கிரேக்கம் அருகே 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்: ஐரோப்பா கோட்டையும், அகதிகள் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

போர், சுற்றுச்சூழல் பேரழிவுகள், வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றில் இருந்து உயிர்தப்பி அடைக்கலம் தேடிய 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், கடந்த புதன்கிழமை அதிகாலையில் தென்மேற்கு கிரேக்க கடல்பகுதியில், படகு மூழ்கியதில் இறந்தோ அல்லது காணாமலோ போயுள்ளனர். அவர்களில் 30 முதல் 100 வரையிலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 10 அன்று, லிபியாவில் உள்ள டோப்ரூக் பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்றில், 750 பேர்கள் நெருக்கமாக இருந்து பயனித்ததாக கருதப்படுகிறது. போதுமான உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் பயணம் செய்த அவர்கள், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் படகின் திறந்த மேல் தளத்தில் நிரம்பியிருந்தனர்.

ஜூன் 14, 2023, புதன்கிழமை அன்று கிரேக்க கடலோர காவல்படை வழங்கிய படம், கடலில் மூழ்கிய இந்த மீன்பிடிப் படகில் கிட்டத்தட்ட 79 பேர் இறந்தனர் மற்றும் பலர் காணாமல் போயினர். இந்தப் படகில் கிட்டத்தட்ட அனைத்து திறந்திருந்த தளங்களில் உள்ள டசின் கணக்கான மக்கள். [AP Photo/Hellenic Coast Guard via AP]

இதுவரை 78 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலோர், மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்றில், மூழ்கிய படகின் கீழ் தளத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில், 104 உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிரேக்க அரசாங்கம் இந்த துன்பியலான சம்பவத்துக்கு உடந்தையாக உள்ளது, 14 மணிநேரம் ஆபத்தான முறையில் அதிக சுமை ஏற்றப்பட்ட கப்பலைக் கண்காணித்து, துன்பத்தில் உள்ள பயணிகளின் தகவல்களைப் பெற்ற போதிலும், மிகவும் தாமதமாகும் வரை மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அது மறுத்துள்ளது. ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் தனியார் சட்ட நிறுவனத்தின் பேராசிரியர் எரிக் ரோசாக் என்பவர் கார்டியன் பத்திரிகையிடம், கப்பலில் உள்ளவர்கள் உதவி கேட்டாலும் அல்லது கேட்காவிட்டாலும், கடல்சார் சட்டத்தின் கீழ் 'உயிர்காப்பு நடைமுறைகளைத் தொடங்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது' என்று கூறினார்.

உதவிகளை ஏற்க மறுத்ததால், கப்பலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கிரேக்க கடலோரக் காவல்படை கூறுகிறது. இதன் பிறகு, படகை கட்டி இழுக்கும் முயற்சியின் போது, படகு கவிழ்ந்ததாக உயிர் தப்பியவர்கள் கூறுகின்றனர். கடலோரக் காவல்படை இப்போது தங்களுக்கு படகை கட்டியிழுக்கும் கயிற்றுடன் இணைப்பு இருந்ததாக ஒப்புக்கொள்கிறது. “அவர்களுக்கு கயிற்றை இழுக்கும் முறை தெரியாததால், கப்பல் வலதுபுறமும் இடதுபுறமும் சாய்ந்தது. கடலோர காவல்படையினரின் படகு மிக வேகமாக சென்று கொண்டிருந்ததால், ஏற்கனவே இடது பக்கம் சாய்ந்து கொண்டிருந்த படகு இறுதியில் மூழ்கியது'' என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.

கிரேக்கத்தின் குடியேற்றக் கொள்கைக்கு காரணமானவர்களை கொலைகாரர்கள் என்று கண்டித்து பெரும் போராட்டங்கள் அந்நாட்டில் வெடித்தன. போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர். (கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்).

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தக் கூற்றச்சாட்டுகள் அனைத்து ஐரோப்பிய சக்திகளுக்கும் நீட்டிக்கப்படலாம். முடிந்தவரை அதிகமான மக்கள் பயணத்தை கைவிட வேண்டும் அல்லது அந்த முயற்சியில் இறக்க வேண்டும் என்பதற்காக, ஐரோப்பாவின் எல்லைகளில் ஒரு பரந்த புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு எந்திரத்திற்கு பில்லியன்கணக்கான பணத்தை அவர்கள் கொட்டியுள்ளனர். 2021 இல் 535 மில்லியன் யூரோக்களில் இருந்து 2022 இல் 754 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) எல்லைப் படையான புரென்டெக்சின் (Frontex) ஆண்டு வரவு செலவுத் திட்டம் அதிகரித்துள்ளது.

லிபியா மற்றும் துனிசியாவில் உள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு இன்னும் பில்லியன்கணக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 2022 இல் ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 60,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை இடைமறித்துள்ளன. அத்துடன், இந்த மார்ச் மாதம், கடலில் பணியிலிருந்த மீட்புக் கப்பல்களைத் தடுக்க, அவற்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு முதல் 'ஐரோப்பா கோட்டை' கொள்கை திணிக்கப்பட்டதன் விளைவாக குறைந்தபட்சம் 21,000 பேர் மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். வட ஆபிரிக்கா முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் இருக்கும் எண்ணற்றோர் நரக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். அங்கு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக உள்ளதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது. அத்தோடு, கிரேக்கத் தீவுகள் அல்லது கால் நடையாக ஐரோப்பாவைக் கடப்பது என்பது, அரசு ஆதரவுடன் நடத்தப்படும் வன்முறை, மிரட்டிப் பணம் பறித்தல், அவமானப்படுத்துதல் மற்றும் இழப்பிற்கு உட்பட்டதாகும்.

கிரேக்க கடல் பகுதியில் நடந்த புலம்பெயர்ந்தோர்கள் பயனம் செய்த படகு ஒரு கொடிய விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, ஜூன் 15, 2023, வியாழன் அன்று, ஏதென்ஸில், பாராளுமன்ற கட்டிடத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​'இறந்தவர்களின் கடல்கள்' என்ற நீல நிறத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பதாகையை எதிர்ப்பாளர்கள் வைத்துள்ளனர். [AP Photo/Petros Giannakouris]

புகலிடக் கோரிக்கையாளர்கள் இருமடங்கு பலியாகின்றனர். இவர்களை பூச்சிகளைப் போல் நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளே, புலம்பெயர்ந்தவர்களை முதலில் தஞ்சம் அடைய வேண்டிய நிலைக்கு தள்ளியதுக்கு காரணமானவர்கள் ஆவர். உலகெங்கிலும் உள்ள சமூகங்களை போர்கள், ஆக்கிரமிப்புகள், சூழ்ச்சிகள், பொருளாதார தடைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் தாக்கம் என்பன கிழித்தெறிகின்றன.

சமீபத்திய சோகத்தில் இறந்தவர்களில், அமெரிக்கா தலைமையிலான பினாமி போரினால் அழிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்தவர்களும், மேற்கத்திய ஆதரவு சர்வாதிகாரி அப்தெல் ஃபத்தா எல் சிசி மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் கீழுள்ள எகிப்தை சேர்ந்தவர்களும், அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் அதன் அரசியல் தலையீடுகள் மற்றும் பேரழிவுகரமான வெள்ளத்தின் விளைவுகளை அனுபவிக்கின்ற பாக்கிஸ்தானை சேர்ந்தவர்களும், மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் அதன் முற்றுகையின் கீழ் இருக்கின்ற பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். 

ஐரோப்பாவின் எல்லைகளை நோக்கி வருபவர்கள் துன்பத்தின் ஒரு பனிப்பாறை முனையில் மோதுகிறார்கள். ஐ.நா. அகதிகள் கவுன்சிலின் சமீபத்திய குளோபல் டிரெண்ட்ஸ் அறிக்கையின்படி, இந்த கோளத்தில் உள்ள ஒவ்வொரு 74 பேரில், ஒருவருக்கும் அதிகமானோர், 108 மில்லியன் மனிதர்களுக்கு மேல் வலுக்கட்டாயமாக தமது சொந்த நாட்டைவிட்டு இடம்பெயர தள்ளப்பட்டுள்ளனர், அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.

கடந்த தசாப்தத்தில் இந்த எண்ணிக்கையானது மேலும் உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் தொடக்கத்தில் 2014 இல் உலகளவில் சுமார் 60 மில்லியன் பேர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தனர். அந்த நேரத்தில், 2013-15 க்கு இடையில் லம்பேடுசா கடற்கரையில் பல சோகங்கள் நடந்தன, மற்றும் துருக்கிய கடற்கரையில் இரண்டு வயது ஆலன் குர்தி என்ற இறந்து கிடந்த குழந்தையின் படம் பரவலான சீற்றத்தை உருவாக்கியதுடன், இந்த காட்டுமிராண்டித்தனம் தொடர முடியாது என்ற உணர்வு பொது மக்களிடம் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆனால், ஐரோப்பிய அரசுகள் இதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டன. 2016 இல் 5,136 என்ற உச்சத்தில் இருந்து மத்தியதரைக் கடலில் காணாமல் போன அல்லது இறந்த போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 2020 ல் குறைந்தபட்சம் 1,449 இல் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது.

அரசியல்வாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுவர்களை உயர்த்துவதன் மூலம் இதற்கு பதிலளிக்கிறார்கள். இம்மாதம் லக்சம்பேர்க்கில் நடந்த கூட்டத்தில், புகலிடக் கோரிக்கையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைச் சுவர்களின் நீளம் 2014 மற்றும் 2022 க்கு இடையில் ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்து, 2,000ம் கிலோமீட்டருக்கும் அதிகமாக, 13 சதவீத நில எல்லையை உள்ளடக்கியிருக்கிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கட்டுமானத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

முதலாளித்துவ நெருக்கடியால் சிதைக்கப்பட்ட உலகளாவிய சமூகத்தின் மனித அவலங்களை, அரிதாகவே அறிக்கையிடும் ஊடகங்கள், ஐரோப்பிய முதலாளித்துவத்தை மூடிப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டிருக்கின்றன.

வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களில் 108 மில்லியன் பேர்களில் பெரும்பாலானவர்கள் (62.5 மில்லியன்) தங்கள் சொந்த நாடுகளுக்குள்ளேயே இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 80 சதவீதம் பேர், கொலம்பியா, சிரியா, உக்ரேன், கொங்கோ ஜனநாயக குடியரசு, ஏமன், சூடான், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 10 இடங்களில் உள்ளனர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் முக்கால்வாசி பேர் வெளியில் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் உகாண்டாவில் உள்ள Bidi Bidi (பெரும்பாலும் தெற்கு சூடான் அகதிகள் 270,000), தான்சானியாவில் உள்ள நயருகுசு (பெரும்பாலும் கொங்கோவாசிகள் 150,000) அல்லது ஜோர்டானில் உள்ள ஜடாரி (பெரும்பாலான சிரியர்கள் 76,000) போன்ற வசதிகளற்ற முகாம்களில் வாழ்கின்றனர். அல்லது, இந்த பிப்ரவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்த துருக்கி போன்ற நாடுகளில், அம்பலப்படுத்தப்பட்ட மோசமான நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் திரும்பி வருவதை விட அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள் - கடந்த ஆண்டு திரும்பிய ஒவ்வொருவருக்கும் (மிக சிலருக்கு வேறு நாட்டில் மீள்குடியேற வாய்ப்பு கிடைத்தது) 22 பேர் குறிப்பாக, 2022 இல் 114,300 பேர் மட்டுமே அதைச் செய்ய முடிந்தது. ஐரோப்பாவில் வேலை மற்றும் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் கடுமையாக விரட்டியடிக்கப்படுவதால், பெரும்பாலானவர்கள் அழுகிய நிலையில் வாழ்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கும் கொடூரமான வழக்கமான எண்ணிக்கை மற்றும் உலகளாவிய அகதிகள் நெருக்கடி ஆகியவை ஏகாதிபத்திய போருக்கும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கும் இடையிலான அத்தியாவசிய தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களின் மிகப்பெரிய குழுக்களின் மூன்று சொந்த நாடுகள் சிரியா, (6.5 மில்லியன்), உக்ரேன் (5.7 மில்லியன்) மற்றும் ஆப்கானிஸ்தான் (5.7 மில்லியன்) ஆகும். 21 ஆம் நூற்றாண்டில், அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் மேற்கொண்ட மிகவும் அழிவுகரமான நடவடிக்கைகளின் சில இடங்களே இந்த நாடுகளாகும்.

உக்ரேனில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 5.9 மில்லியன் மக்களையும் சேர்த்தால், இந்த நாட்டில் மொத்தம் 11.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இடப்பெயர்வு நெருக்கடி மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய ஒன்றாகும்.

உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரின் நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் வளங்களை பாரிய இராணுவச் செலவுத் திட்டங்களுக்கும் உள்நாட்டில் அடக்குமுறைச் சட்டங்களுக்கும் கொண்டு செல்லும் நிலையில், இந்த இடம்பெயர்ந்த மக்கள் மீதான ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறை, பெருகிய முறையில் விரோதமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் 'தற்காலிகப் பாதுகாப்பை' பெற்றிருக்கும் நான்கு மில்லியன் உக்ரேனியர்களும், இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட 60,000ம் பேர்களும், தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் வீடுகள் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக, நேட்டோ பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தப்படுவதை நியாயப்படுத்த தேவையான விதிவிலக்காகக் காணப்படுகின்றனர்.

இந்தப் போரில், நேட்டோ சக்திகளின் ஆளும் வர்க்கங்கள் தங்களை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாவும், மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களாகவும் காட்டிக்கொள்கின்றன.  அகதிகளை இவர்கள் கொடூரமாக நடத்துவது, இந்த நயவஞ்சகர்கள் யார் என்பதை அம்பலப்படுத்துகிறது.

Loading