முன்னோக்கு

புதிய கோவிட்-19 எழுச்சியில் பலர் “கைவிடப்படுவார்கள்” என்கிறார் டாக்டர் அந்தோனி பௌசி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த வாரம், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர். அந்தோனி பௌசி பிபிசிக்கு அளித்த பேட்டியில், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தற்போதைய வைரஸ் எழுச்சியில் “கைவிடப்படுவார்கள்” என்று அறிவித்தார். கோவிட்-19 இன் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் என்ன நடக்கும் என்று எச்சரிக்கை விடுக்காத பௌசி, நோயின் புதிய எழுச்சியை எதிர்கொள்ளும் பைடென் நிர்வாகத்தின் செயலற்ற தன்மை மற்றும் மறைத்தல் கொள்கையை நியாயப்படுத்த முயன்றார்.

பௌசியின் கருத்துக்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கியின் ஜனவரி 2022 அறிக்கையான, COVID-19 முதன்மையாக முதலில் “உடல்நிலை சரியில்லாதவர்களைக் கொல்கிறது என்பது ஒரு ஊக்கமளிக்கும் செய்தி” என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. வாலென்ஸ்கி மற்றும் பெளசியின் அறிக்கைகள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட மற்றும் ஊனமுற்றவர்களின் வாழ்க்கை ஆரோக்கியமான மக்களை விட குறைவான மதிப்புமிக்கது என்று சுட்டிக்காட்டுகின்றன.

[Twitter]

https://twitter.com/Andre__Damon?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1697437298046959958%7Ctwgr%5Eb40a657efdb44197106b100127e3cec1a9cbb468%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2023%2F09%2F01%2Fgqnt-s01.html

[/twitter]

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பௌசி இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட முடியும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை வெறுமனே இறக்க அனுமதிக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் முழுமையான தார்மீக வீழ்ச்சியை சந்திக்கிறார். அத்தோடு, கொரோனா வைரஸை வரம்பில்லாமல் பரப்ப அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வாதிடும் பாசிச சித்தாந்தவாதிகளிடம் அவர் சரணடைகிறார்.

எவ்வாறாயினும், அவரது தனிப்பட்ட பரிணாமத்தை விட முக்கியமானது பைடென் நிர்வாகத்தைப் பற்றிய அவரது அறிக்கைகள் கூறுகின்றன. இது ஒரு மறைமுகமான ஆனால் வேண்டுமென்றே சமூகக் கொலைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகும். இது, வயதானவர்கள், நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரைக் குறிவைக்கிறது. ஊனமுற்றவர்களை படுகொலை செய்யும் நாஜி ஆட்சியின் கொள்கையை நினைவூட்டும் வகையில், இது ஒரு வகையான கொலைவெறி யூஜெனிக்ஸ் என்று அழைக்கப்படும் இனமேம்பாட்டியல் கருத்தியல் ஆகும். (இனமேம்பாட்டியல் கருத்தியல் என்பது மக்கள்தொகையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மனிதர்களை மேம்படுத்த முடியும் என்ற விஞ்ஞான ரீதியாக தவறான கோட்பாடு ஆகும்)

கோவிட்-19 நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துவரும் அதே வேளையில், கடந்த இரண்டு மாதங்களில் COVID-19 சம்பவங்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக கழிவு நீர் தரவுகள் குறிப்பிடும் நிலைமைகளின் கீழ் பௌசி பேசுகிறார். பைடென் நிர்வாகம் COVID-19 பொது சுகாதார அவசரநிலை (PHE) பிரகடனத்தை ரத்துசெய்த பிறகு மற்றும் மே 11 அன்று கோவிட் சம்பவங்களை எண்ணுவதை நிறுத்திய பின்பு ஏற்பட்டுள்ள முதல் வைரஸ் எழுச்சி இதுவாகும். பைடென் நிர்வாகம், இந்த நோய் பரவுவது குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வைக் குறைக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவை முக்கியமாக கண்மூடித்தனமாக நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய்க்குள் பறக்கவிட்டுள்ளது.

“கோவிட்-19 மீண்டும் எவ்வளவு தீவிரமானது” என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அதன் தற்போதைய எழுச்சி கடந்த காலத்தை விட குறைவான மருத்துவமனை மற்றும் இறப்புகளைக் காணும் என நம்புவதாகவும், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறி ஆபத்துகளைக் குறைத்து மதிப்பிட முயன்றார்.

96 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை, முந்தைய நோய்த்தொற்று மூலமாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ கொண்டுள்ளனர் என்று பௌசி கூறினார். அவர் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார் :

எமக்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்தாலும் கூட, கடந்த காலங்களில் நாம் பார்த்தது போல் மருத்துவமனைகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பைக் காண்போமா என்று நான் மிகவும் சந்தேகிக்கிறேன். சமூக மட்டத்தில் போதுமான அடிப்படை பாதுகாப்பு இருப்பதால், பாதிக்கப்படக்கூடியவர்கள் கைவிடப்படுவர்கள் என்று நீங்கள் கண்டாலும், அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், சிலர் இறந்துவிடுவார்கள், இது நாம் பார்த்த சம்பவங்களின் சுனாமியாக இருக்கப்போவதில்லை.

யார் இந்த “பாதிக்கப்படக்கூடிய” மக்கள், யார் சாலையோரத்தில் இறப்பவர்கள்?

அமெரிக்காவில், ஏறத்தாழ 45.4 சதவீத மக்கள், இருதய நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), நீரிழிவு, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட ஆறு உடல் உபாதைகளில் குறைந்தபட்சம் ஒன்றின் காரணமாக COVID-19 சிக்கல்களின் ஆபத்தில் உள்ளனர். தன்னுடல் தாக்க நோய்கள், உடல் பருமன், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது 65 வயதுக்கு மேல் இருப்பது ஆகியவற்றுடன், கோவிட்-19 ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் சேர்க்கப்படும் போது, “கைவிடப்படும் குழுக்களின்” பட்டியல் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலாக வளர்ந்து மூன்றில் இரண்டு பங்கை நெருங்குகிறது.

COVID-19 இன் பரவலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, டிரம்ப் நிர்வாகத்தில் வாதிட்டதற்காக பல ஆண்டுகளாக பாசிச தாக்குதல்களுக்கு இலக்காக இருந்த பெளசி, தற்போது “சமூக நோய் எதிர்ப்பு சக்தியின்” கோட்பாட்டை தழுவிக்கொண்டுள்ளார். இது 2020 இல், போதுமான மக்கள் COVID-19 க்கு உள்ளாகும்போது வைரஸ் போய்விடும் என்றும், மேலும் வயதானவர்களின் மரணம், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் பெரும் நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையாகும் என்பது டிரம்ப் பரிந்துரைத்த கருத்தாக்கம் ஆகும்.

“சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஆதரிப்பவர்களுக்கு எதிரான மிகப்பெரிய வாதம், கோவிட்-19 தொற்றுநோயின் உண்மையான அனுபவம் ஆகும். 2020 அக்டோபரில் உலக சுகாதார அமைப்பு (WHO) விடுத்த எச்சரிக்கைகளை இது உறுதிப்படுத்துகிறது. “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” என்பது COVID-19 தொற்றுநோய்க்கு அறிவியல் ரீதியாக சாத்தியமான பதில் அல்ல.

“ஒரு வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம் சமூக நோய் எதிர்ப்பு சக்தி அடையப்படுகிறது, அதை வெளிப்படுத்துவதன் மூலம் அல்ல” என்று WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அப்போது கூறினார். “பொது சுகாதார வரலாற்றில், தொற்றுநோய் ஒருபுறம் இருக்க, தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கான ஒரு உத்தியாக சமூக நோய் எதிர்ப்பு சக்தி பயன்படுத்தப்படவில்லை. இது அறிவியல் ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் சிக்கலானதாகும் ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில், WHO இயக்குனர் இரண்டு முறை COVID-19 நோயால் மக்கள் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை (அந்த நேரத்தில் அனுமானமாக இருந்தது) எழுப்பினார். அத்துடன் அவர் கூறியவற்றின் பெருகிவரும் அறிக்கைகள் இப்போது “நீண்ட கோவிட்” என்று விவரிக்கப்படுகின்றன.

இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, COVID-19 உடன் மீண்டும் தொற்று ஏற்படுவது ஒரு கற்பனையான சாத்தியம் அல்ல, ஆனால் விதி என்பதை நாங்கள் அறிவோம். ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட முன்னணி நிலைகளில் உள்ளவர்கள் மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 இன் ஒவ்வொரு அத்தியாயமும் நோயெதிர்ப்பு அமைப்பு, மூளை மற்றும் இரத்த ஓட்ட அமைப்பு உள்ளிட்ட முக்கிய உறுப்பு அமைப்புகளை படிப்படியாக சேதப்படுத்தும். COVID-19 ஐ சுதந்திரமாக புழக்கத்திற்கு அனுமதிப்பது, பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று பெளசி விவரிக்கும் மக்கள்தொகையை படிப்படியாக அதிகரிக்கிறது.

இறுதியாக, டாக்டர் டெட்ரோஸ் இந்த எச்சரிக்கைகளை விடுத்தபோது, தற்போதுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் வகையில் கோவிட்-19 இன் பிறழ்வு திறன் பெரும்பாலும் அனுமானம் ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகளில், புதிய COVID-19 மாறுபாடுகளின் அலை, “மக்கள்தொகையின் எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தியும்”, COVID-19 இன் குறிப்பிடத்தக்க புதிய எழுச்சிகளைத் தடுக்காது என்பதைக் காட்டுகிறது.

பாரிய நோய்த்தொற்றின் ஆதரவாளர்கள், தொற்றுநோய்க்கு ஆளாகின்ற மக்கள்தொகையின் பங்கை மீண்டும் மீண்டும் அதிகரித்து, நோயை “நிர்வகிக்கக்கூடிய” நிலைக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். முதலில் 50 சதவிகிதம், பின்னர் 70 சதவிகிதம், பின்னர் 80 சதவிகிதம், பின்னர் 90 சதவிகிதம். இப்போது, ​​96 சதவீத மக்கள்தொகையில், கோவிட்-19க்கு “நோய் எதிர்ப்பு சக்தி” இருப்பதாக பெளசி அறிவித்தாலும், அமெரிக்காவில் பள்ளிகள் மூடப்படுவது ஒரு தடுப்பு முன்னெச்சரிக்கையாக அல்ல. மாறாக, பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவற்றைத் திறக்க முடியவில்லை.

வெட்கப்படத்தக்க வகையில், WHO தானே அரசாங்கங்களின் பாரிய தொற்று பரவல் கொள்கைக்கான தனது சொந்த கண்டனத்தை நிராகரித்துள்ளது. மே மாதத்தில் அதன் COVID-19 பொது சுகாதார அவசர அறிவிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது, மேலும் இந்த வாரம் அதன் வாராந்திர COVID-19 விளக்கங்களை நிறுத்தியுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் “எப்போதும் கோவிட்” என்ற மூலோபாயம் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும், 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிகாரப்பூர்வமாக இறந்துள்ளனர். மேலும் 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீண்ட கோவிட் மூலம் கணிசமாக உடல்நல ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, கோவிட்-19 நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அதே நேரத்தில் புதிய, மிகவும் மாற்றமடைந்த BA.2.86 “பிரோலா” வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக, பைடென் நிர்வாகம், உலக அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களால் தொற்றுநோய் முடிந்துவிட்டது, மக்கள் தங்கள் முகக் கவசங்களை கழற்றலாம் மற்றும் தொற்றுநோயைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தலாம் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இப்போது, ​​​​தொற்றுநோய்களின் புதிய எழுச்சிக்கு மத்தியில், அவர்கள் அல்லது அவர்களின் அன்புக்குரியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படலாம் அல்லது இறக்கலாம் என்பதை, அவர்கள் வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

ஆனால், பொது சுகாதாரத்தை லாபத்திற்கு அடிபணியச் செய்வதை அடிப்படையாகக் கொண்ட தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பதிலின் தர்க்கம் இதுதான்.

இந்த பாரிய மரணம் மற்றும் நிரந்தர தொற்று என்ற கொள்கை நிறுத்தப்பட வேண்டும்! ஒவ்வொரு நாட்டிலும், COVID-19 பரவுவதைத் தடுக்க அவசர நடவடிக்கைகளுக்கான கோரிக்கை எழுப்பப்பட வேண்டும்.

இந்தப் பேரழிவுக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு சுகாதார நிபுணர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் உள்ளது. ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் நிராயுதபாணியாக்கப்பட்ட மக்கள், தற்போதைய அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்கப்பட்டு, உலகளாவிய ஒழிப்பு மற்றும் முற்றிலுமாக நோய்தொற்றை அகற்றும் கொள்கைக்காக போராட அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading