France: finance scandal rocks the Fifth Republic
பிரான்ஸ்: நிதி மோசடி ஐந்தாவது குடியரசை ஆட்டங்காண
வைத்துள்ளது
By Peter Schwarz
19 October 2000
Use
this version to print
மூன்று கிழமையாக பிரான்ஸ் நிதி மோசடியின் நெருக்கடிக்குள்
இருந்து வருவதுடன் இது ஜனாதிபதி சிறாக்கையும் பிரதமர்
ஜொஸ்பனையும் மீள முடியாத சகதிக்குள் தள்ளியுள்ளது. ஒரு தனிப்பட்ட
அரசியல்வாதியின் தலைவிதியையோ அல்லது ஒன்று அல்லது சில கட்சிகளின்
இறுதி முடிவையோ மட்டும் இது குறிக்கவில்லை மாறாக இந்த
விடயம் இன்னும் அதிகமான அபாயத்தை கொண்டிருக்கிறது. இந்த
நிதிமோசடியானது பிரான்சின் பழமையான ஐந்தாவது குடியரசின்
முழு அமைப்பினதும் ஒரு ஆழமான நெருக்கடியையே பிரதிபலிக்கிறது.
பிரான்சின் ஆழும்வர்க்கம் 40 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய விதிமுறைகளால்
மேலும் இயங்கமுடியாது போயுள்ளது.
1980 களின் போது பாரிசில் RPR
இன் நிதி சேகரிப்பாளராக இருந்ததுடன் ஒரு வருடத்திற்கு முதல்
காலமாகிப்போன கட்டிட ஒப்பந்தக்காரர் ஆன Jean-Claude
Méry, RPR யின் சட்டபூர்வமற்ற நிதி
நடவடிக்கைகள் பற்றி விபரங்களுடன் விபரித்திருந்த பல மணித்தியாலங்களைக்கொண்ட
பதிவு செய்யப்பட்ட ஒரு ஒளிப்பதிவு நாடாவின் எழுத்துப் பிரதியை
செப்ரம்பர் 22ல் லு மோந் பத்திரிகை(Le
Monde) வெளியிட்டிருந்தது.
Méry ஆல் விபரிக்கப்பட்டிருந்த
சட்டபூர்வமற்ற நிதி சேகரிப்பானது இதற்கு முதல் நடந்த நிதி
மோசடி மற்றும் நீதிமன்ற வழக்குகளில் இருந்து அறியப்பட்டிருந்தது.
பல ஆயிரம்கோடி பிராங்குகளைக் கொண்ட முக்கியமான நகரங்களினது
வரவு செலவு திட்டங்களின் ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட
நிறுவனங்கள் மாநகர சபையினை கட்டுப்படுத்தும் கட்சிகளுக்கு
''தரகு'' ("commissions") வழங்குவதன்
மூலம் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டன. பொதுவாக எதிர்க்கட்சிகளும்
தாம் அமைதியாக இருப்பதை உறுதிப்படுத்த அந்த "தரகின்"
பாதியை பெற்றுக்கொண்டன.
Méry தெரிவித்ததன்
படி குறிப்பிட்ட வருடங்களுக்குள் பாரிசில் RPR
''நன்கொடையின்'' தொகையை மிகத்தீவிரமான முறையில் உயர்த்துவது
சாத்தியமானதாக இருந்தது. இது அதனது நடவடிக்கைகளின் மூலம்
ஒரு வருடத்திற்கு 400 இலட்சம் பிராங்குகளுக்கு பல நூறு ஆயிரம்
பிராங்குகள் வரை பெற்றுக்கொண்டது. மற்றைய கட்சிகளுக்கு "தரகு"
பிரிப்பதன் பாகமாக கட்டிட ஒப்பந்தங்களின்
தளபாடங்களை வாங்கும் பட்டியலுக்கு 40 வீதம் மேலதிகமாக
பணம் வாங்கியதால் மலிந்த விலையில் தரமற்ற கட்டிட
தளபாடங்கள் அந்த திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்டன.
பொதுக்கட்டங்களின் தற்போதைய நிலைமை இந்த விலை வெட்டுக்கு
சாட்சியங்களாக இருக்கின்றன -பாடாசாலைகளின் அபாயக்கதவுகளுடன்
இணைந்திருக்கும் சில்லுகள் உடைந்து கிடக்கின்றன, சுவர்ப்பூச்சுகள்
துண்டுகளாக உடைந்து கொட்டும் நிலையில் இருப்பதுடன் படிகள்
துண்டுகளாக உடைந்து ஆடிக்கொண்டுள்ளன.
Méry யின் அறிக்கையினுடைய
புதியதும், வெடிப்பு நிறைந்ததும் எதுவெனில், அதில் சம்பந்தப்பட்ட
நபர்களின் பெயர்களையும், பணத்தின் தொகையையும், நிரூபணங்களையும்
வெளியிட்டிருந்ததுடன் முதல் முறையாக அரசின் தலைமைப்பகுதியில்
இருப்பவரே சட்டபூர்வமற்ற முறையில் கட்சிக்கு நிதி சேகரிப்பதில்
முக்கிய பாத்திரம் வகித்தார் எனக் குற்றம்சாட்டி அந்த அறிக்கை
அம்பலப்படுத்தி இருப்பதுதான். இந்த காலகட்டத்தில் Méry
கட்சிக்கு நிதி சேகரிப்பதில் முன்னணியில்
நின்றதுடன் பாரிசில் முதல் முறையாக ஜாக் சிறாக் நகர பிதாவாக
இருந்ததுடன் பின்னர் பிரதமராகவும் இருந்தார். 50 இலட்சம் பிராங்குகளை சூட்கேசில்
வைத்து பிரெஞ்சு அரசாங்கத்தின் இருப்பிடமான Martignon
மாளிகைக்கு ஒரு தடவை எடுத்து
சென்று தான் எப்படி அதை சிறாக்கின் மேசையில் வைத்தாக அந்த
ஒளிப்பதிவு நாடாவின் ஒரு பகுதியில் Méry
தெளிவாக குறிப்பிட்டிருந்தார். சிராக்
அவருக்கு முன்னால் அமர்ந்திருந்ததுடன் தான் மிகவும் சாதுரியமான
முறையில் நன்கொடையை சேகரித்து வந்ததற்காக தன்னை வாழ்த்தினார்
என Méry அதில்
மேலும் குறிப்பிட்டிருந்தார்.
லு மோன்ட் அதை பிரசுரித்து இரண்டு நாட்களுக்குப்
பின், புதிய சஞ்சிகையான லெஸ்பிரஸ் (L'Express)
ஆழும் சோசலிச கட்சியை தாக்கியிருந்து.
இது அந்தக்கட்சியையும் கூட சேற்றுச் சகதிக்குள் தள்ளியது. மேரியின்
குற்றச்சாட்டை பதிவு செய்த மூல ஒளிப்பதிவு நாடா இரண்டு
வருடங்களாக Dominique
Strauss-Kahn இடம் இருந்ததாக
L'Express (லெஸ்பிரஸ்) அம்பலப்படுத்தியிருந்தது. Dominique
Strauss-Kahn பிரதமர் லியோனல்
ஜொஸ்பனின் நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராக
இருந்ததுடன் மாணவர் சமூகநல அமைப்பான MNEF
இடம் இருந்து மோசடித் தொகை
பெற்றுக்கொண்டதற்காக பதவியில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்படும்
வரை அதாவது 1999 நவம்பர் மாதம் வரை ஜொஸ்பனின் அரசாங்கத்தின்
நிதி அமைச்சராக இருந்தார்.
வரித்துறை சட்டத்தரணியான
Alain Belot மூலம் Strauss-Kahn
ஒளிப்பதிவு நாடாவை பெற்றுக்கொண்டார்.
இவர் Strauss-Kahn இன்
முன்னாள் கூட்டாளி என்பதுடன் Méry
மற்றும் அந்த ஒளி நாடாவை பதிவு செய்தபத்திரிக்கையாளர்
இருவரும் இவரது வாடிக்கையாளர்கள் ஆவர். நவீன உடை
வடிவமைப்பாளரான Karl
Lagerfeld உம் இவரது வாடிக்கையாளர்களில்
ஒருவர் ஆவார். இவர் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய
வரிக்கடனானது 20கோடி பிராங்குகளாகும். ஆனால் இது, Strauss-Kahn
இடம் Belot
அந்த ஒளிப்பதிவு நாடாவை கையளித்த
மறுநாள் 460 இலட்சமாக (4கோடியே 60 இலட்சம்) குறைக்கப்பட்டது.
தனது வாடிக்கையாளரின் வரியை குறைத்தவுடன் தான் அந்த
ஒளிநாடாவை மறுபடியும் கொடுத்துவிட்டதாக வரித்துறை சட்டத்தரணி
தற்போது குறிப்பிட்டுள்ளார்.
Strauss-Kahn இதை மறுத்தபோதும்
தான் அந்த ஒளி நாடாவை பெற்றுக்கொண்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனது உள்ளடக்கம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது,
அதைபோட்டு பார்ப்பதற்கான பொருத்தமான வீடியோ
பிளேயர் (video player) தன்னிடம் இல்லாதிருந்ததால் அதைத்தான்
பார்க்வேயில்லை என தெரிவித்துடன் அதை தான் தவறுதலாக எங்கோ
வைத்ததாகவும் பின்னர் அதைதான் கண்டெக்கவில்லை எனவும்
குறிப்பிட்டார். இது எப்படித்தான் இருந்தபோதும் அரசியல்
வெடிப்பு நிறைந்த அந்த பதிவின் தன்மை காரணமாக இந்த
நொண்டித்தனமான சாக்குபோக்குகளை நம்புவது கடினமாகவுள்ளது.
ஜொஸ்பன் இந்த ஒளிப்பதிவு நாடா விடயம் பற்றி அறிந்திருந்தாரோ
இல்லையோ பின்னர் ஏன் இது வரை இது நீண்டகாலமாக
இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது மற்றும் லு மோன்ட் (Le
Monde) இனது
செய்தி எழுதும் மேசைக்கு இறுதியில் எப்படிச் சென்றது
போன்ற வதந்திகளும் ஊகங்களும் இப்போது எழுந்துள்ளன.
Méry விடயம் வெளிவந்ததில்
இருந்து Elysée மற்றும்
Martignon மாளிகைக்கிடையில்
அதாவது ஜானாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் ஒரு உண்மையான
யுத்தம் நடந்துவருகிறது. சிறாக் வகிக்கும் பதவியின் காரணமாக
அதாவது ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர் அனுபவிக்கும் எந்த
அமைப்பிற்கும் கட்டுப்படாத சுதந்திரம் ஒரு விசாரணை செய்யும்
நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்படுவதை அவர் தவிர்க்க முடியும்
என்பதால் சட்டத்திற்கு எதிரான இரகசியங்களை வைத்திருந்ததற்காக
அவர் அரசை குற்றம் சாட்டினார். தனது சொந்த குற்ற
நடவடிக்கைகளை திசைதிருப்ப முயலவே ஜனாதிபதி தாக்குதல் செய்கிறார்
என தனது பக்கத்திற்கு ஜொஸ்பன் அவரை குற்றம் சாட்டினார்.
சிராக் மற்றும் ஜொஸ்பன் இருவரதும் பொது
செல்வாக்கு வரலாற்று வீழ்ச்சிக்கு சென்றுள்ளதை சர்வஜன
கருத்துக்கணிப்பொன்று காட்டியுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னர்
இருந்தே முழு அரசியல் அமைப்பும் எப்படி பரந்துபட்ட மக்களிடம்
இருந்து ஆதாளபாதாளமாக பிரிந்து இருப்பதை Méry
விவகாரம் எல்லோரும் பார்க்கும்படியாக
அம்பலப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மத்தியில்
ஜொஸ்பன் முதலில் தன்னை செல்வாக்கு மிகுந்த ஒரு 'ஒழுக்கமான'
அரசியல் வாதியாக காட்டிக்கொள்ளக் கூடியதாக இருந்ததுடன்
அவர் பிரெஞ்சின் ஐந்தாவது குடியரசை ஆட்டம் காணவைத்த
பல ஊழல் விவகாரங்களில் இருந்து தன்னை தூரத்தில் வைத்துக்
கொள்ளஎப்போதுமே பெரும் முயற்சிகளை செய்து வந்தார்.
ஆனால் இந்நிகழ்வு மூலம் ஜொஸ்பன் தனது சாதகமான செல்வாக்கை
விரைவாக இழந்து விட்டிருக்கிறார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
பற்றிய வாக்கெடுப்பு
மேரியின் அறிக்கை வெளிவந்து இரண்டு நாட்களுக்குப்பின்,
இன்னொரு நிகழ்வு முழு அரசியல் அமைப்பின் மீதான பரந்தளவிலான
அதிருப்தியை அம்பலப்படுத்தியது. அது,
ஜனதிபதியின் பதவிக்காலத்தை7ல்இருந்து 5வருடங்களாக குறைப்பதற்கான
சர்வஜன வாக்கெடுப்பு ஆகும்.
பிரான்சில் முதல் தடவையாக ஜனாதிபதி, பிரதமர்
மற்றும் பாராளுமன்றத்தின் மேல் சபா மற்றும் கீழ் சபா இரண்டிலிருந்தும்
இந்த யாப்பு மாற்றத்திற்கான ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கு மாறாக இது பரந்த மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதித்துக்
கொண்டது. மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் மூன்றில்
ஒரு பகுதி மக்கள் தான் இந்தவாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் கிட்டதட்ட இருபது இலட்சம் பேர்,
ஒன்றில் தமது வாக்குசீட்டுக்களின் எந்தபகுதியிலும் பதிவு செய்யாமல்
அப்படியே வெறுமையாக விட்டனர் அல்லது தமக்குபிடித்த வேறு
கோரிக்கைகளை அதில் பதிவு செய்ததன் மூலம் தமது வாக்குகளை
செல்லுபடியாகாத வாக்குகளாக்கினர். பதவிக்காலம் ஐந்து
வருடமாக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு வாக்காளர்களில்
மொத்தத்தில் 20 வீதத்திற்கு குறைவானவர்கள் மட்டுமே ''ஆம்''
என பதிலளித்து இருந்தனர்.
ஆரம்பத்தில் இந்த யாப்பு மாற்றமானது பரந்த
அளவிலான ''ஜனநாயக சீர்திருத்தம்'' ஆக இருக்கும் என நம்பப்பட்டது.
இந்தவிடயம் பற்றிய விவாதம் 28 வருங்களாக நடந்துவருகிறது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைப்பதற்கான நடவடிக்கை பதவியில்
இருந்தவர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு வந்தது.
70களில் நடந்த பரந்த அளவிலான யாப்பு சீர்திருத்தத்துடன்
இணைத்து 7 வருட பதவிக்காலத்தையும் இல்லாமல் செய்யும்படி
சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே அழைப்பு விட்டிருந்தன.
ஆனால் சோசலிச கட்சியைச் சேர்ந்த பிரான்ஸுவாமித்திரன் (François
Mitterrand) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்,
''இந்த யாப்பு பிரேத்தியமாக எனக்காக உருவாக்கப்பட்டு
இருக்காதபோதும், அவை எனக்கு சிறப்பாக பொருத்தமாகவே
இருக்கிறது'' ( Le Monde,
1981) என இனம் கண்டார்.
லியோனல் ஜொஸ்பன் பிரதம மந்திரியாக ஆனபோது,
அலுவலகங்களின் நீண்ட பதவிக்காலங்களினை மட்டுப்படுத்துவது,
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை விரிவாக்குவது, ஜனாதிபதியின் அதிகாரத்தை
குறைப்பது, மத்தியப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை இல்லாமல்
செய்வது போன்ற ''ஜனநாயக சீர்திருத்தத்திற்கு'' ஆதரவளிப்பதாக
சோசலிச கட்சி மீண்டும் அறிவித்தது. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும்
இடையில் நடந்த தொடர்ச்சியான பேரம் பேசலுக்குப் பின்னர்
ஜனாதிபதியின் பதவிக்கால குறைப்பு என்பதைப் பற்றி மட்டுமே இப்போது
பேசிவருகிறார்கள். பாரளுமன்றத்தின் சட்டசபை காலத்திற்கு ஏற்ப
ஜனாதிபதி பதவிக்காலத்தை ஐந்துவருடமாக மாற்றுவது தற்போது
இருந்து வரும் இரண்டு வித்தியாசமான கட்சிகளை சார்ந்த
பிரதமரையும் ஜனாதிபதியையும் கொண்ட ஆட்சி முறையான கூட்டாட்சியின்
சாத்தியத்தை குறைப்பதாக இருக்கிறது. 1999 கோடைகாலம்
வரை பதவிக்காலத்தினை குறைப்பதை சிறாக் கடுமையாக எதிர்த்துவந்தார்.
ஆனால் இரண்டாவது தடவையும் தான் ஜனாதிபதியாக வருவதற்கான
சிறந்த சந்தர்ப்பத்தை அது அளிக்கும் என அவர் கருதியதால்தான்
தனது எதிர்ப்பை இறுதியில் கைவிட்டார்.
யாப்பினை சீர்திருத்தம் செய்வது பற்றிய இந்த
முடிவற்ற ஆக்கபூர்வமற்ற விவாதங்கள் இறுதி ஆய்வுகளில், ஐந்தாவது
குடியரசின் யாப்பினை சீர்திருத்துவதன் மூலம் அரசியல் அமைப்பின்
நெருக்கடியை தீர்ப்பது சாத்தியமற்றது என்ற உண்மையினை பிரதிபலிக்கிறது.
இப் பிரச்சனையானது ஐந்தாவது குடியரசால் உருவாக்கப்பட்டு
பேணப்பட்ட சமூக உறவுகளோடு ஆழமான முறையில்
வேரோடியிருக்கிறது.
ஐந்தாவது குடியரசு
அல்ஜீரிய யுத்தத்தின் வெடிப்பிலும், பிரான்ஸ் உள்நாட்டு
யுத்தத்தின் விழிம்பில் இருந்தபோது தற்போதைய பிரெஞ்சு யாப்பானது
1958 இல் உருவாக்கப்பட்டது. அல்ஜீரியாவில் நிலைநின்ற இராணுவ
சதியின் வெற்றியானது, 12வருடகால இருப்பில் 24 அரசாங்க மாற்றங்கள்கண்ட
ஸ்திரதன்மையற்ற 4வது குடியரசை பயமுறுத்தியது. 1946ல் தனது கிராமத்திற்கு
ஓய்வில் சென்ற ஜெனரல் (General
CharlesDeGaulle) சார்ல் து கோல் திரும்ப
அழைக்கப்பட்டு, அரை சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்கும் உரிமை
வழங்கப்பட்டது. ஜேர்மன் ஆக்கிரமிப்பில் இருந்து ஒரு விடுதலையின்
பிரதிநிதியாக திகழ்ந்த அவர் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருந்த
இரண்டு பிரிவினருக்கிடையில் அமைதியை நிலைநாட்டும் நபராக
பார்க்கப்பட்டார்.
முற்றுமுழுதாக தனக்கு
பொருத்தமான யாப்பு ஒன்றினை டு கோல்(De
Gaulle) உருவாக்கினார்.
நான்காவது குடியரசினுள் இருந்த ஜனாதிபதியின் அலுவலகம் பிரதிநிதித்துவ
செயல்முறைகளை முழுவதுமாக மட்டுப்படுத்திக்கொண்டது,
அது உண்மையான அதிகாரத்தின் மையமாக வந்ததுடன் இன்னும்
அதிகாரங்களை விரிவாக்கி கொண்டது. பாராளுமன்ற பெரும்பான்மையினை
கணக்கில் கொள்ளாமல் ஜனாதிபதி ஆட்சியை நடத்த சர்வஜன
வாக்கெடுப்பு முறையானது அனுமதியளிக்கிறது. ஜனாதிபதியின் 7
வருட பதவிக்காலமானது ஏற்கனவே இருந்த யாப்பில் இருந்தே
உருவாக்கப்பட்டதுடன், பாராளுமன்ற பெரும்பான்மைக்கு கட்டுப்படாமல்
இயங்குவதற்கான ஜனாதிபதியின் சுதந்திரத்தை பலப்படுத்தியது.
ஐந்தாவது குடியரசானது உள்நாட்டு யுத்தத்தின்
பயம் இல்லாது போய்க்கொண்டிருந்தபோதும் நெருக்கடியின்
மத்தியில் உள்ளானதுடன், புதியதும் இன்னும் சிக்கலானதுமான
சமூகவெடிப்புகள் மேலெழுந்தன. 1968ன் பொதுவேலை நிறுத்தமானது
டு கோலின் ஆட்சியின் முடிவில் தொடங்கியதுடன் அது கிட்டதட்ட ஐந்தாவது
குடியரசின் முடிவினையும் விளைவாக்கியது. அன்று போர்க்குணம்
கொண்ட தொழிலாளவர்க்கத்தின் மத்தியில் பரந்த செல்வாக்கைகொண்டிருந்த
ஸ்ராலினிசத்தின் துரோகத்தினால் மட்டுமே முதலாளித்துவம் ஆட்சி
இருந்து தூக்கியெறியப் படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
டு கோலின் வாரிசுகளான Georges
Pompidou, Valéry GiscardD'Estaing and François Mitterrand போன்றவர்கள்
அதன் தன்மையைமட்டும் மாற்றிகொண்டு ஜனாதிபதி அமைப்பு
முறையை தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். இரு எதிரி முகாமிற்கிடையில்
ஜனாதிபதி தொடர்ந்தும் நீண்டநாட்களுக்கு ஒரு பொனபாட்டிச
மத்தியஸ்தராக(bonapartist referee)
இருப்பதற்கு மாறாக இன்று அவர் ஒரு முழுச் சமூகநல
அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையில் ஒரு மத்தியஸ்தம்
வகிப்பவராகவும், மாஜாஜாலம் காட்டுபவராகவும் இருக்கிறார்.
மித்திரன் (Mitterrand)
நான்காவது குடியரசினது சதிப்பாடசாலையின்
முழுத்தகுதி பெற்ற ஒரு பட்டதாரி ஆவார். அவர் குறிப்பாக இந்தக்
கலையில் மிகத் தேர்ற்ச்சி பெற்றிருந்தார். தொழிலாள வர்க்கத்தை
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அவர் சோசலிச கட்சியில்
தன்னை அடித்தளமிட்டு இருந்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
தொழிற்சங்களின் ஆதரவினை அடிப்படையாக கொண்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெற்றி கொள்வதற்கு கம்யூனிஸ்ட்
கட்சியின் ஆதரவு அவருக்கு தேவையற்று இருந்தபோதும் கூட
அவர் கம்யூனிஸ்ட் கட்சியையும்[-ஸ்ராலினிஸ்டுகள்-]அவரது அரசாங்கத்தில்
இணைத்துக்கொண்டார். அதே நேரம் அவர் அனைத்து அரசியல்
கன்னைகளுடனும் உறவை வைத்திருந்தார். இரண்டாம் உலகயுத்தத்தின்
போது நாசிகளுடன் இணைந்து இயங்கிய பிரான்சின் விஸ்சி (Vichy
régime) அரசாங்கத்தின் முன்னாள் உத்தியோகஸ்த்தர்களுடனும்
கூட உறவை வைத்திருந்தார்.
அனைத்து துறைகளிலும் ஆதிக்கத்தையும்,
வருமானத்திற்கான மூலத்தையும், வேலைகளை சரியான முறையில்
சமநிலையாக பகிர்ந்தளித்தல் என்ற இந்த முறையின் மூலம் தான்
இந்த அரசியல் அமைப்பின் சமநிலை பேணப்பட்டுவந்தது. இந்த
நிலைமைகள்தான் பிரெஞ்சு ஊழலின்(corruption
à la française) அதிகரிப்பிற்கான வழிமுறையாக
இருந்து வருகிறது. செல்வாக்கை பணத்திற்காக விற்பனை செய்தல்,
முடிவுகளையும் வாங்குதல், விற்பனை செய்தல், இலாபத்தில்
ஒரு பகுதியை கைலஞ்சமாக பெறுதல், நகரத்தின் வெளிப்புற
அபிவிருத்தி திட்டங்களினை கையாடுதல், பொதுத்துறையின் ஒப்பந்த
திட்டங்களை ''சரியானநபர்கள்'' ("right
people") பெற்றுள்ளார்களா
என்பதை உறுதிப்படுத்துதல் என மேற்காணும் முறையில் இந்த ஆட்சி
முறையினை ஒரு தடவை அரசியல் விஞ்ஞானி ஒருவர் வர்ணித்தார்.
தனிப்பட்ட தொழிற்துறை குழுக்கள் மற்றும்
அரசியல் வாதிகளின் நலன்களுக்கிடையில் ஏதாவது வித்தியாசத்தை
காண்பது கடிமானதாகவே இருந்துவருகிறது. ''வணிகரீதியாக கிடைக்கக்
கூடிய''("commercially available")
அரசியல் வாதிகள் இன்று சாதரண
ஒன்றாக இருப்பதுடன்-இப்படியான ஒன்று 60 களிலும் 70 களிலும்
விதிவிலக்கானதாக இருந்தது -இந்த நிலைமைக்கு ஏற்ப அரசியல்
யாப்பினை உருவாக்க பலமுயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. யாப்பு
ஆலோசனைக் குழு, குடியரசின் உயர்நீதி மன்றம் போன்ற புதிய
அமைப்புக்களையும் மன்னிப்புச் சபைகளையும் பிரெஞ்சு
பாராளுமன்றம் உருவாக்கியது. இவைகளது முதல் கடமை
என்னவெனில் சாட்சியங்களுடன் பிடிபட்ட அரசியல்வாதிகளை விடுதலை
செய்வதாகும். இதில் சிறு வியப்பிற்கு உரியது என்னவெனில் யாப்பு
ஆலோசனைக் குழுவில் கடைசியாக இருந்த தலைவரான Roland
Dumas, Elf-Aquitaine Group (பிரான்சின் பெற்றோலிய
நிறுவனம்) ஈடுபட்ட
பயமுறுத்தல் மோசடியில் இவருக்கும் தொடர்பு இருந்தது
என்பதால் பதவியில் இருந்து விலகும்படி நிர்பந்திக்கப்பட்டார்.
Mitterrand காலத்தினதும்
அதற்கு பின்னருமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்
வாதிகளின் பெயர் பட்டியலை இங்கே குறிப்பிட முனைந்தால் இந்த
கட்டுரையின் எல்லையை அது தாண்டிவிடும். Bernard
Tapie இன் வழக்கை மட்டும் ஞாபகப்படுத்துவது
இதற்கு போதுமானது. மித்திரனது முன்னாள் ''ஜோடிக்கப்பட்ட
இளவரசன்'' ( "crown
prince") உயர் ஆபத்தான சூதாடி
மற்றும் நிதி மோசடியாளானாக தனது சிறைச்சாலை வாசத்தை
முடித்துள்ளார். மித்திரனால் பாதுகாக்கப்பட்ட இன்னொரு
நபரான Èdith Cresson அவருக்கு
அளிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கான தேர்தலில் தோல்வியுற்ற
பின்னர் ஐரோப்பிய கமிஷனில் பதவி வகித்தார் அதன் பின்னர் அவர்
உறவினர்களுக்கு சலுகை அளித்தார் என்பதால் முழு பதவியையும்
இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார்.
அரசியல் அமைப்பின்
நெருக்கடி
இன்றைய இந்த அரசியல் அமைப்பின் ஆழமான
நெருக்கடியானது பல ஆழமான மாற்றங்களுக்கு சாதகமானதாக
இருக்கிறது. வர்த்தகம் நிறுவனங்களின் நலன்களின் கூட்டானது
அரசியல் யாப்பு மற்றும் பொதுவாக பிரெஞ்சு
சோசலிச, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற் சங்கங்களின்
பரந்துபட்ட செல்வாக்கு இன்று குறைந்து போய்யுள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் சமூக வெற்றிகளும் வாழ் நிலைமைகளும்
கடந்த இரண்டு சகாப்தங்களாக இந்த கட்சிகளினால் ஒழுங்கு
முறையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளது.
இதனால் அக்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அவர்களது பரந்த
அங்கத்தவர்களையும் வாக்காளர்களையும் இழந்துள்ளன. 1970
மற்றும் 80களில் எழுந்த எதிர்ப்புகளை கட்டுப்படுத்தியது போல்
இன்றைய சமூக எதிர்ப்புகளை இந்த கட்சிகளால் கட்டுப்படுத்துவது
என்பது முடியாது போயுள்ளது. 1995 வேலை நிறுத்த இயக்கம் அல்லது
தற்போது நடந்த எண்ணைவிலை உயர்வுக்கு எதிரான எதிர்ப்புகள்
போன்ற இப்படியான முரண்பாடுகள் வெடிப்பு நிறைந்த வடிவத்தை
எடுப்பதுடன் இது எப்போதும் அரசியல் நெருக்கடியை விளைவாக்குகிறது.
மித்திரன் காலத்தில் உருவான பரஸ்பர சார்புத்
தன்மைவாய்ந்த நெருக்கமான உறவுகள் மற்றும் ஊழல்கள்
இன்றைய பூகோள பொருளாதாரத்தில் ஒரு பாதகமான விடயமாக
வந்துள்ளது. இலஞ்சத்திற்கான செலவுகள், தரகுகள்("commissions")
பங்குச் சந்தையாளர்களின் இலாபத்தை
குறைக்கச் செய்வதுடன் இப்படியான சுத்துமாத்துகள், ஊழல்கள்
மற்றம் சலுகையளிப்புகள் சர்வதேச நிதியீட்டாளர்களுக்கு பீதியை
உண்டாக்குகின்றன. அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும்
ஆபத்துக்குள்ளாக்கியுள்ளன. ''நீ எனக்கு முதுகு சொறிந்து விடு,
நான் உனக்கு முதுகு சொறிந்து விடுகிறேன்'' என்ற அடிப்படையில்
இயங்கி வரும் இந்த அரசு மக்களின் நலன்களுக்கு எதிராக
''கொடூரமான வெட்டுக்களை'' செய்வதை கீழ்ப்படுத்துவதற்கான
அவசியமான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை.
இந்த விடயங்கள் தான் இன்று கிட்டத்தட்ட 15
வருடங்களாக அரசியல் அமைப்புக்கும் நீதித்துறைக்கும் இடையிலான
பலமான முரண்பாடுகளாக இருந்து வருகின்றன. ''கறுத்தாடு'' [Black
Sheep] நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டு
தண்டிக்கப்படும் சந்தர்ப்பம் இருந்தபோதும், இதலானான
மதிப்புக்குறைவை கட்டுப்படுத்துவதற்கான நோக்கத்தில் நீதிபதிகள்
பலதடவை நிர்பந்திக்கப்பட்டார்கள். மேரி மோசடி வெளிவந்தவுடன்
அரசியல் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை ஒரு நிலையான
அடிமட்டத்திற்கு சென்றுள்ளது. தங்கள் சொந்த நலன்களை மட்டும்
கருத்தில் கொள்ளும் சுயநலமிக்க சிறுபான்மையினரினதும்,
பொதுவில் சமூகத்திற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது
பற்றி சிறிதும் அக்கறைப் படாதவர்களினதும், அரசியல் வாதிகளுக்கு
நிதியீட்டுபவர்களினதும் பிரதிநிதிகள் என்பதாகத்தான் இன்றிருக்கும்
கட்சிகள் அனைத்தும் பரந்துபட்ட மக்களால் நோக்கப்படுகின்றன.
நெருக்கடியின் இன்னொரு மூலகமானது அதிகமாக
நான்காவது குடியரசின் அரசியல் அடித்தளத்தின் உடைவினை ஞாபகப்படுத்துகிறது.
இடது மற்றும் வலது இரு அரசியல் கன்னைகளும் அடிப்படை
அரசியல் புள்ளியில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய விடயத்தில்
முற்றுமுழுதாக பிளவுண்டு இருக்கின்றன. இடது கன்னையான
ஜொஸ்பனின் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சோசலிச, கம்யூனிஸ்ட்,
செவனுமென்னின் குடியானவர்களின் இயக்கம், பச்சைக்கட்சி மற்றும்
தீவிரக் கட்சி(-theSocialists,the
Communists, Chevènement's Citizens Movement, the Green Partyand the
RadicalParty) ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும்
ஆழமான முறையில் ஒருவருக்கு ஒருவர் எதிராக மட்டும் முரண்பட்டிருக்கவில்லை
மாறாக அவர்களுக்குள்ளே ஆழமான முறையில் பிளவுண்டு உள்ளனர்.
சிராக்கின் தலைமையின் கீழ் ஐரோப்பியத்திற்கும்
(pro-European)
மற்றும் பிலப் செகனின் (Philippe
Séguin) தலைமையின் கீழ் எதிர்-ஐரோப்பியத்திற்கும்
(anti-European)
வலது கன்னையான கோலிச வாதிகள் உடைந்து போய்யுள்ளனர்.
இவர்களது பாராம்பரிய கூட்டு கட்சியான பிரெஞ்சு ஜனநாயக
ஜக்கிய கட்சி (UDF, French
Democratic Union) எப்போதும் போல்
பலதரப்பட்ட கட்சிகளின் ஒரு கலவையாக உள்ளனர். மற்ற பக்கத்தில்
கோலிஸ்ட் மற்றும் பிரெஞ்சு ஜனநாயக ஐக்கிய கட்சி இரண்டும்
லு பெனின் தேசிய முன்னணி மற்றும் சார்ல் பஸ்குவா, சார்ல் வில்லியே
இருவராலும் வழி நடத்தப்படும் ''பிரான்சுக்கான இயக்கம்''
போன்ற பிரபல்யமான வலது சாரிக்கட்சிகளின் அழுத்தத்தினுள்
இருந்து வருகின்றன. இந்த கட்சிகள் தொடர்ந்து 15 வீதமான
வாக்குகளை பெற்றுள்ளதுடன் இப்போது சண்டையிட்டுக்கொள்ளும்
கன்னைகளாக உடைந்து போய்யுள்ளனர்.
ஐந்தாவது குடியரசின் தொடக்கத்தில் இருந்தது
போல் ஜனாதிபதி இந்த பைத்தியக்கார வைத்திய சாலையை நீண்ட
நாட்களுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உரிமையை
கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு மாறாக அரசாங்கத்திற்கும்
ஜனாதிபதிக்கும் உள்ள நெருக்கமான உறவு இன்னும் அதிகமான
முறையில் அரசியல் ஸ்த்திரமின்மையை விளைவாக்கியிருக்கிறது. பாராளுமன்றத்தில்
ஏற்பட்ட பெரும்பான்மையினரின் விரைவான மாற்றத்தின்
விளைவாக ஏற்பட்ட கூட்டாட்சி முறையானது-வலதுசாரி ஜனாதிபதியும்
ஒரு இடது சாரி பிரதமரும் இணைந்து நடத்தும் ஆட்சி-நீண்ட விதிவிலக்கான
ஒன்றல்ல மாறாக தவிர்க்க முடியாத முரண்பாடுகளும் நெருக்குவாரங்களும்
நிறைந்த ஆட்சி முறையாகும்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பதுபோன்ற
தற்காலிய மாற்றங்கள் முற்றுமுழுதான முறையில் இந்த நெருக்கடியை
தீர்த்துவிட போதுமானதல்ல.அரசியலினுள் ஒழுக்கத்தை மீண்டும்
அறிமுகப்படுத்தும் ஜொஸ்பனின் முயற்சியானது நிலைமைகளை இன்னும்
சீரழிவுக்கு உள்ளாக்கும். பரந்த அளவில் ஒரு கறைபடியாத
அரசியல் வாதியாக பதவிவகித்த ஜொஸ்பன் இந்த ஊழல் விவகாரத்தில்
மூக்கை நுளைத்துக்கொண்டதன் மூலம் எல்லா அரசியல் வாதிகளும்
கறைபடிந்தவர்களே என்ற பரவலான உணர்வு அதிகரித்திருக்கிறது.
இந்த மேரி மோசடி (Méry
scandal ) அடிக்கடி பிரான்சில் நிகழ்வதொன்றோடு,
இது வரவிருக்கும் அரசியல் நெருக்கடியின் முன்நிகழ்வு மட்டுமே
என்பதை ஒருவர் நிட்சயமாக கருதமுடியும். இந்நெருக்கடியானது
இனிவரும் காலங்களில் தெருவிலும் இடம்பெறும். இந்நெருக்கடிகளின்
வெளிப்பாடு எவ்வாறு இருக்குமெனில், அதாவது ஒன்றில் அது
மேலும் அரசியல், சமூக சீரழிவுகளை விளைவாக்கும் அப்படியில்லாத
பட்சத்தில் பரந்துபட்ட மக்களின் நலன்களின் அடிப்படையில்
ஒரு தீர்வு ஸ்தாபிக்கப்படுவதை உருவாக்குவது தொழிலாள வர்க்கம்
தனது சொந்த சுயாதீன அரசியல் வேலைத் திட்டத்துடன் தலையீடு
செய்வதன் சாத்தியப்பாட்டினிலே தங்கியிருக்கிறது.
|