World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish Prime Minister Aznar spearheads drive to deregulate Europe's economies

ஐரோப்பிய பொருளாதாக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் ஸ்பானிய பிரதம மந்திரி அஸ்னர் முன்நிற்கின்றார்.

By Vicky Short
1 November 2000

Use this version to print

இவ்வார இறுதியில் மட்றிட் நகரில் ஸ்பானிய பிரதம மந்திரி ஜோசே மரியா அஸ்னர் உம் அவரது பிரித்தானிய கூட்டாளியான ரொனி பிளேயரும் ஐரோப்பிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு உந்தித்தள்ளும் நடவடிக்கைகளையும் அத்துடன் அவற்றினை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடுவதையும் இட்டு கலந்துரையாடினர்.

இப் பேச்சுக்கள் இவ் இரு தலைவர்களினாலும் கடந்த கோடைகாலத்தில் லிஸ்பொன் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய சங்க கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளைத் தொடர்ந்தவையாக இருந்தன. இப் பிரேரணைகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அஸ்னரும்பிளேயரும் தாம் மிக மெதுவாக இயங்குவதாகவே உணர்ந்தனர். இவ்விரு தலைவர்களும் சீர்திருத்தங்களுக்கான நோக்குடனான வரைவு அறிக்கையினை பதிலாக முன்வைத்தனர், அதாவது அடிப்படையில் இது வரப்போகும் வசந்தகாலத்தில் Stockholm நகரில் நடைபெறவுள்ள ஓர் உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இதனை மாற்றி அமைக்க இருந்தது.

அஸ்னரும் பிளேயரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிபரான றோமனோ ப்றோடி இற்கு எழுதிய கடிதத்தில் -இதனது பிரதி எல்லா ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தினருக்கும் தரப்பட்டிருந்தது- 2004 இற்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு மற்றும் மின்வாரியத்தினை முழு அளவிலான தாராளமயமாக்கலுக்கும் (அதாவது தனியார்மயமாக்கலுக்கும்) இவ் அங்கத்துவ அரசுகளது தொலத்தொடர்பு இலாகாக்களை வருகினற வருடம் ஜூன்மாதத்திற்கு முன் திறந்து விடுவதையிட்டு ஓர் பரந்தளவிலான உடன்படிக்கைக்கும் வேண்டுதல் விடுத்திருந்தனர். அத்துடன் மேலும் இவ்விரு தலைவர்களும், ஐரோப்பிய கூட்டமைப்பு 2004 இற்கு முன் தாராளமயமான ஐரோப்பிய வான்வழி போக்குவரத்து வழங்கபடவேண்டும் எனவும், 2001 முடிவதற்குள் விமானத்தளத்தின் குறுகிய விதிமுறைகள் சம்பதமாக ஒரு அரசியல் உடன்பாட்டிற்கான அழைப்பையும் மேலும் இரயில் போக்குவரத்து சம்பதமாக மேலதிகமான போட்டியையும் கோரியிருந்தனர்.

பிளேயரும் அஸ்னரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றி, கோட்பாட்டு வடிவிலான திட்டங்களாலோ அல்லது ஐரோப்பிய சமஸ்டிக் குடியரசா அல்லது ஒருங்கமைந்த அரசாங்கமா பொருத்தமானது என்னும் விவாதங்களிலோ தங்கியிருப்பதைக் காட்டிலும் மேற்கண்ட இந்த விடையங்களை முன்னேற்றுவதிலேயே தங்கியிருக்கின்றது என வாதிடுகின்றனர்.

இக்கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (EU Gross Domestic Product) முழுவதற்குமான அரச உதவிமானியங்களில் வெட்டுக்களைக் கொண்டுவருவதற்கான ஓர் வீதசாரமுறையை பிரேரித்தது, அதாவது 2003 இல்1.1 வீதத்தில் இருந்து 0.9 வீதமாகவும் 2005 இற்குமுன் 0.7 வீதமாகவும் குறைப்பனவு செய்யவேண்டும் என்பதாகும். இது வெளிப்படையாகவும் தீர்க்கமாகவும் 2002 இன் முடிவுக்குள் ஐரோப்பிய இணை நாடுகள் முழுவதற்குமான மூலதன சந்தைக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள, இவ் அங்கத்துவ நாடுகளினால் எங்கும் பயன்படுத்தவல்ல மட்டக்குறி (benchmarking) ஒன்று இருக்கவேண்டும் என்றது.

அத்ததுடன் அவர்களது கூட்டறிக்கை ஐக்கிய இராட்சியமும் ஸ்பெயினும் லிஸ்பொன் மூலோபாய நோக்கை அடைய முழுமையானகூட்டு ஒத்துளைப்பு நல்கவேண்டும் என்பதுடன் போட்டி கொள்கை (competition policy), அரசசட்டதிட்டம், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப்பம் என்பவற்றையிட்ட ஒரு தொடர் கூட்டங்களிற்கான பிரேரணைகளையும் சேர்த்திருந்தது.

பிளேயருக்கும் அஸ்னருக்கும் இடையிலான கூட்டு வழிகாட்டும் ஒன்றாக மாறிவிட்டது. பிளேயர் ஐரோப்பாவினுள் மிக பிரபலமான சமூக ஜனநாயக தலைவராக இருக்கும் வேளையில், அஸ்னர் ஐரோப்பிய பழமைவாதத்தின் பேச்சாளராகக் காணப்படுகின்றார். ஆனால் ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள் சீர்திருத்த கொள்கைகளை கைவிட்டுதிறந்த சந்தை கொள்கைகளை தழுவிக்கொண்டதன் பின்னர் முன்னைய ஓர் அரசாங்கத்தின் அரசியல் வர்ணஜாலங்கள் பொருந்தாத உள்ளடக்கம் கொண்டவைகளாக மாறிப்போய்விட்டன.

பிளேயரது அரசாங்கம் மாக்கிரட் தட்சர் மற்றும் ஜோன் மேயரது 18 வருடகால பழமைவாத ஆட்சியின் கீழ்நடமுறைக்கு இடப்பட்டிருந்த பொருளாதாரக் கொள்கைகளை கட்டியெழுப்புவததாகவே அனேகமாகத் தென்படுகின்றது. தனது பங்கிற்கு, அஸ்னர் அவரது சொந்த முன்னோடியான பிலிப் கான்ணிலஸ் (Felipe Gonzales) இன் சோசலிச அரசாங்கம் விட்டுச்சென்ற மாதிரிகளை கட்டியெழுப்புவதையே கடைப்பிடிக்கினறார்.

ஸ்பானிய பொருளாதாரம் மற்றய எந்தவொரு ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் மிகப் பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீட்டை உள்ளீர்ப்பதிலே சார்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டுக்கான திறந்துவிடுகை 1980 கள் வரை தொடங்காமலே இருந்தது என்றாலும் 1990 களில் கான்சிலஸ் இன் ஆட்சியின் கீழ் மிகத்தீவிரமாக அது அபிவிருத்திகண்டது, அதன்போது "விற்பனைக்காக ஸ்பெயின்" ("Spain for sale" ) என்னும் சொற்றொடரும் புதிதாய் அறிமுகமானது. ஸ்பெயின் நாட்டின் நிகர அன்னிய முதலீடு 1983 இல் 413 பில்லியன் பெஸ்ட்டஸ் (pesetas ) களாக இருந்தது 1992 இல் 1,235 பில்லியன் பெஸ்ட்டஸ்களாக அதிகரித்தது. வழக்கமாக இவ்வாறான முதலீடுகள் ஸ்பானிய நிறுவனங்களினது வியாபார சொத்துகளினூடாக பாதுகாப்பான சந்தைகள் மற்றும் வினியோக கால்வாய்களையும் ஏற்படுத்துகின்றன. எதிரிடையாய் ஒப்பீட்டளவில் ஸ்பானிய பல்தேசிய நிறுவனங்கள் சொற்பமாகவே இருந்தன.

இதன்படி, ஸ்பானிய ஆழும்வர்க்கம் ஆசியாவிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருக்கும் முதலீடுகளுக்கான போட்டியை விலக்க வேண்டியதன் அழுத்தத்தை அதிகரிக்கும் விதத்தில் உணர்ந்துள்ளது. சோசலிச அரசாங்கத்தினால் வாழ்க்கைத் தரங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலினையிட்ட வெறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகதிரித்துள்ளது. வேலையற்றோர் எண்ணிக்கை 1994 மட்டில் 25 சதவீதத்தை எட்டியது, அத்துடன் சமூகத்தின் திருப்தியின்மை பல பொதுவேலைநிறுத்தங்களுக்கு இட்டுச்சென்றது, அது சுரங்கத்தொழிலாளர்கள், பெரும் தொழித்துறை தொழிலாளர்கள், பொதுத்துறைப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரினது பெரும் ஆர்ப்பாட்டங்களாக இருந்தது. 1996 வாக்கில் சர்வதேச சந்தைப் பொருளாதார அபிவிருத்தியின் முற்பகுதியின் மத்தியில் தனது நலன்களை பாதுகாப்பதற்கும் மற்றும் சமூகரீதியில் அழிவுகரமான அதனது கொள்கைகளையிட்ட பொதுமக்களின் எதிர்ப்பிற்கு முகம் கொடுத்து முன்னெடுக்க சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினை இலாயக்கற்ற ஒன்றாக ஆழும் வர்க்கம் கண்டது.

அஸ்னரது மக்கள் கட்சி (Popular Party) 1996 இல் கற்றலன் மற்றும் பஸ்க் (Catalan and Basque) தேசியவாத கட்சிகளுடன் கூட்டிணைந்த ஒரு சிறுபான்மை அரசாங்கமாக தேர்வுசெய்யப்பட்டது. அவர் உடனடியாக மேலும் தளர்த்தல்களையும் தனியார் மயமாக்கலையும் மேற்கொண்டதுடன், உழைப்புச் சந்தையில் சடுதியான மாற்றங்களையும் செய்தார். இவர், அரசாங்கத்திற்கும், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிற்கும் இடையிலான 1997 உடன்படிக்கை ஒன்றின்மூலம் இதை அடைவதற்கு சிலவழிகளை மேற்கொண்டார், இது தொழிலாளர்களை வேலையிலிருந்து இலகுவாக வெளியேற்றுவதற்கு வழிவகுத்ததுடன் இலகுவாக மாற்றத்தக்கதும் நிரந்தரமற்றதுமான வேலை ஒப்பந்தங்களினை (flexible and temporary contracts) பெருமளவில் பிரயோகிப்பதற்கும் வழிதிறநுவிட்டது. அண்மையில் அஸ்னர், தொழிற்சங்கத் தலைவர்களது நடவடிக்கைகள் "பெருமளவில் இசைந்து நடக்கும் தன்மைக்கு" ஒரு உதாரணமாகும், அவர்கள் "பொதுஉடன்பாட்டுக்காக" தமது "சகிப்பற்றதன்மையை" கைவிட்டுள்ளனர் என புகழ்ந்து தள்ளினார்.

பெரிதும் பரஸ்பர இணக்கப்பாட்டுடனான "எதிர்ப்பை" முகம் கொடுத்ததுடன், அஸ்னர் இவ்வருடம் மார்ச் மாதத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டார். கோடைகாலத்தில், அவர் ஸ்பெயினின் மின்சாரம் வினியோக தொழிற்துறையினை திறந்துவிடும் திட்டத்தினை அக்டோபர் மாதத்தில் போட்டிக்கு விடுவதினை முன்கொண்டு வந்ததுடன் எரிவாயு துறையினை தாரளமயமாக்கும் திட்டத்தினை 2007 இல் இருந்து 2003 ற்குள் நடைமுறைக்கிட வேண்டும் என முன்கொண்டுவர இருகிறார், இத்துடன் சந்தையின் 80வீதம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே திறந்துவிடப்பட்டுள்ளது.

பூர்த்தியாக்கப்படவேண்டிய பணிகளான ஓர் சமநிலையான வரவுசெலவீட்டறிக்கை (balanced budget), புதிய வரிக்குறைப்பு, சந்தையை தாராளமயமாக்கல், அரசுக்குச் சொந்தமான தொழிற்துறைகளை தனியார்மயமாக்கல், ஓய்வூதியத்திட்டத்திலான சீர்திருத்தம் மற்றும் தீவிரமான உழைப்புச் சந்தை சீர்திருத்தம் என்பவற்றினை அஸ்னர் தானாகாவே செய்து முடித்தார்.

இம்மாத முற்பகுதியில் இத்தாலியில் ஸ்பெயினினதும் இத்தாலியினதும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூடிய பொழுதில், ஐரோப்பா ஐக்கிய அமெரிக்காவுடன் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித்தன்மையை இட்ட இடைவெளியினை இல்லதொழிக்க விரும்பினால், "எமது சமூகப் பாதுகாப்பு அமைப்பினை நவீனப்படுத்தல் என்பது தவிர்க்முடியாதது" என வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

நமக்கு இதுகாறும் உள்ள சாத்தியமில்லா விஷயங்களைப் பராமரித்தலும் [மேலும்] நாம் துணிவுடன் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதைத் தவிர்த்து "இங்கு ஐரோப்பிய அரசுகளுக்கிடையில் இதையிட்டு வித்தியாசமான கருத்துப்பாடுககள் இல்லை", "இந்த யதார்த்தத்தை ஸ்பெயின் அலட்சியம் செய்ய விடமாட்டேன்" என்று அஸ்னர் தொடர்ந்தார்.

ஓய்வூதிய செலவினை குறைப்பதற்கு அஸ்னர் முடிவுகட்டியதானது அவர் தனது இலக்கினை அடைவதற்கான ஓர் அடிப்படையான முன்நிபந்தனையாகும். தொழிலாளர் அமைச்சகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்பின் முதல்நூற்றாண்டு கொண்டாட்ட கூட்டத்தினை அவரது முக்கியமான கருதுகோள்களை வெளிவிடுவதற்கான அனுகூலமாக எடுத்துக்கொண்டார். ஓய்வூதிய ஒழுங்கமைவை சீர்திருத்தி அமைப்பது என்பது இதற்கான செலவினை "வசதியாக மாற்றக்கூடியதும், சிறிதுசிறிதாகவும் இலவச சேவையாகவும் ஆன சூத்திரங்களின் மூலம் வேலைசெய்யும் வாழ்க்கை காலத்தினை நீடிப்பதற்கு" அதாவது 65 வயதுவரை மேலும் அதிகரிப்பதற்காக, அமுல்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திடமிருந்து மாற்றி அப்பால் கொண்டுசெல்வதாகும். முன்பாக ஓய்வுபெறுவதை நிறுத்துவதற்கும் 50 களுக்குமேல் ஓய்வுபெறுவது என்பதனை "வாழ்வின் புதிய யதார்த்தம்" என்று ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கும் புதிய நடவடிக்கைகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார், இதனால் "தொன்மையான வயது" என்பதாக எதை விபரித்தாரோ அதனை அவர் உடைத்தெறிந்தார்.

அவரது திட்டவரைபில் இரண்டாவது இடி என்னவெனில் உழைப்புச் சந்தையில் மேலும் அதிகமான சீர்திருத்தங்களை செய்வதாகும். 1997 உடனபடிக்கை மலிவுக் கூலியையும் நிரந்தரமற்ற வேலைகளையும் பாரிய அளவில் பெருகச் செய்ததன் விளைவாக இன்று, முழு ஸ்பானிய தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நிரந்தரமற்ற வேலைஒப்பந்தப் படிவங்களையே கொண்டுள்ளனர். இந்த ஆரம்ப உடன்பாடு வலுவிழந்துவிட்டதாக அஸ்னர் நம்புகின்றார். ஓர் புதிய வகையான "காலவரையற்ற ஒப்பந்தங்கள்" மற்றும் ஒவ்வொரு வேலை வருடத்திற்கான 45 நாட்களுக்கான கொடுப்பனவுக்குப் பதிலாக அதனை 20 நாட்களாக குறைத்தல், அத்துடன் வேலையிழந்தோருக்கான கொடுப்பனவு காலத்தினை ஆகக்கூடியது 12 மாதங்கள் என ஆக்கல் போன்ற இன்ன பல புதிய நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள் விடப்படுகின்றது.

இதை முடிவிற்கு கொண்டுவரும் பொருட்டு அஸ்னர் தற்போது இந்த மூலோபாய இலக்கை நடைமுறைக்கிட 1997 உடன்படிக்கையை புதுப்பிப்பதற்காக தொழிற் சங்கங்களுடனும் தொழிலதிபர்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்- ஓர் கணிப்பீட்டின்படி சங்கங்கள் ஏற்கனவே இவற்றுடனான உடன்பாட்டிற்கான அறிகுறியை காட்டியுள்ளன.