WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
:
ஐக்கிய
அமெரிக்கா
US election turmoil marks the onset of a
revolutionary crisis
உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழு தலைவர்
சிட்னி கூட்டத்தில் உரை
அமெரிக்க தேர்தல் குழப்பங்கள் ஒரு புரட்சிகர
நெருக்கடியின் ஆரம்பத்தை குறிக்கிறது
By our reporter
5 December 2000
Use
this version to print
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS)
ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின்
தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை
சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்
போது அமெரிக்க தேர்தல் நெருக்கடி உலக முதலாளித்துவத்தின்
இதயத்தில் ஒரு புரட்சிகர நெருக்கடி வெடித்துள்ளதை காட்டிக்
கொண்டுள்ளதாக தெரிவித்தார். இது மதிப்பிட முடியாத விதத்தில்
பூகோளரீதியான தாக்கங்களை கொண்டுள்ளதாகவும் நோர்த்
குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதியரசர் அன்டனின் ஸ்காலியா
அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் -அதாவது
ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை
அமெரிக்க மக்கள் கொண்டிருக்கவில்லை என்பது- 1857ம் ஆண்டின்
அவமானத்துக்கிடமான டிரெட் ஸ்கொட் தீர்மானத்துக்கு இட்டுச்
சென்றுள்ளது. இந்தப் போக்குகளே அமெரிக்க சிவில் யுத்தத்தினை
விரைவுபடுத்தின என டேவிட் நோர்த் எச்சரிக்கை செய்தார்.
பல்லாயிரக் கணக்கான வாக்குகள் உரிய முறையில்
கணக்கிடப்படவில்லை எனக்கூறி புஷ்சின் தேர்தல் வெற்றியை
புளோரிடா மாநிலச் செயலாளர் கதரின் ஹரிஸ் அத்தாட்சி செய்வதை
தாமதப்படுத்த வேண்டும் எனவும் புளோரிடா உயர் நீதிமன்றம்
செய்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் ஜோர்ஜ். டபிள்யூ.புஷ்சின்
மேன்முறையீட்டை விசாரணை செய்துவருகின்றது. "இந்த வழக்கை
நீதி விசாரணை செய்கையில் ஸ்காலியா தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு
அப்பால் வெகுதூரம் சென்று, அமெரிக்க அரசியல் அமைப்புச்
சட்டத்துக்கு ஒரு ஆழமான ஜனநாயக எதிர்ப்பு அர்த்தத்தை அறிமுகம்
செய்யவும் சட்டபூர்வமானதாக்கவும் பிரேரித்துக் கொண்டுள்ளார்"
என நோர்த் குறிப்பிட்டார்.
அமெரிக்க உயர் நீதிமன்றம் இறுதியாக எப்படி தீர்ப்பு
வழங்கியது என்பது "அமெரிக்கன் ஆளும் வர்க்கம் பாரம்பரியமான
முதலாளித்துவ- ஜனநாயக, அரசியலமைப்புச் சட்ட வடிவங்களை
எல்லாம் உடைத்து தகர்த்துக் கொண்டு எந்தளவுக்கு செல்ல
தயாராகிக் கொண்டுள்ளது" என்பதை அம்பலமாக்கியுள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.
"அது வாக்கு மோசடிகளையும் வாக்குகள்
அடக்கி ஒடுக்கப்பட்டமையையும் அங்கீகரித்து அடியோடு சட்டவிரோதமானதும்
ஜனநாயக எதிர்ப்பு விதிமுறைகள் மூலமும் ஜனாதிபதி பதவியை ஈட்டிக்
கொண்ட ஒருவரை வெள்ளை மாளிகைக்குள் நுழைப்பதை அங்கீகரிக்க
ஆயத்தமாக இருந்ததா?" என்னதான் முடிவுகளாக இருந்தாலும்
கடந்த மூன்று வாரங்களும் "அமெரிக்காவினுள் முதலாளித்துவ
ஜனநாயகத்தின் பாரம்பரியமான வடிவங்களுக்கு ஆளும் வர்க்கப்
பிரமுகர்களிடையே இருந்து வந்த ஆதரவில் பெரும் தேய்வு ஏற்பட்டுள்ளதை"
எடுத்துக்காட்டுகின்றன என டேவிட் நோர்த் மேலும் குறிப்பிட்டார்.
150க்கும் அதிகமான தொழிலாளர்கள், மாணவர்கள்,
கல்வியாளர்கள், தொழில் ரீதியானோர் கூடியிருந்த இந்த பலம்வாய்ந்த
கூட்டத்தில் பேசிய நோர்த், ஒரு பத்திரிகையாளரின் கருத்தை உதாரணமாகக்
காட்டி பெரும்பான்மை அமெரிக்க தொடர்பு சாதனங்களின்
மனோபாவத்தை விளக்கினார். "ஆம், கோர் நிச்சயம்
அதிக வாக்குகளை பெற்றுள்ளார்? ஆனால் அதையிட்டு யார் அக்கறைப்படவேண்டும்?
அவர் வழிப்பறிக்கு உள்ளானார். உள்ளூர் பொலிசார் அலட்டிக்
கொள்ளவில்லை."
"இந்த தேர்தலில் எழுப்பப்பட்டுள்ள ஜனநாயக
உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றின் ஆழமான
பிரச்சினைகளை தெளிவுபடுத்த உலக சோசலிச வலைத்தளம் மட்டுமே
நின்று கொண்டுள்ளது" எனவும் நோர்த் கூறினார்.
கூட்டத்தில் பரந்துபட்ட துறைகள் பற்றியும் தெளிவான
முறையில் உரை நிகழ்த்திய டேவிட் நோர்த், அமெரிக்க உள்நாட்டு
யுத்தத்துக்கு இட்டுச் சென்ற 1850பதுகளின் நிகழ்வுகளை விரிவாக
ஆய்வு செய்தார். 1860பதுகளுக்கு முன்னர் அடிமைத்தனத்துக்கும்
சுதந்திர உழைப்புக்கும் இடையே ஈடுசெய்ய முடியாத
மோதுதல்" இருந்து வந்ததாலும் அது "இறுதியில்
அரசியல் அமைப்பை அடியோடு சிதறுண்டு போகச் செய்யும்
நிலைமையை உருவாக்கியது" எனவும் நோர்த் வாதிட்டார்.
அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்துக்கு முந்திய
நெருக்கடிக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் இடையே ஏதேனும்
ஒருமைப்பாட்டைக் காண முடியுமா? என அவர் கேட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் அடிப்படையான
பிரச்சினை, சமூக செல்வத்தின் பங்கீடு. முன்னேறிய முதலாளித்துவ
உலகில் மாபெரும் சமூக துருவப்படுத்தல் நிலைமைகளின் கீழ் குடியரசுக்
கட்சி "ஊழியச் சுரண்டல், கம்பனி இலாபமீட்டல், தனிப்பட்ட
செல்வ திரட்சி மீதான சகல தடைகளையும் -பொருளாதார
அரசியல், சமூக- நீக்கும்" வேலை திட்டத்தைக் கொண்டிருந்தது.
"வாக்குரிமை மீதான இன்றைய தாக்குதல்,
தொழிலாளர் வர்க்கம் அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு
சுதந்திர வடிவிலும் பங்கு கொள்வதை ஒழுங்குமுறையாக ஒழித்துக்
கட்டுவதன் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் வெளிப்பாடாகும்."
இந்தளவு பிரமாண்டமான சமூக முரண்பாடுகளின்
பளுவின் கீழ் கடந்த 150 ஆண்டுகளாக இருந்து வந்த அரசியல்
மேற்கட்டுமானம் சிதறுண்டு போய் வருகின்றது.
அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்கு முந்திய
அரசியல் முரண்பாடுகளின் பின்னால் கைத்தொழில்கள் புகையிரத
சேவைகள், தொலை தொடர்பு வசதிகள் உட்பட்ட பிரமாண்டமான
பொருளாதார மாற்றங்கள் கைத்தொழில்மயமான வட அமெரிக்காவின்
அந்தஸ்த்தை பலம் வாய்ந்ததாக்கியது எனவும் நோர்த் விளக்கினார்.
அவ்வாறே கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா
அசாதாரணமான பரிணாமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. புரட்சிகரமான
புதிய தொழில்நுட்பங்கள் பூகோளமயமாக்க போக்கினை துரிதப்படுத்திக்
கொண்டுள்ளன. இது சமூக அடிப்படையில் பாரிய மாற்றங்களுக்கு
இட்டுச் சென்றுள்ளது. பாரம்பரிய மத்தியதர வர்க்கத்தின் அந்தஸ்து
வீழ்ச்சி கண்டது. அமெரிக்க சமுதாயம் பரந்த அளவில் பாட்டாளிமயமாக்கப்பட்டது.
"குடியரசுக் கட்சியும் அதன் சகல பித்துப்பிடித்த
பகுதியினரும் பூகோளமயமாக்கப் போக்கில் பெரிதும் குறைகாணும்
எதிரிகளாக தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள்
அமெரிக்க கோட்டைக்குத் திரும்பி, பூகோளரீதியான மாற்றப்
போக்கிலிருந்து அன்னியப்பட்ட ஏதோ ஒரு கற்பனையான அமெரிக்க
அரசுகளின் திசையில் மணிக்கூட்டை திருப்புவது பற்றிப் பேசிக் கொள்வது
விபத்து அல்ல" என நோர்த் சுட்டிக் காட்டினார்.
இருபதாம் நூற்றாண்டு பூராவும் மார்க்சிசத்தின்
தாக்கிப்பிடிக்கும் தன்மையை நிராகரித்த சகலரதும் புனித வாக்கியங்களாக
அமெரிக்காவில் சோசலிசப் புரட்சி முடியாத காரியம் என்பது
விளங்கியதாக நோர்த் கூறினார். உலக ஏகாதிபத்தியம் அமெரிக்க
முதலாளித்துவத்தின் பலத்திலும் ஸ்திரப்பாட்டிலும் தொடர்ந்து தங்கியிருந்தது.
ஆனால் இன்றைய தேர்தல் நெருக்கடி அதை கேள்விக்கிடமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அரசாங்கமும் அமெரிக்காவிலான
அரசியல் நிகழ்வுகளின் தாக்கங்களை கணக்கில் எடுக்கத் தள்ளப்படும்
என நோர்த் வலியுறுத்தினார். அமெரிக்க நெருக்கடி உலகம்
பூராவும் எதிரொலிப்பதோடு பொருளாதார மாற்றங்களை மட்டுமல்லாது
பரந்த அளவிலான மக்களின் சமூக உளவியலிலும் பெயர்ச்சிகளை
ஏற்படுத்தும். சமூகப் புரட்சியின் அபிவிருத்தியில் இது ஒரு தீர்க்கமான
காரணியாகும்.
இக்கூட்டம் ஒரு உயிர்துடிப்பான கேள்வி பதில்
கலந்துரையாடலோடு நிறைவு பெற்றது. இது தேர்தல் நெருக்கடியின்
பல்வேறுபட்ட அம்சங்களையும் தொட்டுக் கொண்டது.
உலக சோசலிச வலைத் தள நிதியாக 2000 டாலர்கள் கூட்டத்தில்
திரட்டப்பட்டது.
டேவிட் நோர்த்தின் இந்த பேச்சின் முழு விபரமும்,
கேள்வி பதிலும் விரைவில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கத்தில்
வெளிவரும்.
|