World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : ஐக்கிய அமெரிக்கா

US Supreme Court hearing highlights state conspiracy against democratic rights

அமெரிக்க உச்சநீதிமன்ற விசாரணை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அரசின் சதியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

By Barry Grey
2 December 2000

Use this version to print

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணை நடவடிக்கைகள், அமெரிக்க ஆளும் மேற்தட்டினரின் பெரும்பகுதியும் அரசின் மேல்மட்டத்தில் உள்ள அதன் ஏஜன்டுகளும் ஏற்கனவே மிக அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளில் இருந்து முறித்துக் கொண்டு விட்டார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. கடந்த மாதம் புளோரிடா உச்ச நீதிமன்றம் தொடர்பாக, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் புஷ்-ன் முறையீடு தொடர்பாக வாதங்களை 9 உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கேட்டார்கள். நவம்பர் 21 அன்று புளோரிடா நீதிமன்றம், ஜனாதிபதி வாக்குகளை கையால் மறுவாக்கு எண்ணலை அனுமதிக்குமாறும் உத்தியோகப்பூர்வ கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் மாநில தேர்தல் விதிமுறைகளுக்கிணங்க புளோரிடாவின் தென் மாவட்டங்களில் திரும்ப மறுவாக்கு எண்ணல் நடைபெற வேண்டும் என்றார். ஏனென்றால் உத்தியோகப்பூர்வ வாக்கு வித்தியாசம் 537 வாக்குகள் மட்டுமே என்பதுடன் ஆயிரக்கணக்கான ஜனாதிபதி வாக்குகள் ஆரம்ப இயந்திரப் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை.

George W. Bush புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் Jeb Bush (சகோதரர்) மற்றும் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றம் கையால் மறுவாக்கு எண்ணலை நிறுத்த உறுதியாய் இருக்கின்றனர். ஏனெனில் முழுமையான, மிகவும் துல்லியமான வாக்குகள் கணக்கெடுப்பு கோருக்கு 25 தொகுதி வாக்குகளைக் கொடுக்கும் மற்றும் தேசிய அளவில் வாக்கு வித்தியாசத்தை வழங்கும் என்பது குடியரசுக் கட்சியினருக்கு நன்கு தெரியும்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னால் உள்ள அடிப்படை பிரச்சினை என்னவெனில் குடிமக்களுக்கான வாக்களிக்கும் உரிமையும் அவர்களது வாக்குகளைக் கணக்கெடுப்பது பற்றியும் தான். இந்த உச்சநீதி மன்றம் புஷ் பக்கம் சாய்ந்தால், அது உத்தியோகப்பூர்வமாய் ஜனாதிபதியை ஜனநாயக விரோத வழி முறையில் திணிப்பதாக இருக்கும்.

நீதிமன்றம் அடுத்த சில நாட்களில் தீர்ப்பை வழங்கும் என பெரும்பாலான பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் வெளிப்பாடு என்னவாக இருந்தாலும், நீதிமன்றத்தின் மிக வலது சாரி பிரிவினர் மக்கள் இறையாண்மை மற்றும் ஜனநாயக விதிமுறை பற்றிய அடிப்படைக் கருத்துக்கு எதிராக இருக்கின்றனர் என்பதை ஏற்கனவே விசாரைைணயே எடுத்துக் காட்டி உள்ளது. நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் இருபக்கத்திலும் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களின் பொழுது, தலைமை நீதிபதி வில்லியம் ரென்குய்ஸ்ட் மற்றும் இணை நீதிபதியான அன்டோனின் ஸ்காலியா இருவரும் இன்னொரு இணைநீதிபதியான கிளியரன்ஸ் தாமஸ் உடனும் சேர்ந்து நீதிமன்றத்தின் அதிவலதுசாரிப் பிரிவாக இருந்து, புளோரிடா உயர்நீதி மன்றத்துக்கு மாநில தேர்தல் நிர்வாகத்தின் முடிவுகளை மறுப்பதற்கு அதிகாரம் கிடையாது என்ற விவாதத்தை மூவரும் முன்வைத்தனர். இவ்வாதத்தை அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒவ்வொரு மாநில மக்கள் செல்வாக்கு வாக்கு மூலம் ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த சரத்தும் இல்லை என்ற அடிப்படையில் முன் வைத்தனர். (அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஆர்கேன் தனிச்சிறப்பு சட்டப்பிரிவின்படி பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் பொதுவாக ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பர்) இதற்குப்பதிலாக, எது பொருத்தமானது என்று கொள்ளக் கூடிய வழிமுறைகள் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுப்போரைத் தேர்ந்தெடுக்கும் முதல் வாக்குரிமை மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கானது என்று வாதித்தனர்.

ரென்குய்ஸ்டும் ஸ்காலியாவும் மேற்கோள் காட்டிய அரசியல் சட்டம் IIவது ஷரத்தின் 1வது பிரிவு கூறுகிறது: "ஒவ்வொரு மாநிலமும், அந்த சட்டமன்றம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்ந்தெடுப்போரை நியமிக்கலாம், என்றபடி அது வழிகாட்டலாம்." புளோரிடா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான அவர்களது தாக்குதலில், மூவரும் அதன் ஜனநாயக அம்சத்தில் தாக்குதலை மையப்படுத்தினர் - புளோரிடா அரசியல் சாசனம் மக்களுக்கு வாக்குரிமைக்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது, அதனை வேறு சில சட்டரீதியிலான நுட்பங்கள், காலக்கெடு என்பதனால் சமரசப்படுத்த முடியாது.

ரென்குய்ஸ்டும் ஸ்காலியாவும், புளோரிடா உயர் நீதிமன்றம் அதன் முடிவுக்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான புளோரிடா மக்களின் உரிமையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அரசியல் சாசனத்தின் II வது ஷரத்தில் காணப்படுவதுபோல சட்டமன்றத்தின் தனிமுதல் வாக்குரிமைைைய மீறுவதாக இருக்கிறது என்று வலியுறுத்தினர். ரென்குய்ஸ்ட் இந்த முன்னணி வழியாகத் தாக்குதலை ஆரம்பித்தார்; ஸ்காலியா இன்னும் முன்னெடுத்துச் சென்றார். கோரின் வழக்கறிஞர் (அட்டர்னி) லாரன்ஸ் ட்ரைப் உடனான விவாதத்தில் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்:

''ஒரு அரசியல் சட்டத்தை இயற்றுவதற்காக ஒரு முடிவை அடைவதற்கு புளோரிடா அரசியல் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம் என்று புளோரிடா உச்சநீதிமன்றம் அதன் கருத்தைக் தெளிவாகச் சொல்வதால் கூட்டாட்சி பற்றிய கேள்வி எழுகிறதாக எனக்குத் தோன்றுகிறது.

அதனை அடுத்து ஸ்காலியா விரைந்து தலையீடு செய்து, உச்சநீதிமன்ற முடிவை மேற்கோள் காட்டுகிறார். ``புளோரிடா சாசனத்தின் உரை உரிமைகளைப் பிரகடனம் செய்வதுடன் தொடர்கிறது. மற்றும் (புளோரிடா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு) தேர்தல் நிகழ்ச்சிப் போக்கை நெறிப்படுத்துவதற்கு சட்டங்களை சட்டமன்றம் இயற்றுகிற வரை, அரசியல் சாசனத்தில் உள்ளடங்குகின்ற வாக்களிப்பதற்கான உரிமைகள் மீது `அவசியமற்ற அல்லது நியாயமற்ற` கட்டுப்பாடுகளைத் திணிக்காதவரைதான் அது செல்லுபடியாகும் என மேலும் கூறுகிறது.

``வேறுவார்த்தைகளில் சொன்னால், நான் வாசித்தபடி புளோரிடா நீதிமன்றத்தின் கருத்துக்கள் தெளிவாகச் சொல்கிறது - சட்டமன்றத்தின் எண்ணம் எது என்று தீர்மானித்த பிறகு, நமது மாநில அரசியல் சாசனம் அந்த சட்டமன்றத்தின் எண்ணத்தைத் தடை செய்வதாக இருக்கிறது. அதை வேறுவிதமாகப் பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றவில்லை. அதுதான் உண்மையான பிரச்சினை, (அமெரிக்க அரசியல் சாசனத்தின்) IIவது ஷரத்தின் கீழ் வாக்களிப்பு உரிமை எதுவும் கிடையாது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அங்கு சட்டமன்றத்திற்கு வாக்களிப்பதற்குத் தான் வாக்களிப்பு உரிமை இருக்கிறது. IIவது பிரிவு தெளிவுபடுத்துகிறது, சட்டமன்றம் அதுவாகவே தேர்ந்தெடுப்பவர்களை நியமிக்கலாம் என்று.

இந்த வாதத்துடன் ரென்குய்ஸ்டும் ஸ்காலியாவும், புளோரிடா சட்டமன்றம் தனது சொந்த (ஜனாதிபதியைத்) தேர்ந்தெடுப்பவர்களை நியமிக்கலாம் என்று அதன் திட்டத்தை நடத்திச் செல்ல பச்சை விளக்கு காட்டியது மட்டுமல்லாமல், அது ஒரு வேளை கோர்தான் வெற்றியாளர் என்று பிரகடனம் செய்யும் நிகழ்ச்சியில் வாக்காளர்களின் விருப்பத்தைப் புறக்கணிக்கலாம்.

அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றனர். எந்த மாநில சட்டமன்றமும் இதேபோல் செய்யலாம், மக்களுக்கு இந்த அரசியல் சாசனத்தில் கீழ் நுழைவுரிமை கிடையாது என்று அறிவித்தனர். இது அமெரிக்க மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்வதற்கான போலியான சட்ட நியாயப்படுத்தலுக்கும் சர்வாதிகார ஆட்சியைத் திணிப்பதற்கும் குறைந்த எதுவும் இல்லை.

புஷ்ஷின் வழக்கறிஞர் தியோடர் ஓல்சன், நீதிபதிகளுக்கும் லாரன்ஸ் ட்ரைப்புக்கும் இடையில் நடந்த விவாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் செய்த குறிப்புரையில், ரென்குய்ஸ்ட் மற்றும் ஸ்காலியாவின் வாதங்களை எடுத்து முழுமையாகப் பேசினார். ``எனக்குத் தோன்றுகிறது`` என ஆரம்பித்தார். ``புளோரிடா உச்ச நீதிமன்ற முடிவு, அவர்களது கண்ணோட்டத்தில் புளோரிடா அரசியல் சாசனத்துடன் எல்லாவற்றையும் தருகிறது என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லவில்லை என்பதைப் படிக்காமல் இருப்பது கடினம்``. அவர் நக்கலாக கூறினார்: ``முடிவுப்பகுதியின் இரண்டாவது பந்தி புளோரிடா அரசியல் சாசனத்தின் உரிமைகளுக்கான பிரகடனத்தில் வாக்களிக்கும் உரிமை என்பது முக்கியமானது மற்றும் அந்தவாறாக என்று கூறுகிறது. இக்கருத்தின் முழுமையாக இருக்கிறது. ``அரசியல்சாசனத்தின் IIவது ஷரத்தின் 1 வது பிரிவு வேண்டிக் கொண்டபடி, புளோரிடா அரசியல் சாசனத்துக்கு புளோரிடா நீதிமன்றம் அதனை அனுமதித்துக் கொண்டது அல்லது அதுவாக அதனை அனுமதித்துக் கொண்டது`` என்று ஓல்சன் கூறினார்.

இணை நீதிபதிகளான ஜான்பால் ஸ்டீவன்ஸ், டேவிட் செளட்டர், ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் ஸ்டீபன் பிரேயர் ஆகியோரைக் கொண்ட, நீதிமன்றத்தின் தாராளவாதின் மிதவாத கன்னையைச் சேர்ந்த இவர்களது கேள்விகளும் இடையீடுகளும் -- அதிகபட்சமாய் புளோரிடா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான புஷ்ஷின் வழக்கின் முடிவு செல்லுபடியாகாது என்பதில் ஐயுறவாதம் கொண்டவர்களாக இருந்ததை எடுத்துக்காட்டின. அவர்களும் சரி கோரது வழக்ககறிஞர் லாரன்ஸ் ட்ரைப்பும் சரி, ரென்குய்ஸ்ட் மற்றும் ஸ்காலியாவின் அதிகாரத்தனமான வாதங்களைத் தாக்கவில்லை. ட்ரைப் மக்களின் இறையாண்மை மற்றும் வாக்களிக்கும் உரிமை பற்றிய பிரச்சினைகள் மீது வெளிப்படையாக எதிர்த்துப் பேசினபோது, அவர்களது தாராள எதிராளிகள் ஜனநாயக உரிமைபற்றிய அடிப்படை அம்சங்களில் மெளனமாக இருந்தனர். ட்ரைப் அதிகமாகச் சொல்ல முடிந்ததெல்லாம், "மக்களது வாக்குரிமையை இழக்கச் செய்வது பற்றியதுதான் இது எல்லாமே. மக்களுடைய வாக்குரிமையை இல்லாமல் செய்வது அவ்வளவு நல்லதல்ல`` என்றுதான்.

வார்த்தைகளைப் பூசி மெழுகுவதற்கான நேரம் இதுவல்ல. வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற அறையில் சதியின் முடைநாற்றம் வீசத்தொடங்கியது. இப்பிரதான நடிகர்களில் இரண்டு பேர் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கெதிரான சதிகளின் நீண்ட (ரெக்கார்டைப்) பதிவுச்சான்றை கொண்டவர்கள். ரென்குய்ஸ்ட் அவரது அரசியல் தொடக்கத்தை குடியரசு கட்சியின் வலது சாரி ஆளாகத் தொடங்கினார். அங்கு அவர் பள்ளியில் பாரபட்சத்திற்கு எதிரானதை எதிர்த்தார். சிறுபான்மைத் தொழிலாளர்களை வாக்களிக்கும் உரிமையிலிருந்து தடுத்தார். பில்கிளிண்டனை பதிவி நீக்கம் செய்யும் அரசியல் குற்றச்சாட்டு சதியில் இவர் முக்கிய பாத்திரம் வகித்தவர். முதலாவது வைட்வாட்டர் சுதந்திர சபையினை பதவி நீக்கம் செய்த, தீவிர வலதுசாரி நீதிபதியை நியமித்தவர் மற்றும் அவருக்குப் பதிலாக கென்னத்ஸ்டாரை நியமித்தவர்.

ஓல்சன் வலதுசாரி வழக்கறிஞர் அமைப்பான பெடரலிஸ்ட் சொசைட்டியின் முன்னனி உறுப்பினர். இவரும் கூட கிளிண்டனுக்கு எதிரான அரசியல் சதியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர் ஆவார். ஓல்சன் கென்னத் ஸ்டாரின் நெருங்கிய நண்பரும் நீண்டகால கூட்டாளியும் ஆவார். அவரது மனைவி பார்பரா ஓல்சன் பதவி நீக்கப் பிரச்சாரத்தில் குடியிரசுக் கட்சியினருக்கு வேலை செய்தவர்.

உச்சநீதிமன்ற விசாரணை, அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிகவும் அதிகமான சீரழிவினைக் கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் - அதன் மிக அடிப்படையான உரிமைகள் ஆபத்தில் இருக்கிறது. அவற்றை ஜனநாயகக் கட்சி மூலமாகவோ அல்லது நீதிமன்றங்களைச் சார்ந்திருப்பதன் மூலமோ பாதுகாக்க முடியாது. வலதுசாரி சூழ்ச்சிகளைத் தோற்கடிக்கவும் தங்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், உழைக்கும் மக்கள் தங்களின் சொந்த அரசியல் கட்சியைக் கட்ட வேண்டும்.