ஐக்கிய அமெரிக்க தேர்தல்
வலதுசாரி குழப்பத்தின் உள்ளமைப்பு - குடியரசுக்
கட்சியினர் மியாமி-டேடில் தாக்குதல்
By Kate Randall
25 November 2000
Use
this version to print
புதன்கிழமை மியாமி-டேடி வட்டத்தில் ஆய்வு செய்யும்
வாரியத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விபரங்கள்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இச்சம்பவங்கள் குடியரசுத் தலைவர்
தேர்தலில் கையால் மறுவாக்கு எண்ணலை நிறுத்த வாரியத்தை
முடிவெடுக்க இட்டுச் சென்றுள்ளது. வாரியம் மறுவாக்கு எண்ணலை
கைவிடுகின்றது என்று அறிவித்தது, பெரும்பாலும் ஜனநாயகக் கட்சி
வேட்பாளர் அல்கோருக்கான நூற்றுக்கணக்கான வாக்குகள்
மாநில வாரியான அதிகாரப்பூர்வமான ஒட்டுமொத்தவாக்குகளில்
சேர்க்கப்படமாட்டா என்பதாகும்.
வாரிய நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்
பொழுது அதை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள் பொதுவாக செய்தி
சாதனங்களால் படம்பிடித்துக் காட்டப்பட்டது போல, ``வெறுப்புக்
கொண்ட குடிமக்களும்`` குடியரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினர்களும்
வெறுப்புற்று தன்னியல்பாக வெடித்தெழுந்து ஒன்றுதிரண்ட திரட்சி
அல்ல. ஆனால் இந்த குட்டி குழப்பமானது புஷ் முகாமினால் மிகவும்
கவனமாகத் தீட்டப்பட்ட நடவடிக்கை ஆகும். இது புளோரிடா
உச்சநீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்ட வாக்குகளை கையால்
எண்ணுதலை நிறுத்துவதற்காக ஒரு நாளுக்கு முன்னர்தான் தீட்டப்பட்டதாகும்.
ஏபிசி நியூஸ் டொட் கொமின் (ABCNews.com)
அறிக்கை ஒன்றின்படி, இதில் பங்குகொண்டவர்களில்
பெரும்பகுதியினர் குடியரசுக் கட்சியின் உள்ளூர் செயல்வீரர்கள் அல்லர்.
ஆனால் இவர்கள் மியாமியில் ஒரு பெரிய நடமாடும் ஓய்விடத்திலிருந்து
செயல்பட்டு வந்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் வாஷிங்டன்
மாவட்டத்திலிருந்தும் மற்றும் நியூயோர்க் நகரம் அளவு
தொலைவிலிருந்தும் வந்தவர்களாவர். இந்த நபர்களை ஒரு
சி.என்.என் செய்தி நிருபர், அவர்களது நடவடிக்கையை மேற்பார்வையிடுவதற்கு
யார் பொறுப்பாக உள்ளார் என்று கேட்ட பொழுது யாரும்
வாய்திறக்கவில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு புஷ்-ன் பிரச்சாரவாதிகள்
குடியரசுக்கட்சி உறுப்பினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள
ஆரம்பித்தனர். அவர்கள் குடியரசுக்கட்சி உறுப்பினர்களை மியாமி
மாவட்ட அரங்கில் மறு எண்ணிக்கைக்கு எதிராக மறுநாள்காலை
மாநிலத்திற்கு வெளியே நடக்கவிருக்கும் எதிர்ப்பில் பங்கு கொள்ளும்படி
வேண்டிக் கொண்டனர். புதன்கிழமை காலை எட்டுமணிக்கு, வாரியத்தின்
ஆய்வாளர்கள் டேடின் 6,54,000 வாக்குச்சீட்டுக்களை முழுமையாக
கையில் எண்ணுவதைக் கைவிட வாக்களிக்கவும் அதற்குப்பதிலாக
சராசரியாக 10,000 ``செல்லாதவாக்குகளை எண்ணவும் நடத்திச்
செல்லவும் வாக்களித்தனர் -- அந்த வாக்குகள் எந்திரக்
கணக்கெடுப்பில் குடியரசுத்தலைவர் தேர்வு பதிவு செய்யப்படாத
வாக்குகளாகப் பதிவாகி இருந்தது. இவ்வாக்குகளில் பெரும்பான்மையானவை,
ஜனநாயகக்கட்சி வட்டாரங்களில் இருந்து வந்ததனால், வாரியத்தின்
முடிவு புஷ் முகாமை திடுக்கிடவைத்தது, இது அவர்களை ஆத்திரமூட்டலைச்
செய்யவைத்தது.
புஷ் ஆதரவாளர்கள் 150 பேர் கொண்ட கூட்டம்
மாவட்ட அரங்கில் 18வது தளத்தில் அறைக்கு வெளியே கூடியது.
அங்குதான் வாக்குச்சீட்டு ஆய்வாளர்கள் வாரியம் மறுவாக்கு
எண்ணிக்கையைத் தொடர்வதற்கு கூட்டம் நடத்திக்கொண்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்துதற்கான முயற்சியில் வாரியம்
தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. சர்ச்சைக்கிடமான
வாக்குள் உள்ள 19வது தளத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் இதனைக் கண்காணிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக்
கட்சியிலிருந்து தலா இரு பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் நவம்பர் 24 வால்ஸ்ட்ரீட்
பத்திரிகையில் பால் ஜிகோட்டால் எழுதப்பட்ட பத்திரிகைச்
செய்தியின்படி, குடியரசுக்கட்சி ``கண்காணிப்பாளரான`` நியூயார்க்
பிரதிநிதி ஜான் ஸ்வீனி, ``மூட`` உத்தரவிட்டார். குடியரசுக்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்
கும்பல் 19வது தளத்திற்குச் சென்று ``வாக்குகள் எண்ணிக்கையை
நிறுத்து, மோசடியை நிறுத்து`` என்று முழங்கிக்கொண்டு மாவட்ட
தேர்தல் துறை அலுவலகத்தின் கதவுகளை அடித்து நொறுக்கியது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்கில் பல தாக்குதல்
சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றன. கூட்டம் மியாமி
- டேடி ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ ஜெல்லரை, அவர்
வாக்குச் சீட்டைக் களவாடுகிறார் என்று கத்திக்கொண்டு துரத்தியது.
(அவர் மாதிரி வாக்குச்சீட்டை வைத்திருந்தார் என்று பின்னால்
விளக்கமளிக்கப்பட்டது). கும்பல் 19வது தளத்தில் தேர்தல்
அலுவலகத்தில் புகுந்து, பலபேரை மிதித்து நையப்புடைத்தது.
ஜனநாயகக் கட்சிக்காரர் லூயிஸ் ரோசரோ, கும்பல் தன்னைக்
குத்தியதுடன் பிடரியில் எட்டி உதைத்ததாகவும் நியூயார்க்
டைம்சிடம் குறிப்பிட்டார்.
குடியரசுக் கட்சியினரின் தாக்குதலுக்காக
முன்நின்று ஆள்திரட்டியதில் முக்கியமானதாக இருந்தது ஸ்பானிய
வானொலி ஒலிபரப்பு நிலையமான மாம்பி வானொலியாகும். சட்டவிரோத
கும்பல் வெறியைத் தூண்டும் முயற்சியில், குடியரசுக் கட்சியின் மியாமி
- டேடி தேர்தல் அதிகாரிகள், ஹிஸ்பானிக் (Hispanic)
பகுதிகளை வேண்டுமென்றே தவிர்க்கின்றனர்
என்று குற்றம்சாட்டினர். அப்பகுதிகள் அரசியல்ரீதியாக வலது
சாரி கியூபன் புலம்பெயர்ந்தோரால் ஆதிக்கம் செய்யப்படுவதுடன்
அவர்களில் பெரும்பான்மையானோர் புஷ்க்கு வாக்களித்தோர்
ஆவர். கலவரத்துக்கு ஒத்தடம் கொடுத்ததில் முக்கியப்பங்கு
வகித்தவர் ரேடியோ மாம்பி செய்தி அறிவிப்பாளர் எவிலியோ
செபெரோ ஆவார். இவர் மெகாபோனில், ``மறு வாக்கு எண்ணிக்கையைக்
கண்டனம் செய், அநீதியை நிறுத்து`` என்று முழங்கினார். அவர்
பொதுமக்களை ஊர்வலத்திற்கு வருமாறு விடுத்த அழைப்பு திரும்பத்திரும்ப
மாம்பி வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன், அவர் குடியரசுக்கட்சி
அரசியல்வாதிகளிடம் தொலைபேசி வழி எடுத்தபேட்டிகளும்
வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.
வால்ஸ்ட்ரீட் பத்திரிகை
ஜிகோட்டின் பகுதிப்படி, நிகழ்ச்சி நடந்த இடத்தில் குடியரசுக்
கட்சியினர், முற்றுகையிடப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் ``வட்டார
கியூபன் குடியரசுக்கட்சியினர் 1000 பேர்`` ஊர்வலத்தில் வந்து
கொண்டிருப்பதாகக் கூறினர். கேஸ்ட்ரோ - எதிர்ப்பு பாசிசக்
கும்பல் -- இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுவன் எலியன்
கோன்ஜாலசை அவனுடைய அப்பாவிடம் ஒப்படைப்பதற்கான
அரசாங்க ஆணை எதிர்ப்பில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்தவர்கள்,
கியூபாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய
முன்னனி நபர்கள் -- பங்கேற்பது ஐயத்திற்கிடமில்லாமல் ஆய்வு வாரிய
உறுப்பினர்களை நிலைகுலையவைத்தது, அவர்கள் உயிருக்கு அஞ்சுவது
நியாயம்தான்.
வால்ஸ்ட்ரீட் பத்திரிகைக்காக
மேலும் வாரப்பகுதியை எழுதி வரும் ஜிகோட், பொது ஒலிபரப்புத்
திட்டத்தின் செய்தி நேரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய
வழக்கமான வர்ணனையாளராவார். இக்கும்பல் தாக்குதலின்
வெற்றிபற்றி அவரது பத்திரிகைக்
கட்டுரையில், ``ஆய்வாளர்கள் எல்லோரையும் திகைப்படையவைத்ததுடன்
விட்டுக் கொடுத்தனர். அவர்கள் மறுவாக்கு எண்ணிக்கையைத்
தள்ளுபடி செய்ததுடன் பழைய நவம்பர் 7ஆம் தேதி வாக்கை
... அங்கீகரித்தனர். குடியரசுக் கட்சியினர் மகிழ்ச்சியடைந்ததுடன்
லாட்டரியில் பரிசு கிடைத்தது போல் ஆரத்தழுவிக்கொண்டனர்``
என்று ஆர்வத்துடன் எழுதினார்.
மியாமியின் கியூப - அமெரிக்கர்களுக்குள் இருந்து
பாசிச சக்தியை வெளிப்படையாகப் பயன்படுத்தும் இந்த ஆத்திரமூட்டல்
குடியரசுக்கட்சியில் மேலாதிக்கம் செய்திருக்கிற அதிவலதுசாரி
சக்திகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஜனநாயக உரிமைகளுக்கான
அச்சுறுத்தலைக் கோடிட்டுக்காட்டுகிறது. நடமாடும் ஓய்விடங்களிலிருந்து
செயல்படும் வழிப்போக்காரன குண்டர்கள் மீது குடியரசுக்கட்சியினரின்
நம்பிக்கை, நீதிமன்றம் அனுமதித்த மறுவாக்கெண்ணிக்கையைக்
கலைக்க வன்முறையையும் கும்பல் தாக்குதல்களையும் ஏற்பாடுசெய்வது,
குடியரசுக்கட்சி குடியரசுத்தலைவர் தேர்தலை தனக்கு சாதகமாகக்
கடத்தும் அதன் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதற்கான அறிகுறிகளாகும்.
புதன்கிழமை நடந்த நிகழ்ச்சிகளுக்கு தாமதமாகப்
பதிலளிக்கும் முகமாக, ஜனநாயகக் கட்சியின் குடியரசு துணைத்
தலைவர் பதவிக்கான வேட்பாளர் ஜோசப்லிபர்மேன், புளோரிடாவில்
குடியரசுக் கட்சியினர் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பணிவான
வேண்டுகோளை வெள்ளிக்கிழமை விடுத்தார். ``இவ் ஆர்பாட்டங்கள்
வாக்கு எண்ணிக்கை இயல்பாக நடைபெறுவதைத் தடுப்பதற்கும்,
சீர்குலைப்பதற்கும் நன்றாகத் திட்டமிடப்பட்டவையாகும்``
என்றார். ``சட்டத்தின் ஆட்சியை மதிக்க இதுதான் தருணம், கும்பல்
ஆட்சிக்கு அடிபணியக் கூடாது என்றார்.
லீபெர்மேனின் இவ்வேண்டுகோளானது, குடியரசுக்கட்சியினர்
தங்கள் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கோர்
முகாமிலிருந்து விடப்படும் பயனற்ற வேண்டுகோள்களில் மிக அண்மையதாகும்.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினர் நீதிமன்றம் வழங்கிய மறுவாக்கெண்ணிக்கையை
குடியரசுக் கட்சியினர் நிர்மூலமாகக்குவதற்கு எதிரான எந்தவித
பொதுஜன அணிதிரட்டலையும் ஊக்கமிழக்கச் செய்து வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினர், ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாக்கும் ஏற்பாடு செய்தலை, இது வெள்ளை மாளிகையை
சட்டத்துக்குப் புறம்பாகக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வழிமுறையாய்
இருந்தால்கூட, அதனை ஏற்பாடு செய்வதைக் காட்டிலும் --
குடியரசுக்கட்சியினரின் ``தளம்`` என்று சொல்லப்படுவதன் பாசிசப்பண்பையும்
அது பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபத்தையும் இருட்டடிப்புச் செய்வதிலேயே
பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர்.