அசாஞ்சின் வழக்கு விசாரணைக்குப் பின்னர் — ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சினை நாடு கடத்துவதற்காக நான்கு வாரங்கள் நடந்த விசாரணையானது ஜனநாயகத்தின் பொறிவிலும், உலக ஏகாதிபத்தியத்தின் மோசமான குற்றத்திற்குள் இறங்கியதிலும் ஒரு திருப்புமுனையாக இருந்தன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்க இராணுவவாதத்தின் தடையற்ற வெடிப்பு மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஒரு சட்டக் கொள்கை கூட, ஜனநாயக அல்லது அடிப்படை மனித உரிமையைப் பாதுகாக்கவில்லை.

ஜூலியன் அசாஞ் [Photo: Julian Assange]

அசாஞ் ஒரு இழிந்த சோடிப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாசாங்குரீதியான சட்டவாதங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டாலும், லண்டனின் ஓல்ட் பெய்லியில் நடந்தது ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை உலகிற்கு முன் அம்பலப்படுத்திய ஒரு பத்திரிகையாளருக்கு எதிரான கொடூரமான பழிவாங்கும் செயலாகும்.

"உளவிற்காக" குற்றம் சாட்டப்பட்டு அசாஞ் குற்றவாளிக் கூண்டில் இருக்கையில், அவர் அம்பலப்படுத்திய குற்றங்களை பாதுகாப்பு சாட்சிகளால் நினைவுபடுத்தப்பட்டன. முழு முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு குற்றச்சாட்டாக அவர்களுடைய சொற்றொடர்கள் நீதிமன்ற அறையின் காற்றில் பறக்கவிடப்பட்டன: அதாவது “பக்கவாட்டுக் கொலை” (நிராயுதபாணியான மற்றும் காயமடைந்த பொதுமக்களை வேண்டுமென்றே கொல்வது); "அசாதாரண கைதுகள்" (குற்றமற்ற நபர்களை சட்டவிரோதமாக கைது செய்தல் மற்றும் அவர்களை "சிஐஏ கறுப்பு தளங்களில்" காணாமல் போகச் செய்தல்); “உயர் விசாரணை” (“முகமூடி மற்றும் சங்கிலியால்” பிணைக்கப்பட்டவர்களை, அடிப்பது, “வாய்வழி அல்லது குதவழி கொடுமைப்படுத்தல்”, “தண்ணீரைப் பயன்படுத்துவது” மற்றும் “சவப்பெட்டிகளை” பயன்படுத்தல் இவைகள் மூலம் சித்திரவதை செய்யப்படுவது); மற்றும் "ஆக்கிரமிப்புப் போர்கள்", இவைகளினால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த சமூகக் கொலைகளானது ஒரு மில்லியன் மக்கள் வரை இறப்பிற்கு இட்டுச் சென்ற குற்றத்திற்கு வழிவகுத்தது. நூரெம்பேர்க்கில் நாஜி தலைவர்கள் எதற்காக குற்றஞ் சாட்டப்பட்டர்களோ அதே குற்றம்தான் இதுவாகும்.

ஈராக் Body Count இன் பேராசிரியர் ஜோன் ஸ்லோபோடா 15,000 பொதுமக்கள் இழப்புகளைப் பற்றி பேசினார், இது விக்கிலீக்ஸினால் வெளியிடப்படாவிட்டால் ஒருபோதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்க முடியாது. புகழ்பெற்ற இரகசியங்களை வெளியிட்டவரான (whistleblower) டானியல் எல்ஸ்பேர்க், “சித்திரவதை… கொலைக் குழுக்கள் மற்றும் படுகொலைகளை” விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதையும், அவைகள் “இயல்பாக்கப்பட்ட” முறையையும் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் பிடிக்கப்பட்டு சட்டவிரோதமாக CIA ஆல் எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இபின் அல்-ஷேக் அல்-லிபியின் வழக்கைப் பற்றி பத்திரிகையாளர் அன்டி வொர்திங்டன் விவரித்தார், "அங்கு அவர் சித்திரவதையின் கீழ் [ஈராக் ஜனாதிபதி] சதாம் ஹூசைனை இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக அல்-கெய்டா இயக்கத்தினரை சந்தித்தார் என்று அவர் பொய்யாக ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டார். இந்த தவறான ஒப்புதல் வாக்குமூலம் அல்-லிபியால் திரும்பப் பெறப்பட்டிருந்தபோதும், 2003 ஆண்டு மார்ச்சில் ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த புஷ் நிர்வாகத்தால் இது பயன்படுத்தப்பட்டது" என்று சொன்னார்.

இவைகள் மற்றும் எண்ணற்ற பிற வெளிப்படுத்தல்கள்தான் அரபு வசந்தத்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரிகளுக்கு எதிராக வெகுஜன இயக்கங்களை பற்றவைத்ததுடன், உலகெங்கிலும் போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுத் தூண்டலை கொடுத்தது. அதனால்தான் அசாஞ் ஒரு உதாரணமாக உருவாக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு "இதே காரியத்தைச் செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காக" முன்னாள் சிஐஏ இயக்குனர் லியோன் பனெட்டாவின் கருத்துக்களானது விசாரணை நடக்கும்போது ஒளிபரப்பப்பட்டது. ஏகாதிபத்திய சக்திகளானது புதிய மற்றும் இரத்தம் தோய்ந்த போர்கள் மேலும் வரவிருக்கும் ஆட்சிகளில் உண்மையை முதல் பலியாக உருவாக்க நோக்கம்கொண்டிருக்கின்றன.

"பொருத்தமற்றது" என்று அவர்களிடம் பேசிய ஆதாரங்களை நிராகரிப்பதன் மூலமோ அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவைகளின் அம்பலப்படுத்துதலுடனோ அசாஞ்சின் வழக்கானது "ஒன்றும் செய்யமுடியாது" என்ற வழக்கு விசாரணையின் இழிவான பொய்யால் எந்த நேர்மையான உற்றுநோக்குபவரும் ஏமாறவில்லை. சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள், மதிப்புமிக்க பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், கணினி அறிவியல் வல்லுநர்கள் மற்றும் சித்திரவதைக்கு ஆளானவர்கள் உட்பட மொத்தம் 40 பாதுகாப்புச் சாட்சிகளானது அசாஞ்சை ஒரு "ஹேக்கர்" என்றும் "வெளியீட்டுத் தோல்வி" என்றும் மற்றும் "அப்பாவிகளை ஆபத்திற்கு உள்ளாக்கியுள்ளார்" என்றும் ஜோடிக்கப்பட்டதை அவர்கள் கந்தல்கந்தலாக கிழித்தெறிந்தனர்.

அத்தகைய மோசடியை அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் பாராமரிக்க முடியும் என்பது லண்டனின் ஓல்ட் பெய்லி நடவடிக்கைகளின் சட்டவிரோத தன்மையும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் அவர்களுடைய இருட்டடிப்பும் சான்றாகும். வெளிநாடுகளில் அதிகரிக்கும் மூர்க்கத்தனமான இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் வளர்ச்சியானது உள்நாட்டில் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதன் மூலம் அடிக்குஅடி நெருக்கமாக முன்னேறியிருக்கிறது. அசாஞ்சின் விசாரணையானது அவரது ஒவ்வொரு சட்ட உரிமையும் நசுக்கப்பட்டு இந்த வழிவகை கட்டமைத்து விரிவுபடுத்தியது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் பெல்மார்ஷில் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் ஒன்றரை வருடங்கள் கடந்தபின் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார், மருத்துவ சாட்சிகள் சான்றளித்த நிலைமைகளில் கடுமையான உளவியல் சேதம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. விசாரணையின் ஒவ்வொரு நாளும், அவர் அதிகாலை 5 மணிக்கு எழுப்பப்பட்டு, துண்டு துண்டாக அவரது உடல் தேடுதல் நடத்தப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டு திணறடிக்கப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் இருந்தபோது, நீதிபதிகள் இருப்பதிலிருந்து அவரைப் பிரிக்கும் கண்ணாடிச் சுவரில் குறுகலான நெடுவரிசை மூலம் தனது வழக்கறிஞர்களுக்கு மண்டியிட்டு கிசுகிசுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, அவரது வார்த்தைகள் அரசு தரப்பு குழுவினருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் அடையாளம் தெரியாத பிரதிநிதிகளுக்கும் கேட்கக்கூடியவையாக இருந்தன.

விசாரணையின் நடவடிக்கைகளின் முதல் நாளில் பதினோராவது மணித்தியாலத்தில் அமெரிக்க வழக்குரைஞர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் அசாஞ்சை மீண்டும் கைது செய்தது, பின்னர் ஒரு பதிலைத் தயாரிக்க அவரது பாதுகாப்பு குழுவுக்கு நேரம் வழங்க மறுத்துவிட்டது. ஆறு மாதங்களில் முதல் முறையாக அன்று காலைதான் அசாஞ் தனது வழக்கறிஞர்களை நேரில் கண்டதோடு மற்றும் முக்கிய சட்ட சமர்ப்பிப்புகளைப் பற்றி முதல் முறையாக பார்வையுமிட்டார்.

விசாரணைக்கு ஆதாரமாக சாட்சிகள் சாட்சியமளித்தனர், அவரது சட்டபூர்வமாக சலுகை பெற்ற ஆவணங்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான உரையாடல்கள் சிஐஏ ஆல் பறிமுதல் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளன, அத்தோடு அவரைக் கடத்தி அல்லது கொலை செய்வதற்கான திட்டங்களையும் கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. அசாஞ் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், பயங்கரவாத சந்தேக நபர்கள் மீதான முந்தைய அமெரிக்க வழக்கு விசாரணைகளால் வகுக்கப்பட்ட ஒரு பாதையை பின்பற்றுவார்கள் மற்றும் தனிமைபடுத்தப்பட்ட சிறைச்சாலைகள் மற்றும் சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு அமைப்பில் காணாமல் போகச் செய்வார்கள் என்று மற்றவர்கள் விளக்கினார்கள். அவரது உயர்ந்தபட்ச இறுதி சேருமிடம் கொலராடோவிலுள்ள ADX Florence ஆகும், அங்குதான் அமெரிக்க அதிகாரிகள் மனிதர்களை உளவியல் ரீதியாக அழிக்கும் வழிமுறைகளை செம்மைப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட நீதிபதி வனேசா பரய்ட்ஸர், அசான்ஜ் நியாயமாகவும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து வந்த இழிந்த உறுதிமொழிகளுடன் இந்த குற்றச்சாட்டை மறுக்க அரசு தரப்புக்கு போதிய கால அவகாசம் அளித்தார். சித்திரவதை பற்றிய ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்சர் மற்றும் எதேச்சதிகாரமான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது பற்றிய ஐ.நா. செயற்குழுவின் முடிவுகளும் அசாஞ் பல ஆண்டுகளாக உளவியல் சித்திரவதைக்கும் மற்றும் எதேச்சதிகாரமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதும் வெளிப்படையாக கேலிக்கு உட்படுத்தப்பட்டன.

ஐக்கிய இராச்சியத்தின் (UK) இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடைய விக்கிலீக்ஸினால் அம்பலப்படுத்தப்பட்டவருமான ஒரு மூத்த டோரி எம்.பி.யும் அவரை திருமணம் செய்தவருமான தலைமை நீதிபதியுமான எம்மா அர்பூட்நாட் தான் நீதிபதி பாரிட்சரை நியமித்ததும் மற்றும் நிர்வகிப்பவருமாவார்.

அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களால் இந்த போலி-சட்டரீதியான கேலி மோசடி தூண்டப்பட்டது, அமெரிக்க அரசின் நலன்களுக்கு விரோதமான பத்திரிகையை திறமையாக குற்றவாளியாக்கியது மற்றும் முதல் சட்ட திருத்தத்திற்கும் (First Amendment) மரண அடி கொடுத்தது. பெருநிறுவன ஊடகங்களில் எதிர்ப்பின் ஒரு முணுமுணுப்புக்கூட பதிவு செய்யப்படவில்லை. பொது மக்கள் தெரிந்துகொள்ளும் உரிமை குறித்த தனது நம்பிக்கையிலிருந்து பின்வாங்க அசாஞ் மறுத்தபோது முதுகில் குத்துவதற்கு முன்பு கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற அமைப்புகள் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸுடன் இணைந்து தகவல்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பதை விசாரணை தெளிவுபடுத்தியது. விக்கிலீக்ஸ் மீதான அவர்களின் வெட்கக்கேடான கண்டனங்களை அசாஞ் "ஒரு பத்திரிகையாளர் அல்ல" என்பதை குற்றச்சாட்டாக அரசு தரப்பு பயன்படுத்தியது.

அவரது துன்புறுத்தலில் ஊடகங்களின் பங்கானது விசாரணையில் அவர்கள் செவிட்டு காது போல் மெளனமாக இருந்தமையால் முடிசூட்டப்பட்டது. "நான் ஒரு சில விசாரணைகளில் இருந்தேன், அது தற்போது மீண்டும் மீண்டும் வருகிறது" என்று பிபிசி நியூஸின் உள்துறை நிருபர் டானியல் சாண்ட்ஃபோர்ட் இதை ட்டுவீட் செய்வதன் மூலம் நியாயப்படுத்தினார். இந்த சேவகம் செய்யும் மற்றும் வசதிபடைத்த நிருபர்கள் ஆளும் வர்க்கத்தின் குற்றத்துடன் நீண்ட காலத்திற்கு முன்பே சமாதானம் செய்து, அந்தந்த அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுடன் தங்களை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டனர். "அசாஞ் முன்மாதிரி" என்பது அவர்களின் புதைக்கப்பட்ட பத்திரிகைக்கானதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

அசாஞ்சின் வழக்கின் மூலம், தொழிலாளர்களுக்கு ஏகாதிபத்தியத்தில் ஒரு உதாரணப் பாடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆளும் நிதிய தன்னலக்குழு சார்பாக, மிக சக்திவாய்ந்த அரசுகளாலும் அவைகளிற்கு துணை போகின்றவைகளாலும் உலகின் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடக்குமுறை புரிதலும் மற்றும் ஒரு வன்முறை அமைப்புமுறைதான் ஏகாதிபத்தியத்தின் பாடமாகும். பத்திரிகை, நீதித்துறை அல்லது பாராளுமன்றத்தில் இந்த ஸ்தாபகத்திற்குள் உள்ள அதிருப்தி குரல்களுக்கான முறையீடுகள் மூலம் அசாஞ்சின் விடுதலையை வெல்ல முடியும் என்று கூறும் முன்னோக்கின் முற்றிலும் திவால்நிலையைத்தான் அந்தப் பாடம் நிரூபித்துள்ளது.

முற்போக்கு சர்வதேசம் (Progressive Internationa)l என்று அழைக்கப்பட்ட ஒரு தொகை அரசியல் மோசடிக்காரர்களில் யானிஸ் வரூஃபாக்கி மற்றும் ஜோன் மெக்டோனல் போன்றவர்கள் உட்பட விசாரணையின் பின்னர் நடத்தப்பட்ட ஒரு “பெல்மார்ஷ் தீர்ப்பாயம்” நிகழ்ச்சி மேடையேற்றத்திலும் மற்றும் அதிகாரபூர்வ அசாஞ்சை திருப்பியனுப்பாதே (DEA) பிரச்சாரத்திலும் இது சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியது. பிரித்தானிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் சட்டரீதியான முறையீடுகளுக்கான போராட்டம் நடத்தப்பட்டால் அசாஞ் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பார் என்று முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் அறிவித்தார். ஒரே மாற்றாக இருந்தது, "பிரித்தானிய அரசாங்கம் வெறுமனே சொல்வது, சட்டபூர்வமாக நியாயமானதாகவோ அல்லது சரியானதாகவோ அவர்கள் [அசாஞ்சின் ஒப்படைப்பு] பற்றி நம்பவில்லை... அதைச் செய்வது அவர்களின் கைகளுக்குள் இருக்கிறது" என்று அவர் கூறினார்.

யாருடைய உத்தரவின் பேரில் ஒப்படைப்பு மேற்கொள்ளப்படுகிறதோ அதனுடைய தலைவரான போரிஸ் ஜோன்சன், அசாஞ் "நீதியை எதிர்கொள்கிறார்" என்பதை உறுதிப்படுத்துவதில் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை பாராட்டுவதன் மூலம் அவர்களின் கருவியாகச் செயற்பட்ட ஈக்குவடோர் தூதரகத்திலிருந்து அசாஞ்சை சட்டவிரோதமாக கைப்பற்றி கைது செய்த மெட்ரோபொலிட்டன் போலீசை பாராட்டினார். ஆனால் கோர்பினும் மற்றும் DEA யும் பிரித்தானிய வரலாற்றில் மிகவும் வலதுசாரி இந்த அரசாங்கத்திடம் முறையிடுகின்றனர். இந்த வேண்டுகோள்கள் பயனற்றதை என்பதைவிட மோசமானது. அசாஞ்சின் துன்புறுத்தலை இலக்கு வைக்கப்பட்டிருப்பதற்கு எதிரானதும் அவரின் விடுதலைக்கு தங்கியிருப்பதுமான சமூக சக்தியை குலைப்பதுவும் தான் அவர்களின் ஒரே காரியமாக இருக்கிறது.

பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோசலிஸ்டுகள் மற்றும் அராஜகவாத குழுக்களின் பாரிய சுற்றிவளைப்புகளுக்குப் பின்னர் 1917 ஆம் ஆண்டுச் சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்டதுதான் உளவுச் சட்டத்தின் கீழ் அசாஞ்சின் வழக்கு விசாரணைக்கு முன்னோடிகளாக இருக்கின்றன. அது உலகம் முழுவதும் பெருத்த புரட்சிகர இயக்கங்களுக்கு பயந்து, முதலாம் உலகப் போருக்கான எதிர்ப்பு, தொழிலாளர்களின் வேலைநிறுத்தக் கிளர்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் அமெரிக்க அரசாங்கம் அரசியல் எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்கியது.

அசாஞ்சின் வழக்கானது, தொழிலாள வர்க்கத்தின் மீது இதே போன்ற தாக்குதலுக்கான தயாரிப்பாக இருக்கிறது. அசாஞ்சை கைது செய்ய உத்தரவிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரை நாடு கடத்த திட்டமிட்டுள்ளார், ஜனாதிபதி சதிக் கவிழ்ப்புத் திட்டத்திற்கான விரைவாக வளர்ந்து வரும் சதித் திட்டத்திலும், அமெரிக்க அரசின் பிரிவுகளில் ஒரு பாசிச அதிகார தளத்தை பலப்படுத்துவதிலும் இப்போது அடோல்ஃப் ஹிட்லரைப் போல தன்னைக் கருதுகிறார். தீவிர வலதுசாரி வன்முறைக்கு ட்ரம்ப் பகிரங்கமாக கிளர்ச்சி செய்து வருவதுடன், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை சேர்ந்து ஏற்பாடு செய்கிறார்கள். நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் பலியாட்டத்தை ஆடுவதற்கோ அல்லது இரத்து செய்வதற்கோ ஒரு பேரழிவுகரமான இராணுவ சாகசத்தை ஜனாதிபதி தொடங்குவதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளது.

அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்தில் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டாமல் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது. புரட்சிகரக் கட்சியின் கல்வி மூலம் அந்த இயக்கம் நனவாக உருவாகும்போது, சிதைந்து வரும் முதலாளித்துவத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் வாழ்வா அல்லது சாவா போராட்டத்தில் அது ஈடுபடும், அந்த போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அசாஞ்சை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை அது அங்கீகரிக்கும்.

Loading