WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
: பிரான்ஸ்
France gripped by fear of deaths from Mad Cow Disease
விசர் மாட்டு நோய் ஏற்படுத்தியுள்ள மரண பயத்தால்
பிரான்ஸ் பீடிக்கப்பட்டுள்ளது
By Chris Marsden
9 November 2000
Use
this version to print
BSE அல்லது விசர் மாட்டு
நோய் எனப்படும் நோயினது மனிதனுக்கான வடிவமான Creutzfeldt
Jacobs Disease (vCJD) எனப்படும் பாரதூரமான
முறையில் மூளையை சேதப்படுத்தும் நோயின் பரவலுக்கு பிரான்ஸ்
முகம் கொடுக்க நேரிடும் எனும் கவலை பொதுமக்கள் மத்தியில்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பிரான்சில் இருவர் CJD
யினால் மரணமடைந்து உள்ளார்கள்.
இது பிரித்தானியாவில் ஏற்பட்ட 80 மரணங்களை விட குறைவானதே
ஆனால் உலகிலே இரண்டாவது இடத்தில் இது இருக்கிறது. கடந்த
வருடம் 31 பேர் இந்த BSE
(Bovine Spongiform Encephalopathy) நோயினால்
பீடிக்கப் பட்டிருந்தார்கள் இது இந்த வருடம் இரண்டு மடங்காக
அதாவது 80 ஆக உயர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இன்று அதிகம் கவலைக் கிடமானது என்னவெனில் ஒவ்வொரு
வருடமும் 50 ஆயிரம் அளவில் மாடுகள் "மர்மமாக இறக்கின்றன"
என அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது தான்.
பிரான்சின் மிக பிரபல்யமான Carrefour
எனப்படும் நிறுவனத்தினால் நடாத்தப்படும்
பெரும் நவீன சங்கிலித்தொடர் அங்காடி (supermarket
chains), இறச்சி வெட்டும் இடங்களில்
பாதுகாப்பு பரிசோதனையின் பின்னர் BSE
நோய் தொற்றிய ஒரு டன் அளலான
மாட்டு இறச்சி வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக
தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. மிருகங்களுக்கான உணவை உற்பத்தி
செய்யும் கிட்டதட்ட 10 இற்கும் மேலான நிறுவனத்தினர் BSE
இனால் பாதிக்கப்பட்ட முதுகெலும்பு
கழிவுகளையும், இறச்சிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்தக் கிழமை, BSE இனால்
பாதிக்கப்பட்ட மாடுகளை மாடு வெட்டுபவர்களிடம் விற்க
முயன்றதற்காக ஓர் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விளைவுகளால் மாட்டு இறச்சி பாவனை
வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய உணவகமான Buffalo
Grill தனது
உணவு பட்டியலில் இருந்தும் அதனது இறச்சி வினியோகஸ்த்தர்களிடம்
இருந்தும் மாட்டு இறச்சியை நீக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து
சில உணவகங்களும் இதைப் பின்பற்றின. பிரான்சின் முக்கிய நகரங்களான
Paris,Bordeaux, Toulouse, Caen and
Cherbourg போன்ற நகரங்களின் பாடசாலைகள்
மற்றும் குழந்தைகள் பராமரிப்பகங்களிலும் (kindergarden)
மாட்டு இறச்சி நீக்கப்பட்டுள்ளது.
நவீன அங்காடிகள் (supermarkets)
25 இருந்து
40 வரை இறச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக
சொன்ன போதும், இறைச்சி வெட்டப்படும் இடங்களில் 30 இருந்து
50 வரை இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறைச்சி மற்றும் மிருகப்பண்ணை கூட்டுறவு சங்கத்தின்(livestock
cooperatives' federation FNCBV) தலைவரான
Michel Prost இறைச்சி
கடைகளில் மாட்டு இறைச்சியின் விற்பனை 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன்
மாட்டு இறைச்சியின் விலையானது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது
என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட அரசாங்கம்
தான் போராடுவதாக மக்களை அமைதிப்படுத்த முயற்சித்த
போதும் இது குறைந்த அளவே வெற்றியளித்துள்ளது.
மாட்டின் முதுகெலும்புகள் அதிகமான பாதிப்பை
உண்டாக்குகிறது என நம்பப்படுவதால் உணவு வகைகளில் இருந்து
அதை முழுதுமாக நீக்கி விடுவதன் சாத்தியம் பற்றி உணவு பாதுகாப்பு
அமைப்பான AFSSA வுடன்
கலந்துரையாடப் பட்டதாக விவசாய அமைச்சரான Jean
Glavany பத்திரிக்கைகளுக்கு பதிலளித்த
போது குறிப்பிட்டார். மாட்டு இறச்சி எலும்பினால் ஏற்படும்
அபாயம் பற்றி விசாரணை செய்யும்படி AFSSA
விடம் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
கோலிச ஜனாதிபதியான (Gaullist
President) ஜாக் சிறாக் கோழி, பன்றிகளுக்கு
உணவாக செத்த மாடுகளின் எலும்பு மற்றும் இறச்சியில் இருந்து
செய்யப்படும் உணவு வகைகளை விற்பதை உடனடியாக நிறுத்தும்
படி கேட்டுக் கொண்டதானது ஜொஸ்பனின் சோசலிச கட்சியின்
அரசாங்கம் முகம் கொடுக்கும் நெருக்கடியினை ஆழமாக்கியுள்ளது.
மாட்டு இறச்சியில் இருந்து செய்யப்படும் உணவை மாடுகளுக்கு
அளிப்பது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் ஏனைய இறச்சிக்காக
வளர்க்கப்படும் மிருகங்களுக்கு அது அனுமதிக்கப்பட்டிருந்தது.
அரசால் மீள் உறுதிப்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கை
இளம் சுகாதார அமைச்சரான Dominique
Gillot, ''விசர் மாட்டு நோய் பீடிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை பிரான்சில் அதிகரித்துக் கொண்டுள்ளது, இதனால்
பல டசின் கணக்கான Creutzfeldt-Jakob
நோயாளர்களை நிட்சயமாக நாம்
எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்....நாம் அதற்கு தயாராக
வேண்டும்'' என நவம்பர் 7ல் ஏற்றுக்கொண்டதால் மேலும்
கீழ் இறக்கப்பட்டது.
மனிதனை பீடிக்கும் வகையான vCJD
எனப்படும் விசர் மாட்டு நோய்
மூன்றாவதாக இன்னொரு இளைஞனையும் பீடித்திருப்பது ''ரொம்ப
நிட்சயமானதே'' என Gillot கூறியதுடன்
இந்த நோயின் அறிகுறிகள் ஏற்கனவே பலருக்கு தெரிய வந்துள்ளதுடன்
இது இன்னும் அதிகரித்துக் கொண்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதார விளைவுகளின் கேள்விக் குறியானது
பிரான்சின் இறச்சி தொழிற்துறை மீது அழிவுகரமான முறையில் இப்போது
நகர்ந்துள்ளது. ஜரோப்பாவில் பிரான்ஸ் மாட்டு இறச்சி ஏற்றுமதி
செய்யும் பிரதான நாடாகும். இது, BSE
அபாயம் என்ற பேரில் ஜரோப்பாவில்
பிரித்தானிய மாட்டு இறச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை
செய்து வந்தது. பிரான்சின் மேற்கு பகுதியைச் சேர்ந்த மாடுகள்
அதிகமாக BSE அபாயம்
உள்ளதாக நம்பப் படுவதால் ரஷ்யா அங்கிருந்து இறக்குமதி செய்வதை
நிறுத்தியுள்ளதுடன் தற்போது ஹங்கேரியும் போலந்தும் பிரேஞ்
மாட்டு இறச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என நிர்பந்தித்துக்
கொண்டுள்ளன.
விவசாயிகள் தம்மை வங்குரோத்தில் இருந்து
பாதுகாக்க விவசாயிகள்
சங்கமான FNSEA தலைமையுடன்
இணைந்து அரசாங்கத்திடம் இருந்து ஒரு உதவித் தொகை பெற்றுக்கொள்ள
அழைப்பு விட்டுள்ளனர். மேலும், இந்த சங்கத்தின் தலைவரான Luc
Guyau, ''நாம் அபாயத்தின் விழிம்பில் உள்ளோம்...
சில விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைமைக்கு சென்றுள்ளனர்''
என எச்சரித்துள்ளார்.
BSE யின் பாதிப்பு Belgium,
Denmark, Lichtenstein, Luxembourg, Netherlands, Portugal, Switzerlandand,
Ireland இலும் உள்ளதாக அறிக்கைகள்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரித்தானாயாவிற்கு பிறகு மூன்று
நாடுகளில் அதிமான பாதிப்புகள் நடந்துள்ளன என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரோம் மருதுவ மனையொன்றில் விசர் மாட்டு நோயினால் இந்த
வருடம் ஆகஸ்டில் ஒரு இத்தாலியர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|