WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா : ஐக்கிய
அமெரிக்கா
The Wall Street Journal and the US electoral crisis
வோல் ஸ்ட்ரீட்
பத்திரிகையும் அமெரிக்க தேர்தல் நெருக்கடியும்
By Barry Grey
11 November 2000
Use
this version to print
குடியரசுத் தலைவர் பதவிக்கான குடியரசுக் கட்சியின்
வேட்ப்பாளர் George W. Bush
ன் சட்டரீதியான மற்றும் யாப்பு அமைப்பு ரீதியான நடிப்புக்களை,
மிகப்பெரும் கூச்சலிடும் அவரது ஆதரவாள வோல் ஸ்ட்ரீட்
பத்திரிகையினால் வெளியிடப்பட்ட நவம்பர் 10 தலையங்கத்தை விட
வேறு எதுவும் மிகப் பாழடிக்கும் விதமான அம்பலப்படுத்தலைச்
செய்யவில்லை. பத்திரிகை வெக்கம் கெட்ட முறையில் அதன்
துண்டுப்பகுதிக்கு "கோர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்று
தலைப்பிடப்பட்டதுடன் அமெரிக்கத் தேர்தலை கோர் பிரச்சாரம்
தனக்குச் சாதகமாக களவாட முயற்சி செய்வதாய் குற்றம்
சுமத்தி உண்மையைத் நிலை நிறுத்தப்போவதாக மேற்தொடர்கின்றது.
இத்தலையங்கமானதது, புளோரிடாவில்
யாராவது ஒருவருக்கு 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கக்
கூடிய அந்தச் சர்ச்சைக்குரிய வாக்குகளை சட்டரீதியாக சவால்
செய்ய ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரம் ஆதரவாளிக்கும்
என்று அல் கோரின் பேச்சாளரால் அறிவிக்கப்பட்ட முந்தைய
நாள் அறிவிப்புக்கான பத்திரிகையின் பதிலாகும்
பத்திரிகை தேசியத் தேர்தல் -மாநிலத்தில்
சாதாரணமாய் மேலோட்டமான மறுவாக்கு எண்ணிக்கையால்,
நவம்பர் 17 அளவில் பூர்த்தியாக்கக் கூடிய நேரில் வாக்களிக்க
முடியாதோரின் வெளிநாட்டில் வாழ்வோரின் வாக்குகளின் சரிபார்ப்பையும்
சேர்த்து- தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. உணமையில்
வாக்குப்பதிவு எந்திரங்களின் உதவியை நாடல்வேண்டும் என்று
வலியுறுத்தியது. உண்மையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் உதவியை
நாட்டில் புஷ்ஷின் புளோரிடா வாக்குவித்தியாசத்தை ஏற்கனவே
குறைத்திருந்தது. --மாநில ரீதியில் பதிவான 6 மில்லியன் (60 இலட்சம்)
வாக்குகளில்-- தேர்தல் நாளன்று அறிவிக்கப்பட்ட வாக்குவித்தியாசம்1725லிருந்து
வெறும் 327 ஆக குறைந்தது மற்றும் ஜனநாயக கட்சியின் கோட்டையான
பாம்பீச் மாவட்டத்தில் பல ஆயிரம் வாக்குகள் தவறாக வாக்களிக்கப்பட்டன
மற்றும் இன்னும் ஒரு 19 ஆயிரம் வாக்குகள் ஏமாற்று வாக்குகள்
என்பதன் காரணமாக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது
என்று கைவிடப்பட்டன. மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் தேர்தல்
அதிகாரிகள் மற்றும் பொலீசாரினால் மிரட்டிப் பணியவைத்தல் பற்றிய
சிறுபான்மை வாக்காளர்களினால் எழுப்பப்பட்ட புகார்கள் (கடந்த
காலத்தில் கள்ளவாக்குகளிற்கு பேர்பெற்றதும் புஷ்ஷின் சகோதரனால்
ஆளப்படுவதுமான மாநிலத்தில்) தள்ளப்படவேண்டும் என்றும்
கூறியது.
குறிப்பாக, பத்திரிகை "இந்த நாட்டு மக்களை
முன் என்றும் இராத அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு
"கோர் "அரசியல் வழக்கறிஞர்களின் அணிகளை" பணிக்கமர்த்தி
உள்ளதாக கண்டனம் செய்தது. இது போலி அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு
சதி மூலம் கிளின்டன் நிர்வாகத்தை அலுவலகத்திலிருந்து ஓட்டும்
நோக்குடன் அதனை சீர்குலைக்க மிகக் கேவலமான மற்றும் ஆத்திரமூட்டும்
நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து பிரச்சாரத்தில்
ஈடுபட்டிருந்த பத்திரிகையிலிருந்து வருகிறது.
பத்திரிகையின் செயல்ப்பாடுகள், அவதூறையும் பண்புச்சீரழிவையும்
உள்ளடக்கும் முதலாவது கிளின்டன் நிர்வாகத்தின் ஆரம்ப மாதங்களில்
நீண்ட காலமாய் கிளின்டனுடன் தொடர்புடையவரும் நீதித்துறை அலுவலருமான
வின்சன்ட் போஸ்டரை சிறப்புத் தாக்குதலுக்கு அது குறிவைத்தது.
பத்திரிகையின் அரசியல் எதிரிகளின் ஜயுறவு வேட்டை போஸ்டரின் தற்கொலைக்குக்
காரணமாக இருந்தது, ஆனால் அது கிளின்டன் போஸ்டரின் மரணத்தில்
எப்படியோ சம்பந்தப்பட்டுள்ளதாக கருத்துரைக்கும் கட்டுரைகளை
பத்திரிகை ஆசிரியர்கள் மனம்போனபடி எழுதித்த தள்ளுவதை தடுக்கு
முடியவில்லை.
மக்களை அரசியல் நெருக்கடிக்குள் இழுப்பதற்கு
வழக்குரைஞர்களையும் வழக்காடு மன்றங்களையும் பயன்படுத்துகின்ற
வகையில், இது வால்ஸ்ட்ரீட் பத்திரிகையையே அதற்குப்
பொருத்தமுள்ளதாக்குகின்றது. பத்திரிகை பல்வேறு சட்ட ஆத்திர
மூட்டல்களில் மிகவும் மோசமாக பெயர் எடுத்த பெளலா
ஜோன்ஸ், வழக்கில் வலதுசாரி வழக்குரைஞர்களுக்கு ஆதரவளித்தது.
அது பொதுமக்களின் குரலாக பணியாற்றுகின்றது மற்றும் திரைமறைவில்
பிற்போக்காளர்களின் ஆலோசகராக செயற்படுகின்றது. இவர்கள்
இறுதியில் மொனிக்கா லெவின்ஸ்கி ஊழல், கென்னத் ஸ்டார் விசாரணை
மற்றும் பதவியில் இருந்து அகற்ற குடியரசுக் கட்சியினர் கொண்டுவந்த
அரசியல் குற்சாட்டு விசாரணை ஆகியவற்றில் ஒன்றாய்ச் சேர்ந்தனர்.
தொகுதிப்பெரும்பான்மை 50 சதவீதத்தை எட்டாததன்
காரணமாக கிளின்டன் நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பானது என்றதன்
அடிப்படையில் அதனது ஆட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை எட்டாண்டுகளா
நியாப்படுத்தி வருகின்றது இப்பத்திரிகை, கடந்த செவ்வாய் அன்று
அதனது ஆளான புஷ், மக்கள் ஆதரவு வாக்கை இழந்தார் என்ற
உண்மை பொருந்தாது என்று தள்ளுபடி செய்கிறது.
குடியரசுக் கட்சியினர் பொதுமக்கள் வாக்கை
வென்றிருந்து, கோர் புளோரிடாவில் 327 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி அடிப்படையில் குடியரசு தலைமையை உரிமைகோரி இருந்தால்
இப்பத்திரிகையும் செய்தி நிறுவனக் கட்டமைப்புகளும் என்ன
சொல்லியிருப்பர் என யாருக்கேனும் சந்தேகம் உண்டா? அவர்கள்
முறைகேடான அதிகார அரசியல் சூறையாடலை தடுக்க சட்டமன்ற
விசாரணைகள், சிறப்பு புலனாய்வு விசாரணைகள் மற்றும் வெளிப்படையான
முறைமாமன்ற ஆணையை வழங்கக் கோரியிருப்பார்கள்.
|