Le combat de l'opposition de gauche contre le stalinisme (1923-1933)
ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டம் (1923-1933)

லியோன் ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் —ரஷ்ய புரட்சியின் மிக முக்கியமான தலைவர்கள் உட்பட— லெனினின் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், மற்றும் 1923 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஜேர்மன் புரட்சிக்கு மத்தியில், அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பை உருவாக்கினர். இடது எதிர்ப்பின் நோக்கம் சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை சீர்திருத்துவதும், ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான வளர்ந்து வரும் பழைமைவாத மற்றும் தேசியவாத அதிகாரத்துவத்தை எதிர்த்து கம்யூனிச அகிலத்தில் ஒரு சரியான நிலைப்பாட்டிற்காக போராடுவதும் ஆகும்.

ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் உருவான மோதல் தனிப்பட்ட அதிகாரம் தொடர்பாக இரு நபர்களிடையேயான ஒரு அகநிலைரீதியான சண்டை அல்ல, மாறாக சரிசெய்ய முடியாத அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஒரு அடிப்படை யுத்தமாகும். ஸ்ராலினால் அதிகாரம் பலப்படுத்தப்பட்டதும், அவர் ஆளுமைப்படுத்திய அதிகாரத்துவ சர்வாதிகாரமும் ரஷ்ய புரட்சியின் தவிர்க்க முடியாத விளைவு அல்ல. சர்வதேச மற்றும் ஐரோப்பிய புரட்சியின் தாமதம் காரணமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அரசின் நிலைமைகளிலிருந்து இது வளர்ந்தது. சர்வதேச அளவில் புரட்சிகர தலைமையின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையால் தொடர்ச்சியான புரட்சிகர எழுச்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

ஸ்ராலினிசத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில், ட்ரொட்ஸ்கி உலக சோசலிசப் புரட்சியின் தத்துவத்தை அபிவிருத்திசெய்தார், இது ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் நடைமுறைவாத தேசியவாத சூழ்ச்சிகளைக் காட்டிலும் அளவிடமுடியாத அளவிற்கு தொலைநோக்குடையதாக நிரூபிக்கப்பட்டது. 1933 வரை இடது எதிர்ப்பு நடத்திய போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர கொள்கையின் மிக தீர்க்கமான கேள்விகளில் கவனம் செலுத்தியது.

பிரதான விரிவுரைகள்
இடது எதிர்ப்பின் போராட்டங்கள்
வாடிம் ரோகோவின் (1937-1998): இடது எதிர்ப்பின் வரலாற்றாசிரியர்

ரோகோவினின் மிகப் பெரிய பணி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் நடைபெற்ற போராட்டம் பற்றி, 1992 இல் தொடங்கி, புரட்சிகர மார்க்சிச எதிர்ப்பின் ஏழு தொகுதி வரலாறாக மாறிய விஷயத்தில் அவர் தீவிரமான பணிகளைத் தொடங்கியிருந்தார்.

1923 முதல் 1940 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய, ரோகோவினின், அங்கே ஒரு மாற்றீடு இருந்ததா? என்ற நூல் ஸ்ராலினிச ஆட்சியைப் புரிந்துகொள்வதற்கும், அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுப்பதற்கும் இருந்த, ஆழ்ந்து வேரூன்றிய சோசலிச எதிர்ப்பின் இன்றியமையாத வரலாற்றை இந்த படைப்பு கொண்டுள்ளது.

1929 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னரும் கூட, ட்ரொட்ஸ்கியின் மகத்தான பிரபலத்தை ரோகோவின் ஆவணப்படுத்தியுள்ளார், மேலும் 1930 களில் ஸ்ராலினின் இரத்தக்களரி பயங்கரத்தின் முக்கிய நோக்கம் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கை ஒழிப்பதாகும் என்பதையும் நிறுவிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய கட்டுரைகள்