WSWS : செய்திகள்
& ஆய்வுகள் : உலகப்
பொருளாதாரம்
Globalisation: The Socialist Perspective
பூகோளமயமாக்கல்: சோசலிச முன்னோக்கு
By Nick Beams
6 June 2000
Use
this version to print
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச
ஆசிரியர் குழுவினருள் ஒருவரும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின்
தேசிய செயலாளருமான நிக் பீம்ஸ் அண்மையில் ஆறு ஆஸ்திரேலியப்
பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமான சொற்பொழிவுச் சுற்றினை
முடிந்திருந்தார். பீம்சின் சொற்பொழிவான -பூகோளமயமாக்கல்:
சோசலிச முன்னோக்கு- க்கு சிட்னி, மெல்பேர்ன், நியூகாசில்
மற்றும் கான்பேராவில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள்,
தொழிலாளர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
உலக சோசலிச வலைத்தளம் தமிழில் இச்சொற்பொழிவின்
மூன்று பகுதிகளில் இரண்டாம் பகுதியை இங்கே வெளியிடுகிறது.
பகுதி 1 | பகுதி 2 |
பகுதி
3
1997-98ல் ஆசியப் பொருளாதார நெருக்கடி
என்று அழைக்கப்படுவதன் தோற்றமானது ``சுதந்திர சந்தை``
யினை வக்காலத்து வாங்குவோருக்கு உடைந்து போகுமளவிலான
தாக்கத்தை கொடுத்தது. 1993ல் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியை
``ஆசியப் பொருளாதார அற்புதம்`` எனவும் வறுமைக்கு
முடிவுகட்டும் என்றும் முதலாளித்துவ சந்தையின் திறமைக்கு
சான்றாகும் என உலக வங்கியால் பொய்யுரைக்கப்பட்டது.
அவர்களது உரிமைகோரல்களுக்கும் அனுபவத்தின்
பரிசோதனைக்கும் இடையில் உள்ள உண்மையான முரண்பாடுகளால்
தடைப்படாது, பூகோள முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் ``சுதந்திரச்
சந்தையை`` உரத்த குரலில் பாதுகாப்பது அதிகரிக்கின்றது.
அமெரிக்க பெடரல்ரிசர்வ் போர்டின் தலைவர்
அலன் கிரீன்ஸ்பான் 1998 ஏப்ரலில் ஆசிய நிதி நெருக்கடி முழுஅளவில்
இருந்தபோது வழங்கப்பட்ட பிரதான உரையின்போது, ``சந்தை
முதலாளித்துவத்தை நோக்கிய முக்கியமான, இணக்கமற்ற போக்கின்
சாட்சியமாக இது இருக்கின்றபோதிலும் ஒரு முக்கியமான மைல்கல்"
என இந்த நெருக்கடியை பிரகடனம் செய்தார். கிரீன்ஸ்பானின்
படி, ``மனித இயல்பில் ஆழமாய்ப் பதிக்கப்பட்ட தொகை உறுதிப்பாடுகளில்``
இருந்து சந்தை எழுகின்றது. மற்றும் ``வரலாறானது மனித இயல்பினை
எதிர்க்க அல்லது மாற்ற முயற்சித்து தோல்வியுற்ற
பொருளாதார மற்றும் சமூகமுறைகளின் உதாரணங்களால் மூடப்பட்டிருக்கிறது``.
முதலாளித்துவத்தின் தத்துவார்த்த பாதுகாவலர்கள்
18ம் நூற்றாண்டின் பழமைவாத ஆங்கில தத்துவவியலார் எட்மண்ட்
பர்க்கிற்கு [Edmund Burke]
அப்பால் முன்னேறவில்லை என்றே தோன்றுகின்றது. அவர் முதலாளித்துவ
சமுதாயம் இயற்கையானதும் புனிதமானதுமாகும் என்று
பிரகடனம் செய்தார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர்
``வர்த்தக விதிகள் இயற்கையின் விதிகள், எனவே இவை கடவுளின் விதிகள்
ஆகும்`` என எழுதினார்.
அல்லது கிரீன்ஸ்பான் அதனை முன் வைக்கிறமாதிரி,
``மனித இயல்புக்கு ஏற்றவாறு இயைந்துபோகும், நியாயமானதுமானதாக
சுதற்திர சந்தை அமைப்புமுறை வெளிப்படுவதுடன், விரைவாக
முன்னேறும் தொழில்நுட்பத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன்
மூலம் வாழ்க்கைத்தரத்தை தரங்களை இடைவிடாது முன்னேற்றுகிறது
என்பது தான் இதிலிருந்து தோன்றும் படிப்பினையாகும்."
எவ்வாறாயினும், நமது பணி உலகமக்களின் பெரும்பான்மையினர்
எதிர்கொள்ளும் உண்மையான நிலைமைக்கும், மூலதனத்தின்
பாதுகாவலர்களின் சுதந்திர சந்தையின் அதிசயங்கள் மற்றும் இலாப
அமைப்பின் நற்பண்புகள் தொடர்பான அதிகார அறிவிப்புக்களுக்கும்
இடையில் வெளிப்படும் அனுபவ உண்மையை வெறுமனே முன்வைப்பது
அல்ல.
ஏன் சமூகதுருவப்படுத்தல் ஆழமாகி வருகிறது
என்பதை அதாவது மார்க்சின் வார்த்தைகளில் சொன்னால்,
``ஒரு துருவத்தில் செல்வத்திரட்சியும், மறு துருவத்தில்
அதேவேளையில் துன்பம், உழைப்பின் வேதனை, அலட்சியம்,
கொடூரம், மனோரீதியாக சீரழிவு ஆகியவற்றின் திரட்சியும்",
இது இலாப அமைப்பின் உள்ளார்ந்த தர்க்கவியலுடன் இணைந்துள்ளது
என்பதை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மேலும்
எப்படி பூகோள முதலாளித்துவத்தின் அதே அபிவிருத்தியானது, மனித
தேவையை நிறைவு செய்வதை அடித்தளமாகக் கொண்ட புதிய,
உயர்ந்த சமூக அமைப்புக்கு தேவையான பாதையை எப்படி
வகுக்கிறது என்பது மட்டுமல்லாமல் உண்மையில் அதற்கான புறநிலை
அடித்தளங்களை எப்படி அமைக்கிறது என்றும் நாம் நிலைநாட்டவேண்டும்.
இலாபத்திரட்சி
இந்த ஆய்வினை நடத்த சில அடிப்படை விஷயங்களை
நிறுவுதல் அவசியமானது. முதலாளித்துவமானது சமூக உற்பத்திமுறை
என்ற வகையில் அவ்விதமாக செல்வத்தை உற்பத்தி செய்ய வழி
நடத்தப்படவில்லை. ``சுதந்திர சந்தையாளர்`` களின் சொற்சிலம்பத்துக்கு
மாறாக, நுகர்வோர்களின் தேவைகளையும் விருப்பங்களையும்
நிறைவு செய்கிற இலக்கைக் கொண்டோரின் உற்பத்தி முறையும்
அல்ல.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்குசக்தி
இலாபத்திரட்சி, தொழிலாள வர்க்கத்தின் உழைப்புச்சக்தி மூலம்
தோன்றும் மதிப்பின் முடிவற்ற பெருக்கம் தான்.
இறுதி ஆய்வில் பார்க்கையில், ஒவ்வொரு வர்க்க
சமுதாயமும், உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களின் நலன்களுக்காக
நேரடி உற்பத்தியாளர்களின் வர்க்கத்திலிருந்து உபரி உழைப்பைக்
கறந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால்
வர்க்க சமுதாயங்கள் அவற்றின் அமைப்பு முறையில் அடிப்படைரீதியாக
வேறுபடுகின்றன. இறுதி ஆய்வில் இந்த வேறுபாடுகள் எந்த சமூக
இயங்குமுறைகள் வழியாக மேலதிக உழைப்பு கறந்தெடுக்கப்படுகின்றனவோ
அவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன. அடிமை மற்றும் நிலப்பிரபுத்துவ
சமுதாயம் போன்ற ஆரம்பகால வர்க்க சமுதாய வடிவங்களில்
அரசியல் பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உபரி உழைப்பு கறந்தெடுப்பது
நிகழ்ந்தது. முதலாளித்துவத்தின்கீழ், சுதந்திர சந்தையை அடிப்படையாகக்கொண்ட
சமூக உறவுகளின் அமைப்பு மூலமாக அது இடம் பெறுகிறது. அது
அதன் உச்ச வளர்ச்சியை உழைப்பை சந்தைப்படுத்துவதனூடாக
அடைந்தது.
முதலாளித்துவத்தின்கீழ் மேலதிக உழைப்பானது
உபரி மதிப்பின் வடிவத்தை எடுக்கிறது. இதற்கான மூலம் கூலி ஒப்பந்த
முறையில் மூலதனத்திற்கு தொழிலாளி விற்கும் உற்பத்தி நிகழ்ச்சிப்
போக்கில் பயன்படுத்தப்படும் உழைப்புச் சக்தியினை அதாவது
அவரது உழைப்புச் சக்தி அல்லது வேலைசெய்வதற்கான திறனிற்கும்
பண்டத்தின் மதிப்பிற்கும் உள்ள வேறுபாடாகும். உழைப்புச் சக்தியின்
மதிப்பும் வேலைநாளில் உற்பத்தியின்போது தொழிலாளியால்
பொருளின் மதிப்பில் ஏற்படுத்தப்படும் பெறுமானமும் இரண்டு முற்றிலும்
வேறுபட்ட பரிமாணங்களாகும். இந்த வேறுபாடே உபரி மதிப்பின்
மூலமாகும். இது சமுதாயத்தின் மேற்புறத்தில் இலாபம், வட்டி
மற்றும் வாடகை ஆகத் தோற்றமளிக்கிறது.
ஆனால் உபரி மதிப்பைக் கறந்தெடுத்தல்
ஆழமான முரண்பாட்டினை காட்டுகின்றது. இது முதலாளித்துவ
பொருளாதாரத்திற்குள்ளே உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் உந்துசக்தியை
அமைக்கின்றது.
இலாபத்திற்கான முற்று முழுதான மூலமும்
தொழிலாள வர்க்கத்தின் உயிருள்ள உழைப்பிலிருந்து கறந்தெடுக்கப்படும்
உபரி மதிப்பாகும். ஆனால் இலாப வீதம் -மூலதனம் பெருக்கமடையும்
வீதம் - உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மொத்த மூலதனத்திலிருந்து
கணிக்கப்படுகிறது. இந்த மூலதனமானது இரு பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது:
உபரி மதிப்பின் மூலாதாரமான உழைப்புச் சக்தியை வாங்க முதலிடப்படும்
மாறும் மூலதனம், அத்துடன் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்
மீது முதலிடப்படும் மூலதனமான மாறா மூலதனம். இது உற்பத்தி
நிகழ்வுப்போக்கில் அவற்றின் மதிப்பை கிட்டத்தட்ட மாறாது
பேணி வைத்துக்கொண்டிருக்கும்.
மூலதனத்தின் திரட்சி மாறும் மூலதனத்திலும் பார்க்க
மாறா மூலதனத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பால் குறிக்கப்படுகின்றதோ
அதாவது உழைப்பின் உற்பத்தித்திறனின் அதிரிப்பின் வெளிப்பாடாக இருக்கின்றதோ
அவ்வளவிற்கு அங்கு இலாப வீதத்தின் வீழ்ச்சிக்கான போக்கு
ஒன்று இருக்கும். வேறு விதமாகச்சொன்னால், மூலதனம் ஒட்டு
மொத்தமாக பெருகுகையில், இந்த மூலதனத்தின் பகுதி உற்பத்தி
செய்யும் உபரி மதிப்பின் ஒப்பீட்டு அளவு சரியத் தொடங்கும்.
மார்க்ஸ் இந்த இலாபவீத வீழ்ச்சிப் போக்கின்
விதியை அரசியல் பொருளாதாரத்தின் மிகமுக்கியமான விதி என்று
அழைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து
அவ்வாறு குறிப்பிட்டார். இது சிலவேளைகளில் ஒருநாள் இலாபவீதம்
பூச்சியநிலையை அடைந்து முதலாளித்துவம் சாதாரணமாய் உறைந்து
போய்விடும் என்று அது மறைமுகமாகக் தவறாக வலியுறுத்தப்படுவது
போல் அல்ல. மாறாக, அது முதலாளித்துவப் பொருளாதாரம்
தன்னகத்தே கொண்டிருக்கின்ற முரண்பாடுகளில் இருந்து எப்படி
உற்பத்திசக்திகளை தொடர்ச்சியாக புரட்சிகரமயப்படுத்துகின்றது
என்பதை காட்டுகிறது.
தொழிலாள வர்க்கத்திலிருந்து உபரி மதிப்பைக்
கறந்தெடுத்தலை அதிகரிப்பதற்கு ஏற்ற, புதிய தொழில்நுட்பத்தினை
அடிப்படையாகக் கொண்ட, புதிய உற்பத்தி வழிமுறைகளை வளர்த்தெடுப்பதனூடாக
மூலதனமானது இலாபவீதம் வீழ்ச்சி அடைவதைத் தடுத்து வெற்றிகொள்ள
விழைகிறது. அத்தகைய வழிமுறைகளின் அபிவிருத்தி இலாப வீதம் நிலையாக
அப்படியே இருக்கவோ அல்லது அதிகரிக்கக்கூட செய்யும் சூழ்நிலைகளை
உருவாக்கலாம். ஆனால் தவிர்க்க முடியாதவாறு அதே
மூலதனக்குவிப்பு தாமே இலாபவீத வீழ்ச்சியைத்தூண்டும். அதன்
விளைவாக, அந்த பாதிப்புக்களை வெல்லவும் அதற்காக முயற்சிக்கவும்
வேண்டி உற்பத்தி சக்திகளை மேலும் புரட்சிகரமயப்படுத்துவதை
நோக்கி மூலதனம் தள்ளப்படும்.
போருக்குப் பிந்தைய கால விரிவாக்கம்
இந்தத் தத்துவார்த்த கருது கோள்களின் அடிப்படையில்
உற்பத்தி பூகோளமயமாக்கலுடன் கட்டுண்டிருக்கும் முதலாளித்துவ
அபிவிருத்தியின் அண்மைய கட்டத்தினை ஆய்வு செய்ய நாம் திரும்புவோம்.
அது அதன் மூலத்தை 1970களின் ஆரம்பத்தில் இலாபவீத
வீழ்ச்சியின்மறு தோற்றத்தில் கொண்டிருக்கிறது. இரண்டாம்
உலக யுத்தத்துக்குப் பின்னர் 25ஆண்டுகளாக, முதலாளித்துவ அமைப்பானது
முன் என்றும் இருந்திராத காலகட்டத்துக்கு பெருக்கமடைதலைச்
செய்தன. இதற்கு பின்வரும் காரணிகள் முக்கியமாக இருந்தன.
மார்ஷல் திட்டத்தின் கீழ் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட
போருக்குப் பிந்தைய அரசியல் மற்றும் பொருளாதார ஏற்பாடுகள்,
பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட கெயின்சிய
கொள்கைகளை மேற்கொள்ளல், மற்றும் 1930 களின் சூழ்நிலைகளுக்குத்
திரும்புதல் பிரதான முதலாளித்துவ நாடுகளின் புரட்சிகரப்
போராட்டங்களையும் பரந்த சமூக எழுச்சிகளையும் தூண்டிவிடும்
என்ற அச்சத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு சமூகநல
சலுகைகள் அளித்தல் ஆகியனவாகும்.
ஆனால் இறுதி ஆய்வில், போருக்குப் பிந்தையகாலகட்டமானது
முதலாளித்துவப் பொருளாதாரம் முழுவதும் உபரி மதிப்பின் பெருக்கத்தின்மீது
தங்கியிருந்தது. இது அதிக உற்பத்தி மற்றும் நீட்டிப்பைத்தரும்
இணைந்த வரிசை உற்பத்திமுறையால் (Assembly
line methods of prodution) சாத்தியம்
ஆகியது. இது 1920களில் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும்
பின்னர் 1930களில் ஏனைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும்
முன்னெடுக்கப்பட்டது.
அதே மூலதனத்திரட்சி இந்த உற்பத்தி வழிமுறைகளால்
சாத்தியமாயினும் கூட, மூலதனத்தை முந்தைய வீதத்தில் பெருக்கமடையுமாறு
தொடர்ந்து வைத்திருக்க உபரிமதிப்பின் திரட்சி போதாது என்று
நிரூபிக்கப்படுவதன் பயனாக இது இலாபவீத வீழ்ச்சிக்கு தவிர்க்க
முடியாதுவழி வகுக்கும்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் இலாப எண்
விபரங்கள் இந்நிகழ்ச்சிப் போக்கை தெளிவாகக் காட்டும்.
1944ல் அமெரிக்காவில் இலாபவீத வீழ்ச்சி சுமார் 22 சதவீதமாகும்.
1966ல் அது இன்னும் 21 சதவீதமாக இருந்தது. ஆனால் அதன்
பின்னர் கூர்மையாய் வீழ்ச்சியடைந்து, 1974 அளவில் 12 சதவீதமாகவும்
1980 அளவில் 10 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தன. வேறு வார்த்தைகளில்
சொன்னால், இலாப வீதம் 1966 முதல் 1974 வரை சுமார் இரண்டு
பத்தாண்டுகளாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்த பின்னர்,
சுமார் 45 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஏனைய பிரதான முதலாளித்துவ
நாடுகளுக்கான இலாப எண் விபரங்கள் இதே போன்ற நிகழ்ச்சிப்போக்கையே
காட்டுகின்றன.
சராசரி இலாபவீதத்தில் வீழ்ச்சியானது தனது
வருகையை 1974-75 இன் பூகோள பொருளாதார மந்தத்துடன்
அறிவித்தது. இது நாற்பதாண்டுகளுக்கு முன்னர் பெரும்
பொருளாதார தாழ்வுக்குப் பின்னர் மிகக் கடுமையான
பொருளாதார வீழ்ச்சியாகும். புதிய சகாப்தம் விடிந்திருக்கிறது
என்ற உண்மையின் மிக முக்கியமான காரணி பொருளாதார மந்தம்
முடிந்த பின்னரும் பொருளாதார நிலைமைகள் 1950கள் மற்றும்
1960களில் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்பவில்லை என்ற உண்மைதான்.
சராசரி இலாப வீதம் அதன் முந்தைய நிலைக்கு திரும்ப முடியாதநிலை,
குறைந்த வளர்ச்சி எண் விபரங்கள் மற்றும் stagflation
என்று அழைக்கப்படும். அதாவது உயர்மட்டங்களில் பணவீக்கத்துடன்
இடைவிடாத உயர் வேலையின்மை வீதங்கள் ஆகியவற்றில் எதிரொலித்தது.
1968ல் பிரான்சில் மே-ஜூன் நிகழ்ச்சிகள் தொடங்கி
சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் 1974ல் பிரிட்டனில்
டோரி அரசாங்கம் வெளியேற்றப்பட்டது மற்றும் 1974-75ல்
போர்த்துக்கல்லில் புரட்சிகர எழுச்சிகள் வரையிலான கால
நீடெல்லை -1970கள் பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புக்களின்
பத்தாண்டாக இருந்தது. இருப்பினும், சமூக ஐனநாயகக் கட்சி
மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பின் பயனாக
முதலாளித்துவ வர்க்கத்தால் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டது.
முதலாளித்துவ வர்க்கம் தன் நிலையை உறுதிப்படுத்தும்
வண்ணம், பின்னர் அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தாக்குதலைத்
தொடுத்தது. இந்த எதிர்ப்புரட்சி றேகன் மற்றும் தாட்சர்
அரசாங்கங்களுடன் மிக உடனடியாக தொடர்புடையதாக இருந்தது.
பொருளாதார நிலைப் பாட்டிலிருந்து, மிகவும் முக்கியத்துவமுடைய
நிகழ்ச்சி 1979ல் அமெரிக்க பெடரல் ரிசேர்வ் போர்டின் தலைவராக
பால்போக்கர் அதிகாரத்துக்கு வந்ததும் 1980களில் அதிக வட்டிவீத
வேலைத்திட்டத்தை தொடங்கியதுதான். இது தொழிலாள வர்க்கத்திடமிருந்து
உபரி மதிப்பைக் கறந்தெடுத்தலை அதிகரிப்பதற்கு புதிய நவடிக்கைகளை
ஏற்கவேண்டி, நிதி மூலதனத்தால் பணிக்கப்பட்ட பாதிப்பைக் குவித்தது.
வோல்க்கர்ஸ் உயர்ந்த வட்டிவீத ஆட்சியால் தூண்டப்பட்ட மந்தத்தின்கீழ்
(Recession), முழு
தொழிற்சாலைகளும் மூடப்பட்டதுடன், தொழில் துறைமூலதனம்
உற்பத்தியை பரந்த அளவில்மறு ஒழுங்கு செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.
இதுதான் கணினி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்
கொண்ட பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் உற்பத்தி
வரிசையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் உருமாற்ற வளர்ச்சியின்மூலம்
ஆகும். இலாப வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை எதிர்
கொண்டு, மூலதனமானது உபரி மதிப்பை அபகரித்தலை விரிவாக்க,
உழைப்பின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடிவிலாது இயக்குதலுடன்
பதில் கொடுப்பதாக இருக்கிறது. அதேவேளை உற்பத்திச் செலவைவெட்டும்
தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதற்கு முயற்சித்துக் கொண்டு,
உலகின் ஏனைய பிராந்தியங்களில் மலிவான உழைப்பைச் சாதகமாக
எடுத்துக்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஒருங்கிணைந்த உற்பத்தி
நிகழ்ச்சிப் போக்குகளைப் பகுதிபகுதியாய்ப் பிரிப்பதற்கு முயற்சிக்கிறது.
மார்க்சால் இனங்காட்டப்பட்ட இரு போக்குகள்
இலாபவீதம் வீழ்ச்சியடைவதற்கான போக்குபற்றிய
தனது ஆய்வில், மார்க்ஸ் இரு பிரதான விளைவுகளைச் சுட்டிக்
காட்டுகிறார். ``இலாபவீதம் குறையுமானால், ஒருபுறம்
மூலதனம் இன்னுங்கூட முனைந்து செயல்படுகிறது;
இவ்விதம் தனிப்பட்ட முதலாளிகள் மேம்பட்ட
வழிமுறைகளைக் கொண்டும் இன்னபிறவாலும் தமது தனிப்பட்ட
பொருளின் மதிப்பை சமூக சராசரி மதிப்புக்கும் கீழானதாய்க்
குறைத்து, இவ்விதம் நடப்பிலுள்ள சந்தைவிலையில் கூடுதல் இலாபம்
அடையமுடிகிறது. மறுபுறும் மோசடியும் ஏமாற்றும் தலைதூக்குகின்றன.
புதிய உற்பத்தி வழிமுறைகளும் புதியமுதலீடுகளும் புதிய சாகசங்களுமான
அவசர முயற்சிகள் இந்த மோசடியைப்பரவலாய் வளர்க்கின்றன.
இவையாவும் பொது சராசரியைச் சாராமலும், அதற்குமேல்
கூடுதலாகவும் சிறிது இலாபம்பெறும் முயற்சிகளே.``
பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்தி
மற்றும் கடந்த இருபதாண்டுகளாக உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கை
புரட்சிகர மயப்படுத்திய கணினி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தல்
இவை மார்க்சால் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட முதல்
பாதையை பின்பற்றும் மூலதனத்தால் ஏற்பட்ட முயற்சி ஆகும்.
சமூக சராசரி செலவை விட கீழிருக்குமாறு உற்பத்திச்
செலவை வெட்டுதற்கு, உற்பத்தியில் புதியவழி முறைகளை அபிவிருத்தி
செய்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்கப்படும்
உபரி மதிப்பில் அதனது பங்கை அதிகரிக்க மூலதனத்தின் ஒவ்வொரு
பகுதியும் விழையும்.
ஆனால், அதன் விளைவாக உழைப்பின் உற்பத்தித்
திறனின் வளர்ச்சியின் அதிகரிப்பு 1950கள் மற்றும் 1960கள் அளவுகளின்
அடிப்படையில் விரிவாக்கத்தின் புதிய சகாப்தத்திற்கான அடிப்படையை
வழங்க தவறியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், உண்மைக்
கூலிகளில் பொதுவான குறைப்பும் தொழிற்சாலைகளின் அனைத்துப்
பகுதிகளிலும் இடம் பெற்ற எழுச்சிகளும் இருந்தபோதும், இலாப
வீதமானது அதன் முந்தைய வீழ்ச்சியில் முன்றில் ஒரு பகுதியை மீட்டுக்
கொள்ளமுடிந்திருக்கிறது. அது இன்னும் போருக்குப் பிந்தைய வீழ்ச்சியில்
உச்ச அளவை விட 35 முதல் 45 சதவீதம் கீழ்தான் இருக்கிறது.
இதன்மூலம் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
தொழில்நுட்ப மறுமலர்ச்சி போதுமான அளவு மேற்சென்றால்,
மூலதனம் இலாபத்தை அதிகரிக்க, வேலைகளை கூலிகளை அதிகரித்துகாட்டும்
புதிய காலகட்டத்தை நிறுவுவது சாத்தியமா? அல்லது உபரிமதிப்பு
குவிவதன் நிகழ்ச்சி போக்கில் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கின்றனவா?
அதன் அர்த்தமாவது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வாழ்க்கைத்
தரங்கள் ஏதோ தற்காலிக நிலைமாறல் அல்ல, இன்னும் சொல்லப்போனால்
இது முதலாளித்துவ பொருளாதாரம் 21ம் நூற்றாண்டில் நுழைகையில்
அதன் நிரந்தர சிறப்பு இயல்புகளாகும்.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்முன் உபரி
மதிப்பின்திரட்சி நிகழ்ச்சி போக்கினை மேலும் நாம் ஊடுருவ வேண்டியுள்ளது.
உழைப்பின் உற்பத்தித்திறனில் அதிகரிப்பு உற்பத்தி செய்யப்படும் செல்வத்தின்
அளவை அதிகரிக்கும். ஆனால் மூலதனத்தை பொறுத்தவரை
தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமானது, உபரி மதிப்பினைக் கறந்தெடுத்தலின்
விளைவை அது கொண்டு இருப்பது ஆகும்.
உபரி மதிப்பு கூலி ஒப்பந்தத்தில் தொழிலாளி
மூலதனத்துக்கு விற்கும் உழைப்புச்சக்தியின் மதிப்புக்கும் வேலை
நாளின் போக்கில் இந்த உழைப்பு சக்தியினால் பொருளின்மீது கூட்டப்படும்
மதிப்பிற்கும் இடையிலான வேறுபாட்டினால் உருவாகின்றது என்று
நாம் பார்த்தோம்.
தொழிலாளி தனது உழைப்புச்சக்தியை மறு உற்பத்தி
செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் அவர் மூலதனத்திற்கு
உபரிஉழைப்பை வழங்குகின்ற நேரத்திற்கும் இடையில் அதன்படி
வேலை நாள் தானே பங்கிடப்படுகின்றது. இறுதி ஆய்வில் உபரி மதிப்பை
குவித்தலின் மீதான தொழில் நுட்பத்தின் விளைவானது, அத்தியவாசிய
உழைப்பிற்கும் உபரி உழைப்பிற்கும் இடையில் வேலை நாளின் பங்கீட்டை
எப்படி அது பாதிக்கிறது என்பதன் மேல் தங்கியிருக்கிறது.
எட்டு மணி நேர வேலை நாள் என்பதாக இருந்தால்
தொழிலாளி நான்கு மணி நேரத்தில் அவரது உழைப்பு சக்தியை மறு
உற்பத்தி செய்வார், மூலதனத்துக்கு நான்கு மணி நேர உபரி உழைப்பை
வழங்குவார். இப்போது தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் விளைவாக
கொள்வதனால், (சமுதாயம் முழமையுமாக) தனது உழைப்பு சக்தியை
மறுஉற்பத்தி செய்வதற்காக தொழிலாளியால் எடுத்துக்கொள்ளப்படும்
நேரம் நான்கு மணியிலிருந்து இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும்.
இவ்வாறு எட்டு மணிநேர வேலை நாளில், ஆறுமணி நேர உபரி
உழைப்பு, 50 சதவீதம் அதிகரிப்பு இருக்கும்.
அங்கு உழைப்பின் உற்பத்தித்திறன் மேலும் இரட்டிக்கப்படுவதன்
மூலம் அத்தியாவசிய உழைப்பு இரண்டுமணிகளிலிருந்து ஒன்று ஆக குறைவதாகக்
கொள்வோம். உபரி உழைப்பு ஆறு மணிகளிலிருந்து 7 ஆக அதிகரிக்கும்.
ஆனால் முந்தைய 50 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இது 16
2/3 சதவீத அதிகரிப்பு மட்டுமே ஆகும். உழைப்பின் உற்பத்தி திறனின்
ஒவ்வொரு இரட்டிப்புக்கும் அங்கு கறந்தெடுக்கப்படும்
உபரி மதிப்பில் அதிகரிப்பு எப்போதும் சிறிய விகிதாசாரத்திலேயே
இருக்கும்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், அதிக
தொழில் நுட்பம் ஏற்கனவே உழைப்பின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி
செய்திருக்கிறது, அதாவது அத்தியாவசிய உழைப்பு அதிகம் குறைந்து
இருக்க, எவ்வளவுதான் உற்பத்திதிறன் உடையதாக இருந்தாலும்
சரி, போதுமான தொகையால் போதுமான இலாபவீதத்தினை
மீளக்கொணர்வதற்கும் மூலதனம் ஒட்டுமொத்தமாக
பெருகுவதை உத்திரவாதம் செய்வதற்கும் புதிய தொழில் நுட்பத்தினைப்
பொறுத்தவரை அது மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனமும் உறுதிப்படுத்தக்
கூடிய, உறுதிபடுத்தப்படக்கூடிய, மேலும் போட்டியின் அழுத்தத்தால்
நிர்ப்பந்திக்கப்படுகிறது. உற்பத்தி செலவை வெட்டும் தொழில்
நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட இலாபத்தை
அதிகரிக்க அல்லது பராமரிக்க முயற்சிசெய்யும். ஆனால் ஒட்டுமொத்த
உபரிமதிப்பின் திரட்சிக்குவிப்பின் மேல் இந்த நிகழ்ச்சிப்போக்கின்
பாதிப்பு என்ன?
உழைப்பின் முழுப்பகுதியையும் நீக்குவதன் மூலம்
புதிய உற்பத்தி முறைகள் உற்பத்திச் செலவை வெட்டும். ஆனால்
உழைப்புத்தான் உபரி மதிப்பின் முற்று முழுதான மூலமும் இறுதியில்
இலாபமும் ஆகும். அதனால் இந்த வழிமுறைகளின் அபிவிருத்தி முதலாளித்துவப்
பொருளாதாரம் முழுமையாக உபரிமதிப்பின் திரட்சியைக் குறைக்க
எத்தனிக்கும். மறுபுறத்தில், இந்தப் போக்கு மீதமுள்ள உழைப்பிலிருந்து
கறந்தெடுக்கப்படும் உபரிமதிப்பை அதிகரிப்பதன் மூலம் குறிப்பட்ட
மட்டத்துக்கு எதிரிடையாக இயங்கும். அத்தியாவசிய உழைப்பு
வேலை நாளின் ஒப்பீட்டளவில் சிறிய அளவுக்கு ஏற்கனவே குறைக்கப்பட்டிருப்பதன்
காரணம் இருப்பினும்- தொழில் நுட்பத்தில் எல்லாவித அபிவிருத்தியின்
விளைவாக- உபரிமதிப்பின் திறன் மொத்தமாக குறிப்பிட்ட தொகையால்
போதுமான அளவு பெருகுவதை அதிகரிக்கச் செய்வது உறுதிப்படுத்த
முடியாதிருக்கிறது.
இதன் காரணமாகத் தான் புதிய தொழில்நுட்பத்தால்,
கடந்த காலத்தில் அவை உபரிமதிப்பின் திரளைப் பெருக்குவதனை
இனியும் உண்டுபண்ண முடியாதிருக்கிறது. ஆனால் ஸ்தம்பிதத்தை அல்லது
இன்னும் அதிகமான வீழ்ச்சியை என்றும் இல்லாத வெறித்தனமான
போட்டியில் செலவைக் குறைக்கும் மற்றும் தொழிலாளியை அப்பபுறப்படுத்துவதற்கு
இட்டுச் சென்று, ஒட்டுமொத்தமாக உபரிமதிப்பு குவிவதை மேலும்
சுருக்குகின்றது.
உபரிமதிப்பு ஒன்றுகுவிதல் நிகழ்ச்சிப்போக்கில்
உள்ள இந்த முரண்பாடுகளை வெளிப்படையாகக் காட்டுகையில்,
ஏன் மூலதனம் மார்க்சால் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டாவது
பாதையை மேலும் மேலும் அதிகமாய் முன்னெடுக்கும் என்பதைப்
பார்க்கமுடியும். அதாவது நிதி நடவடிக்கைமூலம் இலாபவீதத்தில்
ஏற்படும் வீழ்ச்சியைத் தடுப்பதற்கான முயற்சியானது அதிகமாய்
உற்பத்தியிலிருந்து தம்மை துண்டித்துக்கொள்ள முயலும்.
இந்த அபிவிருத்தியைக் குறிக்கும் எண்கள் உண்மையில்
நிரந்தரமற்றவை. உதாரணமாக, 1990களில் அந்நியச் செலவாணி
வர்த்தகத்தின் அளவு (நாணய மதிப்பீடுகளில் இயக்கங்கள் இலாபத்தைப்
பெறுவதற்கான முயற்சிக்கே பெரிதும் அர்ப்பணிக்கப்பட்டது)
ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் டாலர்)
ஆகும். இது 1986க்குப் பின்னர் இருந்து 8 மடங்கு அதிகரிப்பாகும்.
இதற்கு மாறாக1997க்கான பூகோள ஏற்றுமதி அளவு (சரக்குகள்
மற்றும் பணிகள் இண்டிலும் சேர்த்து) 66லட்சம் கோடிடாலர்கள்
(6.6 டிரில்லியன் டாலர்கள்) அல்லது ஒரு நாளைக்கு 2500 கோடி
டாலர்கள் ஆகும் (25 பில்லியன் டாலர்கள்). 1990களின் மத்தியில் பரஸ்பர
நிதி, ஒய்வூதிய நிதி, மற்றும் அது போன்றவை வடிவில் அமெரிக்காவில்
மூலதனத் தொகை 20லட்சம் கோடி டாலர்கள் (20 டிரில்லியன்டாலர்கள்)
அல்லது 1980களின் தொகையைப்போல் பத்து மடங்கு ஆகும்.
இது உண்மையில் பூகோளநிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.
1970 மற்றும் 1996க்கு இடையில் பங்குப்பத்திரம் மற்றும் பங்குகள்
இவற்றின் நடவடிக்கைகள், உள்நாட்டு மொத்த உற்பத்தின் விகிதத்துடன்
ஒப்பிடுகையில் அமெரிக்காவைப் பொருத்தவரை 54 ஆக. ஜப்பானைப்
பொருத்த வரை55 ஆக மற்றும் பெரும்பாலும் ஜேர்மனியை
பொருத்தவரை 60 அளவிலும் உயர்ந்தது. இந்த நிகழ்ச்சிப்
போக்கின் திடீர் வெளிப்பாடுகளில் ஒன்று -சுத்தமாக பணக்கையாளுகை
மற்றும் நடவடிக்கைகள் மூலம் மூலதனத்தை பெருக்குவதற்கான
முயற்சி- பூகோள பங்குச்சந்தைகளில் அதிகரித்திருக்கின்றன.
"பைத்தியக்காரக் குதூகலிப்பு" (IRRATIONAL
EXUBERRANCE) எனும் தனது அண்மைய புத்தகத்தில்,
அமெரிக்க எழுத்தாளர் றொபர்ட் ஷில்லர் அமெரிக்க சந்தையின்
உக்கிரத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்.
``டெளஜோன்ஸ் தொழிற்துறை சராசரி [The
Dow Jones Industrial Average], 1994ன் ஆரம்பத்தில்
3600 அளவில் இருந்தது. 1999 அளவில், அது 11000ஐக் கடந்தது, ஐந்து
ஆண்டுகளில் மும்மடங்குக்கும் அதிகமாகி, 200 சதவீதமாய் பங்குச்சந்தைவிலையில்
மொத்த அதிகரிப்பானது. 2000-யின் ஆரம்பத்தில் The
Dow Jones Industrial Average 11,700 ஐக்
கடந்தது. இருப்பினும், அதேகாலப்பகுதியில் அடிப்படைப்
பொருளாதார குறிகாட்டிகள் மும்மடங்குக்கு அருகில் வரவில்லை.
அமெரிக்க தனிநபர் வருவாய் மற்றும் உள்நாட்டு மொத்த உற்பத்தி
30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது, மற்றும் பெரும்பாலும்
இதில் பாதி அளவு பணவீக்கத்தால் அதிகரித்து, நிறுவனங்களின் இலாபங்கள்
60 சதவீதத்துக்கும் குறைவாக அதிகரித்தன, அதுவும் தற்காலிக
பின்னைடைவு- தாழ்வு நிலையிலிருந்து`` (3)
இந்த அபரிதமான அபிவிருத்திகள் என்ன கூறப்போகிறது?.
பூகோள முதலாளித்துவத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான அவற்றின்
விளைபயன்கள் என்ன?
பங்குச் சந்தையின் பங்களிப்பு உற்பத்தியில் முதலீடு
செய்வதற்கான புதிய மூலதனத்தை வழங்குவது என்று அடிக்கடி எண்ணப்படுகிறது.
இந்தத் தொழிற்பாட்டை அது செய்கிறதுதான். ஆனால் இது
அதனுடைய பிரதான பாத்திரம் அல்ல. உதாரணமாக 1981க்கும்
1987க்கும் இடையில் அமெரிக்காவில் நிதியியல் துறையிலில்லாத
நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் திருப்பிப்பெறல்
நடிவடிக்கைகளின் விளைவாக அவை விநியோகித்த பங்குகளைவிட (813
பில்லியன் டாலர்கள்) 81300 கோடி டாலர்கள் அதிகம் இருப்பில்
போட்டன.
பங்குச்சந்தை மேல் பங்குகளின் வியாபாரம்,
புது மூலதனம் அதிகரிப்பது தொடர்பாக சிறிதளவே செய்வதற்கிருக்கிறது.
அது சொத்துஉரிமைப் பத்திரத்தில் வியாபாரம் செய்து எதிர்வரும்
வருமானம் மற்றும் இலாபங்களில் ஒன்று குவிதலின் மேல் உரிமை
கோருகிறது. அதாவது, பங்குகளும் பத்திரங்களும் போலியான
மூலதனம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பைக் கறந்தெடுத்தலில்
நேரடியாக ஈடுபட்டிருக்கும் உற்பத்தி மூலதனம் அல்ல.
மாறாக வரவுக்கும் சொத்துக்கும் சட்டரீதியாக உரிமை பெறுவதாகும்
-இது மூலதனத்தின் ஏனைய பகுதிகளால் உண்டுபண்ணப்படும் உபரி
மதிப்பின் மீது உரிமைகோரலாகும்.
கடன் முறையின் அபிவிருத்தி மற்றும் பங்குச்சந்தை
மூலதனத்தின் வெளிப்பாடு சில வேலைகளில், அவை ஏதோவகை
தேவையில்லாதவையாக இருப்பதுபோல் நடத்தப்படும்,
ஆரோக்கியமான முதலாளித்துவ அமைப்பின் உடம்பின் மீது ஒட்டுண்ணி
தொங்குதசை வளர்ந்தாற்போல நடத்தப்படும். உண்மையில்
போலிமூலதனத்தின் பல்வேறு வடிவங்களின் தோற்றம் உபரிமதிப்பு
ஒன்றுகுவிதலின் நிகழ்ச்சிப் போக்கில் வேரூன்றி உள்ளது மற்றும்
அது முதலாளித்துவ அமைப்பு முறையில் வரலாற்று அபிவிருத்தியிலிருந்து
எழுந்திருக்கிறது.
மார்க்ஸ் சளைக்காமல் திரும்பக் கூறியதுபோல்
மூலதனம் ஒருபொருள் அல்ல மாறாக சமூக உறவாகும். அதன்
சுயமாக பெருக்கமடையும் மதிப்பு அது ஒரு புள்ளியில் பணவடிவத்தையும்,
உற்பத்திச்சாதனங்களின் வடிவத்தையும், பண்டங்களின் வடிவத்தையும்
எடுக்கும். பின்னர் இதன் மதிப்பு விரிவாக்கத்தின் சுற்றுமுடிந்து மீண்டும்
தொடங்க மறுபடியும் பணவடிவத்தை எடுக்கும். முடிவே இல்லாத
ஒன்று குவிக்கும் இந்த நிகழ்ச்சிப் போக்கில், மூலதனமானது எல்லாவித
தடைகளையும் முறியடிக்க இயங்கும். அதன் ஆரம்பகால வரலாற்றில்
வரையரைக்குட்பட்ட சொந்தசெல்வம் மற்றும் வருமானத்தினால்
திணிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக ஒன்றுகுவித்தலுக்கு ஓடியது.
குடும்ப வியாபாரம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட பங்குதாரர்
முறை இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் விரிவடையும் பொருட்டு,
அதற்கு சமுதாயம் முழுமையுமாக உள்ள வளங்களை அடைவதற்கான
வழிதேவையாக இருந்தது. ஒருபுறம் கடன் வசதியின் அபிவிருத்தியும்
மறுபுறம் கூட்டுப்பங்கு நிறுவனம் ஆகியன இந்த இலக்கினை அடைவதற்கானயவையாக
இருந்தன.
மூலதன உற்பத்தி இன்னும் விரிவடைய விரியவடைய உற்பத்தி
மூலதனம் அதிகமாக செறிவடைகின்றது. நிலையான மூலதன முதலீடுகான
தொழிற்சாலைகள், கட்டிடங்கள், பெரிய அளவு எந்திரம், பரந்த
இரசாயன மற்றும் சுத்திகரிப்பு நிகழ்ச்சிப் போக்குகள்- நீண்ட
காலப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பைக்
கறந்தெடுத்தலில் ஈடுபட்டிருக்கும் உற்பத்திச் சாதனங்களாக
தங்களின் தொழிற்பாட்டைக் கூட்ட மட்டுமே முடியும். அதாவது,
உற்பத்தி நிகழ்ச்சி போக்குக்குள்ளேயே மூலதனமானது இந்த
வடிவத்தில் நீண்டகாலகட்டத்திற்கு அப்படியே இருக்கவேண்டும்.
அதேவேளை மூலதனம், உபரிமதிப்பைக் கவருதற்கான தணியாத
போராட்டத்தில் எழுகிற சந்தர்ப்பங்களைத் தனக்கு சாதகமாக்கிக்
கொள்ள பொருளாதாரத்தின் ஓருபகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு
சுதந்திரமாக நகர்வது கூட தேவைப்படுகின்றது.
ஓரு புறத்தில் நீண்டகால முதலீட்டுக்கான முதலாளித்துவ
உற்பத்தியின் தேவைகளுக்கும் மறுபுறம் விரைவான மூலதன நகர்வுகக்கான
தேவைக்கும் இடையிலான முரண்பாடு, பங்குகள் மற்றும் பங்குத்தொகை
அபிவிருத்திமூலம் தீர்க்கப்பட்டது. பங்குகளின் விநியோகம் மூலம்
மூலதனம் வழங்கப்பட்டு பின்னர் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில்
இயங்கச்செய்யப்படுகின்றது. பங்குச் சந்தையின் இருப்பு ஆரம்ப
மூலதனத்தை வழங்கக்கூடியவர் உட்பட, பங்கு உடையவர்களுக்கு
உற்பத்தி மூலதனம் தம்மை உண்மையில் உறைந்துப்போகச்
செய்யாமல், தங்களது பங்குகளை விற்பதன் மூலம் மூலதனத்தை
மற்றொரு பகுதிக்கு நகர்த்துவது, தங்களது உரிமைமூலம்
வருமானம் பெறுவதற்கு உதவியாய் இருக்கிறது. வேறு வார்த்தைகளில்
சொன்னால், கூட்டுப்பங்கு நிறுவனத்தின் மற்றும் பங்குச்சந்தையின்
அபிவிருத்தியானது, ஒருபுறம் பெரிய அளவு நிலையான மூலதனத்தின்
தேவைக்கும் மறுபுறம் மூலதன நகர்வுக்கான அத்தியாவசியத்திற்கும்
இடையிலான முரண்பாட்டை மூலதனம் தீர்த்துக் கொள்ளும்
வரலாற்று வழிமுறைகளாயின.
ஆகையால் உபரிமதிப்பு ஒன்று குவிதல் நிகழ்ச்சிப்போக்கில்
எழுகின்ற முண்பாடுகளைத் தீர்க்கும் வழிமுறைகளாக போலி
மூலதனம் எழுகிறது. ஆனால் அது தாமே புதிய முரண்பாடுகளின்
மூலமாகவும் ஆகிறது. சொத்துக்களுக்கான உரிமைகளுக்கும்
உபரிமதிப்பிற்கான உரிமை கோரலுக்கும் சந்தையின் தோற்றமானது,
இந்தச்சந்தையில் வியாபாரம் மூலம் மூலதனம் அதன் மதிப்பைப்
பெருக்கும் சாத்தியத்தினைத் தோன்றச் செய்கிறது.
அந்த முன்னேற்றம் வரவர கவரக்கூடியதாக
வருவதுடன் எங்கு உற்பத்தி மூலதனத்தால் உபரி மதிப்பு ஒன்றுகுவிதல்
நெரிக்கப்படுகின்றதோ அங்கு-அது தேவையானதாகவும் கூட
ஆகிறது.
1980களின் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து
வருகின்ற, கடந்த ஐந்தாண்டுகளாக விரைவாக அபிவிருத்திகண்ட,
மற்றும் பொருளாதாரம் முழுமையுமாக ஆதிக்கம் செலுத்தும்
பங்குச்சந்தையின் பரந்த வளர்ச்சியில் மதிப்புக்களில் அற்புதமான
ஏற்ற இறக்கத்தின் தோற்றம் இருக்கிறது.
Notes:
2. Marx, Capital Volume
III, pp. 253-254
3. Robert Shiller, IrrationalExuberance, p. 4
[பூகோளமயமாக்கல்:
ஒரு சோசலிச முன்னோக்கு. - பகுதி 1]
|