டேவிட் நோர்த் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலின் ஜேர்மன் பதிப்பை வழங்குகிறார்

சனிக்கிழமையன்று, டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற அவரது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கினார்.

150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், ஹால் 5 இல் உள்ள புனைகதை அல்லாத நூல் மன்றத்தில் நின்று கேட்கக்கூடிய அறையில் கூடி இருந்தனர். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரிடமும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவரிடமும் கேள்விகளைக் கேட்க பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் மொழி பதிப்பின் ஆசிரியரும் மெஹ்ரிங் வெர்லாக் பிரதிநிதியுமான ஜோஹானஸ் ஸ்டேர்ன் அந்த நிகழ்வை நெறிப்படுத்தினார், அது ஜேர்மன் மொழியில் நடைபெற்றது. (வீடியோவில் ஆங்கில வசனங்கள் உள்ளன.) அதன்பின்னர், ஸ்டேர்ன் நோர்த்தை ஆங்கிலத்தில் நேர்காணல் செய்து, ஜேர்மனியில் போருக்கு பெருகிவரும் எதிர்ப்பு குறித்து அவருடன் விவாதித்தார்.

Loading