WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
:
ஐக்கிய
அமெரிக்கா
Supreme Court halts Florida vote count: A black day for American democracy
புளோரிடா மாநில வாக்குகள் மீள எண்ணப்படுவதற்கு
உயர்நீதிமன்றம் தடை: அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஒரு கரிநாள்
By the Editorial Board
10 December 2000
Use
this version to print
ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்படாத புளோரிடா
வாக்குகளை கைகளால் எண்ணுவதற்கு தடைவிதித்து சனிக்கிழமை
மாலை அமெரிக்க உயர்நீதிமன்றம் (Supreme
court) கட்டளை இட்டமை, மிகவும்
அடிப்படையான ஜனநாயக உரிமையான வாக்குரிமைக்கு எதிரான
முன்னணி தாக்குதலாகும். இது, George
W. Bush அன்றி ஜனநாயகக் கட்சி வேட்பாளர்
அல்கோர் மாநிலத்தில் வெற்றி கண்டு ஜனாதிபதி பதவியையும் வெற்றி
பெற்றவராகக் காட்டும் வாக்குக் கணிப்பைத் தடை செய்ய George
W. Bush ம் குடியரசுக் கட்சியும் நடாத்தி
வந்த நீண்ட பிரச்சாரத்தின் உச்சக் கட்டமாக இது விளங்குகின்றது.
ஒரு மாத காலமாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகள்
சட்ட, அரசியல் சூழ்ச்சிகளின் போது முக்கியமான பிரச்சினை
தலைநீட்டியுள்ளது. புளோரிடா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை
வழங்கிய அதனது தீர்ப்பில் "உள்ளூராட்சி சபைகளுக்கான ஆணையாளரைத்
தெரிவு செய்யும் தேர்தலிலும் சரி அல்லது அமெரிக்க அரசுகளின்
ஜனாதிபதி தேர்தலிலும் சரி சாத்தியமான போதெல்லாம் ஒவ்வொரு
பிரஜையினது வாக்குக்களும் கணக்கிடப்பட வேண்டும்" என
புளோரிடா சட்டம் வேண்டிக் கொண்டுள்ளதாகப் பிரகடனம்
செய்தது. அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் ஐந்து அங்கத்தவர்களைக்
கொண்ட வலதுசாரிப் பெரும்பான்மையானது டிசம்பர் 1ம்
திகதி அதனது நிலைப்பாட்டை நீதியரசர் அன்டோனின் ஸ்காலியாவின்
வார்த்தைகளில் பின்வருமாறு கூறிவைத்தது: ஒரு ஜனாதிபதி தேர்தலில்
''வாக்களிப்பதற்கான உரிமை கிடையாது".
வாக்குகள் மீள எண்ணப்படுவதை தடுப்பதை எதிர்த்த
நான்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள்- ஜோன் போல் ஸ்ரீவன்ஸ், ஸ்ரீபன்
பிறேயர், றுத் பாடர் ஜின்ஸ்பேக், டேவிட் சோட்டர்- நீதியரசர்
ஸ்ரீவன்ஸினால் எழுதப்பட்ட அதிருப்தி அபிப்பிராயத்துடன் இணைந்து
கொண்டனர். இச்சிறுபான்மையினர் இத்தடை, அரசியலமைப்புச்
சட்ட விதிமுறைகளையும் ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளையும்
மீறுவதாகும் எனக் கண்டனம் செய்தனர்.
புளோாிடா உச்ச நீதிமன்றமானது
மாநில தோ்தல் சட்டம் மற்றும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு
ஆணை பிற்ப்பித்தலில் அதன் சட்ட, மற்றும் அரசியல்
சாசன உாிமைகளுக்குள் தெளிவாக நின்றது. மறுபுறத்தில்
மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பை அது சம்பந்தமான சட்டப்பிரச்சினைகள்
தொடர்பான வாதங்களைத் தன்னும் கேட்காமல் இரத்துச்
செய்வது அமெரிக்க மேல் நீதிமன்ற நீதித்துறையின் "அத்துமீறிய"
ஒரு அசாதாரணமான நடவடிக்கையாகும். நீதியரசர் ஸ்ரீவன்சின்
அதிருப்தி அபிப்பிராயம் கூறியதாவது: "மாநில சட்டப் பிரச்சினைகள்
சம்பந்தமாக நாம் மாநிலங்களின் உச்ச நீதிமன்றங்களின் (Highest
courts) அபிப்பிராயங்களை உறுதியாக
மதித்து வந்துள்ளோம்".
புஷ்சின் வாதங்கள் வாக்குகள் மீள எண்ணப்படுவதை
தடுப்பதற்கான ஒரு சட்ட அடிப்படையை வழங்கத் தவறிவிட்டதாக
சிறுபான்மை நீதியரசர்கள் குழு தெரிவித்தது. இது வாக்குகள்
தொடர்ந்து மீள எண்ணப்படும் நிலையில் புஷ் ஈடு செய்யப்பட
முடியாத பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை எடுத்துக்காட்டியது.
"சட்டரீதியாக வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்குகளையும்
கணக்கெடுப்பது ஈடு செய்யப்பட முடியாத பாதிப்புகளை உண்டாக்கும்
என எடுத்துக்கொள்ள முடியாது" என அவர்களின் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டது.
"மறுபுறத்தில் வாக்குகள் மீள எண்ணப்படுவதை தடை செய்வது
பிரதிவாதிகளுக்கு (கோர் தேர்தல் இயக்கம்)ஈடு செய்யப்பட
முடியாத பாதிப்பை உண்டாக்கும். மற்றும் மிகமுக்கியமாக,
பாரிய அளவில் பொதுமக்களுக்கு... மறுவாக்கு எண்ணிக்கையை
தடுப்பது என்பது, தவிர்க்க முடியாத விதத்தில் தேர்தலின் சட்டபூர்வமான
தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.''
சிறுபான்மை நீதியரசர்கள் குழுவினர் தாம் புளோரிடா
சட்டத்தின்படியும் பரந்த ஜனநாயக கணிப்புகளின்படியும்
புளோரிடா உயர்நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் நியாயமானதாக
கணித்துக் கொண்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினர். ஸ்ரீவன்ஸ் எழுதியதாவது:
"ஒரு பெரிதும் அடிப்படையான விடயம் என்ற விதத்தில்
புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு சட்ட ரீதியான வாக்கும்
கணக்கிடப்பட வேண்டும் என்ற எமது அரசியலமைப்பினதும் எமது
ஜனநாயகத்தினதும் அடிப்படைக் கொள்கைகளை பிரதிபலிக்கின்றது."
நாட்டின் உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு பெரும்பான்மையினர்
மக்களின் இறையாண்மையின் மிகவும் அடிப்படையான அம்சத்தை
ஊர்ஜிதம் செய்யாமல் நிராகரித்து விடுவது என்பது அமெரிக்க
ஜனநாயகத்தின் சீரழிவில் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும்.
வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படாத நீதியரசர்கள் வாக்களிக்கும்
உரிமையை அடியோடு அகற்றிவிட முயற்சிக்கின்றனர்.
ஸ்காலியாவின் சிடுமூஞ்சித்தனமான பொய்கள்
புளோரிடாவில் வாக்குகள் மீள எண்ணப்படுவதை
நிறுத்தும்படி வாக்களித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் (ஐவரில்)
நால்வர்- பிரதம நீதியரசர் வில்லியம் ரெக்ன்குவிஸ்ட், கிளாரன்ஸ்
தோமஸ், சண்ட்ரா டே ஓகோனர், அன்ரனி கென்னடி- தமது
நடவடிக்கைக்கான எந்த ஒரு காரணத்தையும் வழங்கவில்லை.
வலதுசாரி கன்னையின் புத்திஜீவி தலைவராகக் காட்டிக் கொள்ளும்
ஸ்காலியா மட்டுமே ஒன்றன் பின் ஒன்றாக சிடுமூஞ்சித்தனமான
பொய்கள் நிறைந்த ஒரு சுருக்கமான கருத்தை வெளியிட்டு இருந்தார்.
ஸ்காலியா எழுதியது இதுதான்: "முரண்பட்ட
தரப்பினர் குறிப்பிடுவது போல் முக்கிய விவகாரம் "சட்டரீதியாக
அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குகளையும் கணக்கிடுவது ஈடு செய்ய
முடியாத பாதிப்பாக விளங்குமா" என்பது அல்ல. இந்த
மேன்முறையீட்டின் முக்கிய விடயங்களில் ஒன்றாக நாம் ஏற்றுக்கொண்டது,
எண்ணிக் கணக்கிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாக்குகள்
புளோரிடா சட்டத்தின் நியாயமான அர்த்தத்தின் கீழ் 'சட்டபூர்வமாக
அளிக்கப்பட்ட வாக்குகள் என்பதா' ."
இது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பாகும். புஷ்
கோஷ்டியினர், புளோரிடாவில் கணக்கிடப்படாத வாக்குகள்
"சட்டரீதியாக அளிக்கப்பட்ட வாக்குகள்" அல்ல எனப்
பிரச்சாரத்தில் கோரவில்லை. "புளோரிடா சட்டத்தின் அர்த்தம்"
எப்படி சமஷ்டி நீதிமன்றங்களில் ஒரு விவகாரமாக மாறமுடியும்
என்பதை விளக்குவதையிட்டு அக்கறை கொள்ளாமலும் ஸ்காலியா
இதை திரைமறைவில் தயார் செய்தார். இந்த வாக்குகள் சட்டரீதியானவை
என்பதில் சர்ச்சையே கிடையாது. அவை பதிவு செய்யப்பட்ட
வாக்காளர்களால் போடப்பட்டவை. மற்றும் எண்ணிலடங்கா
அலுவலகங்களும் அமெரிக்க செனட்டர் தொடக்கம் நவம்பர்
7ம் திகதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களும் இதை சட்டரீதியான
வாக்குகள் எனப் பதிவு செய்திருந்தன.
இங்குள்ள பிரச்சினை இந்த வாக்குச் சீட்டுக்களின்
சட்டரீதியான தன்மை பற்றியது அல்ல. ஆனால் உண்மையோ கணக்கீடு
செய்யும் இயந்திரங்கள் ஜனாதிபதி போட்டியில் தெரிவைக் கண்டுபிடிக்கத்
தவறியதேயாகும். இயந்திரங்கள் பிழைத்துப் போய் விட்டனவா
அல்லது வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளிக்க
விரும்பவில்லையா என்பதை வாக்குச் சீட்டுக்களை கைகளால்
பரிசோதிப்பதன் மூலம் மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும். ஆனால்
இதைத்தான் திட்வட்டமாக வலதுசாரி பெரும்பான்மையினர் தடுத்துவிட
முயற்சிக்கின்றனர்.
அத்தகைய வாக்குகளை மீள எண்ணுவது பற்றி ஸ்காலியா
கூறுவதாவது "எனது கருத்தின்படி விண்ணப்பதாரருக்கும்
(ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்) நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பாதிப்பை
ஏற்படுத்த அது அச்சுறுத்துகின்றது. அவரது தேர்வின் நியாயபூர்வமான
தன்மையின் மீது சந்தேகத்தை உருவாக்குகின்றது. முதலில் வாக்குக்களை
எண்ணுங்கள், அதன் பின்னர் அதன் சட்டபூர்வமான தன்மை மீது தீர்ப்பு
கூறுங்கள் என்பது, தேர்தல் முடிவுகளை உருவாக்குவதற்கான சர்வரோக
நிவாரணி அல்ல, அது (தேர்தல் முடிவுகள்) ஜனநாயக ஸ்த்திரத்தன்மைக்கு
தேவையான பொதுமக்களின் ஒப்புதலைக் கொண்டுள்ளது.''
இந்த வார்த்தைகள் மூலம் ஸ்காலியா மட்டுமல்லாது
சகல நீதியரசர்களும் வாக்குகளை மீள எண்ணுவதை தடுத்தமை,
வாக்குக்களை கணக்கிடுவது எதிரான விளைவுகளை காட்டுவதை
தடை செய்து, ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் ஜனாதிபதி என்ற கோரிக்கையின்
அரசியல் நம்பகத்தன்மையைக் காப்பதற்கேயாகும் என்பதை
அங்கீகரிக்கின்றனர். கோர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்
என்பதை நிரூபிக்க போதிய அளவு வாக்குகள் புளோரிடாவில் எண்ணப்படுமிடத்து,
புஷ் ஜனாதிபதி என்ற "மக்களின் அங்கீகாரத்தை" வெற்றி
கொள்ள முடியாது போய்விடும் என அவர் வாதிடுகின்றார்.
இந்தக் கவலை புஷ்சின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில்
சுருக்கமான முறையில் வெளியிடப்பட்டது. இந்த வழக்கறிஞர்கள்
புளோரிடா உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டனம் செய்தனர். இத்தீர்ப்பு
"ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் புளோரிடா தேர்தல் வாக்குகளில் வெற்றி
பெற்றார் என்ற நவம்பர் 26ம் திகதிய அத்தாட்சியை சந்தேகத்துக்கு
உள்ளாக்கும் அல்லது வாபஸ் பெறும்படி அர்த்தப்படுத்தும்"
பிரச்சினையை எழுப்பியது. வேறு வார்த்தைகளில் சொன்னால் புஷ்
தோல்வியடைவார் என்பதற்காவே வாக்குகள் மீள எண்ணப்படுவதை
தடை செய்யும்படி நீதிமன்றத்திடம் கோரினார்.
அல்கோரினது வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில்
நிகழ்த்திய தொகுப்புரையில் இந்த ஒப்புதலை வெளிச்சத்துக்குக்
கொணர்ந்தனர். அது கூறியதாவது: "ஒரு தடைக்கான விண்ணப்பதாரிகளின்
வேண்டுகோள் ஒரு சிறப்பான கோரிக்கையாக விளங்குகின்றது:
வாக்காளர்களின் நலன்களை முன்வைக்கும் வேஷம் நிறைந்த
நோக்கத்துக்காக விண்ணப்பதாரிகள் இந்நீதிமன்றத்தை உடனடியாக
வாக்குகள் எண்ணப்படுவதை நிறுத்தும்படி வேண்டுகின்றனர். அவர்கள்
ஆச்சரியத்துக்குரிய விதத்தில் வலியுறுத்துவது என்னவெனில், அரசாங்க
பதவிக்குரிய ஒரு வேட்பாளர் வாக்காளர்களின் நம்பிக்கையின்
பகுத்தறிவுபூர்வமானதும் பட்டியல் போட்டுக் காட்டுகின்றதுமான
போக்குகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுப் போகும் இடம்
இருந்து கொண்டுள்ளது. இந்தச் சிபார்சு ஸ்தாபிதம் செய்யப்பட்ட
சட்டத்துக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும்
ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணானது."
வாக்குகளை எண்ணுவதற்கான தரங்கள்
ஸ்காலியா இறுதியாகச் சுட்டிக் காட்டிய விடயம்
என்னவெனில், ஒரு வாக்கு என்றால் என்ன என்பது தொடர்பாக
சிறப்பான அடிப்படை விதியை புளோரிடா நீதிமன்றம் கூறுவதில்லை
என்ற தீர்மானம் பற்றியது ஆகும். "வாக்காளர்களின் உள்நோக்கத்தை
நிர்ணயம் செய்வதைக் காட்டும் -உண்மையில் அரசியல் சட்டபூர்வமான-
ஏற்புடமை- குழிவிழுந்த கன்னம் கொண்ட சேடியன்கள், தொங்குகின்ற
சேடியன்கள் (வட ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள்) முதலியவை-
கவுண்டிக்கு கவுண்டி வேறுபடுகின்றது" எனவும் ஸ்காலியா கேள்வி
எழுப்புகின்றார். இங்கு 64 கவுண்டிகள் வாக்குகளை எண்ணுவதற்கு
64 வேறுபட்ட முறைகளைக் கையாளுகின்றன என்பதாக புஷ்சும்
தொடர்புச் சாதனங்களும் முன்னெடுக்கும் வெறிகொண்ட பிரச்சாரத்தை
ஸ்காலியா பிரதிபலிக்கின்றார். எவ்வாறெனினும் முழு விவகாரமும்
கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு
அத்தகைய தீர்ப்புகளை விடுப்பது புளோரிடா உட்பட்ட ஐக்கிய
அமெரிக்க அரசுகள் பலவற்றிலும் உள்ள வாக்குகளை மீளக் கணக்கிடும்
சட்டங்களின் பண்பாகும்.
மேலும் அமெரிக்கா முழுவதும் "வாக்காளர்களின்
விருப்பத்தை அளவிடும்" விதிமுறைகளில் இடத்துக்கு இடம் பரந்த
வேறுபாடு நிலவுகின்றது. சில கவுண்டிகள் வாக்களிப்பு இயந்திரங்களை
பயன்படுத்துகின்றன. சில "பதிவு அட்டைகளை" பாவிக்கின்றன.
சில வாக்குச்சீட்டுகளை பென்சிலால் அடையாளமிடுகின்றன. சில
பேப்பர் வாக்குச்சீட்டுக்களை கைகளால் எண்ணுகின்றன. ஸ்காலியாவினால்
சிபார்சு செய்யப்பட்ட விதிமுறைகள் புளோரிடா வாக்குகள் மீள
எண்ணப்படுவதை மட்டுமன்றி முழு ஜனாதிபதித் தேர்தலையும் மற்றும்
வேறு எந்த ஒரு அமெரிக்க தேர்தலையும் அரசியலமைப்புச் சட்ட
விரோதமானது எனப் பிரகடனம் செய்யும்.
புளோரிடா உயர் நீதிமன்றம் விரிவான ஒரு விரிவான
அடிப்படை விதியை குறிப்பிடத் தவறிவிட்டது. ஏனெனில் அத்தகைய எந்த
ஒரு விரிவான அடிப்படை விதியும் புளோரிடா சட்டசபையினாலோ
அல்லது மாநில தேர்தல் சட்டங்களாலோ நிர்ணயம் செய்யப்படவில்லை.
இதற்குப் பதிலாக அது மாநில சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட
தரங்களை -அதாவது வாக்குச்சீட்டின் தோற்றத்திலிருந்து உள்ளூர்
அதிகாரிகள் "வாக்காளர்களின் விருப்பத்தை" நிர்ணயம் செய்ய
முயல்வதை- ஆதரிக்கிறது.
இங்கு மீண்டும் ஒரு தடவை புஷ் பிரச்சாரத்தினதும்
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பெரும்பான்மையினரதும் இரட்டைப்
பேச்சு சிறப்பான விதத்தில் அம்பலமாகின்றது. புஷ்சின் பிரச்சாரம்,
ஆரம்ப புளோரிடா நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
செய்தது. இது வாக்குகளை அத்தாட்சிப் படுத்தும் காலக்கெடுவை
நவம்பர் 16ல் இருந்து நவம்பர் 26க்கு தள்ளிப்போட்டது. இதனை
புளோரிடா தேர்தல் சட்டத்தை திருப்பி வரைய முனைந்த சட்டவிரோதமானதும்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமையாத நீதி மன்ற நடவடிக்கை
எனக் கூறிக் கொண்டது. ஸ்காலியாவும் ரெக்குனிகுவிஸ்டும் மற்றும்
வலதுசாரி நீதியரசர்களும் இந்த விவகாரம் டிசம்பர் 1ம் திகதி
அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் எதிரில் முதல் விசாரணைக்கு வந்த
போது திரும்பத் திரும்ப கூறினர்.
சாடியன்களையும் டிம்பிள்கன் (Dimple)
முதலியவற்றை கணக்கெடுப்பதற்காக
ஒரு புதிய, சீரான புளோரிடா தேர்தல் சட்டத்தை திருப்பி எழுதவில்லை
என்பதற்காக இப்போது ஸ்காலியாவும் புஷ் பிரச்சாரமும்
புளோரிடா உயர் நீதிமன்றத்தை கண்டனம் செய்கின்றன.
இந்த வாதங்களின் எரிந்துவிழுகின்ற நேர்மையீனம்,
ஸ்காலியாவும் நீதிமன்ற பெரும்பான்மை நீதியரசர்களும் வகித்த
நிலைப்பாட்டின் பிற்போக்குத் தன்மையைக் காட்டுகின்றது. அவர்கள்
சட்டத்தின் அடிப்படையான கொள்கைகளில் இருந்து காரணரீதியா
ஒத்திருக்கும் வகையிலும் அல்லது -மிகவும் பழமைவாதம் கொண்டதில்
இருந்து தன்னும்- விளக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள்
தாம் விரும்பிய இலக்குகளில் இருந்து-அதாவது வெள்ளை மாளிகையில்
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சை இருத்துவது- மற்றும் எந்தவிதமான ஒருங்கிசைவான
தர்க்கவியலும் இல்லாமையை பொருட்படுத்தாமல், முடிவை
நியாயப்படுத்துவதற்கு புனையக்கூடிய என்னென்ன சட்ட மற்றும்
அரசியலமைப்பு ரீதியான நடிப்புக்கள் இருக்கின்றதோ அதனைப்
பற்றிக் கொண்டு பின்புறத்தில் இருந்து இயங்கினர்.
இந்த சட்ட இயங்குமுறைகளில் வெட்கம்கெட்ட
துணிவு மற்றும் ஆற்றொணா நிலையின் ஜயத்திற்கு இடமில்லாத மூலகம்
இருந்து கொண்டுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி
வேட்பாளர் ஒருவர் பெரும்பான்மை பொதுஜன வாக்குகளையும்
தேர்தல் தொகுதி வாக்குக்களையும் தோல்வி கண்டதன் பின்னர்
வெள்ளை மாளிகையில் நுழைய ஒரு போதும் முயற்சித்தது கிடையாது.
புஷ் தனது சகோதரரும் ஆளுனருமான ஜெப் புஷ்சின் கட்டுப்பாட்டிலான
புளோரிடா மாநில அரசாங்க இயந்திரத்தினை பயன்படுத்திக்
கொண்டுள்ளார். புளோரிடா மாநில மக்களினதும் மொத்தத்தில்
முழு அமெரிக்க மக்களதும் விருப்பை தலைகீழாக்கும் முயற்சியாகவே
இது இடம்பெற்றுள்ளது. இப்போது இந்த ஜனநாயக எதிர்ப்பு
சதியானது, தொடர்பு சாதனங்களதும் வலதுசாரிகளால் நிறைந்த
உயர்நீதிமன்றத்தினதும் ஆதரவோடு முன்னேறிக் கொண்டுள்ளது.
ஜனநாயக் கட்சிக்காரர்களின் அடிபணிவு
இந்த பிற்போக்குத் தீர்மானம் தொடர்பான
கோரினதும் ஜனநாயக் கட்சியினதும் கோழைத்தனமான அக்கறையானது,
தாரண்மைவாதத்தின் வங்குரோத்தையும் வலதுசாரித் தாக்குதல்களுக்கு
எதிராக ஜனநாயக உரிமைகளைக் காக்க அதனால் முடியாது
என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. குடியரசுக் கட்சிக்காரர்களின்
கயமைத்தனத்துடனான மாறுபாடு குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை
புளோரிடா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் புஷ்சின் பேச்சாளரான
ஜேம்ஸ் பேக்கர் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதியரசர்களை
வழிப்பறிக்காரர்களாக குறிப்பிட்டு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டபோது
அதையிட்டு மனவுறுத்தல் படவில்லை. 4-3 என்ற விதத்திலான பெரும்பான்மை
நீதியற்றது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றத்துக்கும் புளோரிடா
சட்டசபைக்கும் குடியரசுக்கட்சி கட்டுப்பாட்டிலான அமெரிக்க
காங்கிரசுக்கும் மேன்முறையீடு செய்வதன் மூலம் காங்கிரசின் இந்த
நடவடிக்கையை செல்லுபடியற்றதாக்கப் போவதாகவும்
பேக்கர் கூறியிருந்தார்.
ஆதலால் வாக்குகளை மீள எண்ணுவதை 5-4
பெரும்பான்மை வீதத்தில் சனிக்கிழமை தடுத்து நிறுத்திய தீர்ப்பின்
பின்னர், கோரின் சட்ட, அரசியல் பேச்சாளர்கள் கோபத்தையோ
எதிர்த்துப் பேசலையோ அல்லது சீரிய விமர்சனத்தின் பொதுவான
அறிகுறியையோ கூட காட்டவில்லை. மோசடி எங்கேயுள்ளது?....
ஜனாதிபதி பதவியை தனக்கு சாதகமாக கடத்தும் வலது சாரி
முயற்சியில் உயர்நீதிமன்றத்தின் பெரும்பான்மை, எல்லோரும் அறிந்த
கூட்டுச்சதியாளர் என்ற படுமோசமான அல்லது கிறிமினல் ரீதியில்
அத்துமீறல் என்பதை சொல்ல விருப்பாதது ஏன்? உண்மையில் அதற்குப்
பதிலாக கோரின் தலைமை வழக்கறிஞர் டேவிட் போய்ஸ் நீதிமன்றத்தின்
சட்டபூர்வமான தன்மையை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
கோர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயகக்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான வாதமாக
புஷ், ஸ்காலியா மற்றும் தோமஸ் போன்ற நீதியரசர்களை மேலும்
நியமனம் செய்வார் என இடைவிடாது குறிப்பிட்டு வந்தார். இப்போது
அந்த ஸ்காலியா அவரது கூட்டாளிகளதும் ஜனநாயகத்துடனான
யுத்தத்தில் ஒரு நீதித்துறை குண்டர்களாக தம்மை அம்பலமாக்கிக்
கொண்டுள்ளனர். மேல் நீதிமன்றம் (High
court) அரசியல் போராட்டத்துக்கு
அப்பாற்பட்ட ஒரு பக்கச்சார்பற்ற நடுவர் என்ற அர்த்தமற்ற
நடிப்பை கடைப்பிடித்தார். இந்த விதத்தில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள்,
வெடித்துக் கிளம்பியுள்ளதானது, ஜனநாயக உரிமைகள் கொலைகாரத்தனமாக
அத்துமீறி செய்யப்படும் அருவருக்கத்தக்க நிகழ்வு அல்லாது நீதித்துறை
மீளாய்விலான ஏதோ ஒரு வகையிலான ஊகங்கள் ஆகும் என்ற நடிப்புக்கே
பங்களிப்புச் செய்தனர்.
தடையைத் தொடர்ந்து திங்களன்று முடிவு இல்லாத
போதும் கூட, அது புளோரிடா உயர்நீதிமன்ற முடிவு முழுவதையும்
தலைகீழாக மாற்றியது. புளோரிடா தேர்ந்தெடுப்போரை தேர்வு
செய்வதை முடிவு செய்வதற்கான பூர்வாங்க தேதி டிசம்பர் 12
என்பதால், மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைத்தல் பாரதூரமான
விளைவுகளை கொண்டிருக்கிறது. பலரும் அறிந்திராத ஒரு 1887ம்
ஆண்டுச் சட்டத்தைக் காட்டி -இது முன்னர் பிரயோகிக்கப்பட்டது
இல்லை- டிசம்பர் 12ல் யார் தெரிவு செய்யப்பட்டார்கள்
என்பது முற்றுப்பெறாது போனால் இந்த மாநில மக்கள் வழங்கிய
வாக்குகளைப் பொருட்படுத்தாமல் குடியரசுக் கட்சிக் கட்டுப்பாட்டிலான
புளோரிடா சட்டசபை புஷ்சின் ஆதரவாளர்கள் பட்டியலை திணிக்கப்போவதாக
அச்சுறுத்தியது. உயர்நீதிமன்றத் தடையினால் திணிக்கப்பட்ட
இருநாள் தாமதம் இந்தக் காலக்கெடுவை எட்டுவதை மேலும்
கடினமாக்கியது.
புஷ்சை ஆதரிக்கும் வகையிலான ஒரு உத்தரவை
உயர் நீதிமன்றம் பிறப்பிக்கின்ற ஒரு நிலையிலும் பல்லாயிரக்கணக்கான
புளோரிடியன் வாக்காளர்களின் வாக்குரிமையை நசுக்கும் நிலையிலும்
இது 1857ம் ஆண்டின் அவமானம் நிறைந்த டிரெட் ஸ்கொட் (Dred
Scott) தீர்மானத்தின் பின்னர் ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதலில் அதன் கொடூரத்திலும் சிடுமூஞ்சித்தனத்திலும்
ஒப்புவமை இல்லாததாக விளங்கும். அந்தத் தீர்மானத்தில் உயர்நீதிமன்றம்
அடிமை முறையை ஆதரித்ததோடு கறுப்பின மக்கள் சொத்துக்களே
என்றும் அவர்கள் குடிமக்களாக இருக்கவியலாது எனவும்
பிரகடனம் செய்தது. இன்று இதே நீதிமன்றம் பெரிதும் அடிப்படையான
ஒரு தீர்மானத்தை எடுக்கும் விளிம்பில் நின்று கொண்டுள்ளது. அமெரிக்க
மக்களின் வாக்குகள் அல்லாது ஒரு வலதுசாரி சிறுபான்மையினர்
அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என அவர்கள் அறிவித்தனர்.
கடந்த மாதப் போராட்டங்கள் அமெரிக்க
சமுதாயத்தின் உயர் மட்டங்களில் -கம்பனி வட்டாரங்கள்,
அரசியல்வாதிகள், நீதியரசர்கள், தொடர்பு சாதனங்கள்- ஜனநாயகத்துக்கு
எவ்வளவு சிறிய ஆதரவு இருந்து கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
வலதுசாரி போக்குகள் -ஒரு ஜனநாயக அமைப்பினுள்- தமது
பொருளாதார, சமூக நிகழ்ச்சித் திட்டத்தை -செல்வந்தர்களுக்கு
வரி வெட்டு, அரசாங்க சமூக வேலைத்திட்டங்கள் ஒழிப்பு, அமெரிக்க
கம்பனிகள் மீதான தடைகளை அகற்றுதல்- திணிக்க இயலாது
என்பதையிட்டு பெரிதும் நனவாக இருந்து கொண்டுள்ளனர்.
ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்ல
வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பற்றியும் வரலாறு பூராவும்
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அடிப்படையாக விளங்கிய ஜனநாயக
அடிப்படையையும் அமைப்புக்களையும் ஒழிக்க வேண்டும்
என்பதையிட்டும் ஆளும் வட்டாரங்களிடையே இணக்கம் வளர்ச்சி
கண்டுள்ளது. இந்த ஒருமித்த இணக்கப்பாடு, தொடர்பு சாதனங்களின்
வெட்கக் கேடான பிரச்சாரத்திலும் குடியரசுக் கட்சிக்காரர்களின்
மூர்க்கத்தனத்திலும் ஆக்கிரோசத்திலும் ஜனநாயகக் கட்சிக்காரர்களின்
பீதியிலும், கோழைத்தனத்திலும் தாராண்மை, கல்விசார் வட்டாரங்களின்
பித்தலாட்டமானதும், அலட்சிய மனோபாவத்திலும் வெளிப்பாடாகியுள்ளது.
இறுதி ஆய்வுகளில் 2000 ஆண்டின் தேர்தல் நெருக்கடியானது
அமெரிக்காவின் அரசியல் வடிவங்கள் அந்நாட்டின் சமூக அமைப்புடன்
பொருந்தி வந்துகொண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. இச்சமூக
அமைப்பு பெரும் செல்வந்தர்களான கும்பலையும், பங்குமுதல்
சந்தை செழிப்பினால் பணக்காரரான ஒரு சிறுபான்மையையும்
அதிகரித்த அளவில் உயிர்வாழ்க்கைக்கான போராட்டம் கடினமாகி
வரும் பெருமளவிலான பெரும்பான்மையினரையும் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் வலதுசாரிகளின் வெற்றி ஏமாற்றமாகவே
நிரூபிக்கப்படும். செல்வந்த பிரமுகர்கள் ஜனநாயக அடிப்படைக்
கொள்கைகளுக்கு வாயளவில் சேவை செய்வதை தன்னும் நிறுத்திக்
கொள்ளலாம். ஆனால் அமெரிக்க மக்களின் பரந்த வெகுஜனங்கள்
இதில் இன்னமும் ஈடுபட்டுக் கொண்டில்லை அல்லது தமது கருத்துக்களை
கூறவில்லை. இதுவரைக்கும் 2000 ஆண்டின் தேர்தல் நெருக்கடியானது
ஆளும் பிரமுகர்களுக்கு இடையேயான ஒரு நச்சுத்தனமான
போராட்ட வடிவத்தை எடுத்துள்ளது. ஆனால் இடம்பெறும்
போராட்டம் முழுச் சனத்தொகையினருக்கும் பெரிதும் சிறப்பு
முக்கியத்துவம் வாய்ந்தது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல் பெரிதும் அம்பலமானதும், இலட்சோப இலட்சம்
மக்களின் உள்ளங்களில் அரசியல் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டதும்
இந்த நிகழ்வுகள் ஒரு பிரமாண்டமான தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் ஒரு பிரமாண்டமான சமூக, அரசியல் கொந்தளிப்புக்கான
களம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
|