காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. தீர்மானம் "எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த திங்களன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், காஸாவில் இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் காஸாவில் போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றியதால், அமெரிக்க தூதரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதியுமான லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், மார்ச் 25, 2024 திங்கட்கிழமை, ஐ.நா தலைமையகத்தில் சண்டையை நிறுத்துவதற்கான அதன் முதல் கோரிக்கையான வாக்கெடுப்பை புறக்கணிக்க வாக்களித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி ஆதரவளித்து வருகிறது. இந்த நிலைமையில் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் “கட்டுப்பாடற்றது” மற்றும் “எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்பதால், தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதித்ததாக பைடன் நிர்வாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்

பாதுகாப்பு சபையானது “அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் ரமலான் மாதத்தில் உடனடியாக போர் நிறுத்தம் கோருகிறது, இது ஒரு தொடர்ந்து நீடிக்கும் போர்நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும், மேலும் பிணைக்கைதிகள் அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கவும் கோருகிறது” என்று தீர்மானம் அறிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், அமெரிக்கக் கண்ணோட்டத்தில், “கட்டுப்பாடற்ற தீர்மானம் ஹமாஸ் முதல் பணயக்கைதியை விடுவிக்க” அழுத்தம் கொடுத்தது என்று விளக்கினார். மேலும், “இந்தத் தீர்மானத்தின் அர்த்தம் என்னவெனில், போர்நிறுத்தம், அதன் கால அளவு எதுவாக இருந்தாலும், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இன்னும் வெளிப்படையாக கூறுகையில், “இது ஒரு கட்டுப்பாடற்ற தீர்மானம் ஆகும். எனவே ஹமாஸை பின்தொடரும் இஸ்ரேலின் திறனில் எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தாது” என்று குறிப்பிட்டார்.

“இது எங்கள் கொள்கையில் எந்த மாற்றத்தையும் பிரதிபலிக்கவில்லை” என்று கிர்பி மேலும் குறிப்பிட்டார்.

“இஸ்ரேலை அமெரிக்கா இனி மீட்டெடுக்கவில்லையா” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, கிர்பி பதிலளித்தார், “உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. நிச்சயமாக, எங்களுக்கு இன்னும் இஸ்ரேலின் ஆதரவு உள்ளது. அதாவது, நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கையில், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் இப்போதும் ஆயுதக் கருவிகளையும் தகைமைகளையும், ஆயுத அமைப்புமுறைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

“இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் என்ன செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பதில் இந்தக் கட்டுப்படுத்தாத தீர்மானத்தால் எந்த மாற்றமும் இல்லை” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரேலின் தற்போதைய இனப்படுகொலைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது என்பதாகும். இன்றுவரையான இனப்படுகொலையில், 40,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர். காஸாப் பகுதியில் பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னணி உலக உதவியாளராக இருந்து வருகிறது. அமெரிக்கா. நெத்தன்யாகு அரசாங்கத்திற்கு ஆயுதங்கள், நிதி மற்றும் இராஜதந்திர வான் பாதுகாப்பு அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 100 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆயுத பரிமாற்ற பொதிகளை வழங்கியுள்ளதாக செய்தி ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தின, ஒவ்வொன்றும் காங்கிரஸிற்கு அறிக்கை அளிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பை விட குறைவாக உள்ளன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வார்த்தைகளில் கூறுவதானால், “வானிலிருந்து தரையைத் தாக்கும் ஹெல்ஃபயர் ஏவுகணைகள், ட்ரோன்கள், கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதக் கருவிகள் (Joint Direct Attack Munition), வழிகாட்டப்படாத குண்டுகளை ‘ஸ்மார்ட்’ வெடிகுண்டுகளாக மாற்றும்,” ஆயுதங்கள், குறைந்தபட்சம் 23,000ம் துல்லியமாக-வழிகாட்டுகின்ற ஏவுகணைகள் உட்பட, பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளும் இந்த இரகசிய ஆயுத ஏற்றுமதிகளில் அடங்கும்.

இந்த தீர்மானத்திற்கு வீட்டோ தடுப்பதிகாரத்தை பயன்படுத்த அமெரிக்கா தவறியதற்கு பதிலளிக்கும் வகையில், ரஃபா மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலை ஒருங்கிணைக்க வாஷிங்டனில் இருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் ஒன்றாக நெரிசலில் சிக்கியுள்ள நகரத்திற்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தினார். “நாங்கள் இதுவரை செல்லாத இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் ஹமாஸுக்கு எதிராக செயல்படுவோம்.” “காஸாவில் இன்னும் பணயக் கைதிகள் இருக்கும்போது போரை நிறுத்த எங்களுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

ஐ.நா. வாக்கெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில், நெத்தன்யாகு அரசாங்கம் பின்னர் திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய மந்திரிசபை உறுப்பினர்களுக்கும் வெள்ளை மாளிகை பிரதிநிதிகளுக்கும் வாஷிங்டனில் நடக்கவிருந்த கூட்டத்தை இரத்து செய்தது.

“இஸ்ரேல் அரசு போர் நிறுத்தம் செய்யாது. நாங்கள் ஹமாஸை அழிப்போம், ஒவ்வொரு கடைசி பணயக்கைதிகளும் வீட்டிற்கு வரும் வரை தொடர்ந்து போரிடுவோம்” என்று இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடந்த அன்றே, பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கான அளவுகோல்களுக்கு பொருந்துகின்றன என்ற கூற்றை ஆதரிக்க ஆதாரங்கள் உள்ளன என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அவரது அறிக்கை அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் கொடூரமான தாக்கத்தின் பேரழிவுகரமான சித்திரத்தை முன்வைக்கிறது:

ஐந்து மாத இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவை அழித்துள்ளது. 13,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,000 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாகவும், 71,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது, பலர் வாழ்க்கையை மாற்றும் சிதைவுகளுடன் உள்ளனர். 70 சதவீத குடியிருப்பு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தச் சனத்தொகையில் 80 சதவீதமானவர்கள் பலாத்காரமாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர் அல்லது அழிக்கப்பட்டுவிட்டனர். பலரும் தங்கள் உறவினர்களை புதைத்து துக்கம் அனுஷ்டிக்க முடியவில்லை, மாறாக அவர்களது உடல்களை வீடுகளில், தெருக்களில் அல்லது இடிபாடுகளுக்கு அடியில் அழுகிய நிலையில் விட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் திட்டமிட்டு காவலில் வைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற மற்றும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கணக்கிட முடியாத கூட்டு அதிர்ச்சி வரவிருக்கும் தலைமுறையினரால் அனுபவிக்கப்படும்.

இனப்படுகொலையை கண்டிக்க ஐ.நா இதுவரை பயன்படுத்திய வலுவான மொழியில், அல்பனீஸின் அறிக்கையானது, “இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கையை குறிக்கும் வரம்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன” என்று முடிக்கிறது. இஸ்ரேலின் சிவில் மற்றும் இராணுவத் தலைமையானது “பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறையை நியாயப்படுத்த” முயற்சித்துள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

விமர்சனரீதியாக, அல்பானீஸ் இஸ்ரேலிய அதிகாரிகளின் இனப்படுகொலை நோக்கம் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகளை சுட்டிக்காட்டினார். அவர் எழுதினார், “சமீபத்திய காஸா மீதான தாக்குதலில், இனப்படுகொலை நோக்கத்திற்கான நேரடி ஆதாரங்கள் தனித்துவமாக உள்ளன. வெறித்தனமான இனப்படுகொலை வாய்வீச்சுகள் முழு மக்களையும் அழிக்கப்பட வேண்டிய மற்றும் பலவந்தமாக இடம்பெயர வேண்டிய எதிரிகளாக சித்தரித்துள்ளது. கட்டளை அதிகாரத்துடன் கூடிய 150 உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலை நோக்கத்தை வெளிப்படுத்தும் பயங்கரமான பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.”

காஸாவின் மக்கள்தொகை “மனித விலங்குகளால்” ஆனது என்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டின் அறிக்கைகளும், அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலுக்கு “ஒரு முழு தேசமும் பொறுப்பேற்க வேண்டும்” என்ற இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அறிக்கையும் மற்றும் இஸ்ரேல் “அவர்களின் முதுகெலும்பை உடைக்கும்” என்று அவர் கூறியதும் இதில் அடங்கும்.

இந்த நிலைமைகளுக்கு மத்தியில், ரஃபாவிற்கு எதிராக இஸ்ரேல் திட்டமிட்ட தரைவழித் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதலை தயாரித்து வருகிறது. திங்களன்று இஸ்ரேல் ரஃபாவில் ஒரு வீட்டின் மீது குண்டு வீசியதில் குறைந்தது நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

Loading