பில்லியனர்கள், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் யூத விரோதிகள்: காஸா இனப்படுகொலைக்கு எதிரான தாக்குதலின் பின்னணியில் உள்ள சக்திகள் ஆவர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாகியும், ஆளும் வர்க்கமானது, முக்கிய முதலாளித்துவ நாடுகளில் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்ட எதிர்ப்புகளை ஒடுக்கியும், தனிமைப்படுத்தியும், ஜனநாயக உரிமைகளை கடுமையாகத் தாக்கியும் வருகிறது.

பூகோள ரீதியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்டுவரும் அணிவகுப்புகள் மீது, முதலாளித்துவ பத்திரிகைகளால் இடைவிடாமல் மற்றும் இழிந்த முறையில் “யூத விரோதம்” என்று முத்திரை குத்தப்படுகின்றன. ஜேர்மனியில், படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டு குற்றமாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகங்களில், இஸ்ரேலை விமர்சிக்கும் இளம் யூத இயக்குனர்களின் திரைப்படங்கள் தடைசெய்யப்படுகின்றன, மேலும் அவற்றை திரையிடுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள். காஸாவில் நடக்கும் படுகொலைகளை எதிர்க்கும் மாணவர் குழுக்கள், அமைதிக்கான யூத குரல் உட்பட, முற்றிலும் தடை செய்யப்படுகின்றன.

அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) ஒரு பழிவாங்கும் வேட்டையைத் தொடங்கியுள்ளது. இது, மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்கான உரிமையை போதுமான அளவு வார்த்தைகளாலும் செயல்களாலும் குறிவைக்காத பல்கலைக்கழக நிர்வாகிகளை குறிவைக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக தலைவர்களான லிஸ் மகில் (பென்), கிளாடின் கே (ஹார்வர்ட்) மற்றும் சாலி கோர்ன்ப்ளூத் (எம்ஐடி) ஆகியோர் காங்கிரஸினால் துருவி துருவி விசாரிக்கப்படுவது என்பது, ஜனநாயக உரிமைகளுக்கு பூட்டுப்போட்டு அதன் மீதான தாக்குதலுடன் அணிவகுத்துச் செல்வதற்கு மற்ற நிறுவனத் தலைவர்களை மிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மெக்கார்த்திய நிகழ்வாக உள்ளது. மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை போதுமான அளவில் ரத்து செய்யாதவர்கள் அல்லது குறைக்காதவர்கள் தங்கள் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கு செய்தி ஊடகம் முற்றிலும் உடந்தையாக உள்ளது, நியூயோர்க் டைம்ஸ் நிருபர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர், அவர்கள் இஸ்ரேலின் தாக்குதலை இனப்படுகொலை என்று வகைப்படுத்தி தங்களது வேலையுடன் தொடர்பில்லாத சொந்த எழுத்துக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இடுகைகள் செய்வதன் மூலம் அவர்கள் மிக அதிகமாக ”அரசியல்மயமாகிறார்கள்” என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 5, 2023 செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் கல்விக்கான பிரதிநிதிகள் சபை கமிட்டியின் விசாரணையின் போது பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தலைவர் லிஸ் மகில் விசாரணைக்கு உள்ளாகிறார், ஹார்வர்ட் தலைவர் கிளாடின் கே, இடதுபுறம் பேசுகிறார். [AP Photo/Mark Schiefelbein]

பிரதிநிதிகள் சபையின் இருபத்தி இரண்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து குடியரசுக் கட்சியினரும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததற்காக அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி ரஷிதா தலீப்பை (ஜனநாயகக் கட்சி-மிச்சிகன்) தணிக்கை செய்ய வாக்களித்தனர். இதற்கிடையில், குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் போன்ற நபர்கள், “பூமியில் உள்ள மிகத் தீவிரவாத மக்கள்” என்று அவர் அழைக்கும் காஸாவில் வசிப்பவர்களுக்கு எதிரான “ஒட்டுமொத்தமான போருக்கு” அழைப்பு விடுக்கும்போது உற்சாகமடைந்தனர்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்களும் மாணவர்களும் இந்த பழிவாங்கும் வேட்டையை எதிர்ப்பதோடு, அதன் டிசம்பர் 12 அறிக்கையில், “பிரதான நோக்கங்கள்... இரண்டு மடங்கு ஆகும்: முதலாவதாக, கல்லூரி வளாகங்களிலும் அதற்கு அப்பாலும் பேச்சு சுதந்திரத்தை அழித்தல், இரண்டாவதாக, அரசின் நலன்கள், இராணுவம் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களுக்கு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முழுமையான கீழ்ப்படிய செய்தல்” ஆகியவற்றை கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தது.

அக்டோபரில், கல்லூரி வளாகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை தணிக்கை செய்யும் பிரச்சாரத்தில் பைடென் நிர்வாகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. வெள்ளை மாளிகையானது, பல்கலைக் கழக வளாகங்களில் பாலஸ்தீனிய ஆதரவு உணர்வுகளின் எழுச்சியை எதிர்த்துப் போராடத் தொடங்கியதுடன், நாடு முழுவதும் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல கல்வித் துறையின் குழுக்களை அனுப்பியது.

இஸ்ரேலுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் கூறுகையில், இந்த கோரமான உணர்வுகளும் செயல்களும் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்து வயிற்றை புரட்டிப் போடுகின்றன என்று கூறினார். ‘இனி ஒருபோதும் இல்லை’ என்ற மறக்க முடியாத எங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் நினைவு கூர்கிறார்கள். ஆனாலும், சிடுமூஞ்சித்தனமாக, காஸாவில் வீசப்பட்ட அனைத்துக் குண்டுகளையும் வெள்ளை மாளிகையே வழங்கியது, 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாகவே இருந்தனர். இது 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகும்.

கோடீஸ்வரர்கள்

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மெளனமாக்குவதற்கான பிரச்சாரத்தின் குறுகிய சமூக அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள, யார் அதை வழிநடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது பயனுள்ளதாகும். இந்த தணிக்கை மற்றும் மிரட்டல் பிரச்சாரமானது, பில்லியனர்கள், சியோனிஸ்டுகள், அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருக்கும் அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் தலைவர்களின் கூட்டணியால் வழிநடத்தப்படுகிறது.

முக்கியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் அரசியல் மற்றும் கலாச்சாரத் தலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், உலகப் பொருளாதாரத்தின் மீதான கழுத்தை நெரிக்கும் ஒரு சில பில்லியனர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ள முதல் பெரிய குழுவாகும்.

அநாமதேய ஹார்வர்ட் பல்கலைக்கழக ஊழியர் எழுதிய ஒரு கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல்:

பொதுவாக சமத்துவமற்ற ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பவற்றுடன் பெருகிய முறையில் பொருந்தாதது போல், பணக்கார நன்கொடையாளர்களுக்கு பல்கலைக்கழகங்களை அடிபணியச் செய்வதானது, கல்வி சுதந்திரத்துடன் பொருந்தாது. வலதுசாரி, சியோனிச சார்பு “நன்கொடையாளர் கிளர்ச்சி” என்பது பெரும் பணமுள்ள பல்கலைக்கழக நன்கொடையாளர்கள் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, வளாக உரையாடலை வடிவமைக்க முயற்சிப்பது என்பது ஒரு பண்பியல் ரீதியான வளர்ச்சியாகும். இந்த நன்கொடையாளர்கள் அத்தகைய செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள் - அவர்களில் பலர் வெளிப்படையாகவே அவ்வாறு செய்ய முற்படுகிறார்கள் – இது கல்வித்துறை ஏற்கனவே எவ்வளவு ஆழமான சமரசத்திற்கு உட்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

உண்மையில், பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் இந்தப் பணப்புழக்கத்தையே சார்ந்திருக்கின்றன. கல்விக்கான முன்னேற்றம் மற்றும் ஆதரவு கவுன்சிலின் கூற்றுப்படி, 1980 இல் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தனியார் நன்கொடைகள் 4.2 பில்லியன் டொலர்களாக இருந்தது. இன்று அவை 59.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளன.

இந்த முக்கிய பில்லியனர்கள் சிலரின் “நன்கொடையாளர் கிளர்ச்சி” அமெரிக்க கல்லாரி வளாகங்களில் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது.

லெஸ்லி வெக்ஸ்னர் ஜூலை 2008 இல் உட்ரோ வில்சன் விருதைப் பெறுகிறார்.

லெஸ் வெக்ஸ்னர் – இவர் சில்லறை விற்பனையில் மிக முக்கியமான முதலாளிகளில் ஒருவராக இருப்பதோடு, 10.6 பில்லியன் டொலர்களை குவித்து வைத்துள்ளார். மேலும் ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி உலகின் 192வது பணக்காரராக இருக்கின்ற வெக்ஸ்னர், எல் பிராண்ட்களை நிறுவினார். இந்த நிறுவனமானது, பாத் & பாடி ஒர்க்ஸ், விக்டோரியாஸ் சீக்ரெட், அபெர்க்ரோம்பி & ஃபிட்ச், எக்ஸ்பிரஸ் மற்றும் பல முக்கிய பிராண்டுகளைக் கட்டுப்படுத்துகிறது, அல்லது முன்பு கட்டுப்படுத்தியுள்ளது. வெக்ஸ்னர் தற்போது எல் பிராண்ட்ஸைக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், அவரது வெக்ஸ்னர் அறக்கட்டளை, கடந்த சில தசாப்தங்களாக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு மில்லியன் கணக்கான டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு, எதிர்கால ஆதரவிற்காக மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டியுள்ளது. (கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, வெக்ஸ்னரின் தனிப்பட்ட பங்குகளை, தண்டனை பெற்ற குற்றவாளியான பாலியல் கடத்தல்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் நிர்வகித்து வந்தார்).

ஐடான் ஆஃபர் – ப்ளூம் பெர்க்கின் கூற்றுப்படி, உலகின் 77வது மற்றும் 87வது செல்வந்தர்களான ஐடான் மற்றும் அவரது சகோதரர் இயல், 42 பில்லியன் டொலர்களை வைத்துள்ளனர். அவர்கள் இணைந்து Ofer Global, Zodiac Group, Quantum Pacific Group மற்றும் Global Holdings ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை ஒவ்வொன்றும் மிகப்பெரிய தொழில்துறை, ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனங்களாகும். இஸ்ரேலின் மிகப் பெரிய ஹோல்டிங் நிறுவனமான இஸ்ரேலிய கார்ப்பரேஷனின் பாதியை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அவர்களின் நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்து, உரங்கள், தொழில்துறை இரசாயனங்கள், ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வருவாய் ஈட்டுகின்றன.

மில்லர் குளோபல் ப்ராப்பர்டீஸ், குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்ட பல சிறிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது பெப்பிள் பீச் கோல்ஃப் கோர்ஸ், ஆஸ்பென் ஸ்கை ரிசார்ட் மற்றும் ஹோட்டல் பெவேலி ஹில்ஸ் போன்ற பல்வேறு சின்னச் சின்ன சொத்துக்களை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்கது. Idan Ofer மற்றும் அவரது மனைவி Batia இருவரும் ஹார்வர்ட் கென்னடி பள்ளி டீன் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறி பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனிய சார்பு உணர்வின் கூக்குரலை ஒடுக்குவதற்கு பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலில் பல இரசாயன கசிவு மற்றும் சுற்றுச்சூழல் ஊழல்களின் மையத்தில் ஐடான் ஆஃபர் நிறுவனங்கள் உள்ளன. இஸ்ரேலிய விமானப்படையில் முன்னர் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஐடானின் சகோதரர் இயல், இப்போது மொனாக்கோவில் வசிக்கிறார்.

பில் அக்மேன் - பெர்ஷிங் ஸ்கொயர் கேப்பிட்டலை நடத்திவரும் ஒரு அமெரிக்க கோடீஸ்வரரான அக்மேன், சுமார் 20 பில்லியன் டொலர்களை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கின்றார். ஆக்மேன் தனிப்பட்ட முறையில் 4 பில்லியன் டொலர்களை வைத்திருக்கிறார். பெர்ஷிங் ஸ்கொயர் கேப்பிட்டல், டார்கெட்டின் 10 சதவீத உரிமை, ப்ராக்டர் & கேம்பிளின் ஒரு சதவீதம், சிபொட்டில் 10 சதவீதக் கட்டுப்பாடு, யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் 7 சதவீத பங்கு மற்றும் நெட்பிளிக்ஸில் ஒரு பில்லியன் டாலர்கள் உட்பட முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவர் கிளாடின் கேயை பதவி நீக்கம் செய்வதற்கான தீய பிரச்சாரத்தை பில்லியனர் அக்மேன் தற்போது நடத்தி வருகிறார். முன்னதாக, பாலஸ்தீன ஆதரவு அறிக்கையில் கையெழுத்திட்ட அனைத்து மாணவர்களின் பெயர்களையும் ஹார்வர்டு வெளியிட வேண்டும் என்றும், இந்த மாணவர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகள் மறுக்க வேண்டும் என்றும் அக்மேன் கோரிக்கை விடுத்து போராடினார்.

கென் கிரிஃபின் - $37 பில்லியன் சொத்துக்களுடன் கிரிஃபின் உலகின் 35வது பணக்காரர் ஆவார். அவர் மியாமியில் உள்ள 52 பில்லியன் டாலர் ஹெட்ஜ் நிதியான சிட்டாடலின் CEO ஆவார். மைக்ரோசாப்ட், ஆக்டிவிஷன், பாஸ்டன் சயின்டிஃபிக், என்விடியா, ஹுமானா, ஆப்பிள், காம்காஸ்ட், மெர்க் மற்றும் அடோப் உள்ளிட்ட சில மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் நிறுவனங்களில் இந்தக் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. கிரிஃபின் அரை பில்லியன் டாலர்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் பலமான இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை எடுக்க பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.

கிளிஃப் அஸ்னெஸ் - ஒரு அமெரிக்க பில்லியனரான அஸ்னஸ், AQR கேபிடல் மேனேஜ்மென்ட்டை நிறுவினார். இந்த நிறுவனமானது,100 பில்லியனுக்கும் மேலான டொலர்களை நிர்வகித்து வருகிறது. அஸ்னஸ் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு அவர் அளித்த அனைத்து நன்கொடைகளையும் துண்டித்து, “தீமையை ஆதரிப்பதை” நிறுத்துமாறு பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தை பகிரங்கமாகத் தொடங்கியுள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிடப்பட்ட ஒரு வசைப்பேச்சில், அவர் பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்புகளை “உயரடுக்கு கல்லூரி வளாகங்களில் ஆழமான மற்றும் முறையான அழுகலின்” பிரதிபலிப்பு என்று விவரித்தார்.

மார்க் ரோவன் - ரோவன் மிகப்பெரிய தனியார் பங்கு நிறுவனங்களில் ஒன்றான அப்பல்லோ அசெட் மேனேஜ்மென்ட்டின் இணை உரிமையாளராக உள்ளார். அவர் 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். பிசினஸ் இன்சைடரின் வார்த்தைகளில், “பல்கலைக்கழகத்தை ‘பலப்படுத்த’” வால் ஸ்ட்ரீட் தந்திரங்களைப் பயன்படுத்தி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு அவர் அளித்த நன்கொடைகளை நிறுத்தினார். ரியல் எஸ்டேட், கப்பல் நிறுவனங்கள் (நோர்வே, ரீஜண்ட்), ஹோட்டல்கள் (ஹர்ராஸ் என்டர்டெயின்மென்ட்), கல்வி (மெக்ரா ஹில்), பொழுதுபோக்கு (சக் இ. சீஸ்), தனியார் பாதுகாப்பு (ஏடிடி) மற்றும் சில்லறை விற்பனை (ஸ்மார்ட் அண்ட் ஃபைனல்) ஆகியவற்றில் அப்பல்லோ பரந்த முதலீடுகளைக் கொண்டுள்ளது. அப்போலோவின் இணை நிறுவனர் லியோன் பிளாக், ஜெஃப்ரி எப்ஸ்டுக்கு பணம் செலுத்திய விடயம் வெளிப்படுவதற்கு முன்பு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

சியோனிஸ்டுகள், யூத விரோதிகள் மற்றும் இன-தேசியவாதிகள்

இந்த பில்லியனர்களின் குழுவுக்கு ஆதரவாக ஒரு தொடரான இன தேசியவாதிகள் – அவர்களில் சியோனிஸ்டுகள் மற்றும் MAGA ட்ரம்பர்ஸ் ஆகிய இரு பகுதியினரும் அடங்குவர். அவர்கள் இஸ்ரேலிய இனப்படுகொலைகளுக்கு எதிரான சீற்றத்தை தணிக்கை செய்வதில் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றனர்.

இரண்டு யூத திரைப்படத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு வெளியான இஸ்ரேலிசம் என்ற திரைப்படம், அமெரிக்க கலாச்சாரத்தில் சியோனிசத்தை மேம்படுத்துவதற்கும் அதை யூத மதத்துடன் ஒப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படும் வழிமுறைகளுக்கு ஒரு சாளரத்தை வழங்குகிறது. 1987 முதல் 2015 வரை அவதூறு எதிர்ப்பு லீக்கின் (Anti-Defamation League ADL) தேசிய இயக்குநராக இருந்த ஒரு அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் பன்மடங்கு மில்லியனரான அபே பொக்ஸ்மேன் திரைப்படத்தின் ஒரு மைய நபராக இருந்தார். பொக்ஸ்மேனும் மற்றும் ADL ம் அமெரிக்க சியோனிஸ்ட் லாபியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், பிறப்புரிமை போன்ற நிறுவனங்களை பெரிதும் ஊக்குவிக்கின்றன.

ஜூன் 17, 2015 கோப்பு புகைப்படத்தில், ஜொனாதன் கிரீன்ப்ளாட், இடதுபுறம், அவதூறு எதிர்ப்பு லீக்கிற்கு உள்ளே வரும் தேசிய இயக்குனர், நியூயோர்க்கில், ADL இன் வெளிச்செல்லும் இயக்குநரான அபே ஃபாக்ஸ்மேனுடன் பேசுகிறார். [AP Photo/Julie Jacobson]

இஸ்ரேல் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் அனைத்து யூத அமைப்புகளையும், “வெறுக்கும் குழுக்கள்” என்று ADL வகைப்படுத்துகிறது. தற்போதைய ADL தலைவரான ஜொனாதன் கிரீன்ப்ளாட், தனது ட்விட்டரில் “வெள்ளை மேலாதிக்கவாதிகளின் தலைகீழான புகைப்படம்” என்று அமைதிக்கான யூத குரல் போன்ற அமைப்புகளை விவரித்தார். “இவற்றை, வெறுப்புக் குழுக்கள் என்று நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இனவெறி, இன-தேசியவாத அரசை எதிர்க்கும் இடதுசாரி யூத ஆர்வலர்களை வெள்ளை மேலாதிக்கவாதிகளுடன் ஒப்பிடுவது அவதூறானது மற்றும் அபத்தமான அறியாமை. இந்த வகையான ஒப்பீடுகள்தான், யூத அமைதிக்கான யூத குரல் மற்றும் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் போன்ற சியோனிச எதிர்ப்பு குழுக்களை கல்லூரி வளாகங்களில் இருந்து தடைசெய்யும் முயற்சியில் வெடிமருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொக்ஸ்மேன் முன்பு டொனால்ட் டிரம்பின் எழுச்சிக்கு அரசியல் மறைப்பை வழங்கினார், ஒரு நேர்காணலில், “அவர் ஒரு இனவெறியர் என்று நான் நினைக்கவில்லை, அவர் ஒரு யூத விரோதி என்று நான் நினைக்கவில்லை” என்று அறிவித்தார்.

சியோனிச ஆதரவு குழுக்கள் (இவர்களில் பலர் பொக்ஸ்மேன் மற்றும் அக்மேன் போன்ற ஜனநாயக கட்சியினர்) மற்றும் பாசிச வலதுசாரிகளுக்கு இடையிலான திருமணத்தை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.

அமெரிக்காவின் முக்கிய சியோனிச ஆதரவு குழுக்களில் ஒன்றான அமெரிக்காவின் சியோனிஸ்ட் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான ஹென்றி ஸ்வார்ட்ஸ், “டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் யூதர்கள் சொர்க்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று கூறினார்.

சமூக நெருக்கடியைப் பற்றி அலட்சியமாக இருக்கும் இந்த செல்வந்த அடுக்குகள், மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க யூதர்களுடன் அல்ல, மாறாக முதலாளித்துவ உயரடுக்குடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். ட்ரம்பின் வெளிப்படையான பாசிச இன-தேசியவாதம் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது. 2017 இல், பாசிஸ்டுகள், நவ-நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு, வேர்ஜீனியாவின் சார்லட்டஸ்வில்லே வழியாக அணிவகுத்து, “யூதர்கள் எங்களை பிரதியீடு செய்ய மாட்டார்கள்” என்று கோஷமிட்டபோது, அவர்கள் “மிகவும் நல்ல மனிதர்கள்” என்று டிரம்ப் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த நன்கொடையாளர்களுக்கு இதுபற்றி எந்த பிரச்சனையும் இல்லை, அவர்களின் யூத எதிர்ப்பு என்பது இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பை மட்டுமே குறிக்கிறது.

ஆகஸ்ட். 12, 2017 இல், வர்ஜீனியாவின் சார்லட்டஸ்வில்லியில் உள்ள எமன்சிபேஷன் பூங்காவின் நுழைவாயிலில் வெள்ளை மேலாதிக்கவாதிகள் நாஜிக்களின் கொடியுடன் “வலதுகளின் ஒற்றுமை” பேரணியில் இருப்பதைப் படம் காட்டுகிறது. [AP Photo/Steve Helber]

ஹார்வர்ட், எம்ஐடி மற்றும் பென்னின் தலைவர்களுக்கான டிசம்பர் 6 மெக்கார்திய விசாரணையின் முன்னணி “வழக்கறிஞர்” குடியரசுக் கட்சியின் பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக் (நியூயோர்க்) ஆவார். டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான ஸ்டெபானிக், “பெரிய மாற்றுக் கோட்பாடு” என்று அழைக்கப்படுவதற்கு ஆதரவை வெளிப்படுத்தினார். இது வெளிப்படையான பாசிச மற்றும் யூத-விரோதக் கோட்பாடு ஆகும், இது உயரடுக்கு யூத தாராளவாதிகளின் சதி “இரத்தத்தில் விஷம்” கலக்க முயற்சிக்கிறது என்று கூறுகிறது. - ட்ரம்பின் வார்த்தைகளில் - வெள்ளை மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் பாரிய குடியேற்றத்தின் மூலம் செய்தனர். ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஜனாதிபதித் தேர்தலை முறியடிக்கும் டிரம்பின் முயற்சியை ஸ்டெபானிக் ஆதரித்தார்.

இந்த சக்திகள் வலதுசாரி எவான்ஜிலிக்கல் சுவிசேஷ இயக்கத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அதன் பில்லியனர் மற்றும் பல மில்லியனர் போதகர்களுடன், அவர்கள் இஸ்ரேலின் இரத்தக்களரியை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடக்கும் போர் “இறுதி காலத்தின்” அறிவிப்பு என்று டெக்ஸான் மத போதகர் ஜோன் ஹேகி போன்ற நபர்கள், சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பல்வேறு அரபு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக படைகள் வரும் என்றும் “கடவுள் அவர்களை அழித்துவிடுவார்,” என்றும் அக்டோபரில் கூறினார். ஜோன் ஹேகி கிறிஸ்டியன் சியோனிஸ்டுகளின் ஒரு பெரிய குழுவில் இணைந்துள்ளார், அவர்களில் பலர் மிகப்பெரிய கிறிஸ்தவ சுவிசேஷ ஊடக நிறுவனங்களில் ஒன்றான டிரினிட்டி ஒலிபரப்பு வலையமைப்பை சுற்றி வருகிறார்கள், அவர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் குடியரசுக் கட்சியுடன் தொடர்பைக் கொண்டுள்ளனர்.

இந்த சுவிசேஷகர்களுக்கு அப்பால், சியோனிச ஆதரவு குழுக்கள் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

டிரம்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவரான மறைந்த ஷெல்டன் அடெல்சன், 2015 ஆம் ஆண்டில் போதை மற்றும் சுரண்டல் சூதாட்ட தொழில் மூலம் 28 பில்லியன் டொலர்களை குவித்து வைத்திருந்தார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2021 இல் அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உலகின் 18 வது பணக்காரர் ஆவார். அடெல்சன் இஸ்ரேலிய அமெரிக்க கவுன்சிலில் ஒரு முக்கிய நபராக இருந்தார், அதன் நிர்வாகக் குழுவிலும் முன்னணி நன்கொடையாளராகவும் செயல்பட்டார்.

பிறப்புரிமை இஸ்ரேல் திட்டத்தை நிறுவிய அமெரிக்க ஹெட்ஜ் நிதி மேலாளரும் கோடீஸ்வரருமான மைக்கேல் ஸ்டெய்ன்ஹார்ட் மூலம் அடெல்சன் டிரம்பிற்கு அறிமுகமானார். ஸ்டெய்ன்ஹார்ட் ட்ரம்ப்பிற்கு ஒரு பெரிய நன்கொடையாளராகவும், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலும் இருந்தார், அங்கு அவர் பழங்காலப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ராஜினாமா செய்வதற்கு முன் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

பிறப்புரிமை இஸ்ரேல் திட்டத்தின் நிறுவனர்களில் ஒருவர் முக்கிய டிரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்புரிமை இஸ்ரேல் திட்டம் என்பது அமெரிக்காவிற்குள் இஸ்ரேலுக்கு அரசியல் ஆதரவைப் பெறுவதிலும், இஸ்ரேலுக்கு இடம்பெயர்வதற்கும், குறிப்பாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அதன் சட்டவிரோதக் குடியேற்றங்களை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கியமான நிறுவனமாகும். மேற்குக் கரையில் குடியேறிய ஆறு இஸ்ரேலியர்களில் ஒருவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார். சுமார் 800,000ம் இளைஞர்கள் இஸ்ரேலுக்கு இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இது பிறப்புரிமை இஸ்ரேல் அறக்கட்டளையின் நிதியுதவியுடன், நியூயோர்க் டைம்ஸ் பல இளம் அமெரிக்க யூதர்களுக்கு ஒரு “பத்தியின் சடங்கு” என்று விவரிக்கிறது.

அமெரிக்காவின் சீர்திருத்த சியோனிஸ்டுகள் சங்கத்தின் தேசியத் தலைவரான ரப்பி பென்னட் மில்லர், இஸ்ரேலிசம் என்ற ஆவணப்படத்தில் பேட்டியளிக்கையில், “எங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் பத்து நாட்களுக்கு அல்ல, ஒரு மூன்றுமாத காலப்பகுதி அல்லது ஒரு வருடத்திற்குச் செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார். சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பயணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், இந்த திட்டத்தின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்களுக்கு எதிராக பாலஸ்தீனிய குடியேற்றங்களைப் பார்வையிட மறுத்து பயணங்களின் இடையிலேயே புறப்பட்டு சென்றனர்.

பாசிச வலதுசாரிகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிச சக்திகளின் இந்த பின்னிப்பிணைப்பை, தற்போது அமெரிக்க வளாகங்களில் பரவி வரும் யூத விரோதம் எனக் கூறி அமெரிக்காவில் நடந்து வரும் வழக்குகளிலும் காணலாம். Grayzone இன் விசாரணையில், அனைத்து வழக்குகளும் Kasowitz Benson Torres என்ற ஒரு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்படுகிறது. ட்ரம்பின் கீழ் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக 2017 ஆம் ஆண்டு வரை இருந்த டேவிட் ப்ரீட்மேன், இந்த நிறுவனத்தில் முதன்மை வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்தார். ப்ரீட்மேன் தற்போது நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய ஆதரவாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக்கான பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

கசோவிட்ஸ், பென்சன் மற்றும் டோரஸின் சட்ட அலுவலகங்களிருக்கும் படம்.

புவிசார் அரசியல் ஆய்வாளரும் செல்வாக்கு செலுத்துபவருமான எரிக் கார்லேண்ட் என்பவரால், இந்த நிறுவனம் “ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையில் உள்ள நெதன்யாகுவின் ஆட்கள்” என்று விவரிக்கப்பட்டது. ட்ரம்ப், பைடென் மற்றும் ஒபாமா உட்பட குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு நீண்டகால நன்கொடை அளிப்பவரான மார்க் கசோவிட்ஸ் என்ற பெரிய புகையிலை வழக்கறிஞரால் இந்த சட்ட நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் முன்னர் அமெரிக்க நீதித்துறையில் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு முகவராக பதிவு செய்யப்பட்டது. அதன் வாடிக்கையாளர்களில் மற்றொருவர் உக்ரேனிய-இஸ்ரேலிய கோடீஸ்வரர் Ikor Kolomoisky ஆவார், அவர் பாசிச அசோவ் பட்டாலியனுக்கு ஒரு பெரிய ஆரம்பகால நன்கொடையாளர் ஆவார், அவர் இப்போது மோசடிகள் மேற்கொண்டதுக்காக சிறையில் உள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் வழக்குகளைத் தொடுத்த “சாட்சிகள்” அனைவரும், மாணவர்களாக இருந்தாலும், இஸ்ரேலிய ஆதரவு குழு அமைப்புகளால், குறிப்பாக இஸ்ரேலுக்கான கூட்டணி, இஸ்ரேல் அலையன்ஸ் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் மாணவர்களால் பாதிவேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் Grayzone அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் குழுக்களில் இருந்து ஊதியம் பெறும் ஊழியர்கள், “நீங்கள் ஒரு அழுக்குச் சிறிய யூதர், நீங்கள் இறக்கத் தகுதியானவர்” என்று கூறப்படுவது போன்ற வெறுப்பு நிகழ்வுகளைக் கூறியிருந்தாலும், அவர்களின் வழக்குகள், யூத விரோதத்தின் அத்தகைய தருணங்களுக்கு எந்த குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளையும் குறிப்புகளையும் வழங்கவில்லை. பாலஸ்தீனிய சார்பு செயற்பாட்டாளர்களுடனான மோதல்கள், கூச்சல் போட்டிகள் மற்றும் “ஜோர்டான் நதியிலிருந்து கடல் வரை” என்று கூறப்படுபவற்றில் யூத எதிர்ப்பு முழக்கத்தைப் பயன்படுத்தினர்.

பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு என்பது வர்க்கப் பிரச்சினை

சியோனிஸ்டுகள், பில்லியனர்கள் மற்றும் அப்பட்டமான பாசிச யூத எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான இந்த திருமணம், பேச்சுரிமை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் பிரச்சாரத்திற்கும், மாணவர்களின் உண்மையான யூத எதிர்ப்புக்கு எதிரான பிரபலமான கோரிக்கைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கும், சாட்சியமாக இருக்கிறது.

டிசம்பர் 14 அன்று பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு விமர்சன உரையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், இஸ்ரேலில் நெதன்யாகு ஆட்சிக்கு அடித்தளமாக இருக்கும் பாசிச சித்தாந்தத்தை கோடிட்டுக் காட்டினார்:

இஸ்ரேலிய ஆட்சியால் செய்யப்படும் குற்றங்களுக்கு மத்தியில், சியோனிசத்திற்கு எதிரான எதிர்ப்பு என்பது யூத விரோதமானதாக இருக்க வேண்டும் என்று கூறுவதை விட பெரிய மற்றும் நயவஞ்சகமான பொய் எதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டுக்கதை அடிப்படையிலான அழைப்பை நிராகரித்த பல தலைமுறைகளைக் கடந்து, எண்ணற்ற ஆயிரக்கணக்கான யூதத் தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் 1948-க்கு முந்தைய சியோனிசத்திற்கு எதிரான நீண்ட வரலாற்றால் மறுக்கப்படும் பொய் இது.

சியோனிசத்தை எதிர்ப்பதில் தொழிலாள வர்க்கம், சோசலிச இயக்கம் முக்கிய பங்கு வகித்தது என்று நோர்த் விளக்கினார்:

[சோசலிஸ்டுகள்] பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை நிறுவும் முன்னோக்கின் அரசியல் பிற்போக்கு தன்மையை அடையாளம் கண்டு கண்டனம் செய்தனர். இந்த திட்டம் ஒரு காலனித்துவ நிறுவனமாகும், இது ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி மற்றும் 2,000 ஆண்டுகளாக அப்பிரதேசத்தில் வாழ்ந்த பாலஸ்தீனிய அரபு மக்களின் இழப்பில் மட்டுமே அடைய முடியும்.

காஸா இனப்படுகொலைக்கும் யூத மக்களின் பாதுகாப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், 25,000 க்கும் மேற்பட்ட மக்களின் கொடூரமான மரணம் யூதர்கள் அல்லது யூத மதத்திற்கு சேவை செய்கிறது என்று வலியுறுத்துவது, யூதர்கள் அல்லது யூத மதத்திற்கு இந்தப் படுகொலை தேவை என்று கூறுவது, ஆழமான வக்கிரமான, அடிப்படையிலான யூத விரோத கருத்தாகும்.

உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாரிய எழுச்சி மற்றும் கோபத்தின் எழுச்சியை தணிக்கை செய்பவர்கள் உண்மையான மக்கள் இயக்கத்தை பிரதிபலிக்கவில்லை. யூத மக்களின் உண்மையான மக்கள் இயக்கம் ஒருபுறம் இருக்க, அதற்கு மாறாக, இந்த பிரச்சாரம் பல பில்லியனர்கள், ட்ரம்ப்புடன் அன்பு கொண்ட யூத விரோதிகள், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் மற்றும் புவிசார் அரசியல் தேவையாக இஸ்ரேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊக்கமளிக்கும் கூட்டணியினரின் விளைபொருளாகும். ஊடகங்களால் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு, இந்த பிற்போக்கு கூட்டணி ஒரு சிறுபான்மையினரின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதலை அம்பலப்படுத்தவும் எதிர்க்கவும் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக மட்டுமல்லாமல், ஈரான், யேமன் மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போருக்கான பரந்த தயாரிப்புகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கூட கேள்விக்குட்படுத்தும் அடிப்படை உரிமையை “தேசிய பாதுகாப்பு” என்ற சாக்குப்போக்கில் மக்களிடமிருந்து பறிக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக ஒரு போர்க்குணமிக்க எதிர்ப்பு தேவைப்படுகிறது.

Loading