகாரின் பொருளாதார ரீதியாக அதிகம் அபிவிருத்தி அடைந்த பகுதியைப் பிளந்து அமைக்கப்படுகிறது. இந்தத் துண்டாடாலானது பீகாருக்கு நிதிரீதியாக துயரமானது. இதனால் பீகாரின் மொத்த ஆண்டு வருவாயான 42 மில்லியன் ரூபாய்களில் 20.2 மில்லியன் ரூபாய்களை இழக்கக் கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதே வேளை பீகார் 65 சதவீதம் மக்களைக் கொண்டிருக்கும். பாராளுமன்ற விவாதத்தின் பொழுது ஆளும் ராஷ்ட்ரிய ஜனதாதள உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார், ``இரு கூறாகப் பிளத்தல் எங்களுக்கு வெள்ளத்தையும், சேறும் சகதியையும் மட்டுமே விட்டுவைக்கும்`` என்று பீகாரில் உள்ள கட்சிகள் இதற்கு நஷ்ட ஈடாக 1799 மில்லியன் ரூபாய்களைக் கேட்டன. ஆனால் விஷயம் பாராளுமன்றக் குழுவிற்கு விட்டுவிடப்பட்டது.

தனி ஜார்கண்ட் மாநிலத்திற்கான இயக்கம் இந்தப் பிராந்தியத்து ஆதிவாசி மக்கள் மத்தியில் சற்றே 70 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றம் கொண்டிருந்தது. அது சில பத்தாண்டுகளாக செயலற்றுக் கிடந்தது. 1990களில் பொருளாதார மறுசீரமைப்பு நிலக்கரி மற்றும் இரும்பு எஃகு தொழிற்துறைகளைத் தாக்கத் தொடங்கிய பொழுது, வட்டார அரசியல் வாதிகள் மீண்டும் தனிமாநிலக் கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்புகளில் ஈடுபட்டனர். பீகார் மாநில அரசாங்கம் 1994ல் ஜார்க்கண்ட் சுயாட்சி மன்றத்தை (JAAC) ஏற்படுத்தியதன் மூலம் வட்டார அரசாங்க செயல்முறையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இது மட்டுமே மேலும் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டது.

உத்தராஞ்சல்

உத்தராஞ்சல் சில வழிகளில் மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இதை நிர்மாணிப்பது உத்தரப்பிரதேசத்தின் மிகவும் முன்னேற்றகரமான பகுதிகளை வெட்டுவதை சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. மாறாக தலைகீழானது. இப்புதிய மாநிலத்தின் பெரும்பகுதி இமயமலையின் மலை அடிவாரத்தில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றில் போதுமான சாலை வழிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பள்ளிகள் கிடையாது. பத்திரிகைகளில் இந்த மாநிலம் உருப்படியாய் இயங்குமா என்ற சந்தேகம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

உத்தராஞ்சல் மாநில உருவாக்கத்திற்குப் பின்னால் சாதி அரசியல் இருக்கிறது. இது 1990 களில் ஆரம்பத்தில் மலை மாவட்டங்களின் முன்னேறிய அல்லது உயர்சாதி என்றழைக்கப்படும் மக்கள் மத்தியில் இந்து இனவாத பி.ஜே.பியால் தூண்டிவிடப்பட்டது. 1990ல் உத்திரப்பிரதேச அரசாங்கம் பின்தங்கிய அல்லது தாழ்ந்த சாதியினருக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பெரும் வாய்ப்பு என்ற வடிவில் சலுகை வழங்க முனைந்தது.

தாழ்ந்த சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடுகள் சாதி அமைப்பு முறையை ஒழிக்கவில்லை. மாறாக அவற்றை நிறுவனமயப்படுத்தி உள்ளன. இந்த இடஒதுக்கீட்டு முறையை பி.ஜே.பி யானது அனைத்து சமூகத்தட்டின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வாய்ப்புக்களை உயர்த்தும் நிலைப்பாட்டிலிருந்து எதிர்க்க வில்லை மாறாக முன்னேறிய சாதியினருக்கு எதிரான ``பாரபட்சம்`` காட்டலை முடிவுக்குக் கொண்டு வரவே கோரியது. கட்சியானது - உதாரணமாக, இடஒதுக்கீட்டு முறையின் காரணமாக ஏழையான, உயர்சாதித் தட்டுக்கள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள் என்ற அதன் கருத்தை ``மெய்ப்பிக்கும்`` வண்ணம் உத்தராஞ்சல் மலைவாழ் மக்களின் ஆதரவைப் பெற்றது.

சாதி அடிப்படையிலான எதிர்ப்புக்களுடன் பி.ஜே.பியின் இந்து தீவிரவாத நிகழ்ச்சி நிரலும் சேர்ந்து தனி இந்து மாநிலத்துக்கான இயக்கமாக அது மாற்றமடைந்தது. எல்லைகள் வேண்டுமென்றே உத்தம் சிங்நகர் மற்றும் ஹரித்வார் ஆகியவற்றின் தாழ்நிலங்களின் மாவட்டங்களையும் உள்ளடக்கி வரையப்பட்டது. ஹரித்வாரில் முக்கிய இந்து புனித தளங்கள் உள்ளன. இந்த ஏற்பாடு ``சமவெளி`` மக்கள் மத்தியில் புதிய மாநிலம் அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என அதிருப்தியையும் எதிர்ப்புக்களையும் தூண்டிவிட்டிருக்கிறது.

உத்தராஞ்சலில் உள்ள சூழலானது சாதி, மத, மொழி மற்றும் இனவேறுபாடுகளை அடிப்படையாய்க் கொண்ட இவ்வகை அனைத்து இயக்கங்களின் பிற்போக்குத் தன்மையைக் கோடிட்டுக்காட்டுகிறது. இதன் விளைவு தொழிலாளவர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை மோதவிடுவதாக இருக்கிறது. ``சமவெளி மக்களை`` ``மலைமக்களுக்கு`` எதிராகவும் உயர்சாதி ஏழைகளை தாழ்ந்தசாதி ஏழைகளுக்கு எதிராகவும் ஜார்கண்ட்டில் இருக்கும் ஆதிவாசி மக்களை பீகாரிகளுக்கு எதிராகவும் நிறுத்துவதுடன், இந்த இலாப அமைப்பு முறையினுள்ளே இருக்கும் சமூக நெருக்கடியின் உண்மையான மூலகாரணத்திலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது.

சட்டிஸ்கார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தராஞ்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்னும் புதிய மாநிலங்கள் வரலாம். ஏற்கனவே இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் வளம் மிக்க விதர்ப்பா பிராந்தியத்திற்காக தனிமாநிலக் கோரிக்கை உள்ளது. பிசினஸ் இந்தியா தனது கட்டுரையில், ராஜஸ்தானையும் மேற்கு வங்காளத்தையும், பெரியதாகவும் கஷ்டமானதாகவும் உள்ள மாநிலங்களாகத் தான் கருதும் மற்ற மாநிலங்கள் என முன் மொழிந்தது. எவ்வாறாயினும், தனது குறுகிய நலன்களுக்காக இந்திய ஆளும் வர்க்கம் சின்னச் சின்ன மாநிலங்களை உருவாக்குவதன் மூலமும் சில்லறைத்தனமான பிராந்திய வாதத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலமும் அரசியல் மற்றும் சமூக பேரழிவுக்கு வழி அமைக்கின்றது. அது துணைக்கண்டத்தைக் கூறுபோடலும் அதன் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இனக்குழு, சாதி மற்றும் வகுப்புவாத மோதல்களில் மற்றும் யுத்தங்களில் தள்ளுவதும் ஆகும்.