முன்னோக்கு

நேட்டோ உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை ஐரோப்பா முழுவதும் முழுப் போராக விரிவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள வேலியில் ராணுவத்தினர் காவலுக்கு நிற்கின்றனர். Sunday, July 9, 2023. [AP Photo/Mindaugas Kulbis]

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்துவரும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள், ஐரோப்பா முழுவதும் உலகப் போரின் வெடிப்பை கட்டவிழ்த்து விடுகின்றன. வியாழன் அன்று, பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ இராணுவத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய நேட்டோவின் தலைமை தளபதி கிறிஸ்டோபர் கவோலி, உறுதியான பாதுகாவலர் என்ற இராணுவ பயிற்சியை அறிவித்தார். இந்த பயிற்சிகள் அடுத்த வாரம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். நேட்டோவின் இந்த சூழ்ச்சி, பனிப்போருக்குப் பிறகு மிகப் பெரியதாக இருப்பதோடு, ரஷ்யாவிற்கு எதிரான ஒட்டுமொத்த நேட்டோ போர் அணிதிரட்டலுக்கான தயாரிப்பு ஆகும்.

உறுதியான பாதுகாவலர் என்ற இராணுவப் பயிற்சியானது, 2024ல் பல தசாப்தங்களில் மிகப்பெரிய நேட்டோ பயிற்சியாக இருக்கும், நேட்டோவின் அனைத்து 31 நட்பு நாடுகளிலிருந்தும் சுமார் 90,000ம் படைகள் மற்றும் எங்களது சிறந்த கூட்டாளியான ஸ்வீடனின் பங்கேற்புடன் நடைபெற இருக்கிறது. யூரோ-அட்லாண்டிக் பகுதியை வலுப்படுத்தும் அதன் திறனை, வட அமெரிக்காவிலிருந்து டிரான்ஸ்-அட்லாண்டிக் இயக்கம் மூலம் இந்தக் கூட்டணி நிரூபிக்கும். வளர்ந்து வரும் மோதல் சூழ்நிலையில், அருகிலுள்ள எதிரிக்கு எதிராக இந்த உருவகப்படுத்தப்பட்ட பயிற்சி வலுவூட்டலாக இருக்கும் என்று கவோலி கூறினார்.

விமானம் தாங்கிக் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், 80 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், 133 டாங்கிகள் மற்றும் 533 துருப்புக் காவிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன. புவியியல் ரீதியாக, இப்பயிற்சியானது ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் நாடுகள் முழுவதும் போலந்து, ருமேனியா மற்றும் ஜேர்மனி வரை நீண்டுள்ளது. அமெரிக்காவைத் தவிர, சில ஐரோப்பிய நாடுகளும் 10,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை இப் போர் பயிற்சிக்கு அனுப்புகின்றன. பிரிட்டனின் 20,000ம் மற்றும் ஜேர்மனியின் 12,500 துருப்புக்களும் இப்பயிற்சியில் பங்களிக்கின்றன.

இது வெறும் பயிற்சி மட்டுமல்ல, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை ஐரோப்பா முழுவதும் நடத்தப்படும் உலகளாவிய போராக மாற்றுவதற்கான தயாரிப்பு ஆகும். மூத்த நேட்டோ அதிகாரிகள் தங்கள் வார்த்தைகளில் நேரடியாகவும் தெளிவாகவும் உள்ளனர். பிரஸ்ஸல்ஸில், நேட்டோவின் இராணுவக் அணியின் தளபதியான டச்சு அட்மிரல் ராப் பாயர், “நேட்டோவை போரில் சண்டை பிடிப்பதற்கான மாற்றத்தைக்” கோரினார்.

நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பது உறுதியாகத் தெரியவில்லை, போர் ஏற்பட்டால், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முழு சமூகமும் இதில் ஈடுபடும்” என்று பாயர் கூறினார்.

போருக்குத் தயாராகுமாறு ஸ்வீடன் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்வீடிஷ் சிவில் பாதுகாப்பு அமைச்சர் கார்ல்-ஓஸ்கர் பொஹ்லின் சமீபத்திய அறிக்கைகளை பாயர் பாராட்டினார். “ஸ்வீடனில் போர் நடக்கலாம்” என்று பொஹ்லின் கூறினார். “நீங்கள் ஒரு தனிப்பட்ட நபரா? தன்னார்வ பாதுகாப்பு அமைப்பில் சேர உங்களுக்கு நேரம் இருக்கிறதா என்று யோசித்தீர்களா? இல்லையென்றால்: நகருங்கள்!” என்று பொஹ்லின் கூறினார்.

“மக்கள் [போரின் சாத்தியம்] ஒரு ஆச்சரியத்தைக் கண்டறிந்து, அதன் விளைவாக ரேடியோக்கள் மற்றும் பேட்டரிகளை வாங்கத் துவங்கியுள்ளார்கள், அது மிகவும் நல்லது... அடுத்த 20 ஆண்டுகளில் எல்லாமே திட்டமிட முடியாதவை, எல்லாமே இனிமையானதாக இருக்கப் போவதில்லை என்பதை உணரத் தொடங்குகிறது என்று பாயர் கூறினார்.

தற்போதைய நவீன காலத்து டாக்டர். ஸ்ட்ராஞ்சலோவ்ஸ், அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிக்கும் தற்கொலை நோக்கத்தை உடனடி இலக்காக கொண்டு, முழுமையான போரைத் திட்டமிட வேண்டும் என்கின்றனர்.

“வாஷிங்டன் உச்சி மாநாட்டிற்கான ஒரு தைரியமான நிகழ்ச்சி நிரல்” மற்றும் செல்வாக்குமிக்க அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழுவால் வெளியிடப்பட்ட “ஜனாதிபதிக்கான ஒரு குறிப்பில்,” ஓய்வுபெற்ற அமெரிக்க தூதர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் குழு ரஷ்யாவிற்கு எதிராக, பாரியளவில் நேட்டோவின் விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. “உக்ரேனின் வெற்றி இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்” என்று எழுதும் இந்தக் குழுவினர், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை கைப்பற்ற வேண்டும் என்றும் கிரெம்ளின் உக்ரேனுடன் போருக்குச் சென்றதைத் தவிர்ப்பதற்கு, உக்ரேனுக்கு நேட்டோ உறுப்புரிமையைத் துல்லியமாக அளிக்கவேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு உக்ரேனிய எதிர்த்தாக்குதல் தோல்வியடைந்த பின்னர், அத்தகைய வெற்றிக் கொள்கைக்கு ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ துருப்புக்களின் பாரிய மற்றும் வெளிப்படையான அர்ப்பணிப்பு தேவைப்படும் என்றும், குறிப்பிடத்தக்க வகையில், அணு ஆயுதப் போரைத் தூண்டினாலும் இத்தகைய விரிவாக்கம் தொடர வேண்டும் என்றும் அவர்களின் குறிப்பு வலியுறுத்துகிறது:

அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட, உறுப்பினருக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நேட்டோ விடுத்த அழைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா போரை அதிகரிக்க அச்சுறுத்தலாம். ...ரஷ்ய அணுவாயுத வார்த்தைகளால் நேட்டோவை தடுக்கக்கூடாது. நேட்டோவின் அணுசக்தி தடுப்பு வலுவாக உள்ளது மற்றும் உக்ரேன் எந்தவொரு ரஷ்ய விரிவாக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு அதன் விருப்பத்தை அறிவித்துள்ளது.

உண்மையில், அணு ஆயுதப் போரை நடத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகளையும் நேட்டோ துரிதப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபரில், இத்தாலி, குரோஷியா மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள 60 நேட்டோ விமானங்கள் “ஸ்டெட்ஃபாஸ்ட் நூன்என்ற தலைப்பில் ஒரு பயிற்சியில் இணைந்தன. அணு ஆயுதங்களைக் கொண்டு தங்கள் இலக்குகளில் வீசுவதற்காக குண்டுவீச்சு விமானப் பறப்புகளுக்கான பயிற்சிகளை அவை மேற்கொண்டன.

20 ஆம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களைப் போலவே, ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கு தங்களுக்கு சிறிது நேரம் இருப்பதாகவும், விரைவான போர் விரிவாக்கம் மட்டுமே தங்களுக்கு எதிராக செயல்படும் சக்திவாய்ந்த அரசியல் சக்திகளை (இராணுவ சூழ்நிலையிலும் சர்வதேச வர்க்கப் போராட்டத்திலும்) எதிர்கொள்ள முடியும் என்றும் உணர்கிறார்கள்.

ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிக்கும் ஐரோப்பிய செய்தி ஊடகங்கள், உக்ரேனில் நேட்டோ பேரழிவை எதிர்கொள்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றன. நேட்டோவின் ஆயுதங்களைக் கொண்டிருந்தும் கூட, உக்ரேன், எண்ணிக்கையில் உயர்ந்த ரஷ்யப் படைகளைத் தோற்கடிக்கும் என்று நியாயமாக நம்ப முடியாது. போரில் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் இறந்துள்ளனர், மேலும் செலென்ஸ்கி நேட்டோவிடம் தனது அரசாங்கம் அணு ஆயுதப் போரை நடத்தத் தயாராக இருப்பதாகச் சொன்னாலும், அவர் உள்நாட்டில் எற்படும் கிளர்ச்சியை எண்ணி அஞ்சுகிறார். லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் இதனை ஒப்புக்கொள்கிறது:

உக்ரேனிய இராணுவத் தலைவர்கள் வோலோடிமிர் செலென்ஸ்கியிடம் 500,000ம் மக்களை அணிதிரட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு நீடித்த போருக்கு நாடு தயாராக உள்ளது. … ஆனால் இப்போது வரை, செலென்ஸ்கி சமூக பதட்டங்களைத் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில், இன்னும் விரிவான கட்டாய ஆட்சேர்ப்பை நாடத் தயங்குகிறார்.

அடுத்த நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள், தற்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடெனை விட, ட்ரம்ப் அல்லது மற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. குடியரசுக் கட்சியின் சில பிரிவுகள், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவக் கட்டமைப்பில் இருந்து திசைதிருப்பும் நோக்கத்துடன் உக்ரேனுக்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்தன. போரை தீவிரப்படுத்த அழைப்பு விடுக்கும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகள், ஒரு புதிய டிரம்ப் நிர்வாகம் நேட்டோ-ரஷ்யா போரில் இருந்து பின்வாங்க முடியாத வகையில் களத்தில் உண்மைகளை உருவாக்க முயல்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் நேட்டோவின் திட்டமிடுபவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி நிறுத்தமானது, எரிசக்தி விலைகளில் பாரிய உயர்வுக்கு வழிவகுத்துள்ளது, ஐரோப்பா பகுதியில் மட்டும் விலைகள் போர் தொடங்கியதில் இருந்து 18 சதவீதம்  அதிகரித்துள்ளது.

நேட்டோ அரசாங்கங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் அல்லது யூரோக்களை இராணுவ செலவினங்களுக்கு மாற்றுவதால், சமூக செலவினங்களில் வெட்டுக்களுடன் இணைந்து, இது பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் சர்வதேச வெடிப்பைத் தூண்டியுள்ளது.

2023 இல், அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள், திரைப்பட எழுத்தாளர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கண்டனர், இதில் பிரெஞ்சு தொழிலாளர்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராகவும், காஸாவிற்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு போராட்டங்களும் அடங்கும். 2024 ஆம் ஆண்டின் முதல் வாரங்கள், காஸாவிற்கு எதிரான போராட்டங்களின் விரிவாக்கம் மட்டுமல்ல, ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிரான ரயில் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம், விவசாயிகளின் எதிர்ப்புக்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் கண்டுள்ளது.

ஆயினும்கூட, வெகுஜன நனவுக்கும், வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரினால் ஏற்படும் உடனடி ஆபத்துகளுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளி இன்னும் உள்ளது. தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மற்றும் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் போலி-இடது அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பிற்குள் உலகளாவிய நெருக்கடியை தொழிலாளர்களால் தீர்க்க முடியாது.

உக்ரேன், ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் அவர்களது சொந்த முதலாளித்துவ அரசாங்கங்களை வீழ்த்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதே மையப் பணியாகும்.

அத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI), தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாகக் கட்டியெழுப்ப வேண்டும். இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளான உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போருக்கு நேட்டோவின் தூண்டுதல் மற்றும் அணுசக்தி யுத்தத்திற்கான அதன் திட்டங்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனில் ஸ்ராலினிச முதலாளித்துவ மறுசீரமைப்பில் இருந்து வெளிவந்த சமூக ஒழுங்கின் திவால்நிலையை வெளிப்படுத்துகின்றன. அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தில், தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட சர்வதேச போராட்டத்தின் தேவையை இது முன்வைக்கிறது.

மூன்றாம் உலகப் போருக்கு எதிராக புரட்சிகர சோசலிச முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நனவு மற்றும் போராட்டங்களை சீரமைப்பது ட்ரொட்ஸ்கிச முன்னணிப் படையின் பணியாகும். ICFI இந்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் தலையிடும், ஐரோப்பா முழுவதும் அதன் பிரிவுகளை கட்டியெழுப்பவும் மற்றும் உலகளாவிய சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் ICFI போராடும்.

Loading