World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Why has Israel's pacifist movement failed?

ஏன் இஸ்ரேலிய அமைதிவாத இயக்கம் தோல்வியடைந்தது?

By Jean Shaoul
7 November 2000

Back to screen version

பாலஸ்தீனியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையை எதிர்த்த ஓர் வலதுசாரியால் கொலை செய்யப்பட்ட Yitzhak Rabin's இன் 5வது வருட நினைவு நாளை முன்னிட்டு இஸ்ரேல் பூராக இருந்து 50,000 இற்கும் அதிகமான மக்கள் நவம்பர் 4ம் திகதி நடந்த ஊர்வலத்திற்கு வருகை தந்திருந்தனர். மேற்கின் அரசுகளும் தொடர்புச்சாதனங்களும் எடுத்துக்காட்டியதற்கு எதிர்மாறாக இந்த ஊர்வலம் வலதுசாரிகளின் பெரிய இஸ்ரேல் என்ற கொள்கைக்கு ஒட்டுமொத்தமான ஆதரவு இல்லையென்பதையும் பெரும்பான்மையினர் பாலஸ்தீனியர்களுடன் உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையை தடுக்கவில்லையென்பதையும் உறுதிசெய்கிறது.

குறைந்தது 18 மாதங்களிற்கு முன்னர் இஸ்ரேலிய வாக்காளர்கள் பிரதம மந்திரி BenyamNetanyahu யும் அவருடைய Likud Party யும் பதவியில் இருந்து நீக்கியதுடன் Ehud Barak இடம் பாலஸ்தீனியர்களுடன் ஓர் இறுதி சமாதானத்தை தேடுவதற்குரிய பொறுப்பை ஒப்படைத்தார்கள். வாக்கெடுப்புகள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுவது 5 கிழமைக்கும் மேலான சண்டைக்குப் பிறகும் கூட 60-70 வீதமான இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதையே விரும்புகிறார்கள் என்பதே .

செப்டம்பர் முடிவில் எழுந்த வன்முறைகள் ஆரம்பித்த பின்னர், எவ்வாறிருந்தபோதும் 170 மக்கள் இறந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் காயப்படுவதற்கு காரணமாகவிருந்த ஆயுதம் இல்லாத பாலஸ்தீனியர்களை பராகின் இஸ்ரேலிய பாதுகாப்புப்படைகள் தாக்கியதற்கு எதிராக அங்கே சிறிய தனிப்பட்ட எழுச்சிகளும், ஊர்வலங்களும் நடந்தன.

"அமைதிக் கூடாரங்கள்" பெருவீதிகளில் உருவாக்கியதுடன் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் அங்கு வந்து கலந்துரையாடலை திரும்பவும் தொடங்க முயற்சித்தனர். ஓர் கூடாரம் எரிக்கப்பட்டது, ஆனால் உதவியாளர்கள் திரும்பவும் அதை கட்டி எழுப்பினார்கள். 85 பாலஸ்தீனியர்களும் அராபியர்களும் ஒன்றாக சேர்ந்து லிபரல் பத்திரிகையான Ha`aretz இல் வன்முறைகள் முடிவிற்கு கொண்டுவர வேண்டுமென விளம்பரங்கள் செய்துள்ளனர். இரண்டு கிழமைக்கு முன்னர் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சேர்ந்து வாழும் நகரமான Haifa வில் கூட்டாக சேர்ந்து ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் பத்திரிகை எழுத்தாளரும் ஆசிரியருமான Amira Hass ஓர் உதாரணத்தை பிணீஊக்ஷீமீtக்ஷ் இல் எடுத்துக்காட்டுகையில் இஸ்ரேலுக்குள்ளும் கைப்பற்றப்பட்ட பிராத்தியங்களுக்குள்ளும் பாலஸ்தீனியர்கள் மோசமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் என விரிவாக எழுதியுள்ளார். Haifa பல்கலைகழகத்தில் மனிதவியல் ஆய்வாளரான Danny ஸிணீதீவீஸீஷீஷ்வீtக்ஷ், பிணீஊக்ஷீமீtக்ஷ் பத்திரிகை கட்டுரை ஒன்றில் இஸ்ரேலியர்கள் தங்களுடைய அரசு இன்னுமோர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதையும், சோகத்தில் கட்டப்பட்டதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென எழுதியுள்ளார். அவர் 1948 இல் இஸ்ரேலிய "சுதந்திரத்திற்கான யுத்தத்தில்" பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஞாபகார்த்த சின்னங்கள் உருவாக்க வேண்டுமெனவும், தேசியக் கொடியையும், கீதத்தையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் அரசிடம் வேண்டியுள்ளார். அவர் பொதுவான இஸ்ரேலிய "புதிய வரலாற்றாசிரியர்கள்" போல இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்களுடைய வரலாற்றை அங்கீகரிக்கவும், அவர்களுடைய கோரிக்கைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இப்படியான எதிர்ப்பு அரசியல் ஓட்டம் இருந்த போதிலும் இஸ்ரேல் தற்போதும் கூட பாலஸ்தீனியர்களுடன் அண்மைக்கால வரலாற்றில் இல்லாத மாதிரி முழுச் சண்டைக்கும் நெருங்குவதாக தெரிகிறது. ஆகவே எப்படி ஓர் சிறுபான்மையான வலது தீவிரவாதிகள் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குழப்பமடையச் செய்யும் நிலைமையையும், நாட்டை சண்டையின் எல்லைக்கும் கொண்டுசெல்ல முடிகின்றது?

சியோனிசத்தை ஏற்றுக்கொள்ளுதல்

இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசியல் ஆளுமையை பிடியில் வைத்திருப்பது ஏனென்றால் சமாதானத்திற்கான முன்னோக்கும், லிபரல் மற்றும் சீர்திருத்த அமைதிவாத குழுக்கள் சியோனிச அரசின் சட்டபூர்வமான இருப்பை ஏற்றுக்கொண்டதாலாகும். ஆனால் இவ்வுருவாக்கம் பாலஸ்தீனியர்களை பலாத்காரமாக துரத்தியதுடன் தொடர்ச்சியாக சமயமும், யூத இனமும்- யூதர் இல்லாத இனத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துதலின் நிச்சயப்படுத்தலிலேயே தங்கியிருந்தது. இதன்காரணமாக பலர் உண்மையான அனுதாபிகளாகவிருந்த போதிலும், இஸ்ரேலின் சமாதானத்தை விரும்பும் இயக்கம் தனது வேலைத்திட்டத்தில் இஸ்ரேலியர்களினதும், பாலஸ்தீனியர்களினதும் நியாயமான ஜனநாயக, சமூக அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.

இந்த சமாதான இயக்கத்தின் சக்தியின்மையை நவம்பர் 4ம் திகதி நடந்த ஊர்வலம் நிறுவிக்காட்டியுள்ளது. ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்கள், "எங்களுக்கு வேறு எந்த நாடும் இல்லை. வலிமை, ஒற்றுமை, பெருமை", சிறிய இஸ்ரேலிய கொடியை தேசியவாத குரல்களுடன் அலங்கரித்தபடி கொண்டு சென்றனர். பிணீடுணீக்ஷீமீtக்ஷ் இந்த நிகழ்ச்சியை "கடவுள் இல்லாத ஓர் சமய கொண்டாட்டம்", தன் சடங்குகளின் குணாம்சம் என குறிப்பிட்டது. தற்போதய முரண்பாட்டின் காரணமாக நம்பிக்கையை இழந்ததன் மூலமாக கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களை விட குறைந்திருந்து. இக் கூட்டத்திற்கு தற்போதைய சண்டைக்கு யசீர் அரபாத்தை குற்றம் சாட்டிய பிரதமமந்திரி Ehud Barak, நோபால் பரிசைப் பெற்றவரான Simon Peres ஐ ஜனாதிபதி போட்டியில் இவ்வருடம் வெற்றி பெற்றவரான வலதுசாரியான Mushe Katsav ஆகியோர் கூட சமூகமளித்திருந்தார். அவருடைய கோரிக்கையான இஸ்ரேலிய வலது-இடது, மத-குழுவாத ஐரோப்பிய-மத்திய கிழக்கு யூதர்களிற்கிடையே ஒற்றுமை தேவை என்பதை கைதட்டி வரவேற்றனர்.

இஸ்ரேலிய சமாதான இயக்கத்தின் குணாம்சங்கள் இந்த ஊர்வலத்தின் மூலம் அரசாங்கம் பாலஸ்தினர்களின் மேல் நடாத்தும் இராணுவ தாக்குதலின் அரசியல் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ளுதல், தேசியவாதத்திற்கான கோரிக்கை, தேசிய ஒற்றுமை என்பவற்றால் நிறுவிக்காட்டியுள்ளது. அமைதி இயக்கத்தின் தொடக்கப்புள்ளி எப்பொழுதுமே சியோனிச அரசைப் பராமரிப்பதுடனேயே இருந்து வந்துள்ளது. ஆனால் இது பாலஸ்தினியர்களுக்கு ஏதோ ஒரு வகையிலான சொந்த அரசு ஒன்றை அனுமதிப்பதனால், சியோனிச அரசைப் பாதுகாக்கலாம் என "இரண்டு அரசுகள்" என்ற பிரபல்யமான திட்டத்தை முன்வைத்து இவ் ''அமைதி இயக்கம்'' வாதிட்டது.

சமாதான இயக்கம் முன்னர் பத்தாயிரக்கணக்காணவர்களை தனது கூட்டத்திற்கும், எதிர்ப்பு ஊர்வலங்களிற்கும் கவர்ந்தது. 1982 இல் Tel Aviv நகரசபை மண்டபத்திற்கு முன்னால் நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தில், 1000 இற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் Sabra விலும் Chatilla அகதிகள் முகாமிலும் நடந்த படுகொலையில் சம்பந்தமான ஊர்வலத்தில் 400,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஒன்பதில் ஒரு இஸ்ரேலிய ஆண், பெண், பிள்ளைகள் உட்பட அங்கே வந்திருந்தனர். இந்த பாரிய ஊர்வலம் அரசாங்கத்தை ஓர் விசாரனைக் குழுவை படுகொலை சப்பந்தமாக நடாத்த வைத்ததுடன், இதற்கு பொறுப்பாகவிருந்தவரான அப்போதைய பாதுகாப்பு மந்திரியான Ariel Sharon இனை பதவி நீக்கம் செய்தது. பராக்கின் கூட்டு அரசாங்கத்தின் முன்னைய அங்கத்தவரான, தற்போதய Meretz கட்சியின் தலைவரான Yossi Sarid மட்டுமே ஒரேயொரு யூத அங்கத்தவர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் லெபனான் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தவராவார்.

கடந்த கிழமைகளின், சமாதான இயக்கங்களின் தலைமைகள் அவர்களுடைய சமாதானத்திற்கான அனுதாபம் முழுவதும் இஸ்ரேலை பாதுகாப்பதன் கீழ் அடிபணிந்துள்ளது என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது Likud தலைவரான Sharon இன் ஆத்திர மூட்டலுடன் கூடிய செப்டெம்பர் 28 இல் ஜெருசலத்தின் வழிபாட்டு தலங்களை விஜயம் செய்ததை எதிர்ப்பதற்கு Sarid மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் கூடிய வீதம் ஆயுதபாணியற்ற பாலஸ்தினியர்கள் மேல் இஸ்ரேலிய இராணுவ இயந்திரக் கொடுமைக்கு அனுமதிக்கின்றார்.

எகிப்திய ஜனாதிபதி 1977ம் ஆண்டு ஜெருசலத்திற்கு விஜயம் செய்த காலத்தின் பின் சமாதானம் தற்பொழுது [Peace Now] என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் உருவாக்கத்திற்கு 1967 சண்டையில் இருந்து கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் குடியேற்றங்களை எதிர்த்து 350 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளினால் அப்போதய பிரதம மந்திரியாக இருந்த Menachem Begin ற்கு எழுதிய ஓர் பகிரங்கக் கடிதம் காரணமாக அமைகிறது. அவர்கள் தொடர்ச்சியான சண்டையில் இருக்கும் ஓர் "பெரிய இஸ்ரேல்" ஜ விட, தாங்கள் அண்மைய நாட்டவர்களுடன் சமாதானமாக இருக்கும் ஓர் சிறிய இஸ்ரேலையே விரும்புவதாக கூறியிருந்தனர். வேறு ஏதாவது திட்டங்கள் ''எங்களுடைய நீதியின் பாதையை சந்தேகத்திற்குள்ளாக்குவதுடன்.... உண்மையான பாதுகாப்பு சமாதானத்தாலேயே அடைய முடியுமெனவும், இஸ்ரேலிய இராணுவத்தின் உண்மையான வலிமையின் வளர்ச்சி அரசின் கொள்கைகளுடன் பிரஜைகள் -இராணுவ வீரர்கள் இணக்கம் அடைவதே'' என எச்சரித்தனர்.

கையெழுத்திட்டவர்களை துரோகிகள் என குற்றம் சாட்டியதுடன் அவர்களை பாதுகாக்க 40,.000 மக்கள் தெருவிற்கு இறங்கியதன் விளைவாக சமாதானம் தற்பொழுது என்ற பாரிய இயக்கம் வளரத்தொடங்கியது. ஒரு தனி பிரச்சனையை தழுவிய இவ் இயக்கத்தின் தலைவர்கள் சமாதானம் தனியே எகிப்துடன் மட்டுமல்லாமல் ஜோர்டான் உடனும் பாலஸ்தினியர்களுடனும் சாத்தியமாகுமென நம்பினார்கள். இதனை எடுத்துக்காட்டுவதற்கு பரிசாக 1967 ல் கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களிலும், மேற்குக்கரையிலும், காசாவிலும் இருந்து வாபஸ் பெறுவேண்டுமென தெரிவித்தனர்.

சமாதானத்திற்கு தடையாகவிருப்பதற்கான முக்கிய பிரச்சனை கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களை குடியேற்றங்களை செய்வதுதான் என சமாதானம் தற்பொழுது [Peace Now ] கூறுகிறது. இது யூன் 1979 ஆம் ஆண்டு ஒரு யூத குடியேற்ற நகரமான Nablus ற்குஅருகாமையில் Elon Moreh வில் 3000 ற்கும் மேலான மக்களை ஊர்வலத்திற்கு ஒழுங்கு செய்தது. இந்த ஊர்வலங்கள் பாலஸ்தீனிய நில உரிமையாளர்கள் இஸ்ரேலிய நீதிமன்றத்திடம் தங்களுடைய நிலம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டதாக வழக்கு தொடர ஊக்குவித்தது. இது முழுக்குடியேற்றத் திட்டத்திற்கு எதிரான முக்கிய போராட்டமாக அமைந்தது.

ஆனால் இராணுவ தலைமை அதிகாரி Rafael Eitan உம் விவசாய மந்திரி Ariel Sheron உம் மிகவும் சகல வழிகளாலும் அதை பிடிப்பதற்காக போராடினார்கள். ஆறு மாதத்திற்குள் இஸ்ரேலிய மந்திரிசபை சர்வதேச சட்ட அமைவிற்கு கீழ்ப்படிய மறுத்ததுடன், Jordan ற்கு முன்னர் சொந்தமான பதிவில்லாத, விவசாயம் செய்யப்படாத நிலங்கள் குடியேற்றத்திற்கான பாவிக்கலாம் என அறிவித்தனர். பாரிய மேற்குக்கரை நிலப்பறிப்பு இத்துடன் ஆரம்பமாகியது.

லெபனானின் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் Begin இன் உத்தியோகபூர்வ இருப்பிடத்தின் முன்னால் பல விழிப்பு ஆர்ப்பாட்டங்களை லெபனானில் இருந்து பின் வாங்கும் படி இஸ்ரேலிய இராணுவத்தில் இறந்தவர்களின் தொகையைக் கொண்ட பதாகைகளுடன் நடாத்தினர். 1983 ஆம் ஆண்டு 500 அளவில் இஸ்ரேலியர்கள் இறந்தவுடன், எந்தவொரு காரணமுமில்லாது Begin திடீரென இராஜினாமா செய்தமைக்கு தங்களுடைய நடவடிக்கை இதில் ஓர் அங்கம் வகித்துள்ளது என பலர் நம்பினர்.

Peace Now இயக்கத்தில் உள்ள தலைமை ஒழுங்கு செய்பவர்களும், பிரசித்திபெற்ற லிபரல் கல்விமான்களும், கலைஞர்களும், பத்திரிகையாசிரியர்களும் வலதுசாரிகளின் பயங்கரவாதத்திற்கு ஆளாக்கப்பட்டதுடன் இவர்களில் ஒருவரையும் கொலை செய்தார்கள் இஸ்ரேலியர்கள் சமாதானத்திற்காக நிலத்தை விற்க விரும்புகிறார்கள் என ஒரு அரசியல் தலைவர் அறிவித்தபோது அவருடைய வீடு எரிக்கப்பட்டது. Sharon போன்ற அரசியல் வாதிகள் சமாதானம் தற்பொழுதின் அங்கத்தவர்களை துரோகிகள் எனவும் தோல்விவாதிகள் எனவும் முத்திரை குத்தியதுடன் ஓர் பயம் ஊட்டும் சூழ் நிலையை உருவாக்கியுள்ளனர்.

இச் சமாதான இயக்கம் மிகவும் தீவீரமாகிவிட்டது. இது லெபனானில் குண்டு வீசியதையும், கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் சியோனிச குடியேற்றத்தையும், விசாரணையில்லாமல் தடுப்புக்காவலில் வைத்தல், கூட்டுத்தண்டனையை அமுல்செய்தல் உட்பட விசாரணை இல்லாமல் சந்தேகப்படும் வீடுகளை இடித்தல் போன்ற தொடர்ச்சியான மனிதாபிமான உரிமைகளின் அத்துமீறல்களையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது.

இவர்கள் லெபனானில் நடக்கும் சண்டையை எதிர்க்கும் அதேவேளை அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் வியட்னாம் போரில் கட்டாய இராணுவ சேவையை மாதிரியான திட்டத்தை எதிர்த்ததுபோல் எதிர்க்காதுதடன், அவர்கள் தம்மை தேசியவாதிகள் என வலியுறுத்துகின்றனர்.

Peace Now பாலஸ்தீனிய மக்களுடைய "தேசிய போராட்டத்திற்கான" உரிமையை ஆதரவளிக்கிறது. 1988ம் ஆண்டு, Intifada வின் காலங்களில், கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் பாலஸ்தீனியர்களுடைய சுயாதீனமான எழுச்சியின்போது, அரபாத்தும் PLOவும், பயங்கரவாதத்தினூடாக பாலஸ்தீன அரசை நிறுவமுடியாதென கூறி இஸ்ரேலை அங்கீகரித்தனர். இன்றய சமாதானம் உடனடியாக இஸ்ரேலை PLO உடன் சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை நடாத்த கோரியதுடன் பாலஸ்னியர்களை யூத- பலஸ்தீனிய சுயாதீன அரசிற்கு திரும்பி போகுமாறு அறைகூவல் விட்டது.

Peace Now யூன் 1989 ஊர்வலத்தில், இஸ்ரேலில் மிகவும் பிரபல்யமான லிபரல் புத்திஜீவியும், எழுத்தாளருமான Amos oz பிரச்சனையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிடக்கூடாது என தூண்டினார். இன்றைய சமாதானம் மேற்குக்கரை PLO சார்பான தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்த தொடங்கியது. சமய அடிப்படைவாதியான Rabbi Meir Kahare, தமது கொள்கைகளுக்கு எதிரான லிபரல் யூதர்களை முடிவுகட்டுமாறு தன்னுடைய ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால், Peace Now இன் ஊர்வலங்களின் தொகைகள் குறையத் தொடங்கின. இது "சமாதானத்திற்கான நாடு" என்பதை மையப்படுத்துவதனால், கூடிய இஸ்ரேலிய மக்களின் குறிப்பாக Spehardic (அராபிய) யூதர்களின் பொருளாதார சமூக மிகவும் சீரழிந்த வீடும், வேலை நிலைமைகளை புறக்கணித்தது. வரிசெலுத்துபவர்களின் செலவில் மில்லியன் கணக்காண டொலர்கள் குடியேற்றத்திற்காக செலவளிக்கப்படுகின்றது. Peace Now ஏன் இஸ்ரேலிய தொழிலாளர்களின் சமூக வசதிகள் குடியேற்ற திட்டத்தினால் சீரழிகிறது என்பதற்கான காரணத்தை விளங்கப்படுத்துவதற்கு சிறிய முயற்சியையே எடுத்துள்ளது. இது எதிர்பாராது ஒன்றல்ல. ஏனெனின் இதன் மூலம் ஒரு பகுதி இஸ்ரேலிய முதலாளித்துவத்தின் ஆதரவை இழந்துவிடுமென இது பயப்படுகிறது.

Peace Now இன் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை 1991 மத்திய கிழக்கு (Gulf War) யுத்தத்தில் நடவடிக்கைகளில் காட்டியுள்ளது. எல்லா மத்திய கிழக்கு நாடுகளையும் அமெரிக்காவும், பிரித்தானியாவும், மேற்கத்தைய நாடுகளும் ஈராக்கிற்கு எதிராக ஒரு குழுவாக சேர்ந்தபோது அரபாத்தும் PLO வும் முழுமையாகவே அவர்கள் தங்கியிருந்த முதலாளித்துவ தலைவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார்கள். இஸ்ரேலிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு யசீர் அரபாத் மட்டுமே அமெரிக்காவை நிர்ப்பந்தித்த சதாம் குசைனுக்கு ஆதரவான ஓர் அராபிய தலைவராகவிருந்தார். இது இன்றைய சமாதானத்தை தலைசுத்த வைத்தது. Sarid என்ற தலைவர் பாலஸ்தீனியர்களுக்கு கூறுகையில் "தான் அவர்களுடன் இனிமேல் கதைக்கப்போவதில்லை" தன்னுடைய உதவியை மறந்துவிடவேண்டியதுதான் எனவும் குறிப்பிட்டார்

ஒரு தலைப்பட்ச நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கும் எல்லா ஆர்ப்பாட்ட இயக்கங்கள் போல Peace Now வித்தியாசமான அரசியல் பின்னணியை கொண்ட எல்லா விதமான மக்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. இவர்கள் இஸ்ரேலிய ஆதிக்கத்தை நடைமுறை ரீதியாகவோ அல்லது ஆத்மீக ரீதியாகவோ எதிர்க்கின்றனர். சாதாரண இஸ்ரேலியர்களிடையே சமாதானத்திற்கான உணர்வுகள் வளருவதை வெளிக்காட்டும் அதேவேளை Peace Now இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பிரச்சனை சம்பந்தமாக ஒரு வரலாற்று, வர்க்க ஆய்வினை முன் வைக்க மறுக்கிறது.

தென்னாபிரிக்க (Aparthaid) பாணியிலான தீர்வுகள்

1992 இல் இன்றய சமாதானத்தின் பல நபர்கள் பழைய இடது, குறுங்குழுக்காளான Mapam and Shiriui இல் இலிருந்து Meretz கட்சியை அமைக்க சேர்ந்து கொண்டனர். Meretz 12 இருப்பிடங்களை தேர்தலில் வென்றதோடு, மூன்றாவது பெரிய கட்சியாக Yitzhak Rabin உடைய கூட்டு அரசாங்கத்தில் சேர்ந்தது. இவர்கள் தமது மேடையில் பாலஸ்தீனியர்களுடைய அரசு Apatheid பாணியிலான ஒரு மதவாத அரசின் தன்மையையே கொண்டிருக்குமென மிகவும் தெளிவாக கூறினர். மேலும் இஸ்ரேலிய பாலஸ்தீனிய எல்லைகள் 1967 இற்கு முன்னர் இருந்த மாதிரி அமையாது மாறாக இஸ்ரேலினுடைய பாதுகாப்பின் தேவையை ஒட்டியே தீர்மானிக்கப்படுமெனவும் ஓர் சிறியளவு பாலஸ்தீனர் இஸ்ரேலிற்குள் வசிப்பதற்கான சாத்திய கூறுகளும், இஸ்ரேலியர்களும் அதேமாதிரி பாலஸ்தீனியர்களுடைய சுயாட்சியின் கீழ் வசிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு என Meretz கூறியது. இஸ்ரேலுடைய பொருளாதார நலன்கள், சுற்றுலா, போக்குவரத்து, சுற்றாடல் பாதுகாப்பு, உட்பட தண்ணீர் சேர்த்து பாவித்தல் போன்றன முதன்மையாகும். ஜெருசலம் இஸ்ரேலினுடைய தலைநகரமாகவும், அது பிரிக்க முடியாதபடியே இருக்குமெனவும் கூறினர்.

Meretz கருத்தின் படி பாலஸ்தீன தொழிலாளர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்க்கு அபாயமாகவும் இஸ்ரேலிய தொழிலாளர்களின் சம்பளத்தினை பயமுறுத்துவதாகவும் அமையுமென்றனர். இவர்கள் "பாதுகாப்பு ரீதியிலும் இஸ்ரேலிய பாலஸ்தீனிய சமாதானத்தை அழியாமல் நிலைநிறுத்தும் பாதையிலும் ஓர் தெளிவான பிரிவு இரு மக்களிடையே விரும்பத்தக்கது" என கூறினர். இது சட்டவிரோதமான எல்லையை கடந்துபோவதை கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும். வடக்கு அமெரிக்காவின் NAFTA ஒப்பந்தம் எப்படி அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அமெரிக்க கூட்டுத்தாபனத்துக்கு உற்பத்தி குறைந்த சம்பளத்தில் செயல்படுகின்றதோ அதே மாதிரியான திட்டத்தை பாலஸ்தீனமும், ஜோர்டானும் இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு வழங்கும்.

Gulf யுத்தத்தின் பின்னர், இஸ்ரேலை அரபாத்துடனும் அராபிய அயலவர்களுடனும் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்க வற்புறுத்தியது. இது தொழிற் கட்சி அரசாங்கமானது பாலஸ்தீனியர்கள் சம்பந்தமாக சில தீர்மானங்களை சமாதான இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை ஏற்றுக் கொண்டதாக இது காணப்பட்டது. எந்தவொரு இணக்கத்திற்க்கும் அடிபணிதல் வெறுப்பாகவே அமைந்த வலதுசாரி சியோனிஸ்டுக்களை சமாதானப்படுத்துவதன் நோக்கத்திற்கு அடிபணியப்பட்டு தொடர்ச்சியாக இப்பேச்சுவார்த்தை வெறுப்படைந்தது.

Peace Now இன் நிகழ்ச்சி நிரல்களின் தோல்விகளுடனும் அடுத்த 17 வருடங்களில் கசப்பான நியாயப்படுத்தலுடன் வெளிவரத்தொடங்கின. பாஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சுயாட்சி, பொருளாதார நஷ்டத்தின் அதிகரிப்பையும், சமூக சீர்குலைவுகளையும், அரபாத்தை சுற்றியுள்ள கைவிட்டு என்னக்கூடியவர்களை விட மற்றவர்களின் அரசியல் கொடுமைகளையும் காணக்கூடியதாகவிருந்தது. பாலஸ்தீனிய மக்களின் நிலையை இஸ்ரேலியர்களின் உதவியால் எந்தளவிற்கும் கூட உயர்த்தமுடியவுமில்லை, உயர்த்தமுடியவும் இயலாது. Sharon தனது ஆத்திரமூட்டல்களை செப்டெம்பர் 28ம் திகதி நாடாத்தும்போது பாலஸ்தீனிய மக்களிடையே மறைந்திருந்த ஏமாற்றங்கள் அரபாத் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு பொங்கியெழுந்தது.

முன் செல்வதற்கான புதிய பாதை

சமாதான இயக்கம் நடைபெறும் சம்பவங்களுக்கிடையே அகப்பட்டுவிட்டது. கடந்த யூலையில் இன்னமும் சில கிழமைகளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும், பாலஸ்தீன அரசு உருவாக்கப்படும் அத்துடன் இஸ்ரேல் ஓர் புதிய செழுமையும், அபிவிருத்தியும் அடையுமென நம்பினார்கள். இஸ்ரேலிய சமாதான இயக்கத்தின் அங்கத்தவர்களின் பிரதிபலிப்பு பரந்தளவில் வித்தியாசமுடையதாகவிருந்தது.

அரசாங்கத்திற்கும் அரசியலிற்கும் பொறுப்பான Ben-Gurion பல்கலைக் கழகத்தின் தலைவரான David Newman போன்றவர்கள் "உண்மையில் மாற்றுவழி வேறு எதுவுமில்லாதபடியால் தடம் புரண்ட பேச்சுவார்த்தை திரும்பவும் சரிவருமென" நம்பியதுடன், ஒஸ்லோ ஒப்பந்தத்திற்கு முன் உள்ள நிலைமைக்கு திரும்பமுடியாது எனவும் எவ்வளவு விரைவாக இது இஸ்ரேலிய சமுதாயத்தால் உள்ளெடுக்க முடியுமோ அவ்வளவும், எமக்கு எல்லோருக்கும் நல்லது என" தொடர்ந்தார்.

Amos Oz போன்றவர்கள் கூடுதலாக வலதுசாரிகளை போல் விமர்சனமில்லாமல் பேச்சுவார்த்தையின் உடைவிற்கு அரபாத்தை குற்றம் சாட்டினார்கள். பிரித்தானிய பத்திரிகையான Gurdian இற்கு ஓர் திறந்த ஆசிரியர் கட்டுரையில், Oz குறிப்பிடுகையில் "நாங்கள் பிழையாக இருந்துவிட்டோம்'' திரும்பதிரும்ப சொற்களை பாவித்ததுடன், தற்பொழுதைய பிரச்சனை ஓர் அதிஷ்டமில்லாத, எதிர்பாராத, துன்பங்களை தரக்கூடியது என குறிப்பிட்டார். அவர் மேலும் எழுதுகையில் "இது தேவையில்லாததும் பயனற்றதுமாகும்" என குறிப்பிட்டு "எல்லோருக்கும் இப்பிரச்சனை முடிந்தவுடன் அங்கே இரண்டு-வகை தீர்மானங்களே உண்டு என தெரியும். யூதர்களோ, பாலஸ்தீனியர்களோ எங்குமே போக முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் ஓர் குடும்பமாக இருக்க முடியாது ஏனென்றால் அவர்கள் ஒன்றல்ல. மக்கள் தொகையின்படி நாட்டை எங்கேயாவது ஒரு இடத்தில் கிட்டத்தட்ட ஓர் புள்ளியை வைத்து பிரிப்பதே ஓர் வழியாகும்" என குறிப்பிட்டார்.

தற்போதைய சமாதானம் சியோனிசத்தின் Sine qua non ஐ ஏற்றுக் கொள்கிறது. அதாவது அராபியர்களும், யூதர்களும் ஒன்றாகவிருப்பது நடைபெறக்கூடியதல்ல என்பதாகும். இச் சியோனிச சித்தாந்தம் உலகம் முழுவதுமுள்ள யூத மக்களின் ரீதியில் ஓர் எதிர்-ஒன்று சேர்வதற்கான போக்கையும் சியோனிச அரசு அராபியர்களுக்கெதிரான வித்தியாசங்களை காட்டுவதிலும் அமைந்ததாகும். பாலஸ்தீனியர்களை கட்டாயப்படுத்தி வன்முறைகளினால் அகற்றியதுபோல, இஸ்ரேலிய அராபியர்கள் [20% மக்கள் தொகையை கொண்டவர்கள்] கூடிய வேலையில்லாதவர்களும், இரண்டு மடங்கு ஏழைகளாகவும், குறைந்த சம்பளங்களுடன் திறமையற்ற வேலைகளில் ஈடுபடுபவர்களாயும், வீட்டு வசதிகளுக்கும் வாடகை, கடன்களை பெறமுடியாதவர்களாகவும் உள்ளார்கள். யூதர்கள்-அல்லாதவர்கள் முக்கியமாக நிலம் சொந்தமாக வைத்திருப்பதை தடுத்த படியால் அராபியர்களுடைய நகரம் எதுவுமே 1948 இல் இஸ்ரேல் இரண்டாக்கப்பட்டதிலிருந்து கட்டப்படவில்லை.

இது தீவீர-பழைமைவாய்ந்த (Utra-Orthadox) அரசியல் கட்சிகள், தங்களது ஆளுமையை சமூகவாழ்க்கையின் பல பகுதிகளில் மதச்சார்பற்ற யூதர்களுக்கு எதிராகவும் அவர்களுடைய நவீனமான சமய நம்பிக்கைகளுக்கு எதிராகவும் திணிப்பதற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை ஏழைகளுக்கும் பணக்காரருக்குமிடையேயுள்ள இடைவெளி அகன்று கொண்டு வருவதுடன், சம்பளமும் வசதிகளும் தொடர்ச்சி வெட்டப்படுவதுடன், வேலையில்லாதவர்கள் தொகை 10% மேல் உயர்ந்துள்ளது.

இந்த அடிப்படை சமூக, ஜனநாயக கேள்விகளை தீர்க்காமல், சியோனிச யுத்த வெறியர்களுக்கு எதிராக உண்மையான ஓர் எதிர்ப்பை முன் வைப்பது சாத்தியமில்லாதது ஆகும். முற்போக்கான சிந்தனையுள்ள தொழிலாளர்களும், புத்திஜீவிகளும் Peace Now இன் தோல்விக்கான காரணத்தை கண்டுகொள்வதுடன், ஓர் கடினமான அரசியல் போராட்டத்தின் மூலம் அராபிய யூத தொழிலாளர்களை ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச அடிப்படையில் ஒன்றிணைப்பதை தவிர வேறுமுன்வரக்கூடிய எந்த வழியுமில்லை என்பதை கட்டாயம் கண்டு கொள்ள வேண்டும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved