பிரதம மந்திரி அட்டால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கான பாசிச செயற்பட்டியலை விவரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று, தற்போதைய பிரதம மந்திரி காப்ரியேல் அட்டால் பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொதுவான கொள்கை குறித்த பாரம்பரிய முன்வைப்பை அவர் வழங்கினார். வேலைவாய்ப்பின்மை காப்பீடு, மருத்துவக் கவனிப்பு மற்றும் ஓய்வூதியங்களில் வெட்டுக்கள், பிரான்சின் பொலிஸ் படைகளை வலுப்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் மற்றும் இளைஞர்களை இலக்கு வைக்கும் போலிஸ் படைகளின் திறனை வலுப்படுத்துதல், மற்றும் உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோவின் போர் மற்றும் காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு மத்தியில் அனைவருக்குமான இராணுவ சேவைக்குத் திரும்புவதை தீவிரப்படுத்தும் ஒரு அதிவலது திட்டநிரலை அவர் விவரித்தார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டநிரலானது மூன்றாம் உலகப் போருக்குள் முதலாளித்துவத்தின் கீழ்நோக்கிய சரிவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2030 க்குள் இராணுவத்திற்கு 100 பில்லியன் யூரோக்களை திருப்புவதற்காக, கடந்த ஆண்டு, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பெரும் மக்கள் எதிர்ப்பிற்கும் மற்றும் பாரிய வேலைநிறுத்தங்களுக்கும் இடையே, ஓய்வூதியங்களை வெட்டினார். பிரான்சின் ஊழல்பீடித்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களானது, மக்ரோனுக்கான எதிர்ப்பு தங்களின் கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறி, போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புவிடுத்த அதேவேளையில், மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார் என்பது இப்போது தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருக்கிறது.

அட்டாலின் பாசிசவாத கொள்கை உரையானது, அவரது அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு வெடிக்கும் மோதல் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஜேர்மனியில் தேசியளவிலான இரயில் வேலைநிறுத்தம், மற்றும் பிரெஞ்சு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அழைப்புகளுக்கு மத்தியிலேயே அவர் உரையாற்றினார். ஆயினும் பிரெஞ்சு தேசிய அடையாளத்திற்கான வேண்டுதல்கள் நிறைந்த அவரது உரையானது, வறுமை மற்றும் ஒடுக்குமுறையைத் தவிர வேறெதையும் வழங்காமல், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆணவத்துடன் ஒதுக்கித் தள்ளியது.

தேசிய அரசாங்கத்தை சந்தேகிக்க வேண்டாம் என்று பிரெஞ்சு மக்களுக்கு அழைப்பு விடுத்து அட்டால் தனது உரையை ஆரம்பித்தார். அவர் கூறியதாவது, “மனித சமூகத்தின் தனித்துவம் என்பது அதன் கண்களுக்கு முன்னால் வளரும் எதிர்காலத்தைப் பார்ப்பதாகும். ஒரு சமூகம் ஒருபோதும் தன்னை இழப்பதில்லை. சந்தேகப்பட்டால் தோற்றுப்போகும்.” அவர் மேலும் இவ்வாறு கூறினார், “பிரான்ஸ் என்றால் வலிமை என்று ஒலிக்கிறது [பிரெஞ்சு மொழியில் puissance]. பிரான்ஸ் ஒரு வழிகாட்டி, ஒரு இலட்சியம். ... எங்கள் அடையாளம் நீர்த்துப்போகவோ, கலைக்கப்படவோ நான் அனுமதிக்க மாட்டேன்.

தேசியவாதம் குறித்த இந்த இடைவிடாத, நச்சுத்தன்மை வாய்ந்த வேண்டுதல்கள் உழைக்கும் மக்கள் மீதான முதலாளித்துவ தன்னலக்குழுவின் அதிகாரத்தை பாதுகாப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அட்டாலின் உரை உறுதிப்படுத்தியது.

அட்டால் வேலையின்மை காப்புறுதியை குறைக்க அழைப்பு விடுத்ததுடன், நீண்டகால வேலையின்மையில் இருப்பவர்களுக்கு பிரத்தியேக பாதுகாப்பு நலன்கள் (Specific Security Benefit, ASS)  திட்டத்தை அகற்றவும் அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒற்றுமை உழைப்பு வருமானம் (Active Solidarity Revenue, RSA) நலன்புரி திட்டத்தில் வைக்கப்படுவார்கள், மேலும் RSA பெறுநர்கள் 607.75 யூரோக்கள் மாதாந்திர கொடுப்பனவைப் பெற வாரத்திற்கு குறைந்தது 15 மணிநேரம் வேலை செய்ய வைக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் ஒரு பெரும் அடுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான நிலையில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தை இனி கணக்கில் எடுத்துக் கொள்ளாத வேலைகளைத்தான் செய்ய வேண்டியிருக்கும். 

இது பிரான்சில் “விதிமுறைகளை இல்லாமல் செய்வதற்கும்” மற்றும் “குறைந்தபட்ச ஊதியத்தையே குறைப்பதற்கும்” அட்டாலின் வாக்குறுதி விளக்குகிறது. குறைந்தபட்ச ஊதியம் (SMIC) பணவீக்கத்தின் அடிப்படையில் குறியிடப்பட்டுள்ளது, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலைமையில், இது முழுநேர வேலைக்கு மாதந்தோறும் €1,398.70 (€1 766,92 வரிக்கு முன்) யூரோக்களாக உள்ளது. சராசரி மாத ஊதியங்கள் மேலாளர்களுக்கு 4,500 யூரோக்களாக இருக்கையில் தொழிலாளர்களுக்கு 1,880 யூரோக்களாகவும் உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு 1,940 யூரோக்களாவும் தேக்கமடைந்துள்ள நிலையில் உள்ளன, இதன் அர்த்தம் முன்னெப்போதினும் இல்லாதவகையில் அதிகமான தொழிலாளர்களின் அடுக்குகளுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கு (SMIC) சற்றே கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. பணவீக்கம் இன்னும் அதிகரித்து இருக்கையில், குறைந்தபட்ச ஊதியம் (SMIC) அவர்களின் தற்போதைய ஊதியங்களை விஞ்சக்கூடும், பின்னர் பணவீக்கத்திற்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை (SMIC) உயர்த்த முதலாளிகளை நிர்ப்பந்திக்கும்.

தொழிலாளர்களை தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக, முதலாளிகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை துணை-SMIC ஊதியங்களில் (sub-SMIC wages) வேலைக்கு அமர்த்த அனுமதிப்பதற்காக, பகுதி-நேர வேலையை நாடுவதற்கு அப்பால், போலி-சட்டபூர்வ வழிகளை அரசாங்கம் தேடுகிறது.

நோயாளிகள் தாங்கள் தவறவிட்ட மருத்துவ பரிசோதனை வருகைகளுக்கு பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதன் மூலமும், மருந்துகளுக்கு நோயாளிகளின் பங்களிப்பாக பணம் செலுத்துவதை அதிகரிப்பதன் மூலமும் சுகாதாரப் பராமரிப்புக்கான செலவுகளை அதிகரிக்கவும் அட்டால் உறுதியளித்தார். நவ-பாசிசவாதிகளின் நீண்டகால இலக்காக உள்ள அரசு மருத்துவ உதவியை (State Medical Aid,AME) வெட்டுவதற்கு அவர் சூளுரைத்தார், இது குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மருத்துவ கவனிப்புக்கு நிதியாதாரம் வழங்குவதை வெட்டுகிறது.

கடந்த கோடையில் நஹேல் என்ற இளைஞரை பொலிஸ் படுகொலை செய்ததால் தூண்டிவிடப்பட்ட பாரிய இளைஞர் கலகத்திற்குப் பின்னர், அட்டால் போலீஸ்-அரசு ஒடுக்குமுறையை மேலும் வலுப்படுத்த முன்மொழிந்தார். 238 புதிய இராணுவ பொலிஸ் பிரிவுகளை உருவாக்க இன்னும் 8,500 போலீசாரை நியமிக்க அவர் உறுதியளித்தார், மேலும் கட்டாய உழைப்பு தண்டனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உறுதியளித்தார். இதில் 16 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு “கல்வி உழைப்பு” மற்றும் “பொது நலனுக்காக உழைப்பு” என்பது “பெற்றோரின் பொறுப்புகளை புறக்கணித்ததாக” அரசு கருதும் “குற்றவாளிகளின் பெற்றோர்களுக்கு” தண்டனை விதிக்கும் புதிய திட்டங்களும் உள்ளடங்கும்.

ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களானது ரஷ்யாவுடனான போருக்காக கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்ற நிலையில், அனைவருக்குமான கட்டாய இராணுவ சேவைக்கான மக்ரோனின் திட்டங்களை தீவிரப்படுத்த அட்டால் வாக்குறுதியளித்தார். இது இளைஞர்களை ஒரு ஐக்கியப்பட்ட பிரெஞ்சு மக்களுடன் இணைக்கும் என்று வாதிட்டதன் மூலம் அவர் இதை நியாயப்படுத்தினார்: அதாவது “இறுதியாக, நமது குடிமக்களை மீள்ஆயுதமயமாக்கல் என்பது நமது இளைஞர்களின் குடியரசு ஐக்கியத்தைப் பலப்படுத்துவதாகும், பிரான்சின் அனைத்து இளைஞர்களையும் ஒரே தேசமாக உருவாக்க அனுமதிப்பதாகும். ... இது உலகளாவிய தேசிய சேவையின் பங்காகும். 2026 இலையுதிர்காலத்தில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளை நான் தொடங்குவேன்.”

அட்டால், சமூக-ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒரு முன்னாள் உறுப்பினராவார், இக்கட்சியிலிருந்து அவர் 2016 இல் மக்ரோனுடன் சேர்ந்து விட்டு விலகினார், அடையாள அரசியல் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான ஒத்துழைப்பு குறித்து அனுமானிக்கத்தக்க வகையில் அவர் குறிப்புகளை வழங்கினார். தனது இறுதி உரையில், 34 வயதான பிரான்சின் மிக இளைய பிரதமர் மட்டுமல்ல, பிரான்சின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை பிரதமரும் தான் என்று அவர் அழுத்திக் கூறினார். “2024 இல் பிரெஞ்சுக்காரராக இருப்பது,” “வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளராக இருக்கும்போது நீங்கள் பிரதமராக இருக்க முடியும் என்பதாகும்,” என்று அவர் கூறினார். 

“நான் ஒருபோதும் பேச்சுவார்த்தையை கைவிடமாட்டேன்,” என்று அவர் மேலும் கூறினார். “என் வழிமுறை எப்போதும் ஒன்றுதான். ஒவ்வொரு பிரெஞ்சு குடிமகனும் நம் நாட்டைப் பற்றிய உண்மையை எடுத்துச் செல்கிறார். நாம்—அரசியல் சக்திகள், தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்— செவிமடுத்து விடையிறுக்க வேண்டும்.”

அட்டாலின் வாய்ச்சவாடல் இருந்தபோதிலும், அவரது நிகழ்ச்சிநிரல் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பாசிச குணாம்சத்தைக் கொண்டுள்ளது. 2018 இல் மக்ரோன் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியும், தண்டிக்கப்பட்ட துரோகியுமான பிலிப் பெத்தானை ஒரு “மாபெரும் சிப்பாய்” என்று ஏன் புகழ்ந்தார் என்பது முன்னெப்போதையும் விட தெளிவாக உள்ளது. மக்ரோன் ஒரு பாசிசவாத ஆட்சிக்கு தலைமை கொடுக்கவில்லை, மாறாக பணவீக்கம் மற்றும் சமூக வெட்டுக்கள் மூலமாக தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்துவது, மற்றும் பொலிஸ்-அரசு வன்முறையைக் கொண்டு வெகுஜன எதிர்ப்பை ஒடுக்குவது மற்றும் ஐரோப்பாவை போர் நாசமாக்குகின்ற நிலையில் பிரெஞ்சு இராணுவவாதத்திற்கு அழைப்புவிடுவதானது, பெத்தான் தனது சொந்தக் கொள்கைகளாக அடையாளம் கண்டிருந்ததையே மக்ரோனது கொள்கைகளாக இருக்கின்றன.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு அவர் அளித்த பதிலில், அட்டாலின் மக்கள் மீதான அவரது அவமதிப்பு வெளிப்பட்டது. டீசல் மீதான வரிகளை தாமதப்படுத்துவதாக உறுதியளித்த அவர், ஐரோப்பிய மானியங்கள் மார்ச் 15 அளவில் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று தம்பட்டம் அடித்தார். அட்டால் இதை ஒரு பெரிய சலுகையாக முன்வைத்தாலும், மார்ச் 15 என்பது மானியங்களை செலுத்துவதற்கான சட்டப்பூர்வ காலக்கெடு என்று விவசாயிகள் சுட்டிக்காட்டினர். 

அட்டாலின் உரையானது கடந்த ஆண்டு ஓய்வூதியப் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste, PES) கூறிய முக்கிய கருத்துக்களை ஊர்ஜிதப்படுத்துகிறது. மக்களுக்கு எதிராக முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் சலுகைகளை திமிர்த்தனமாக பாதுகாக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எதுவுமில்லை. அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் அதன் குற்றங்களில் —உள்நாட்டில் தொழிலாளர்களை ஒடுக்குவதில் இருந்து காஸாவில் இனப்படுகொலையை அது ஆதரித்தது வரையிலும்— தங்களை மட்டுமே உடந்தையாக்கிக் கொள்கின்றனர்.

மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக, ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நடக்கும் போராட்டங்களில் கூட்டாக இணைந்து பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதே முன்னோக்கிய பாதையாகும். பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையின் நரம்பு மையமான சமூக எதிர்ப்புரட்சி மற்றும் ஏகாதிபத்திய போரானது தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை நலன்களுடன் பொருந்தாததாக இருக்கிறது.

இதன் அர்த்தமானது, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நாடாளுமன்ற சூழ்ச்சிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளின் பேரம் பேசும் முட்டுச்சந்துடன் கட்டிப்போடும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் கூட்டணி வைத்துள்ள போலி-இடது கட்சிகளுடன் அரசியல் ரீதியாக முறித்துக் கொள்வதாகும். இந்த கட்சிகள் அட்டாலை விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தன. “அட்டால் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார், ஏனென்றால் மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள்” என்று அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் எக்ஸ்/ட்விட்டரில் எழுதினார், அட்டாலின் உரையை “ஒரு நூற்றாண்டில் மிகவும் பிற்போக்குத்தனமானது” என்றும் அழைத்தார். 

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தலைவர் ஃபாபியன் ரூசெல் அட்டாலின் உரையை அதன் “பலவீனமானவர்களுக்கு எதிராக, அது வேலையின்மையில் இருந்தாலும் சரி அல்லது வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிரான பெரும் சமூக வன்முறையாக” விமர்சித்து, “தேசிய நாடாளுமன்றத்திலும் போராட்டங்களிலும்” அட்டாலை எதிர்ப்பதாக உறுதியளித்தார்.

எவ்வாறிருப்பினும், 577 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் சுமார் 140 வாக்குகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை அட்டாலை இலக்காகக் கொண்ட மற்றொரு கண்டனத் தீர்மானத்தை மட்டுமே அவர்கள் முன்வைத்தனர், மேலும் இது முன்போலவே எதிர்பார்த்தபடியே தோல்வியை நோக்கிச் செல்லும். மெலோன்சோன், ரூசெல் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கடந்த ஆண்டு ஓய்வூதியப் போராட்டத்தில் மிகவும் அப்பட்டமாக செய்ததைப் போலவே இப்போதும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை சிதறடித்து வேலை செய்கின்றனர்.

போர் தீவிரப்பாட்டையும் பாசிசவாத சர்வாதிகாரத்தை நோக்கிய அணிவகுப்பையும் நிறுத்துவதற்கான இன்றியமையாத முன்நிபந்தனையானது மக்ரோன் ஆட்சியை வீழ்த்துவதற்கான ஒரு போராட்டத்தை நடத்துவதாகும். ஆனால் அதுபோன்றவொரு போராட்டம் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாக, தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு போராட்டமாக மட்டுமே முன்செல்ல முடியும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமானது வளர்ந்து வருகின்ற மக்ரோனுக்கு பிரதான அரசியல் மாற்றீடான நவ-பாசிசவாத மரின் லு பென், பிரான்சில் ஒரு பாசிசவாத போலிஸ் அரசு ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்கான முனைப்பை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.

ஆகவே, ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலமும், ஸ்ராலினிசம் மற்றும் போலி-இடது அரசியலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னணிப் படையாக சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஐ கட்டியெழுப்புவதன் மூலமும், பிரான்சிலுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளின் போராட்டங்களுடன் இணைப்பதும் அவசியமாகும்.

Loading