முன்னோக்கு

அயோவா கட்சிக்கூட்டத்தில் டிரம்பின் வெற்றி 2024ல் நெருக்கடியான தேர்தலைத் தூண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜன. 15, 2024 திங்கட்கிழமை, அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் நடந்த கட்சி உறுப்பினர் கூட்ட இரவு விருந்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசுகிறார். [AP Photo/Andrew Harnik]

திங்கட்கிழமை இரவு அயோவா கட்சி உறுப்பினர் கூட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் உத்தியோகபூர்வ தொடக்கத்தைக் குறிக்கின்றன, இது இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் உறுதியாக வெற்றி பெற்ற அயோவாவின் முடிவு, குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியின் பதவியை உறுதிப்படுத்துவதற்கான முதல் படியாகும்.

51 சதவீத வாக்குகளுடன், டிரம்பின் வெற்றி, மக்களின் ஏகோபித்த ஆதரவு என்று அரிதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அவர் பெற்ற மொத்தமான 56,250 வாக்குகள் 2016 இல் டெட் க்ரூஸுக்கு அடுத்தபடியாக அவர் பெற்ற 45,429 வாக்குகளை விட சற்றுத்தான் அதிகமாக இருந்தது. 2016ல் 186,932 ஆக இருந்த தேர்தல் வாக்குப்பதிவு 41 சதவீதம் சரிந்து 110,298 ஆக குறைந்தது. பதிவுசெய்யப்பட்ட குடியரசுக் கட்சியினரில் 15 சதவீதம் பேர் மட்டுமே வந்துள்ளனர். இது 2016ல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. டிரம்பின் “தீர்க்கமான வெற்றி” அனைத்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 2.7 சதவீதமாக இருந்தது.

வாக்குப்பதிவு முறைகளின் அடிப்படையிலான வாக்குப்பதிவு முறைகள் மற்றும் நுழைவு வாக்கெடுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் டிரம்ப் 2016 உடன் ஒப்பிடும்போது இளம் குடியரசுக் கட்சி கூட்டத்திற்கு செல்லும் உறுப்பினர்களிடையே எந்த ஆதாயமும் பெறவில்லை மற்றும் டெஸ் மொயின்ஸ் புறநகர் மற்றும் அயோவாவின் சிறிய நகரங்களின் நகர்ப்புற மையங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே அவர் பதிவு செய்துள்ளார். 2016 இல் க்ரூஸ் வெற்றி பெற்ற மாநிலத்தின் பெருமளவிலான கிறிஸ்தவ சுவிசேஷ வடமேற்குப் பிரிவில் அவருக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைத்தது. அயோவா பெரும்பாலும் கிராமப்புற மற்றும் சுவிசேஷ வாக்காளர்களை கொண்டது, இங்கு பொதுவாக குடியரசுக் கட்சியினரின் வாக்குகளில் பாதிக்கும் மேலானவர்கள் உள்ளனர், நியமனங்களுக்காக வாக்களிக்கும் முதல் மாநிலம் அது என்ற சூழ்நிலைகள் அமெரிக்க மக்கள் தொகையில் அதனை அதிகளவில் பிரதிநிதித்துவம் இல்லாததாக்குகிறது.

ஆயினும்கூட, ட்ரம்ப் தனது எஞ்சியிருக்கும் இரண்டு போட்டியாளர்களான புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் மற்றும் முன்னாள் ஐ.நா தூதர் மற்றும் தென் கரோலினா ஆளுநரான நிக்கி ஹேலி ஆகியோரை விட கணிசமான அளவு முன்னிலையில் உள்ளார் என்பதை முடிவுகள் நிரூபிக்கின்றன.

அமெரிக்க மக்களால் வெறுக்கப்படும் ஒரு முடிவை நோக்கிய முன்னேற்றம், இரண்டாவது டிரம்ப்-பைடென் போட்டி, அமெரிக்க அரசியல் அமைப்பின் முற்றிலும் வன்மையான தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இந்த அரசியல் பிற்போக்கு காட்சியை பிரகாசமான வண்ணங்களில் வரைவதைப் பார்ப்பது மிக மிக இழிவானதாக உள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகள், விவாதங்கள், குழு விவாதங்கள் மற்றும் மூச்சுத் திணறும் குதிரைப் பந்தய போட்டிகள், அத்துடன் தவிர்க்க முடியாத மற்றும் தப்பிக்க முடியாத பிரளயம் போன்ற வழக்கமான காட்சிகளுடன், கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுத் தேர்தலில் முக்கியமான ஆரம்ப முதன்மை மாநிலங்களில் அல்லது “போர்க்களம்” என்று அழைக்கப்படும் மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தை வழங்குகிறது.

ஊடகங்களில் இரு கட்சிகளின் கொள்கைகள் அல்லது குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான அல்லது போட்டி வேட்பாளர்களான ஹேலி, டிசாண்டிஸ் அல்லது டிரம்ப் குறித்து தீவிர ஆய்வு எதுவும் இல்லை. இவ்வாறான எந்த பகுப்பாய்வும் முதலாளித்துவ அரசியலின் முழு நோக்கமும் பிரமாண்டமான வேகத்துடன் வலது பக்கமாக நகர்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

குடியரசுக் கட்சிப் போட்டியில், டிரம்பின் எஞ்சியிருக்கும் இரு போட்டியாளர்களும் வலதுபுறத்தில் இருந்து பாசிச முன் ஓடுபவரை தாக்குகின்றனர். டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் பதவிக்காலத்தில் பயனற்றவராக இருந்தார், எல்லைச் சுவர் அல்லது 12 மில்லியன் ஆவணமற்ற குடியேறியவர்களை வெளியேற்றுவது போன்ற இலக்குகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று டிசாண்டிஸ் அலறுகிறார். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போர் போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய முன் முயற்சிகளை அவர் குறைத்து விடுவார் என்று குற்றம் சாட்டி, ஹெலி டிரம்பை முதன்மையாக வெளியுறவுக் கொள்கையில் தாக்குகிறார்.

“திருடப்பட்ட” 2020 தேர்தல், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அனைத்து இடதுசாரி எதிர்ப்புகள், குறிப்பாக சோசலிஸ்டுகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் பற்றிய முடிவில்லாத பொய்களை டிரம்ப் தானாக பெரும்பாலும் பிரச்சாரம் செய்கிறார். இது புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம்கள் மீது மிக பயங்கரமான துன்புறுத்தலை கட்டவிழ்த்து விடுவதற்கான அச்சுறுத்தல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் மேலும் வெளிப்படையான பாசிஸ்டுகள் மற்றும் நவ-நாஜிக்களுடன் தொடர்பு கொள்கிறார். இந்த நவ- நாஜிக்களுக்கு அவர் (Führer) தலைவராக பணியாற்றுவார்.

அதே நேரத்தில், அயோவாவில் ட்ரம்பின் வெற்றி மற்றும் தேசிய அளவில் வாக்கெடுப்பில் அவர் முன்னிலை பெற்றிருப்பது, அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் ஒரு சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதை ஆதரிப்பதாக குறிக்கவில்லை. மாறாக, வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகையில் தொழிலாள வர்க்கம் இடது பக்கமாக நகர்கிறது. மேலும், பெருநிறுவன தன்னலக்குழுவும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள அதன் முகவர்களும் பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளை ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை முறியடிக்க ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்த டிரம்ப், குடியரசுக் கட்சியில் ஒரு மேலாதிக்க சக்தியாக இருக்கிறார் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகக் கட்சியின் மீதான குற்றச்சாட்டாக இருக்கிறது.

பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் டிரம்ப்-எதிர்ப்பு “மூலோபாயம்” சரிந்துவிட்டது. ஜனவரி 6, 2021 அன்று கேபிடல் மீது டிரம்ப் நடத்திய தோல்வியுற்ற தாக்குதலின் தூசி படிவதற்குள்ளேயே பைடென் ஒரு “வலுவான குடியரசுக் கட்சியின்” மறுமலர்ச்சியை ஒரு மைய அரசியல் இலக்காக அறிவித்தார். அத்தோடு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமி போரில் கூட்டாளியாக பணியாற்ற, குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்-எதிர்ப்பு பிரிவை கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் கருதினார்.

இந்தக் கொள்கைக்கு, ஜனவரி 6 அன்று குறித்த எந்தவொரு விசாரணையையும் கட்டுப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால், “திருடுவதை நிறுத்து” என்ற பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில், பெரும்பான்மையான பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் உட்பட, குடியரசுக் கட்சியின் சக்திவாய்ந்த பிரிவுகளின் பங்கை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அது 2020 தேர்தலில் பைடெனின் வெற்றியை சான்றளிக்க மறுப்பதற்கு வாக்களிப்பது வரையிலான கட்டம் வரையிலும் செல்லும்.

நீதிமன்ற சூழ்ச்சிகள் மூலம் டிரம்பை காட்சியிலிருந்து அகற்றும் முயற்சியும் கூட சரிந்து வருகிறது. இப்படியான தாக்குதல்களை குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக இருப்பதற்கு டிரம்ப் பயன்படுத்தியதால், இது பெருகிய முறையில் சிக்கலாகிவிட்டது

உழைக்கும் மக்களின் நலன்களுக்கு உண்மையான முறையீடு செய்ய இயலாத நிலையில், நியூ யோர்க் டைம்ஸ் போன்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், நெருக்கடியில் மூழ்கியுள்ள அமெரிக்க அரசியல் அமைப்பை ஸ்திரப்படுத்துவததற்கு - வெளிநாட்டில் போரைத் தொடரவும், உள் நாட்டில் சமூக அமைதியின்மையைத் தடுக்கவும் - குடியரசு கட்சியை கட்டியெழுப்புவதில் - தங்களுக்குள்ள முக்கிய நம்பிக்கையைத் தொடர்கின்றனர். கடந்த வார இறுதியில் டைம்ஸ் அதன் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது:

திரு.டிரம்ப் இப்போது மற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடமிருந்து முக்கியமாக சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதன் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறார். அவர் எவ்வளவு சீக்கிரம் நிராகரிக்கப்படுகிறாரோ, அவ்வளவு சீக்கிரம் குடியரசுக் கட்சி அதன் இலக்குகளை அடைவதற்கு அமைப்பிற்குள் வேலை செய்யும் கடினமான ஆனால் அவசியமான பணிக்கு விரைவில் திரும்ப முடியும்.

உண்மையில், ஏறக்குறைய ஒவ்வொரு குடியரசுக் கட்சி அதிகாரியும் டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித் துறை மற்றும் FBI இன் “ஆயுதமாக்கல்” என்று நிராகரித்துள்ளனர். மேலும் பலர் கேபிடல் மீதான தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாசிஸ்டுகளைப் பாராட்டுவதில் மற்றும் அவர்களை “பணயக்கைதிகள்” என்று அழைப்பது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான டிரம்பின் உறுதிமொழிக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் டிரம்புடன் இணைந்துள்ளனர்.

பைடெனைப் பொறுத்தவரை, அவர் இப்போது உக்ரைன் மற்றும் இஸ்ரேலில் உள்ள பாசிச சக்திகளுடன் அமெரிக்கா கூட்டணி அமைக்கும் போது டிரம்ப் மறுபடி அமர்த்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக “ஜனநாயகத்திற்கான” ஒரு சிலுவைப் போராக தனது பிரச்சாரத்தை கேலிக்குரியதாக முன்வைக்க முற்படுகிறார். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக தெருக்களில் பரந்தளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை துன்புறுத்துவதன் மூலம் ஜனநாயகக் கட்சியினர் “சட்டத்தின் ஆட்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டை” நிரூபித்து வருகின்றனர்.

மற்றும் அதேசமயம் குடியரசுக் கட்சி ஆளுநர்கள் புலம்பெயர்ந்தோர் மீதான அவர்களின் பாசிசத் தாக்குதலின் ஒரு பகுதியாக கூட்டாட்சி அதிகாரத்தை வெளிப்படையாக மீறும் அதே வேளையில், வெள்ளை மாளிகை இதே சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்கிறது.

அமெரிக்காவில் அரசியலின் சீரழிவை பட்டியலிடுவதில், சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகள், ஜனநாயகக் கட்சியில் தொங்கிக் கொண்டு இருப்பவர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களை ஒருவர் விட்டுவிட முடியாது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) உடன் தொடர்புடைய முக்கிய வெளியீடான ஜக்கோபின் இதழ், அயோவா கட்சிக்கூட்டங்கள் “பைடென் விழிப்படைவதற்கான ஒரு அழைப்பு” என்று ஆலோசனை வழங்கியது.

ஜனநாயகக் கட்சியினர், ஜக்கோபின், “முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் தோல்விக்கு ஒரு மூலோபாயம் தேவையா என்று இறுதியாக தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள விரும்பலாம், அந்த ஒன்றை தவிர்ப்பதற்காக ஒரு ஏமாற்று குறியீட்டைக் கண்டுபிடிப்பதற்கான கூடுதல் வழிகளை உருவாக்குவதற்குப் பதிலாக அது இருக்கலாம்”

திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொறுத்தவரையில், ஜனநாயகக் கட்சியினர் “விழித்து எழுவது” என்ற நம்பிக்கையோடு இருப்பது பற்றிய பிரச்சனை அல்ல, அல்லது முழுக்க முழுக்க நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பக்கம் திரும்புவது என்ற பிரச்சனை அல்ல. மாறாக, பாசிசம் மற்றும் சர்வாதிகாரம், போர் மற்றும் இனப்படுகொலை, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாக, சோசலிசத்திற்கான உலகளாவிய மற்றும் புரட்சிகர இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட வேண்டும்.

Loading