கொழும்பில் சோ.ச.க./IYSSE பொதுக்கூட்டம்: இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! வேலை மற்றும் சம்பளத்துக்காகப் போராட தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் ஜூலை 6 வியாழன் மாலை 4 மணிக்கு ஒரு பகிரங்க கூட்டத்தை நடத்தவுள்ளன. இந்தக் கூட்டமானது “இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! வேலை மற்றும் சம்பளத்துக்காகப் போராட தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு! என்ற தொனிப்பொருளில் இடம்பெறும்.

3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனுக்கான முன்நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், 430 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOE) 'மறுசீரமைக்க' ஒரு பாரிய செயல்முறையை ஆரம்பித்துள்ளது. இந்த செயல்முறையின் கீழ், சில அரச நிறுவனங்கள் மூடப்படும், சில இலங்கை மற்றும் சர்வதேச தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும், சில ஒன்றிணைக்கப்படும், மற்றவை 'மறுசீரமைக்கப்படும்'.

விக்கிரமசிங்கவின் 'மறுசீரமைப்புகள்' வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரம், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாக உள்ள இலங்கையின் பொருளாதார பேரழிவின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது சுமத்துவதும் ஆகும். இந்தத் திட்டமானது இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை பாதிக்கும், பத்தாயிரக்கணக்கான வேலைகளை அழிக்கும். எஞ்சியிருப்பவர்கள் ஊதிய குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, நிலைமைகள் சீரழிவு மற்றும் வேலைச்சுமை அதிகரிப்பையும் எதிர்கொள்வர். இவற்றுக்கு மேலாக, சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகள், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தி, ஏற்கனவே அதிக பணவீக்கம் மற்றும் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களை மேலும் துயரத்திற்குள் தள்ளும்.

அரசாங்கத்தின் சிக்கன தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை காட்டிக்கொடுத்துள்ள தொழிற்சங்கங்கள், கடந்த மாதம் அரச நிறுவனங்களின் 'மறுசீரமைப்பு' நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மரண மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றன. தொழிற்சங்கங்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதுடன், இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு, வர்க்கப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நசுக்கவும் அரசாங்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் தொழில்துறை பொலிசாக செயல்படுகின்றன.

தனியார்மயமாக்கல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சமூகத் தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அந்தப் போராட்டம் சர்வதேச சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட வேண்டிய சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றி விவரிக்கப்படும். தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் எங்கள் வாசகர்கள் அனைவரையும், இந்த கூட்டத்தில் பங்குகொண்டு இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் மற்றும் நேரம்: ஜூலை 6, வியாழன் மாலை 4 மணி.

இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு

கோவிட்-19 தொற்றுநோயை பாரதூரமானதாக எடுத்துக் கொள்ளும் சோ.ச.க., கூட்டத்தின் போது தேவையான அனைத்து சுகாதார மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும். பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக N95 முகக் கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

'தொழில் சட்ட சீர்திருத்தம்' பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

இலங்கை ஆளும் கட்சி கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியை வெறுப்புக்குரியதாக காட்டுகிறது

இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

Loading